ஒரு முகூர்த்த நாளில் பட பூஜை போடப்பட்டது,
தயாரிப்பாளர் ராஜாகண்னு
விநியோகஸ்தராக இருந்தவர் என்பதால், அவருக்கு நெருக்கமானவர்கள் வந்திருந்தார்கள். இசை பெரியவர் என்பதால் ஒரு சில பிரபலங்களும் வந்திருந்தார்கள். அங்கே எல்லோரும் அங்கு பலருக்கும் மாலை அணிவிக்கப்பட்டு பட்டது, சால்வை போடப்பட்டது. ஆனால் அந்த லிஸ்டில் செல்வராஜா இல்லை. அதை யார் முடிவு
செய்கிறார்கள்? தெரியவில்லை. அது மட்டுமில்லை , பூஜை அருகில் கூட அவன் சேர்க்கப்பட வில்லை அவன் பூஜை விட்டு வெகுதூரம் தள்ளி இருநதான்.
அவனுக்கு அது மிக அவமானமாக இருந்தது . அதைவிட பெரிய அவமானம் , அவருடைய புறக்கணிப்பை அங்கே யாரும் புரிந்து கொள்ளாதது தான் .
பிரஸ் கூட பெரியவரையும்,
ராஜாகண்ணுவையும் தான் கேள்வி கேட்டது.
ஆனால், பூஜை முடிந்த பிறகு பெரியவர் அழைப்பதாக சொன்னார்கள். அவன் ஓடிப்போய் பார்க்க பெரியவர் தனி அறையில் இருந்தார் .அவனை கண்டதும்,’ ஆர்மேனிய பெட்டியை தள்ளி வைத்து விட்டு உட்கார்’ என்றார்
‘என்ன உன்ன பூஜைக்கு கூப்பிடல ?மாலை போடலைன்னு கோவமா?’
“ ஐயா .. இல்லைய்யா. “ அவன்
வேகமாய் மறுத்தான்.
“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லைன்னு சொல்லாதே.. கட்டாயம் அது உனக்கு இருக்கும்தாந்..
இங்க ஜெயிச்சு நின்னாதான்., உனக்கு தான் முதள் மரியாதை, இங்க புதுசா வந்தா ஒன்னு பணம் வச்சிருக்கணும், இல்ல பெரிய
இடத்துல இருந்து வதிருக்கனும். இவன் நம்ம ஆளுப்பான்னு கை கொடுப்பானுங்க. நிஜமா
சொல்லனுமுன்னா. உன்னை இங்க யார்க்கும் பிடிக்கல. நீயினா. உன் ஜாதி.. உன் பிறப்பு..
உன் உருவம் , உன் பேச்சு ., என்ன பாக்குறே? நானும் உன் இடம் தான்..ஜெயிச்சவனை தான்
ஜாதி யூஸ் பண்னிக்கும். இங்க முதல்ல பிறப்பு என்னா? என்ன ஜாதின்னு பாப்பாங்க. வெளியே விட சினிமாவுல
தான் அதிகம் பார்ஷியாலிட்டி இருக்கும்.”
“.....”
“ உனக்கு தெரியுமா செல்வராஜா.. நான் 20 வருஷம் முன்னாடி ஒரு ஒரு கம்யூனிட்டி ஓரியண்ட் படம் ஒன்னுக்கு மியூசிக் போட போனேன் , கர்னாடிக் மியூசிக் கலந்த ஜனரஞ்சகமானா பாட்டு வேணுமுன்னு கேட்டாங்க., அதுல
என்னை மியூசிக் டைரக்ட்ரா போடறதுக்கு ரொம்ப பேர் கம்பெனியிலேயே பிரச்சனை பண்ணாங்க,
ஆனா எல்லாத்தையும் மீறி எனக்கு அந்த சான்ஸ் கொடுத்தார் டைரக்டர்., அது அப்ப எனக்கு மூன்றாவது படமோ, நாலாவது படமோ.. வந்தவங்க எல்லாம் பெரிய
இடத்து ஆளுங்க., அந்த படத்தோட பூஜையில என்னை
கலந்துக்க விடலை. பூஜை முடியற வரைக்கும் நான் வெளியே தான் இருந்தேன்
செல்வராஜா. “
‘... பூஜை முடிஞ்சு அப்புறமா அந்த பிரசாதத்தை கூட எனக்கு அவங்க தர தயாரா இல்ல ., உன்ன மாதிரி நான் அன்னைக்கு உறைஞ்சி போயிருந்தேன்.
