மறுநாளே ஸ்பாட்டில்
வரவழைத்து ஆடிஷன் எடுத்தான் தர்மராஜனுக்கு மாதேஷ் முகம் திருப்தியாக இருந்தது. அவனது பாடி லேங்குவேஜ்., ஸ்லோ ஆக்டிங்’ எல்லாம் சரியாக இருக்க அடுத்த படத்தில் அவனை நடிக்க வைத்து., படமாக்க இசையை இசை எப்படியாவது பெரியவரிடம் வாங்கி கொடுக்கணும் சொல்ல பெரியவர் இசை கிடைக்கவில்லை .
‘சில நாட்கள் கழித்து வா’ என சொன்னார் .
ஆனால், பெரியவரின் இசை கிடைக்க சில மாதங்கள் ஆக.,அவர்கள் அப்போது
டிரெண்டிங்க்கில் இருக்க கூடிய ஒரு இளவயது மியூசிக் டைரக்டரிடம் போனார்கள்.
அந்த படம் எண்பது லட்ச ரூபாயில் தயாரிக்கப்பட்டு, புதிய நட்சத்திரங்களை மட்டுமே நடிக்க வைத்து எடுக்கப்பட்டது. பரவலாக ரிலீஸ் ஆக அது மிகப்பெரிய வெற்றியை தந்தது எல்லோருமே அந்த படத்தின் இசையையும் அந்த படத்தின் ஹீரோவாக நடித்த மாதேஷைப் பற்றியும்
சிலாகித்து பேசினார்கள். யார் கையையும் கடிக்கவில்லை.
அடுத்த படமும் காலேஜ் சப்ஜெக்ட். சீன்கள்
எல்லாம் புதிதாக இருந்தன. தர்மா டைரக்ஷனிலும், மாதேஷ் ஆக்டிங்கிலும் வெகுவாக
தேறிவிட்டிருந்தான். அந்த படம் இன்னும் ஹிட்டானது.
காலேஜ் போகும் இளவட்டங்களுக்கு
அவர்களின் சொந்த பிரதி போல திரையில் தோன்றினான் மாதேஷ். அழுக்கு சட்டை, எண்ணெய் வழியும் முகம், வாராத
முடி,. இதெல்லாம் அந்த தலைமுறைக்கு ரொம்ப பிடித்தது.
அதற்குள் மாதேஷ் நடனத்தில் வெகுவாக தேறி இருந்தான் . அடுத்த படம் வெளியாள் படம்..டான்ஸ்
சப்ஜெக்ட். சம்பளம் ஒரு லட்சம் என்றார்கள்
அவன் அசால்ட்டாக ஆட்டம் போட்டான்.
50 கிலோவை தாண்டாத அவனது உடல் வாகிற்கு எப்படிப்பட்ட நடன அசைவும் இயல்பாக
வந்தது. படம் வெளியாகி தியேட்டர்கள்
அல்லோகலப்பட்டது.
அவனது நடனம் டீனேஜ் பையன்களுக்கும் பெண்களுக்கும் மிகவும் பிடித்துப் போயிருந்தது , ‘ ஒத்த ரோசா.. “ பாடலுக்கு அவன் ஆடிய நடனம் ஒரே பாட்டில் பட்டி தொட்டியெலாம்
அவனை கொண்டு போய் சேர்த்தது.
அவனுக்கு கிடைத்த புகழை பார்த்து பெரிய பிரபலங்கள் கூட மலைத்துப் போனார்கள். இருபது வயசு கூட ஆகாத ஒரு சின்ன பையன் என்னம்மா போடு போடுறான்’ என் வியந்தார்கள்.
அவன் கூட நடிக்கும் நடிகைகளுக்கு அவனை விட வயசு அதிகமா தான் இருந்தது.
அவன் படத்திற்கு படம்
மெருகேறினான். ஆள் வெயிட் போட, லேசாய் கன்னம் சதை போட வசீகரமானான்.
