வெற்றி பெற்ற எல்லா
நடிகர்களுக்கும் இப்படி திட்டமிட்டு விரிக்கப்பட்ட ரத்தினக் கம்பளங்கள் இருக்க
வாய்ப்பிலை.,
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்..
மாதேஷ் அப்போது புகழின் துவக்கத்தில் இருந்த காலகட்டம். இளமையான அவனது முகமும் அரும்பு மீசையும் ,அவனை 20 வயதுக்கு குறைவாக காட்டியது . அவன் திரையுலகில் புதிய எழுச்சியாக பரிணமித்து கொண்டிருந்தான்.
அப்போதுதான் அவனது தந்தைக்கு நெருக்கமாக நெருக்கமான நண்பராக இருந்த தணிகா ,மாதேஷ்ஷின் மேனேஜராக நியமித்தான் செல்வராஜா.
ஏனெனில் தணிகா தமிழ் திரையுலகின் அனைத்து சந்து பொந்துகளிலும் நன்கு தெரிந்தவன், எல்லா குறுக்கு வழிகளிலும் புகுந்து புறப்படுபவன். ஹீரோ, வில்லன். துணைபாத்திரம், என
அடிக்கடி மாறிக் கொண்டே இருப்பவன்.
அதனாலேயே அவன் எந்த ஒரு இடத்திலும் நிலைத்து நிற்காமல் இருந்தான் . தமிழ் சினிமாவில் இதுபோன்ற பல ஆட்கள் இருப்பார்கள் ,
ஒரு காலகட்டத்தில் செல்வராஜுக்கு ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்ட போது பண உதவியை செய்தவன் இந்த தணிகா.
பிரபல பைனான்ஸியர் ரங்கராஜனிடம்
படத்துக்கு உதவி கேட்க போய் விரட்டியடிக்கப்பட்டான் செல்வராஜா. அப்போது
“ மாயாண்டி நீ மினிமம் கேரன்டி படத்த கொடுக்கறதுல கில்லாடி. நீ எதுக்கு மத்தவங்களுக்கு படம் பண்ணும் நினைக்கிற? நீயே சொந்தமா படம் எடுக்கலாமே” என தூண்டியவனும் அவன் தான். அதில் உண்மையான நட்பு இருந்தது.
அவனது சொல் பேச்சு கேட்டு செல்வராஜா சொந்த படங்களை எடுக்க ஆரம்பித்தான்.
“ என்னடா சொல்ற ? நம்மால முழு காசு போட்டு எடுக்க முடியுமா? ஆரம்பத்தில் செல்வராஜா பயந்தாலும், உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு போடு, என்கிட்ட இருக்கிறதையும் கொடுக்கிறேன் ,கொஞ்சம் வெளிய கடன் வாங்குவோம். ரொம்ப சீக்கிரமா படம் எடுப்போம்.”
“ அப்படின்னாலும் ஹீரோ, டெக்னீஷீயன்களுக்கு காசு தரணுமே?” என சொல்ல
“யார்ரா அவன்? படத்துல ஏதாச்சும் சான்ஸ் கிடைக்குமா? ன்னு பெரிய பெரிய டெக்னீஷியன்களே சுத்துறாங்க . நான் அந்த மாதிரி ஆளுங்கள பிடிச்சி வரேன்.. கம்மியா காசு கொடுப்போம். அதுவும் ரிலீசான பிறகு , படம் வியாபார பிறகு மொத்தமா காசு கொடுப்போம் “
“அப்போ ஹீரோவுக்கு?”
“ அதுவும் இருக்காங்க,
நம்ம பேச்சு கேக்கறவங்க., மார்கெட்டுல இல்லாத ஆளுங்கள, சிட்டி சப்ஜெக்ட் பண்ணற ஆளுங்களை வில்லேஜ் கூப்பிடுவோம் . 50% மட்டும் சம்பளம் கொடுப்போம். மீதியை வியாபாரத்துக்கு அப்புறம் கொடுக்கலாம் .” என சொல்லி அவன் அப்படிப்பட்ட ஹீரோக்களின் பட்டியலை அவனிடம் சொன்னான்.
“ சரி என்னதான் இருந்தாலும், பெரியவருக்கு மியூசிக்கு காசு செலவாகுமே?”
“ யார்ரா அவன்? திரும்பத் திரும்ப பெரியவர், பெரியவர்னு சொல்லிட்டு இருக்க ? அவருக்கு அடுத்தபடியாக இன்னொரு ஆள் வந்து இருக்காரு. கிராமத்து சப்ஜெக்ட்க்கு சூப்பரா மியூசிக் போடறாரு . இன்னும் பெரியவேரையே புடிச்சிகிட்டு இருக்காதே,. காசு சிக்கனமா,. சீக்கிரமா படம் எடுக்கணும்னா இவர் தான் சரி” என ஆலோசனை சொன்னான்ன.
அப்படித்தான் செல்வராஜா சொந்த படங்களை எடுக்க ஆரம்பித்தான் .
