மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, February 20, 2024

பாகம் 35 - எபிசோடு எண் : 24

 

செல்வராஜாவின்என் ராசாத்தி’ அந்த படம் அரங்கு நிறைந்த காட்சிகளாய் 100 நாட்களை மிகச் சுலபமாக தாண்டியது. பெரிய வசூலை வாரி குவித்து,  எல்லோருக்கும் லாபமாய் அமைந்தது.

அந்த ஹீரோ கம்  தயாரிப்பாளர் ராஜாகண்ணு  செல்வராஜை கூப்பிட்டு வைர மோதிரம் பரிசளித்தார். அடுத்தடுத்த படங்களை இயக்க வாய்ப்பு கொடுத்தார். செல்வரஜாவுக்கு திருமணம்  ஆனது.

 அவன் அதன்பிறகு செல்வராஜா பெரியவரின் இசையை துணைக்கு வைத்துக்கொண்டு நிறைய கிராமத்து மண்வாசனை படங்களை கொடுத்தான் .அவனிடம் படமாக்குவதற்கு நிறைய கிராமத்துக் கதைகள் அடுத்தடுத்து இருந்தன.

நண்பன் முத்துவும் ,அவனுக்கு கதை கொடுத்தான்.  நண்பர்கள்  நடுவே, ஓரளவுக்கு பணமும் நடமாடியது.  செல்வராஜாவால் மிகப்பெரிய உச்சத்தை தொட முடியவில்லை என்றாலும் பேர் சொன்னால் தெரியும் ஒரு வெற்றிப்பட இயக்குனராகவே அவன் இருந்தான் . 

அவ்வப்போது ஒன்றிரண்டு படம் செய்தான். நிறைய சங்கங்களில் கௌரவ தலைவர் பொறுப்பு வகித்து பணம் சம்பாதித்தான்.

 

நாட்கள் ஓட ஓட அவனுக்கு பிள்ளைகள் பிறந்தன. இரண்டு பிள்ளைகள். ஒரு பெண். வீடு ,வாசல் வசதிக்கு கொஞ்சமும் குறைவில்லை. சாப்பாட்டுக்கும் குறையவில்லை. துணிமணி , நகைகள் நல்ல வாழ்வுக்கு குறைவில்லை .  பிள்ளைகள் பெரிய பணக்கார பள்ளியில் படித்தன.

ஆனால் ஒரு குறை இருந்தது. அது அவனின் பிறப்பு,.  எங்கு போனாலும் அவனை அவனது பிறப்பாய் பார்த்து ஒதுக்குகிறார்கள் என அவனே நினைத்தான்.

இசையரசர்  பெரியவர் தனது பிறப்பின் அடையாளத்தை  ஜாதி முத்திரையை அழித்தார் என்றால் அதற்கு அவருடைய அபூர்வமான உச்சகட்ட திறமை காரணம்.  அப்படி ஒரு திறமை நமக்கு இருப்பதாக தோணவில்லை.

குலப் பிறப்பு என்ற அடையாளம் ஒன்று இருக்கும் போது, அந்த வட்டத்தை தாண்டி வர முடியாது. பாரதத்தில் கர்ணனை தடுத்த., சபையில் சிரித்த கர்ணனின் குலபிறப்பு தான்  நம்மையும்  சிறுமைப் படுத்துகிறது என எண்ணினான்.

 அது இருக்கும் வரை அல்லது அந்த உச்சத்தை தொடும் வரை நம்மால் இந்த சமூகத்தை எப்படியும் பழிவாங்க முடியாது, திரை உலகத்தை வெல்ல முடியாது என நினைத்துக் கொண்டிருந்தான். உண்மையில் அவன் யாரை வெல்ல வேண்டும்? எதற்காக வெல்ல வேண்டும் என்பதை புரியாமல் இருந்தான். வெற்றி பெற்றாலும் தாழ்வு மனப்பான்மையால் சுருக்கப்பட்டான். நாம் எப்படி சமமாகுவது என யோசித்தான்.

 அந்த சமயத்தில்தான் அவருடைய மூத்த பிள்ளை  தர்மராஜன்

 சினிமா எடுக்க போகிறேன் என வந்து நின்றான் . அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது . எந்த வேலையும் சரிவர செய்யாதவன் பிறப்பிலிருந்தே மந்த புத்தியை உடையவன் .  உருப்படியா ஏதோ சொல்கிறானே? இவன் இவன் எப்படி டைரக்டர் ஆவான் என்பது அவனது கேள்வியாக இருந்தது .

என்றாலும் தர்மராஜன்   விடாது தொந்தரவு செய்து கொண்டிருக்க,  குடும்பத்தோடு கேரளா போய் ஒரு தனது குடும்ப ஜோசியக்காரனை பார்த்தார்.

