பாகம் 35 - எபிசோடு எண் :1
அந்த நாளின் காலை சுறுசுறுப்பாக விடிந்தது. சென்னை, கோடம்பாக்கம்
ஆற்காடு சாலை காலை 5 மணிக்கே பிசியாக இருந்தது.
போஸ்டர்கள், பேனர்களை பரபரப்பாக
ஒட்டிக் கொண்டிருந்தார்கள்.
"என்னாடா சப்பை? திரும்ப
அந்த ஆளு படம் ஷூட்டிங்க் ஸ்டார்ட் ஆகுதா? திருவிழா மாதிரி ஜொலிக்குதே? " ஒரு
50 வயது ஆள் அந்த 20 வயது ஒல்லியான கருத்த இளைஞனைக் கேட்க., மரச்சட்டங்களும், பிளக்ஸ்
பேனரும் வைத்து இருந்த அவன் அவரைப் பார்த்து சிரித்தான். மீன் பாடி வண்டியை ஓரம் தள்ளினான்.
" நீ அப்டேட்டாவா
இல்லை. பெருசு.. இப்பல்லாம் தமிழை விட, வெளி ஆளுங்களுக்கு செம்ம மாஸ் இருக்கு., "
"ஆங்க் கே.ஜி.எப்
யாஷ் படமா?'
"அவன் இல்லப்பா.,
இவன் வேற ரகம்.. ஷ்யாம்..இவனும் கன்னடம் தான். அங்க் ஐவன் சூப்பர் ஸ்டார். தமிழ டைரக்டா
படம் நடிக்க போறான்.."
"அட தெரியுமப்பா..போக்கிரி
பைய.. அவனுக்கு இங்க மார்கெட் இருக்கா என்னா?”
"இல்லாம? ஆளூ அழகா,
வாட்ட சாட்டமா ஸ்டைலா இருந்தா எந்த ஊர்ல போனாலும் சினிமால கொடி கட்டி பறக்கலாம்.."
"அட போய்யா. எனக்கு
அவனை பிடிக்கவே இல்ல"
"அட நமக்கு ஏன்யா
புடிக்கனும்? பொண்ணுங்களுக்கு புடிக்குது.. நடிக்கிறான்.."
"என்னத்த நடிக்கிறான்?
“
“அட ஜங்கிள் கோஸ்ட் பாக்கல
நீ?”
“அட போய்யா என்னத்த கதை?
ஒரு காட்டு பங்களா.. அதுல ஹீரோயின்., ஹீரோயினோட அக்கா கூட ., அவன் தனியா போயி தங்கறான்.. அவ அக்கா
ஆல்ரெடி லவ்வற் செத்து போன துக்கத்துல இருக்கா. அவளை ரெப்ரஷ் பண்ண அவளையும் கூட்டிகிட்டு
போறாங்களாம். விளங்குமா? "
"… ம் அப்புறம்?"
அவன் உட்கார்ந்து கொண்டான்.
"அந்த காட்டு பங்களால
லவ்வர்ஸ் ரென்டு பேரும் சந்தோஷமா இருக்கறத
பாத்து அக்கா காண்டாவறா.. மூடாவும் ஆகுறா. அப்ப அந்த வீட்டுல பேயி வருது.. செத்து போன அவ லவ்வர் ஆவி. இவன் உடம்புல
பூந்துகிட்டு., ஆட்டிப் படைக்குது. அக்கா கூட தனியா பேசுது. அழுவுது. உருகுது... பழசெல்லாம்
சொல்லுது. யப்பா.. முடிலடா"
"இப்ப இந்த மாதிரி கதை தான்ணே பொண்ணுங்களூக்கு புடிக்குது"
"படத்துக்கு பேரு
வெச்சான் பாரு.. ஜங்கிள் கோஸ்ட்.. ம்மாள ஆத்திரமா வருதுடா"
"அட போண்ணே.. 3 கோடில
எடுத்து 10 கோடி வசூல்.."