அவமானத்துல குறுகிப் போயிருந்தேன். நான் நினைச்சிருந்தா. அந்தப் படத்தை கை கழுவி
இருக்கலாம். ஆனா யாருக்கு நஷ்டம்?. எனக்கு தான். அது முக்கியமான பாடம். ஹை
கம்யூனிட்டி படம். அதுல ஜெயிக்கறது எனக்கு முக்கியம். உயிரை கொடுத்து மியூசிக் பண்ணேண். புருஷன்
பொண்டாட்டி முத ராத்திரி சாங்குக்கு நான்
போட்ட பாட்டு தான் இன்னிக்கும் ரெபரன்ஸ்
சாங்க்.. தன்னனான தானன்னா “ அவர் பாட.,
“உண்மை சார்”
“செல்வராஜா அப்ப தான் தோணுச்சு., நம்மளோட அடையாளம், நம்ம ஜாதி இல்லை, நம்முடைய பிறப்பும்
இல்ல., திறமை ஜாதியை சாப்ட்டுடும். இன்னிக்கு எல்ல உயர் ஜாதிகாரனும் என் கால்ல
விழுந்து வணங்கறதுக்கு எங்கிட்ட டேட்
கேக்குறான். எல்லாம் என்னை போயி சாமின்னு கூப்பிடறான். இதெல்லாம் எப்படி மாறுச்சு?
திறமை..”
“ஆ ஆமா சார்”
‘ அந்தப் படம் முடிஞ்சி 175வது நாளில் என்னை எவன் எவன் எல்லாம் புறக்கணிச்சானோ, அத்தனை பேரும் என் கால்ல விழுந்து மரியாதை செஞ்சாங்க, இவரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் என போஸ்டர் ஒட்டுனங்க்க., அப்போ ரொம்ப சின்ன பையன்., உனக்கு நான் சொல்ல வருவது அது தான். உங்கிட்ட சொல்லனும்னு
தோனுச்சி “ என்றார் .
அவன் ‘புரிந்தது’ என்பதாய் தலையாட்டினான். இவருக்கு பெரிய
அளவில் மரியாதை செய்ய நினைத்தான்
பட ஷீட்டிங்க்கு கிளம்பும் முன்பே போஸ்டர் ஒட்ட வேண்டுமென சொன்னான்.
“பெரியவரின் இசையில் பட துவக்கம்”
போஸ்டர் தலை நகர் முழுதும் ஒட்டப்பட்டது,. பேஸ்டரில் வேறு யார் பேரும் இல்லை..
பெரியவரின் குளொசப் படம் .,..,.டைட்டில் அவ்வளவு தான்.
‘இந்த பையன் சாதாராண ஆள் இல்லை’ என
கோடம்பாக்கத்தில் சொல்ல ஆரம்பித்தார்கள். விஷயம் கேள்விப்பட்டு பெரியவர்
மகிழ்ந்தார். அதை பின்னனி இசையில் காட்டினார்.
செல்வராஜாவின் படப்பிடிப்பு குழு , தேனிக்கு பயணமானது. செல்வராஜாவின் மனதில் இருந்த நம்பிக்கையும் , கையிலிருந்த பெரியவரின் இசையும் தான் அவனுக்கு அதீத தன்னம்பிக்கையை அப்போது கொடுத்தது.
படப்பிடிப்பில் பம்பரமாய் வேலை செய்தான். முத்து உதவி
இயக்குனராக வேலை செய்தான். அடுத்தடுத்து திட்டமிட்டான் ‘வேலை வேலை என பேயாய் வேலை செய்தான்’ தான் நினைத்ததை திரையில் கொண்டு வந்தான். ராஜாகண்ணுவும் சீன்களில் வீஸ்வரூபம் காட்டினார். இந்த ஆளுக்குள் இப்படி
ஒரு திறமையா?
