செல்வராஜா. முத்து, தணிகா., ஜோசப் இவர்களுக்கு , ஒரு நாளை விட அடுத்த நாள் மிகக் கடினமாக இருந்தது.
" நம்மள்ல ஒருத்தன்
முன்னுக்கு வந்தா கூட, அவன் மத்தவங்களை கை தூக்கி விட்டுடுவான்.." என நம்பிக்கையோடு
போராடினார்கள். காதல் காமம் எல்லாம் மறந்து அலைந்து திரிந்தார்கள். மூன்று இயக்குனர்கள்
ஒரு நடிகன் என அந்த 10 க்கு 10 அறையில் குவிந்து கிடந்தார்கள்.
நடிக்க ஆசைபட்ட தணிகா,.
ஜோசப் மீது நம்பிக்கை வைத்து அடிக்கடி காசு கொடுத்து அவனை உற்சாகப்படுத்தினான்.
"காசு தந்ததுக்காக
இல்லடா. நான் டைரக்டர் ஆனா., நீ தான் அந்த காலேஜ் சப்ஜெக்டுக்கு ஹீரோ. " ஜோசப்
சொல்ல தணிகா திகைத்தான். அவனை நம்பினான்.
அவனை அதை சொல்லியே நிறைய காசு வாங்கி ஊர் சுற்றினான் ஜோசப். விதம்
விதமாக உடுத்தினான்.
அவன் தமிழ் நாடு முழுக்க
அலைந்து ஒரு கோடி ரூபாயை முதலீடு செய்யக் கூடிய தயாரிப்பாளர்களை தேடிக் கொண்டே இருந்தான்.
இவன் ஒரு பக்கம் அலைய,
செல்வராஜா ஒருவழியாக டைரக்டர் ஆகி கொடிக் கட்டி பறந்தான். நண்பர்கள் மகிழ்ந்தார்கள்.
செல்வராஜா மற்றவர்களுக்கும்
தன் படங்களில் அடிக்கடி வாய்ப்பும் தந்தான்.
பணம் தந்தான். நட்பு கெடாமல் இருந்தான்.
அவனது நண்பர்களின் வாழ்க்கை தரம் சற்று உயர்ந்தது.
அவர்கள் அறையை மாற்றினார்கள்.
ஆனால் நால்வராக இருந்த குழு மூவராக ஆனது.
அடுத்த வாய்ப்பு ஜோசப்பிற்கு
கிடைத்தது.
படம் கிடைத்த சந்தோஷம்
அவனுக்கி மிஸ்ஸிங்க் ஆகி, ஜோசப் முகம் வாடி இருந்தான்.
"என்னடா?" தணிகா
கேட்க
" முத்து கதை ஓகே
தாண்டா?' அவன் தயங்க
"எந்த கதையை சொன்னே?"
"அதான் காலேஜ் பையன் மண்டையை உடைச்சி போட்டு பைத்தியம்
ஆக்கிடுவாங்களே?"
"ம்ம்ம் முத்துவோட
கதை தான், ஆனா ஸ்லோ மூவிங்க்..'
"இ..இல்ல அதுல அய்ட்டம்,
சாங்.. ரெண்டு சேக்கறோம்., பெரியவர் மியூசிக்"
"வாவ் .சூப்பர்டா..
சரி ஏன் டல்லா இருக்கே?"
"கதை என் கதையா இருக்கனுமா.ம்..அப்பதான்
புரட்யூசர்,. கொடுப்பாராம்.."
"அப்ப முத்துவை டைரக்டராகிடலாமா?"
"என்னடா இப்படி சொல்றே?
கதையை என் கதையா மாத்தி கொடுக்க சொல்லு.. .ப்ளீஸ்"
"பேசி பாக்குறேன்...
இரு.."
"இது நம்ம ரெண்டு
பேரு லைப்டா... நீ தான் ஹீரோ.. மனசுல வெச்சுக்க.,"
"என்னை ஹீரோவா புரட்யூசர்
ஒத்துகிட்டாரா?"
"ம்ம் உன் போட்டாவை
காட்டுன உடனே ஒத்துகிட்டார். "
"ரொம்ப தேங்க்ஸ்டா..
" தணிகா கண் கலங்க,.
"கதையை மட்டும் முத்து
கிட்ட இருந்து வாங்கி கொடு. நீ சொன்னா கேப்பான். "
மாலை முத்து வர, அவர்கள் பேசினார்கள். அவன் ஒத்து கொள்ளவில்லை.
ஜோசப்பும்., தணிகாவும்.,
செல்வராஜாவுக்கு பஞ்சாயத்து செய்து வைக்க போன்
செய்தார்கள்.
"அது முத்துவோட சொத்து.,அதை
ஏன் கேக்குறே?" எகிறினான் செல்வராஜா.
"இல்லப்பா மூனு கதை
சொன்னேன். புரட்யூசருக்கு முத்துவோட கதை தான் புடிச்சிருக்கு. கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன்"
"சரி அப்படீனா. ஹீரோ
யாரு?"
" நம்ம தணிகா தான்."
"ஓ.. வெரிகுட்...அப்பன்னா
மூவ் பண்ணு..நான் முத்துகிட்ட பேசறேன்.."
செல்வராஜா முத்துவிடம் பேசினான்.
"இங்க பாரு முத்து.