"இந்த மயிர்ல பார்ட் டூ.. வேற எடுக்கறாங்க..தூத்தேறி. உன்னிய மாதிரி ஆளுங்களாதாண்டா ‘முரட்டு குத்து’ ன்னு வெளிப்படையா பேரு வெச்சி ரிலீஸ் பண்றாங்க.. ஏன் உன் ரொமாண்டிக் ஹீரோ ஷ்யாம் ஆக்ஷ்ன் படம் பண்ண மாட்டரா?"
"ஏண் பண்ணாம.,? கப்பல்ல
வெடிகுண்டு வெச்சி ஆளுங்களை பணயக் கைதிகளை வெச்சி., தீவிரவாதி கூட்டத்தை புடிக்கிற
மாதிரி ஒரு படம் வந்துச்சே பாக்கல.. கன்னடத்துல செம ஹிட்டு"
"ம்கூம்.. அதுல தீவிரவாதி
ஒரு பொண்ணு. அவ இவன் மேல ஆசை வெச்சி. ரென்டு பேரும் பாத்ரூம்ல ஒன்னா இருந்துட்டு. அப்புறம்
அவ., அந்த நன்றிக் கடனுக்கு அவ கூட்டத்தை காட்டி கொடுக்கிறா.. ஏண்டாத் தெரியாமத்தான் கேக்குறேன். நடிக்கிறவனுக்கு மூளை இல்லன்னா கூட
பரவாயில்ல., படம் எடுக்குற நாதாரிக்கு கூட வாடா மூளை இல்ல"
"அதான் டைரக்டர் மஸ்லின்
சொல்றாரு இல்ல., பார்க்கிங்லயே ஹெல்மெட்டை கழட்டி வெச்சுடனுமுன்னு.."
"ஹெல்மெட் இல்ல.,
உன் ஆளு எடுக்கற படத்த பாக்கனுமுன்ன., ஜட்டியை தான் கழட்டி வெச்சிட்டு நுழையனும்.."
"அண்ணே அசிங்கமா பேசாதேன்னே"
" நானாடா பேசறேன்?.
ஒரு மனுஷன் செத்து போய் நிம்மதியா பேயானா கூட
.அந்த பேய் கூட படுக்கற மாதிரி கதை படம் எடுக்கறது தாண்டா அசிங்கம்"
"அட போ முத்துண்ணே.,
சினிமாவால இருந்துட்டு சினிமாவை தப்பா பேசிக்கிட்டு.,'
"டேய்ய்.. இப்படியே தப்பு தப்பா எடுத்துகிட்டு இருந்தா., இனிமே யூ ட்யூப்ல அவனவன் அவனுக்கு புடிச்ச மாதிரி
படம் எடுத்துட்டு பாத்துப்பான். சினிமா அழிஞ்சி போவும்."
முத்து பல கம்பெனிகளில்
வேலை செய்பவன்., புரடக்ஷன் மேனஜராக வேலை செய்பவன். கதை ஞனம் உடையவன்.
ஆனால், அப்படி ஒரு இடத்தில்
கதை விவாதம் நடக்க.,
" அதெப்படி சார்., ஹீரோ தம்பி, ஹீரோயின் அப்பாவால் குத்துபட்டு, செத்து போனப்பறம்,
ஹீரோ பொங்கி எழறான்னா கொஞ்சம் கூட சரியில்லையே? தம்பியோட லவ்வர் கர்ப்பம்னா கேக்க நல்லாவா இருக்கு? இதுல அந்த வயித்துல இருக்குற குழந்தையை ஹீரோவை காப்பத்தா போராடுறாருன்ன.. கதைல வெயிட்டே இல்லையே
சார்?" முத்து கேசுவலாக சொல்ல., மொத்த குழுவும் அதிர்ந்தது.
அது ஒரு பெரிய நடிகனின்
படம்.
"யேய்ய். அவனை வெளிய
அனுப்பு" முத்து வெளியேற்றப்பட., அன்றிலிருந்து எவனுக்கும் கதை சொல்வதில்லை ‘என்கிற
முடிவை எடுத்தான்.
" முத்துக்கு கை சுத்தம்.
ஆனா அவனுக்கு வாய்க் கொழுப்புய்யா., " என முத்திரை குத்தப்பட்டான்.
