‘ ஒரு மகனுக்கு நல்ல விஷயங்களை தான் ஒரு தகப்பன் கற்றுக்கடுக்க வேண்டும் .ஆனால் இந்த சினிமாவில் கெட்ட விஷயங்களும் சேர்த்து கற்றுக் கொடுக்க வேண்டியதாக இருக்கிறது. இனிமேல் நல்ல விஷயங்களை நான் கற்றுக் கொடுப்பேன் .எதிர்மறை விஷயங்களை தணீகா கற்றுக் கொடுக்க வேண்டும்.
நல்ல விஷயங்கள் என்றால் எல்லோருக்கும் மரியாதை கொடுப்பது , கால்ஷீட்டில் சொதப்பாமல் இருப்பது.
சரியான நேரத்தில் சூட்டிங்கில் கலந்து கொள்வது, கேரவானில் உட்கார்ந்து சொகுசாக இருக்காமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரிடம் கலந்து பேசுவது , நல்ல கதைகளுக்கு முன்னுரிமை தந்து நடிப்பது இதெல்லாம் நான் சொல்லி தர வேண்டும்..
அதே சமயம் பீக்கில்
உள்ள எந்த நடிகையை வைத்து ஆட்டம்
போடுவது? எவளை படுக்கை வரை கொண்டு செல்வது? தினமும் டிரெண்டில் இருக்கும்படியான எந்த விஷயங்களை செய்வது ? யார் மடியில் கை வைப்பது? போன்ற கெட்ட விஷயங்களையும். சொல்லித் தரவேண்டும் நல்லது கெட்டது இரண்டையும் தெரிந்தவனாக இருக்கவேண்டும். என்னைப்போல ஏமாளியாக இருந்து சினிமாவை விட்டே ஓடி விட கூடாது.
செல்வராஜா தனது கடந்த கால அனுபவங்களில் இருந்து புதிய தியரி ஒன்றை தயாரித்து அதில் மனசாட்சிக்கும் நேர்மைக்கும் இடம் இல்லை என்பதில் தெளிவாக இருந்தான்.
இப்போது மாதேஷிற்கு புதிய எதிரி
அன்புசெல்வன் என்னும் இன்ன்னொரு இளம் நடிகன் அன்பு தான். மாதேஷ் டேட்
கிடைக்காதவர்கள் அன்புவிடம் போகிறார்கள். அவனிடம் டேட் கிடைக்காதவர்கள் மாதேஷிடம்
வருகிறார்கள். இந்த போட்டியில் மதேஷ் வெல்ல நாம் உதவியாக இருக்க வேண்டும்.
தெரிந்தோ தெரியாமலோ மாதேஷ்
உச்சாணிக் கொம்பில் பாதி வரை ஏறி உட்கார்ந்து விட்டான். ஆனால் தொடர்ந்து அவன்
குந்தியிருக்க சில கள்ள ஆட்டங்கள் தேவை.
அதை நான் மாதேஷை வைத்து ஆடுவேன்.
இதுபோன்ற விஷயங்களுக்கு எல்லாம் நண்பண்
தணிகா சரிப்பட்டு வருவான் என செல்வராஜா என்னும் மாயாண்டி நம்பினான்.
அதற்கான திட்டங்களை நண்பனுக்கு
விவரித்தான். ஆரம்பத்தில் தணிகா மறுத்தாலும் செல்வராஜா சொல்வதில் உள்ள நியாயத்தை புரிந்து கொண்டான் .
‘ஆமாடா நம்மளை எல்லாம் ஓட விட்டானுங்க ., நம்மால் அதை உடைக்க முடியல., ஆனா இப்ப நம்ம கையில் மாதேஷ்
இருக்கான். நமக்கு கையில புளியங்கொம்பு போல மாதேஷ் இருக்கான். அவன வெச்சு எல்லாரையும்
ஆட்டிப்படைக்கனும். ஒவ்வொருத்தனும் பொறாமையில் வெந்து சாகனும். முதல்ல சொல்லு.. நம்ம மாதேஷ்க்கு இப்போ ஃபீல்டுல எதிரி யார் யார் ?”