இளம் நடிகைகள் பலரும் அவனுடன் நடிக்க மாட்டோமா? என ஏங்கினார்கள். ‘
மாதேஷ் கூட ஒத்த பாட்டுக்கு டான்ஸ் ஆடறதுக்கு சீனியர் நடிகைங்க கூட அலையறாங்க “ என பத்திரிகைகளில் செய்தி வந்தது . மாதேஷ் செய்தி ஆகிக்
கொண்டிருந்தான்.
அப்போது பிரபலமாக இருந்த இன்னொரு ஸ்டார் நடிகருடன் ஜோடியாக நடிக்க., ஒரு தமிழ் நடிகை புறக்கணித்து விட்டாள். ‘சம்பளம் ஏற்றி தருகிறேன்’ என சொல்லியும் அந்த நடிகை ஒத்துக்கொள்ளவில்லை . அதே வாரம் மாதேஷுடன் நடிக்க ஒப்பந்தம் ஆனாள்.
“எதுக்கு மேடம் ஸ்டார் நடிகருடன் ஜோடியாக நடிக்கும் நல்ல வாய்ப்பை நீங்க மிஸ் பண்ணிட்டீங்க “ என ஒரு சினிமா ரிப்போர்ட்டர் கேட்ட கேள்விக்கு
அந்த நடிகை “பணம் தருகிறேன் என்பதற்காக 50 வயசு காரனுக்கு எப்படி ஜோடியா நடிக்கிறது? “
என வெளிப்படையாக சொல்ல ., அந்த செய்தி அமுதம் வாரப் பத்திரிகையில்
“‘சம்பளம்
கம்மியா இருந்தாலும் பரவாயில்ல. வயசு கம்மியா இருக்கனும் “ என செய்தியாக வெளிவந்தது .
அந்த பதில் அந்த பெரிய நடிகரை கண்கள் சிவக்க வைத்தது.
.அந்த ஸ்டார் நடிகர் சம்பந்தமே இல்லாமல் வளர்ந்து வரும் இளம் நடிகனான மாதேஷ் மீது கடும் கோபம் கொண்டார் .
“எதுக்கு சார் அந்த நடிகை உங்க கூட நடிக்க மாட்டறாங்க? உங்களுக்கு டான்ஸ் வராது என்றதுக்காகவா?’’ என ஒரு
ரிப்போர்ட்டர் கேட்டதற்கு
அந்த ஸ்டார் நடிகர் கோபத்தில் “மாதேஷ் போல நான் டான்ஸ் ஆட முடியாது என்பது உண்மைதான், ஆனால் அந்த மாதேஷ் என்ன மாதிரி சட்டையை கழட்டி சண்டை போட முடியாது “ என சொல்ல, அந்த செய்தியும் அப்போது பரபரப்பு ஆனது.
மாதேஷ் கோபமானான். “எல்லாரும் உடம்பை பார்த்து கிண்டல் பண்றாங்கல்லே?” கோபப்பட்டான்.
“டேய்... இந்த உலகில் எவன் புகழைடைந்தாலும் அவனிடம் மைனஸ் பாயிண்ட் என்னன்னு கண்டுபிடித்து சொல்லுவார்கள்.
குள்ளம், கருப்பு , வழுக்கை மண்டை அப்படி என்ன ஆயிரம் சொல்லுவானுங்க ., இப்போ நீ என்ன பண்ற? முதல்ல உடம்பு மஸ்குலர் பண்ணிக்கோ . அதுக்காக குண்டு ஆவாதே.. “ தணிகா அவனை தட்டி கொடுக்க.,
“வீட்டின் மொட்டை மாடியில் மெத்தை போடப்பட்டு.,
ஸ்டன்ட் ஆட்கள் வரவழைத்து பிரத்தியேகமாக கருவிகள் போடப்பட்டு ,அங்கே இரவும் பகலுமாக அவனுக்கு உடற் பயிற்சிகள், சண்டை பயிற்சிகள் பயிற்றுவிக்கப்பட்டன .