அவர் சோழி போட்டு பார்த்து.,

“ தாராளமா ஆக்கி விடுங்க..,  தம்பிய பார்த்தா , படைப்பாளி போல இருக்கு.. என்றார்.

அதுக்கு நிறைய படிக்கனுமே?

“ கொடுங்க .. புஸ்தகம் படிக்கட்டும். ஸ்கூல் புஸ்தகம் இல்லே,  சினிமா புஸ்தகம். தம்பி  பெரிய படைப்பாளி  ஆவான். நிறைய புக்ஸ் கொடுத்து படிக்கச் சொல்லுங்க., நிறைய படங்களைப் பார்த்து என்ன புடிச்சிருக்கு? என்ன புடிக்கல?. எது நல்லா இருக்குன்னு பத்தி பிரிச்சி எழுத  சொல்லுங்க., எனக்கு என்னமோ உங்கள மிஞ்சின ஆளா உங்க பையன் தோணுது. கொஞ்சம் கூட யோசிக்காம சினிமாவில் இறக்கி விடுங்க என அவர் பச்சைக் கொடி காட்டினார்.

 செல்வராஜாஅப்படியா? என யோசனையாய் நெற்றியை தேய்க்க

அது உங்க இஷ்டம்.. அட இந்த பையன் யாரு?  கூட வந்திருக்கிறது?  என  அரும்பு மீசையில்  இருந்த மாதேஷை பார்த்து கேட்டார்.

“சாமி.. இவன்  என்னுடைய கடைசி பையன். மாதேஷ்.. மாதேஸ்வரன்நு கூப்பிடுவோம்  என தேவாங்கு  போல் இருந்த அந்த பையனை காட்டினான் செல்வராஜா.

 அட சுழி நன்னா இருக்கே? தெக்கு பாத்து  திரும்புப்பா அவன் திரும்ப.,

“ அடடா. நல்ல சுறு சுறுப்பு.. என்ன ஸ்டார்?

“ பூரம்.. “

“அப்படியா?  எங்க தம்பி யோட ஜாதகம்?

அ.. அய்யய்யோ கொண்டு வரலையே ..”

பரவலாக விடுங்க.. கைப்புண்ணுக்கு கண்னாடி எதுக்கு.அந்த முதிர்ந்த ஜோசியக்காரர் சொல்லிக்கொண்டே, அவனது கண்களை பார்த்தார்.,

“இவன் கண்ணுல  ., சக்கரம் திரியுது.. ஒரு தேஜஸ் இருக்கு ரொம்ப சுறுசுறுப்பா இருக்கான்,  காது கழுத்து   நெஞ்சு குழி எல்லாம் ரொம்ப தெளிவா இருக்கு., பெரிய நடிகனா வருவான் “ என சொல்ல அந்த குடும்பமே ஆச்சரியப்பட்டது.

அட நீங்க வேற  சாமி. நாங்க இவனை நாக்குப்பூச்சி நாக்குப்பூச்சிந்னு  கிண்டல் பண்ணிட்டு இருக்கோம்.,  நீங்க என்ன இப்படி சொல்றீங்களே? இவன் நடிச்சி யாரு பாக்குறது., நாலு நரம்புதான் இவன் உடம்புல் ஓடுது

அடடா யாரையும் உருவத்தை வைத்த எடை போட கூடாதுஎன சொல்லி பையனின்  விரல் ரேகை வாங்கி மூன்றே நிமிடத்தில் ஜாதக கட்டத்தை வரைந்து,  அவன் பிறந்த நேரத்தை துல்லியமாக கணக்கிட்டார் .

சார் எழுதிவைச்சுக்கோங்க... இந்த 18 வயசு பையன் சினிமால கால்  வச்சி  ரெண்டே  வருஷம் ரொம்ப பெரிய ஆளாக வருவான்., பத்து வருஷத்துல எல்லாரயும் முழுங்கிடுவான்“

ரொம்ப பெரிய ஆள்னா? “

இந்தியாவிலேயே பெரிய நடிகனாக வருவான்

இந்தியாவுலயா?

“ ஆமா. இவன் 40 வயசுல இந்தியா இல்ல சார் , உலகத்திலேயே பெரிய நடிகனாக வருவான்  என சொல்ல அந்த குடும்பம் அவரை ஆச்சர்யமாக பார்த்தது.

அப்படி மட்டும் நடந்தால் இந்த அதிர்ச்சி என்னால தாங்கிக்க முடியாது என அவனது அக்கா  சொல்ல .,

அவனோ அந்த அக்காவின் கையை முறுக்கி முதுகில் குத்தினான்.

இருப்பா இருப்பா.. தம்பி யார் என்ன சொன்னாலும் நீ எதையுமே மனசில் வெச்சுகாதே., பையனுக்கு டான்ஸ் வருமா ?”