“இருக்காங்க
தணிகா”
“அவனுக்கு மேலே இருக்காங்களா ? இல்ல கீழ இருக்கிறறாங்களா? “ என தனியாக கேட்க
“ மாதேஷ்க்கு மேல ரெண்டு டாப் ஸ்டார் இருக்காங்க ., “
“ஆமா.,
இந்தப்பக்கம் சத்யா சார் அந்தப்பக்கம்
இன்னொருத்தர்”
“ம்ம். அவங்க ரெண்டு பேருக்குமே வயசு ஆயிடுச்சு ., அதுக்கப்புறம் ரெண்டு ஸ்டார் .,அவங்களையும் கொஞ்ச நாளைக்கப்புறம் ஓவர்டேக்
பண்ண போறோம். அதுக்கப்புறம் நம்ப மாதேஷ் தான் பீல்டுல பீக் ஸ்டாரா இருக்கனும். “
“ஆனா அதே மாதிரியே இளவயசு நடிகருங்க ரொம்ப பேர் இப்போ வந்துட்டாங்களே “
“அதுக்கு தான் உன்னை கூப்பிட்டேன் , மத்தவங்கள வீழ்த்தறது நம்ம வேலையில்லை, நாம முன்னேறது தான், நம்ம வேலை. உனக்கு டைரக்டர் பாலு பத்தி தெரியும்ல? கேள்விப்பட்டிருக்கிறாயா?”
“ பெருசா கேள்விப்பட்டதில்லை , ஷார்ட் பிலிம் எதோ பண்றான்னு கேள்விப்பட்டேனே, “
“ ஆமா முந்தாநாளு அவன் என்ன ஒரு ஃபங்ஷன் ல பார்த்துட்டு பின்னாடியே வந்து,’ சார் உங்க மகனுக்கு சூப்பர் ஒரு கதை வைச்சிருக்கேன் ’ னு என சொன்னான்.
நானும் இன்ட்ரெஸ்ட் இல்லாம தான் பார்க்கிங்க்ல அவன் கதையை கேட்டேன்.
ஆனால் கதை சூப்பரா இருக்குப்பா., வட சென்னையில் நடக்கிறாப் போல ஒரு கதை. மீன் விக்கிற பையன் கேரக்டர்ல மாதேஷ். அதை வெச்சி. ஒரு சூப்பர் கதை சொன்னான் பாரு .அசந்துட்டேன்”
“ என்ன மாயா ? நம்ம பையன் காலேஜ் பொண்ணுங்களுக்கு கனவு நாயகன் மாதிரி ஆயிட்டு வரான், இப்ப போய் அவனை மீன் விக்குற பையனாக்கிறியே?’
“ விஷயத்தை முழுசா கேளு தணிகா., ஒரே மாதிரி படம் எடுத்துட்டு இருந்தா, நம்மள சீக்கிரம் ஏறக் கட்டிடு வாங்க .,அந்த மீசை இல்லாத ஏதோ ஒரு பையன் இருந்தான் தெரியுமா ? சாக்லேட் பாய் மாதிரி .”