சும்மா இருப்பவனை சொரிந்து விட்ட கதையாக காதல், ரொமான்ஸ், டான்ஸ் என குறுகிய
வட்டத்தில் இருந்த மாதேஷ்க்கு அடுத்த கட்டம் துவங்கியது.
“போப்பா,. இனி இந்த லவ் மட்டும்
இருக்குற ஸ்டோரி வேணாம். படத்துல பைட் வேனும் “ என சொல்ல பல இயக்குனர்கள் தலை தெறீக்க ஓட,. ஒரு சூப்பர்
கதையுடன் ஒரு டைரக்டர் வந்தான்.
காலேஜ் சப்ஜெக்ட்.. ஆனால் ஸ்டண்ட்
உண்டு என சொல்ல,. மாதேஷின் அடுத்த கட்ட சினிமா பிரயோகம் சண்டைக் காட்சிகள் நிறைய உள்ள ஆக்ஷன் படமாக தயாராகிறது. படத்திற்கு ‘டூமா கோலி’ என பெயர் வைத்தார்கள். பெரிய வில்லனை
போட்டார்கள்.
கதையில் ஒரு சீனில் மாதேஷ்ஷின் சட்டையை ஒரு ரவுடி பிடித்து
கிழித்து விட அவன் சட்டை இல்லாமல் நின்றான் , அவன் நெஞ்சாங்க் கூடும் தோள்பட்டையும் ,ஆங்காங்கே சிறிய துண்டுகளாக வீங்கியிருக்க , புரூஸ் லீ போன்ற தோற்றத்தில் அவன் இருந்ததைப் பார்த்து தியேட்டரில் விசில் அடித்தார்கள்.
“எனக்காட
சட்டை கழட்டி சண்டை போட தெரியாது” அவன்
வசனம பேசினான். ரசிகர்கள் திரையில் , காட்சியில் அப்படியே ஒன்றினார்கள்.
தேர்ந்த நடிகன் போல அவன் சண்டை போட்டான். அவனது இயல்பிலேயே நடனம்
கலந்து இருக்.க, மாதேஷ்க்கு சண்டை மிக எளிதாக வந்தது .
அவன் போடும் சண்டை மிக வேகமாக சுறுசுறுப்பாக இருந்தது. காலங்காலமாக ஒல்லிபிச்சான் களாக இருந்த பல இளைஞர்களின் திரை பிம்பமாக மாதேஷ் திரையில் தோன்றினான்.
அந்த ஒரே படத்தில் அவனை முழு முழு திறமையும் பெற்ற நடிகனாக தமிழ் ரசிகர்கள் தூக்கி வைத்துக் கொண்டார்கள் .
‘என்னய்யா சொல்ற? சட்டையை கழட்டி சண்டை போட முடியாதுன்னு? இப்ப பாத்தியா? ‘என்பது என்ன என்பது போல அவன் மறைமுகமாக திரையில் அந்த ஸ்டார் நடிகருக்கு சவால் விட்டான் .
அதற்கு பிறகு மாதேஷின் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை . அசுர வளர்ச்சியை பெற்றான் . உடலமைப்பிலும் அவன் பார்க்கும்படி சுமாரானான்.. காசு வர வர அவனது முகம் இன்னும் அழகிய தேஜஸ் நிறைந்தது.
இந்த சினிமா உலகம் எவரை வேண்டுமானாலும் கோபுரத்திற்கு அழைத்துச்செல்லும் எவரை வேண்டுமானாலும் குறியாக்கி விடும் என்பதற்கு ஒரு நவீன உதாரணமாக மாதேஷ் இருந்தான். கொஞ்சம் கொஞ்சமாக தெலுங்கு, கன்னடம், இந்தி என அவனது படங்கள் டப்பிங் செய்யப்பட்டது .