அப்படி துவங்கிய நட்பு செல்வராஜா மெல்ல ஃபீல்டை விட்டு போன பிறகும் தொடர்ந்தது. தணிகா செல்வராஜாக்கு உண்மையாக இருந்தான். ஏன் என்றால் அவனும் செல்வராஜா போல ஆரம்பத்தில் தணிகாவும் எல்லாராலும் புறக்கணிக்க பட்டவன் தான் .
இப்போது செல்வராஜாவின் மகன் சினிமாவில் வேகமாக வளர்ந்து வர மாதேசஷின் கால்சீட் விவரங்களை பார்த்துக்கொள்ளும் மேனேஜராக செல்வராஜா அவனை நியமித்திருந்தான்.
“ஏம்பா உன் பையன் தான் இன்டஸ்ட்ரியில
பெரிய டாக் ஆகிட்டு வரான். பெரிய ஸ்டார் ஆகிடுவான். நீயே அவனுக்கு மேனேஜரா இருக்கலாமே மாயாண்டி. எதுக்கு தனிகாவை எடுத்து உள்ள விடுறே?” என பலரும் செல்வ ராஜாவிடம் கேட்டு இருக்கிறார்கள் .
ஆனால் செல்வராஜா அந்த விஷயத்தில் தீர்க்கமாக நின்றான். என்னதான் சொந்த மகன் என்றாலும் நாம் அவனுக்கு மேனேஜராக இருக்க முடியாது . அது மரியாதை இல்லை.
ஷூட்டிங் முடிந்த பின், அவன் எந்த ஓட்டலில் பார்ட்டி என்றாலும் நடிகைகளை கட்டிப்பிடித்து, டான்ஸ் ஆடினாலும் தண்ணி அடித்தாலும். நாம் கூடவே இருக்கவேண்டும்.
நம்மால் அது முடியாது .அது மட்டுமில்லை. இந்த சினிமா உலகில் எந்த ஒரு சூதுவாது தெரியாமல் நான் இருந்தேன். அது போல என் மகனும் இருந்தால் .சீக்கிரமாக அவனை பேக்கப் செய்து விடுவார்கள். அவன் சூது, வாது கற்றுக்கொள்ள வேண்டும் .
அரசியல் போல சினிமாவிலும் சூட்சுமங்கள் நிறைய இருக்கின்றன. எந்த நடிகன் புதிதாக வருகிறான்? அவன் பின்னனி என்ன? அவன் நம்மை தட்டிவிட்டு மேலே போகிறானா? அவனை எப்படி வீழ்த்துவது? நமது ரசிகர் வட்டத்தை எப்படி உருவாக்குவது? எப்படி யாரிடம் மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டும்?யாரை சீண்ட வேண்டும்? யாரை பாராட்ட வேண்டும்? எந்த விழாவிற்கு செல்ல வேண்டும் ?எந்த நடிகையுடன் நடிக்க வைக்க வேண்டும் ? எவளுடன் பார்ட்டிக்கு போக
வேண்டும்?. எவளை ஒதுக்க வேண்டும்?
எந்த இயக்குனரிடமும் சேர வேண்டும்? எந்த கதைக்கு ஓகே சொல்ல வேண்டும்? எந்த கால்சீட் எத்தனை நாள்? எது உப்புமா கம்பெனி ? எந்த தயாரிப்பில் நடிக்கலாம்? எந்த கம்பெனி இந்த படத்தை வாங்கும் ?எந்த சேனலுக்கு எவ்வளவு விலை போகும் ?
சம்பளம் வாங்க வேண்டுமா ? அல்லது பங்காக வாங்க வேண்டுமா? அப்பப்பா...
ஒரு பெரிய அந்தஸ்து பெற்ற கதாநாயகனை சுற்றி இருக்கும் ஒரு அப்பாவாக உட்கார்ந்து கொண்டு நான் பக்கத்தில் போய் சொல்லமுடியாது .
ஆனால் அப்படியும் இங்கே இருக்கிறார்கள் சில அப்பா டைரக்டர்கள் , மகனிடமே சொல்கிறான் “ அந்த ஆக்டரஸ்
வேணாம்டா.. காயே எடுப்பா இல்ல?’ என்று..
த்தூ.. விளங்குமா? இப்படியெல்லாம் பேச என்னால் முடியாது.
மகனுக்காக ஒரு நடிகையை மல்லாக்க படுக்க வைத்து அவள் தொடையில் இருந்து வயிறு வரை, அதன் பின் மார்பு வரை முத்தமிட்டுக்கொண்டே இருக்கும்படி ஒரு காட்சியை ஒரு அப்பா இயக்குனர் படமாக்குகிறார் . அதன் பின் மழையில் வேறு நனைந்து
கட்டிபிடிக்க வேண்டும்.
“தொடையை விட்டு மூஞ்சிய எடுக்காதே” என ஸ்பாட்டில் பேய் போல
கத்துகிறான் அந்த டைரக்டர்.
மகுடம் பத்திரிகையில் அது
செய்தியாக கூட வந்தது.