“ஆமா கிஷோர் “
“இன்னைக்கு அவன் எங்க இருக்கான்? ஆள். அட்ரஸ் காணோம். சினிமாவில் ஹீரோவா நிலைக்கணும்னா ., முதல்ல காலேஜ் ஸ்டுடென்ட் கேரக்டர் , அப்புறம் வேலையில்லாத சாக்லேட் ஹீரோ, அதுக்கப்புறம் ரவுடித்தனம் பண்ற நல்லவன், அடங்காதவன், போலீஸ்
கேரக்டர், கிராமத்துல ஒரு கலக்கு. அப்புறம் நேரா ஆக்ஷன் ஹீரோ. இந்தியாவை காப்பாத்தனும். அப்புறம் உலக அளவில விமானத்துல பறக்கனும். அமெரிக்கா அதிபரை காபத்தனும். வயசு
50,55 ஆனா., “ எங்க ஏரியால சாக்கடை தூர்வாரல.. அரசாங்கம் இயங்குதா? இல்லியான்னு ட்விட்’ போடனும்.. உடனே ஜனங்க
நம்மளை கைபிடிச்சி அரசியலுக்கு கூட்டி வந்துடுவாங்க..இதான் ரூட்டு”
“ம்ம்”
“நம்ம ஜனங்களுக்கு
பாப்புலாரிடிக்கும்., ரூலிங்குக்கும் வித்தியாசம் தெரியாது தணிகா”
“வாஸ்தவம் தாம்பா”
“சோ இதான் ரூட் . இப்ப மாதேஷ் மூனாவது கியரில் இருக்கான். ரவுடித்தனம் பண்ற நல்லவன். அவனுக்கு இந்த கதை சூப்பரா சூட்
ஆகும். நாம கொஞ்சம் லேட் பண்ணாக் கூட, பாலுவை அன்பு தட்டிகிட்டு போய்டுவான்,. அன்போட
அப்பன் பாலு பாத்தா மொத்தமும் போச்சு..”
புலம்பினான் செல்வராஜா.
இது மாதேஷ் என்னும் இளம்
நடிகனுக்கும் அவனை மாதிரியே டான்ஸ், பைட், ஆக்டிங்க், டீன் ஏஜ் * கிட்ஸ் பேன்ஸ் என கலக்கும் அன்புவுக்கும்
இடையேயான போட்டி மட்டுமில்லை.
சினிமாவில் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு எதிரும் புதிருமான இரட்டையர்கள் தோன்றினார்கள். சினிமா ஆரம்பித்த காலத்திலிருந்து இப்படித்தான் இருந்த ஒரு நாடகத்தில் துவங்கிய போட்டி பெரிய திரையிலும் தொடர்ந்து அப்படித்தான் .
தெருக்களில் கூத்து நடக்கும்
காலத்திலேயே இப்படித்தான் ஒரே மேடையில் இரு குழுக்கள் பிரிந்து போட்டி பாடல்கள்
பாடுவார்கள். பார்க்க சுவாரசியமாக இருக்கும். அது பின்னாளில் சினிமாவானது.
சினிமாவில் பழங்காலத்தில் சின்னப்பா,
தியாகராஜ பாகவதர் இடையே போட்டிகள் சமமாக இருக்க.
ஆளுக்கு ஒரு நடிகை & படக்குழுவை வைத்திருந்தார்கள். போட்டி வசனம், போட்டி
பாடல்கள் அப்போதே வந்தன.
அவர்கள் போன் பிறகு நிறையே பேர்
வந்தார்கள். ஆண்டார்கள்.
கறுப்பு வெள்ளை காலத்திலேயே இருபெரும் நடிகர்கள் தங்களது ஆதிக்கத்தில் சினிமா துறையை வைத்திருந்தார்கள். .அவர்கள் போனபிறகு 1975 பிறகு இன்னும் இரு உச்ச நடிகர்கள் நேற்று வரை வீழ்த்த முடியாமல் இருந்தார்கள். தனி தனிஉ ரசிகர்
கூட்டம் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
தலைமுறை மாற மாற, புதிய
பார்வையாளர்கள் திரையரங்கு வர, புதிய பரிமாணத்தில் நடிகர்கள் வந்தார்கள்.
சரியாக சொல்ல வேண்டுமெனறால் ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய புதிய நடிப்பு
ஆளுமைகள் உருவாக, அவர்களது விருப்பங்களுக்கு ஏற்ப புதிய இளம் நடிகர்கள் உருவாகுவது, என்பது அது உலகில் மற்ற பகுதியைவிட தமிழ்நாட்டில் அந்தப் போக்கு தொடர்ச்சியாக இருந்தது .
அப்படி 2010 க்கு பிறகு தெரிந்தோ தெரியாமலோ உருவான இரு ஸ்டார் நடிகர்கள் தான் இந்த மாதேஷ் மற்றும் அன்பு .