ஒரு கட்டத்தில் நேரடியாகவே அவரை வைத்து படமெடுக்க வெளிமாநில பட தயாரிப்பாளர்கள் சினிமா கம்பெனிகள் அலைமோதின . வருமானம் பத்து கால் பாய்ச்சலில் வந்தது.
அவனது காட்டில் பண மழை பெருமழையாக பொழிந்து கொண்டிருந்தது. அது பணமழை மட்டும் இல்லாமல் அழகான இளம் பெண்களை படுக்கையில் புரண்டு விருந்தளிக்கும் காம மழையாகவும் அது இருந்தது.
இப்போது அவன் வளர்ந்து வரும் நடிகன் இல்லை, முன்னணி நடிகன் ஆகிவிட்டான். அவனுடன் சேர்ந்து தனது
பேனரில் படம் எடுக்க பல முன்னணி இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அலை மோதுகிறார்கள். அவனுடன் ஜோடியாக நடிக்க தமிழில் மட்டுமல்ல. தெலுங்கு, கேரளா, இந்தி நடிகைகளும் தவம் கிடக்கிறார்கள்.
‘எந்த மொழி படமானாலும் இங்கே
சென்னை ஸ்டூடியோவுக்கு வாருங்கள். என்னால்
அங்கே வர முடியாது’ என
சவாடாலாக சொல்கிறான். அவர்களும் கேட்டுக் கொள்கிறான். இங்கே வந்து டேரா போட்டு
காட்சிகளை எடுக்கிறார்கள்.
இப்போது கூட அப்படிப்பட்ட ஒரு அன்னிய மொழி படத்துக்காக தான்
மாதேஷ் ஷூட்டிங் வந்தான்.
அவன் உள்ளே நுழைந்ததும் சீன்
சொன்னார்கள்.
“என்னய்யா இந்த ஆளு இங்க இருக்கான்.?” மாதேஷ் எட்டிப் பார்த்து
கேட்டான்.
மதேஷை சட்டை கழட்டி நடிக்க
முடியாது என எகத்தாளம் பேசிய ஸ்டார் நடிகன்,
“என்னவாம்?’
“உங்களைப் பாக்கனுமாம்?”
“என்னையா எதுக்கு?”
“அந்தாளு கூட சேந்து ஒரு படம் பண்ண
உங்க டேட் வேனுமாம். “
“யோவ்வ்”
“.. நீங்க தான் ஹீரோ. அவரு செகன்ட் ஹீரோ. டைரக்டரை கையோட
கூட்டிகிட்டு வந்திருக்கார்.. ரொம்ப
நேரமா வெயிட் பண்றாரு”
“கிடக்கட்டும் கிடக்கட்டும்...அந்த
ஹீரோயின் குட்டியை ரூமுக்கு அனுப்புங்க... “ என சொன்னபடியே மேக்கப் ரூமுக்குள்
நுழைந்தான் மாதேஷ்.
சினிமாவின் முடிவுறாத நாவல் இப்படித்தான் பல சமயங்களில் அதிசய திருப்பங்களுடன் எழுதப்படுகிறது.
அவன் பழைய ஆள் இல்லை. விடலை
பையன் இல்லை. முதிர்ச்சி பெற்ற நடிகன். மாதேஷ் நிறைய விருதுகளை வாங்கி குவிக்க ஆரம்பித்துவிட்டான் .அவரது நடிப்புத் திறமை ஒவ்வொரு படத்திற்கும் பெருகிக்கொண்டே அவனது புகழ் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வந்தது. அவனுடைய பேருக்கும் புகழ்க்கும் அவனது நடிப்புத் திறன் மட்டும் காரணம் இல்லை, வேறு ஒரு காரணமும் இருந்தது அதற்கு காரணம் அவனது மனைவி.
சொல்லப்போனால் அவனது மாமனார்.
No comments:
Post a Comment