அவன் நாள் கூலி.., வாரக்கூலி
மாதச் சம்பளம் என பல வகைகளில் பல கம்பெனிகளில் வேலை செய்தான்.
அவனது திடீர் கோபத்துக்கும்.,
குணத்துக்கும் அவனால் எங்கும் நிரந்தரமாக இருக்க
முடியவில்லை. யாருடனும் ,.இணக்கமாக இருக்க
முடியவில்லை. நிரந்தர வருமானம் இல்லாததால் அவனுக்கு யாரும் பெண்ணையும்
கொடுக்கவில்லை., கல்யாணம் ஆகாமலயே., 45 வயதைக் கடந்து விட்டான்.
20 வருட அனுபவம். சினிமாவின்
சகல சூட்சுமமும் அத்துப்படி ., ஆனால் சிபரிசு
இல்லாமல், குலப்பெருமை இல்லாமல் எல்லா இடத்திலும் நிராகரிக்கப்பட்டான்.
"இவனுக்கு இப்படி
அறிவா?" என மனதுக்குள் வியந்தவர்கள், கூட
அவனை விரட்டினார்கள்., பிழைக்க தெரிந்தவர்கள் போகிற போக்கில் அவன் வாயைக் கிண்டி
அவனிடம் கதை பெற்றுக் கொண்டு டீ ., பன் வாங்கித் தந்தார்கள்.
" அவன் கதையை வெச்சுக்கிட்டு
திரியற ஆளு இல்ல சார். கதை சொல்லுன்னு கேட்டா
சொல்வான். கேக்க கேக்க சொல்லிகிட்டே இருப்பான். அவன் ஒரு அதிசயப் பிறவி சார்..,
" ஏ டி எனப்படும் உதவி இயக்குனர்கள் அவனை
எடுபிடி வேலைக்கு வைத்து கொண்டே., அவனுக்கு சொற்ப பணம் கொடுத்து கூப்பிட்ட குரலுக்கு
வருவந்து போல் வைத்துக் கொண்டார்கள். அடிக்கடி சீன் சொல்ல சொன்னார்கள்.
"இவன் ஒழுங்கா இருந்திருந்தா.,
இப்ப ஆக்டர் மாதேஷ்க்கு அசிஸ்டென்ட்டா போய் இருக்கலாம் என சொல்வார்கள்.. இவன் கூட இருந்த
எல்லாரும் டாப்'ல போயிட்டாங்க., இவன் மட்டும் இப்படி தண்ணி வண்டி மாதிரி சுத்திகிட்டு
இருக்கான். பாவம்."
"ஆமா. தணிகா மாதிரி மாதேஷ் கூட ஒட்டிகிட்டு இருக்கலாம். இல்ல தங்கா மாதிரி பெரிய டைரக்டர் ஆகி
இருக்கலாம்" பலரும் ஆதங்கப்படுவார்கள்
"மாதேஷ் பெரிய நடிகனாயிட்டான்.,
இனிமே அவன் தான் பெரிய ஸ்டார்., இந்த நாயி வாயை வெச்சிகிட்டு சும்மா இருந்திருந்தா.
இப்படி ஸ்டுடியோ செக்யூரிட்டி கேபின்ல படுத்து தூங்க அவசியம் இருந்திருக்காது. மாதேஷ்
கார் பங்களா வாங்கி கொடுத்து கவனிச்சிருப்பான் " எனச் சொல்வார்கள்.
மதேஷ் யாருமில்லை. டைரக்டர்
செல்வராஜாவின் இரண்டாவது பையன்.,மாதேஷ்.,
ஒரு காலத்தில் செல்வராஜா.,
இந்த முத்து, அப்புறம் தணிகா., ஜோசப் எல்லாரும் ஒரே அறையில் திருவல்லிக் கேணியில் ஒண்றாக
தங்கி இருந்தார்கள்.
ஒருத்தர் டிரஸ், சிப்பு,
சோப்பு எல்லாமே அவர்களுக்கு எக்ஸ்சேஞ்ச். அதெல்லாம் ஒரு காலம்.