மாதேஷ் போலவே அன்புவும் இயக்குனரின் நடிகர். செல்வராஜாவை போலவே அவனது அப்பாவும் திட்டமிட்டு அவனுக்கு நடிப்பு, சண்டை ஆகியவற்றைக் கற்றுத் தந்து களத்தில் இறக்கி விட ,அந்த பையன் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இன்று மாதேஷின் எதிர்பக்கம்
அவனுக்கு சமமாக வளர்ந்து வந்தான்.
இன்றைய காலகட்டத்தில் சினிமாவில் நடுவில் இருக்கக்கூடிய இந்த இருவர்தான் எதிர்காலத்தில் மிகப்பெரிய உச்ச நட்சத்திரங்களாக இருப்பார்கள் என்பதால் சினிமா உலகம் இவர்களை தனித்தனியாக பிரித்து வைத்து ரசிகர்களிடையே பிளவை
ஏற்படுத்து இருந்தது.
கிரிக்கெட் என்பது சாதரண ஆட்டமாக
இருந்தால் என்ன சுவாரசியம் ? பார்வையால், வார்த்தைகளால் திட்டி பேசிக்
கொண்டால் ரசிகனின் பிபீ எகிறும். ‘ம்மாள
அவனை ஃபோர் அடிச்சி கிழிடா’ என கத்துவான். அதே டெக்னிக் தான் இங்கும்.
இருவரையும் அவர்கள் சம்மதம்
இல்லாமலேயே, திரையுலகம் பிரித்து வைத்தது.
மாதேஷ் பக்கம் இருக்கும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், காமெடி
ஆக்டர்கள், இசை, கேமரா ஆட்கள் போன்ற குழுவினர்கள் அன்புவிற்கு வேலை செய்யமாட்டார்கள் .
அன்பு குழுவில் இருப்பவர்கள் இந்தப்பக்கம் வர மாட்டார்கள். அன்பு கூட நடிக்க பாலிவுட் நடிகை வந்தால் அடுத்த
படத்தில் அவள் மாதேஷ் கூட நடித்து ஆகவேன்டும்.
இரு தனிப் படையாக இவர்கள் இரு தனி சினிமா கட்சிகளை சினிமாத் துறைகளில் துவக்கி வைத்தார்கள். இதுபோல ஒரு நேரடியான பிரிவினைவாதம் .இதற்கு முன்பு இருந்த திரையுலகில் இப்படி ஒரு எதிரும்,
புதிருமான மன நிலை நேரடியாக இல்லாமல் இருந்தது. அன்புவும் ஒரு இயக்குனரின் பையன் தான் . சினிமாவில் மாதேஷ்க்கு அவனுடன் நேரடி போட்டி . ஏன் என்றால் அன்புதான் இருவரும் சமகாலத்தில் அறிமுகமானவர்கள். இவர்களுக்குள் எல்லா விஷயத்திலும் ஒரு போட்டி இருந்தது .அப்படி ஒரு போட்டி இருந்ததனாலேயே அவர்களது படம் மாறி மாறி ஓட ஆரம்பித்தது.
ஒரே மேடையில் இருவரும் தோன்றுவதில்லை. ஒரே
விழாவுக்கு இருவரும் வருவதில்லை. ஒரு
பெரிய சீனியர் நடிகர் இறந்து விட, சாவுக்கு இவர்கள் இருவரும் எதிர்பராமல் எதிரும்
புதிருமாக பார்த்து கொள்ள ஒரே பரபரப்பு.
தேவையே இல்லாமல் ஊடகங்களில், பத்திரிகைகளில் அதிக வெளிச்சத்தை தந்துவிட , அந்த வெளிச்சத்தின் காரணமாக இவர்களது படங்கள் மிக அதிகமாக வியாபாரம் பேசப்பட, ‘இதுதான் சரியான வழி” என அந்த இரு பையன்களும் தங்களுக்குள்ளே தீர்மானித்து கொண்டார்கள்.