கோபம். பாசம் எல்லாம்` அவருக்கு
இயல்பாய் வந்தது. காமிராவுக்கு முன் தைரியமாக முக்ம வெடிக்க அழுகிற ஒரு முதிர்ந்த
நடிகனை சினிமா உலகம் நீண்ட நாள்கள் கழித்து பார்த்தது. சண்டைக் காட்சிகள்
பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்டன. சிவந்த
விழிகளை உருட்டி உருட்டி ஆக்ரோஷமாக சண்டை போடும் கிராமத்து ஹீரோ புதிதாக
தெரிந்தார்.
‘ ச்சே இவரையா மட்டமா நினைச்சோம்”
செல்வராஜாவே வெட்கப்பட்டான்.
அடுத்த மூன்று மாதங்களில் முழு படம் தயாராகி ஒரு சாதாரண வெள்ளிக்கிழமையில் படம் ரிலீஸ் ஆகியது.
இந்த படம் வருவதற்கு முன்பே கேசட்டில் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துவிட்டிருக்க,
படம் வெளியிட்ட முதல் நாளே கூட்டம் அலைமோதியது.
‘ புது
நடிகருங்க நடித்த சிறிய படம்தானே’ என பல தியேட்டர்களில் அந்த படத்திற்கு காலை காட்சி மட்டும் திரையிட்டு இருந்தார்கள்.
படத்திற்கு வரும் வரவேற்பை பார்த்துவிட்டு, உடனே காலை காட்சிகளெல்லாம் ,நான்கு காட்சிகளாக மாற்றப்பட்டன.
‘ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல படம் வந்து இருக்கு சார்’ என திருப்பூரில் இருந்து ஒரு சினிமா ஆப்பரேட்டர் போன் செய்து ஹீரோவை பாராட்டினார் .
“ஒரு படம் ரிலீசாகி அந்த வெள்ளி ,சனி ,ஞாயிறு தியேட்டர் ஃபுல் ஆச்சுன்னா மினிமம் கியாரண்டி படம்ன்னு சொல்லுவோம். ஆனா இரண்டாவது வாரம் திங்கள் டு வெள்ளியும் படம் ஃபுல்லாச்சின்னா, அந்த படம் ஹிட் அடிக்க போகுதுன்னு அர்த்தம். மூணாவது வாரம் புல்
ஆச்சுன்னா.. அது சூப்பர் டூப்பர் ஹிட். கண்டிப்பா உங்க படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கப் போவுது. உங்களுக்கு கூரையை கொட்டி பணம் கொட்டப் போவுது சார்”
“ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சார் “ ராஜாகண்னு கண்கலங்க
“எல்லாத்துக்கும் காரணம் பெரியவரோட ம்யூஸிக் மேஜிக் தான் சார்’ கண்டிப்பா பெரியவர் பாட்டு தான்.. இந்த படத்துக்கு விசிட்டிங் கார்டு.,” ஒரு சிலர்
ராஜாகண்னுவிடம் செல்வராஜாவை இறக்கி பேச.,
“அது சரி
தான், ஆனா பிரேம் டூ பிரேம் பையன் பிரமாதப்படுத்தி இருக்கிறான். என்னை ஹீரோவா
போடாலாமுன்னு சொன்னதும் அவன் தான் ..” என்றார்.
‘ ஆமாங்க., உங்களுக்கு எது சரியா வரும்? எந்த ஆங்கிள்ள நல்லா இருக்கீங்க’ ன்னு தெரிஞ்சு பையன் பின்னி பெடலெடுத்திருக்கிறார் . பையனை விட்டுடாதீங்க. அந்த பொண்ணும்
நல்லா நடிச்சிருக்குங்க” என சொன்னார்கள்.
தம்ழி திரையுலகே பெரியவரின்
இசையை கேட்டு. “எந்த படம் யார் இயக்குனர்? யார் நடிகர்?” என விசாரித்தது.
“செல்வராஜாவை யாரிவன்? “ என்பதாய் பார்த்தார்கள்.
“எதுக்கு இந்த பெரியவர், சின்ன பசங்களுக்கு எல்லாம் சூப்பரான மியூசிக் போட்டு , பெரிய ஆளாக்கி விடறார்னு தெரில என பொறாமைப்பட்டு அங்கலாய்த்துக் கொண்டிருந்தார்கள்.
No comments:
Post a Comment