“தொடையை விட்டு மூஞ்சிய எடுக்க
கூடாது” அப்பா போட்ட கட்டளை. என நியூஸ்
வருகிறது. இப்படியா பணம் சம்பாதிக்க வேண்டும்?
அதனால்தான்., அது என்னால் முடியாது என
மறுக்கிறேன். அதனால்தான் நான் மாதேஷை வைத்து படம் இயக்கவும் இல்லை . மாதேஷிற்கு மேனேஜராகவும் எண்ணமும் இல்லை.
அதற்காக யாரோ ஒருவரை நாம் மேனேஜராக போட்டுவிட முடியாது . நம்பிக்கையும்கொஞ்சூண்டு நேர்மையும் இருக்க வேண்டும்.
அது எனக்குத்தெரிந்து சினிமாவில் முத்துவுக்கும் , தணிகாவுக்கும் இருக்கிறது. முத்து இதற்கு எல்லாம் சரிப்பட்டு வரமாட்டான். வெற்றிலைப் பாக்கு போடும் வகையறா அவன். யாருக்குமே மரியாதை தர மாட்டான். தான் மிக நெருக்கமாக இருக்கிறோம் என்பதனாலேயே அவன் யாரையும் மதிக்க மாட்டான். நேர்மையாக இருக்க கூடிய எல்லோருக்குமே இருக்கக்கூடிய மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட் அது. தவிர அவனுக்கு நாகரிகம் என்றால் என்னவென்று தெரியாது , சபை இங்கிதமும் ஏதும் அறியாதவன் .
பல பேர்கள் இருக்கக்கூடிய இடத்தில் எப்படி பேச வேண்டும் என்பது கூட தெரியாது.,
ஒருமுறை பெரியவரிடம் மியூசிக் வாங்கிக்கொண்டிருந்த போது
“என்ன சார் ? சாங்க் ரொம்ப ஸ்லோவா இருக்கு, கொஞ்சம் டெம்போ ஏத்துங்க . பீட்சை மாத்துங்க” என சொல்லி இதற்காக பெரியவரால் வீட்டை விட்டு விரட்டி அடிக்கப்பட்ட வன் அவன்.
எந்த இடத்தில் எப்போது ?எவ்வளவு பேச வேண்டும் ?என்கிற அடிப்படை சூத்திரம்தான் சினிமாவிற்கு அரசியலுக்கும் அடிப்படை.
இது தெரியாதவன் இரண்டிலுமே ஜெயிக்க முடியாது. முத்து இப்படி ஸ்டுடியோக்களில் ஒரு சாதாரண கூலி ஆளாக இருப்பதற்கு அவனது இந்த குணம் தான் காரணம் .
ஆனால் தனிகா அப்படி அல்ல, நீக்கு போக்கு கற்றவன் , பொறுமையானவன். அடிப்படையில் கொஞ்சம் வசதியான குடும்பத்தை சார்ந்தவன் என்பதால் அவனது உடையிலும் பேச்சிலும் நாகரீகம் இருக்கும் .
‘ஹீரோவாக நடிப்பேன் ‘ என்ற பிடிவாதத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி குணச்சித்திர வேடங்களிலும் செய்துவந்தான். இப்போது அது கூட சரியாகக் கிடைக்கவில்லை அவன் தான் நமக்கு ஏற்றவன். மாதம் 2 லட்சம் கொடுத்தால் வாங்கிக் கொண்டு மிக நேர்மையாக இருப்பான்.
அது மட்டுமல்ல இந்த மேனேஜர் வேலைக்கு வெளி ஆட்களை நம்ப முடியாது .வேறு யாராக இருந்தாலும். மாத சம்பளம் மற்றும் எல்லா விவரங்களையும் வெளியே கசிய விடுவார்கள். அது சரியாக இருக்காது .
தகுதியான சரியான குருவாக வழிகாட்டியாக நண்பனாக இருக்க கூடிய தகுதி தணிகாவுக்கு
உணடு. தான் உண்டு தன் வேலை
உண்டு என இருப்பான். மாதேஷை குழந்தையில் இருந்து பார்த்தவன். அவன் மீது தனி பிரியம்
தணிகாவுக்கு இருக்கும்.
இதில் இன்னொரு பெரிய சிக்கலும் இருக்கிறது. நான் மாதேஷை வைத்து சினிமாவில் நிறைய கள்ள ஆட்டங்களை ஆட போகிறேன். அந்த அந்தரங்க விஷயங்களை என்னால் நேரடியாக அவனிடம் சொல்ல முடியாது .
எனக்கும் மாதேஷ்க்கும் நடுவில் ஒரு தூதர் வேண்டும். அதுதான் தனிகா .
‘இன்று எந்த பார்ட்டியில், எந்த நடிகையுடன் போகிறாய்? “ என்று நான் கேட்க முடியாது என்றால் தணிகாவிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் “ செல்வராஜா பல
விஷயங்களை திட்டமிட்டான்.
No comments:
Post a Comment