எல்லாவற்றிற்கும் அவர்கள் போட்டி போட்டார்கள். திரையில் அவர்கள் பேசும் வசனம் எல்லாம் இந்த இருவருக்கும் இடையேயான வசனம் என்பதாக ரசிகர்கள் தீர்மானித்தார்கள் . தனித்தனியாக பிரிந்து கொண்டாடினார்கள்
இதுபோல விஷயங்களெல்லாம் மற்ற மொழி படங்களில் கிடையவே கிடையாது. அதனால்தான் அங்குள்ள படங்களின் தரம் தயாரிப்பு, நேர்த்தி, கதை, திரைக்கதை , மேக்கிங்க் மற்ற டிகினிட்டி விஷயமெல்லாம் உச்சாணிக்கொம்பில் போய்க்கொண்டிருக்க தமிழில் மட்டும் ஹீரோவை போற்றி பாடுகிற வழக்கம், அதிகமாகி பீக்கில்
இருக்கும் ஹீரோவை அரசியலுக்கு இழுக்கிற அரதப்பழசான கதைகளை திரும்ப திரும்ப எடுக்கப்பட்டன .
ரசிகர்கள் இரு பிரிவாகி ஒருவரை ஒருவரை ஒருவர் தாக்கி பேசிக் கொண்டார்கள். இப்படி ரசிகர்கள் பிரிந்து இருந்தால் நமக்கு நல்ல வேட்டை என்பது தயாரிப்பாளர்கள் டைரக்டர்கள தெரிந்து வைத்துக் கொண்டு, மாதேஷ் அந்த படம் பண்றானா?. நாம இந்த படம் பண்ணுவோம் ‘ என்று சொல்லி இவர்கள் தனியாக ஒரு குழுவை அமைத்தார்கள் .
ஒவ்வொரு பட பூஜையிலும், ஆடியோ ரிலீஸ், டிரைலர் ரிலீஸிலும் ஒரு நடிகன் பதில் சொல்ல , அந்த எதிர் நடிகன் இன்னொரு பங்ஷனில் , பிரஸ்மீட்டில் பதில் சொன்னான். எல்லாமே ஜாடைமாடையாக கேள்விகள் பதில்கள் தான் .ஆனால் யார் யாரை சொல்கிறார் என்பது ரசிர்களுக்கு தெரிந்திருந்தது.
‘கடைசில யார் வராங்கனு முக்கியமில்லை முதல்ல யார் ஜெயிக்கிறார்கள்’ தான் முக்கியம் ஒருவன் சொல்ல.’, முதல்ல உங்கள சூட்டிங் வர சொல்லுடா பரதேசி’’ என இன்னொரு தரப்பு கவுண்டர் கொடுக்க.
‘ நீ விரல
ஆட்டற விடலை பையன் ‘ நான் உரலை ஆட்டற காட்டு பையன்.’ என வசனம் பேசினார்கள். இப்படியெல்லாம்
வசனம் எழுதுவதற்கு கோடம்பாக்கத்தில் ஆள்கள் இருந்தார்கள்.
‘இந்த அன்பு நடித்த அன்பு கசக்கிப் பிழிந்த ஒரு நடிகையை மாதேஷ் ,தனது படத்திற்கு ஒப்பந்தம் செய்ய .,
“அணில் கடித்த பழம் இனிக்கும் ., அன்பு கடிச்சாலும் பழம் இனிக்கும் ..என டயலாக் விட்டார்கள். எப்போதுமே
இரண்டு தரப்பும் மோதிக் கொள்ள ., இது சமூகவலைதளத்தில் பெரிய வைரலாகி விவாதப் பொருளானது .
ஒருவரை ஒருவர் தாக்கி பேசுவதாலேயே , இருவரின் சுமாரான படங்கள் கூட நன்றாகவே ஓட ஆரம்பித்தது.
இவர்கள் தப்பித்தவறி ஒரே பங்க்ஷன் இருவரும் கலந்து கொள்வது போல சூழ்நிலை அமைந்து விட்டால் தமிழ்நாட்டு ஜனங்களுக்கு இது பற்றி பேசுவது பெரிய வேலையாகி விடும். தமிழ்நாட்டு மக்களின் சினிமா மோகத்தை நன்றாக பயன்படுத்தி சினிமா
ஆட்கள் நிறைய காசு பார்த்தார்கள்.