அதெல்லாம் கிடையாதுங்க நிறைய உடான்ஸா விடுவான் படிப்புல ரொம்ப மக்கு,

சரி சென்னைக்கு போன உடனே பையனை டான்ஸ் கிளாஸ்ல சேத்து விடுங்க., தம்பி  டான்ஸ்ல கான்ஸ்ட்ரேட் பண்ணு., இதான் என் பொழப்பு என்பதாய் ஆடு. நிறைய டான்ஸ் வீடியோவை பாரு.கண்னை மூடுனா டான்ஸ் ஆடறா கால் தான் உனக்கு ஞாபகம் வரனும்...

“சரிங்க சாமி..

உன் அப்பன் எதை சொன்னாலும் கேளு..

“சரிங்க சாமி..

“பேர மட்டும் மாத்தாதீங்க..  மாதேஷ்  கண்டிப்பா பெரிய ஆளா வருவான். சொல்ல போனா உங்களைவிட, உங்க பெரிய பையனை விட,  இந்த சின்ன பையன் ரொம்ப பெரிய ஆளா வருவான், இது சத்தியம்

“என்னங்க சொல்றீங்க நான் பெரிய பையநுக்கு கேட்க தான் இங்க வந்தேன்

“ மாயாண்டி சார் . இந்த இத்தனை வருஷம் நான் உங்களுக்கு சொன்னது எதனாச்சும் தப்பா ஆச்சா?

“இல் இல்ல சாமி

“ உனக்கு முதல்ல பையன் ,இரண்டாவது பொண்ணு அடுத்து பையன் என்று சொன்னேன் ., அந்த ஆர்டர் மாறுச்சா?

“இல்ல சார்

“ அதே ஆர்டர்ல தான் உங்களுக்கு குழந்தைகள் பிறந்து இருக்கு. உங்க பொண்ணு வயசுக்கு வந்த நாளில் இருந்து நீங்க சினிமாவுல இருக்க மாட்டீங்கன்னு சொன்னேன்.  அது நடந்ததா?

ஆமாங்க நடந்தது

அப்ப இதுவும் நடக்கும்.  பையனை  கொஞ்சம் சதை போட வையுங்க. அசைவம் அதிகமா கொடுங்க... நம்பிக்கை போயிட்டு வாங்க என்றார் ஜோசியர்.

சென்னை வந்ததும்  மாதேஸை பார்த்துக் கொள்ள மட்டும் தணிகாவை நியமித்தான். தணிகா அவனுக்கு டயட், டான்ஸ் , நடிப்பு எல்லாம் சொல்லி கொடுக்க.,  செல்வராஜா தன்னுடைய  மூத்த மகன் தர்மராஜனை  இயக்குனர் ஆவதற்கான எல்லாம் முயற்சிகளை தனியே  செய்தான்.

தனது குரு நாத இயக்குனரிடம் தர்மாவை அனுப்பி ஆசி வாங்கி விட்டு, பின்  தனக்கு தெரிந்த பிரியமான இயக்குனர்களிடம்  மாறி மாறி அவனை இயக்குனர் பயிற்சிக்கு சேர்த்து விட்டான்.

இரண்டு ஆண்டில பயங்கரமாய் தேறிவிட்டான் தர்மராஜா. எல்லோருமே  தர்மா  பற்றி நல்ல விதமாக சொன்னார்கள்.  அடுத்த இரண்டாவது வருடம் அந்த பையன் ஒரு படம் எடுத்தான். மிகவும் சுமாரான பட்ஜெட் தான் .  ஆனால் படம் ஸ்லோ..பிரிவியூ ஷோவில் பார்த்து கூட பல பேரு உதட்டை பிரித்து விட்டு போனார்கள் . படத்தை எவருமே விலைக்கு வாங்கி கொள்ளவில்லை, படம் போனி ஆகவில்லை.  அதன்பிறகு செல்வராஜா தனக்கு தெரிந்த நண்பரிடம் பணம் வாங்கி இன்னொரு படம் எடுத்தான்.

“இந்த படத்துல ரொம்ப மந்தமா அழகே இல்லாத ஒரு ஹீரோ வேணும்என தர்மராஜன் தேடிக்கொண்டிருக்க.,

அதுக்கு ஏன் அவ்ளோ தூரம் போற.,  தோ சுமார் மூஞ்சி மாதேஷ்  இருக்கானேஎன அக்கா  சொல்ல

கோபம் வந்து சாப்பிடும் தட்டை எடுத்து., மூஞ்சி அக்காவின் முதுகில் அடித்த மாதேஷை  பார்த்தான். தர்மராஜன்

 அந்த ஒரு நிமிடம் அவனுக்கும் பொறிதட்டியது .’வேறு எவனையோ படத்தில்  போடுவதற்கு பதில் இவனையே போடலாமே.,யோசித்தான்.

 BUY FULL VERSION

No comments:

Post a Comment