அவர்களுக்கு பல நாள் சோறே
இருக்காது. அல்லது கிடைக்காது. விசேஷம் இல்லாத
கோயில் வாசல்கள் அவர்களுக்கு சண்டைக்கு பிந்தைய போர்களம் போல பயங்கரமானது. ஆனாலும்,
அந்த பட்டினி வறுமையிலும் அவர்களது மூளை செழிப்பாக இருந்தது. அற்புதமாக யோசித்தார்கள்.
அலைந்தார்கள்
"நம்ம நாலு பேர்ல,.
முதல்ல செல்வராஜா தான் டைரக்டர் ஆவான். நாம் எல்லாம் அவனுக்கு டீமா வேலை செய்யனும்..
படத்தை ஹிட்டாக்கிடனும்." இள வயது முத்து சொல்ல., எல்லாரும் சேர்த்து பல திரைக்கதைகளை உருவாக்கினார்கள்.
"என்னடா எல்லாம் நாட்டுபுறத்தான் செல்வராஜைப் புடிச்சி தொங்குறானுங்க..
நான் எப்படா டைரக்டர் ஆகறது?' ஜோசப்., தணிகாவிடம் தனியா வந்து அழுது புலம்ப,.
"செல்வராஜா வில்லேஜ்
சப்ஜெக்ட் பண்னட்டும்.., நான் முத்துகிட்ட பேசி சிட்டி சப்ஜெக்ட் சொல்ல சொல்றேன்..நீ
சிட்டி சப்ஜெக்ட் பண்ணு.. புரட்யூசரை பிடி"
"அதுக்கெல்லாம் முத்து
ஒத்துக்க மாட்டான். அவன் தான் அவன் கதையை பெட்டில
பூட்டி வெச்சிருக்கான். செல்வராஜாவுக்குன்னா கொடுப்பான். எனக்கு கொடுக்க மாட்டான்.
எடக்கு நாட்டான்" ஜோசப் சலித்து கொள்ள
"நீ கவலைப் படாதே
ஜோஸு. நீயும் ஒரு படைப்பாளி தான். நல்ல கதை
கிடைச்சே பிரிச்சி மேஞ்சிடுவே"
"அப்ப எனக்கு முத்து
கதையை வாங்கொ கொடு”
“எந்த கதை ? அவன் பத்து
வெச்சிருக்கான்”
“அந்த காலேஜ் படிக்கிற
அய்யரு பொண்ணு, ரவுடி பையன் கதையை முத்துகிட்ட இருந்து வாங்கிக் கொடு., நாளைக்கு ஒரு புரட்யூசரைப் பாத்து கதைய சொல்லனும்..ஓகேன்னா நீயே ஹிரோவா நடி” அவன் தணிகாவை உசுப்பேற்றினான்.
"ம்ம் டிரை பண்றேன்..
"
"காசும் வேணும்..
அவரு ஈரோட்டுல இருக்கார்?"
"எவ்வளவு வேனும்?" அவன் சொன்னான்.
தணிகா மட்டும் தான் கொஞ்சம்
காசு உள்ளவன், ஊரிலிருந்து ., வீட்டில் காசு அனுப்பினார்கள். அது நாலு பேருக்கும் போதவில்லை.
தணிகா சினிமாவைச் சேர்ந்த சில வேலைகள் செய்தான்.
சினிமாவில் சின்ன சின்ன வேஷங்கள் கிடைத்தது. காசும் கிடைத்தது.
முத்து அடிக்கடி கூலி வேலை
செய்தான். சினிமா புரடக்ஷ்னைல் அவன் எடுபிடி. கிடைத்த காசில் உண்டு உறங்கி உடுத்தி
சினிமாவில் ஜெயிக்க அந்த நால்வருமே பிரயத்தனப்பட்டார்கள். இது போல கோடம்பாக்கத்தில்
ஆயிரக்கணக்கான பேர்கள் காலம் காலமாக இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
MAYATHIRAI FULL NOVEL 670 Pages : Original Cost Rs.360
Now only Rs.290
Get Coupon code : mtpart35
Limited days Only
No comments:
Post a Comment