அன்பு நடிக்க வேண்டிய கதையை மாதேஷ் நடிக்கிறார் என்பதும் முதலில் நான் அன்புக்கு தான் கதை சொன்னேன் அவர் பிஸியாக இருந்தார், அதன் பிறகு மாதேஷ்க்கு சொன்னேன் என்று டைரக்டர் சொன்னால், அந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியது.
உலகில் எவ்வளவோ முக்கியமான விஷயம் இருக்க, இது போன்ற விஷயங்களெல்லாம் முக்கியத்துவம் ஜனங்களின் ஆக்க பூர்வ சக்தியை பயன்படுத்தி சினிமாவில் சூழ்நிலையை பரபரப்பாக்கினார்கள் சுற்றியுள்ள வியாபாரிகள் .
அந்த வியாபாரிகளுள் செல்வராஜும் ஒருவர்.
‘ அன்புக்கு
ரெடி பண்ன ஸ்டோரி, நம்ம மாதேஷ்கு செட்டாகுமா ? அவன் சிட்டி மாடர்ன் பாய் வேஷம்
பண்றான்..” தணிகா தயங்க.,
“அப்படி இல்ல தணிகா., இந்த வட சென்னை லோக்கல் கேரக்டர் செம்மையா இருக்கு,. பிலோ ஆவரேஜ் மிடில் கிளாஸ் பசங்க நம்ம தமிழ்நாட்டுல அதிகம்,. அவங்க ஒட்டுமொத்த பேருக்கும் ஒரு ரெப்ரசன்ட் பண்றாப் போல இந்தப் படம் இருக்கும்.
நீ வேணா பாரு இதுக்கு அப்புறம் ரொம்ப ஆக்டர்ங்க, இப்படி லோக்கல் பசங்க கேரக்டரில் நடிக்க ஆரம்பிப்பாங்க”
“சரி கதை என்ன?”
“ மார்க்கெட்ல மீன் விக்கிற பையன் தான் ஹீரோ. மோட்டார் போட் தான் அவனுக்கு அம்மா அப்பா
காதலி எல்லாம்.. படகுல வெச்சி தண்ணி கூட அடிக்க மாட்டான். அவ்ளோ சுத்தம்.
ஒரு முறை அவன் புடிச்ச மீனு மொத்தத்தையும்
புது பார்ட்டிக்கு விக்க., அங்க லோக்கல் வில்லனுக்கும் அவனுக்கும் பெரிய பகை ஆயிடுது . அதுக்கப்புறம் இவனை நம்ப ஒன்னும் பண்ண முடியாது அப்படின்னு தெரிஞ்சுகிட்ட லோக்கல்
ஆள் அந்த குப்பத்துக்கு
பக்கத்துல இருக்கற பெரிய ஆள் ஹெல்ப் கேக்குறாங்க., அவன் மினிஸ்டர் கையாள்.
அவனும்
ஹீரோ கிட்ட மார்கெட்டுல
வந்து அடி வாங்கிட்டு போறன். அவமானம் தாங்காம அவன் யாருக்கும் தெரியாம ஹீரோவோட மோட்டார் படகை திருட்டிட்டு போயிடறான்.”
“அச்ச்சச்சோ”
“ ஹீரோ மோட்டார் படகை தேடிகிட்டு
விசாகபட்டணம், அஸ்ஸாம் வரைக்கும் போறான்., அவனுக்கு படகு கிடைச்சதா? இல்லியா?
ங்க்கிறது தன கதை. பட டைட்டில் என்ன தெரியுமா? “முள்ளு மீன்”.
“ஓஹோ”
“சீன் பை சீன் பை தெளிவா எழுதி இருக்கான். இந்த பாலு. “
“ சரி அப்ப முடிச்சிடாலாம். தம்பி
கிட்ட நான் பேசறேன்..”
தணிகாவும்
செல்வராஜும் சேர்ந்து மாதேஷ்க்கு வலுவான அடித்தளம் அமைக்க முயன்றார்கள்.
No comments:
Post a Comment