அடம் புடிக்காதே. ஜோஸப் ஜெயிக்கிறது நமக்கு
ரொம்ப முக்கியம். எனக்கும் இப்ப படம் சரியா அமையல..,ஜோசப் திறமையானவன் தான். ஆனா சீன்
வைக்க தெரியாது. சொந்தமா கதை எழுத தெரியாது.
நீ அவன் கிட்ட உன் கதை கொடு"
"என் பேரு டைட்டில்ல
வராதாம். அப்ப எனக்கு ஏன் இது?."
"அப்படி இல்லடா முத்து.
இப்பல்லாம் கதையை வாங்கி டைரக்டர் பேர்ல தான்
பதிவு பண்றாங்க முத்து. பின்னாடி அதர் லாங்குவேஜ் காப்பி ரைட் பிராப்ளம் வருதுன்னு
புரட்யூசர் இப்படிதான் கேக்கறான். நானே ரெண்டு
கதையை வெளீயில காசு கொடுத்து வாங்கி டைரக்ட்
பண்றேன். நீ கதை கொடு அஞ்சு ரூவா தர சொல்றேன்"
"எனக்கு காசு வேனாம்."
"சரி படத்துல் ஒர்க்
பண்ணு"
"என்னால இவனுக்கு
அசோசியேட்டா ஒர்க் பண்ண முடியாது" முத்து சம்மதிக்கவில்லை..
"சரி இணை இயக்குனர்னு
போடறேண்" ஜோசப் சொல்ல
"முடியாது"
"அப்ப?"
"இயக்குனர்கள்' னு
என் பேரையும் போடனும்" முத்து பிடிவாதம் பிடிக்க., செல்வராஜாவும் ஏற்றான்,.
"ஜோசப்.. முத்துக்கு
நல்லா ஸ்டோரி டெல்லிங்க கெபாசிட்டி இருக்கு.. எடிட்டிங்கல பண்ன வேண்டியதை சீன்லயே பண்ணிடுவான்.
அவனை உன் கூட வெச்சுக்கோ..நம்ம பிரண்டுதானே . இணை இயக்குனர் போடு" செல்வராஜா போனில்
சமாதானப்படுத்த .,
"சரி நீ சொன்னா சரிதான்"
என ஒத்துக் கொண்டான் முத்து. கதையையும் ஜோசப்புக்கு கொடுத்தான் . ஜோசப் அடுத்த ஒரு
மாதம் பிஸியாக இருந்தான். எங்கெங்கோ போனான்
. வந்தான்.
அவன் அறைக்கு வருவது குறைந்து
போனது. வாரம் ஒரு முறை, பின் மாதம் ஒரு முறை .அதன்பின் அவன் வருவது அடியோடு நின்று
போக., ஸ்டோரி டிஸ்கஷனுக்கு முத்துவை கூப்பிடவே இல்லை.
மூன்று மாதம் கழித்து,
ஒரு நாள் கோடம்பாக்கம் பாலம் முழுக்க ஜோசப்பின்
புது பட பூஜை போஸ்டரை பார்த்துவிட்டு, முத்து தான், தணிகாவுக்கு பதாட்டமாய் போன் செய்தான்.
"மச்சி.. ஜோசப் பட
பூஜையாம்டா இன்னிக்கு?"
முத்து அழாத குறையாக போனில்
சொல்ல., "என்னது?" கடும் அதிர்ச்சியானான் தணிகா. உறைந்து போனான்
"ஹீரோ.. நீ இல்லடா..
விக்ரம்"
"எ..என்னடா சொல்றே?"
தணிகாவுக்கு மயக்கமாய் இருந்தது.
"நாய் நல்லா ஏமாத்திட்டாண்டா..
"
"உன் பேரு கூட இல்லியாடா?"
"இல்லடா.. கதை- திரைக்கதை-
வசனம்-இயக்கம். "தங்கா'"
"அடேய்ய்ய்"
ஜோசப்பின் முழுப்பெயர்
ஜோசப் தங்கதுரை. " சினிமாவில் என் பேரு தங்கா' என அவன் சொன்னது நினைவுக்கு வந்தது.
அந்த பேருக்கான எழுத்து
எப்படி இருக்க வேண்டும் என அவன் ஒவ்வொரு நாள் இரவும் கனவு கண்டு அறையின் அழுக்குச்
சுவற்றில் வரைந்து வைத்த அந்த ; தங்கா' எழுத்து
இப்போது சுவரொட்டிகளில் ஜொலித்தது.
"கிளம்பி வாடா. அந்த
சொறி நாயை பொளக்கனும். வடபழனி சிக்னலுக்கு வா. வெயிட் பண்றேன். " அந்த இளைஞர்களின்
கனவு அந்த பகல் பொழுதில் சின்னாபின்னமானது.
இருவரும் வெறியோடு பட பூஜை
அரங்கிற்குள் நுழைய, வாசலிலே தடுத்து நிறுத்தப்பட்டார்கள்.
இருவரும் எகிற, விரட்டி அடிக்கப்பட்டார்கள்.
தங்களது ஒரே நம்பிக்கை
செல்வராஜாவுக்கு அவர்கள் போன் போட்டு சொல்ல,
அவன் வேறொரு பட ஷீட்டிங்கில் இருந்து ஓடோடி
வந்தான்.
" நாய் நம்ம கிட்டயே
வேலையை காட்றானா?"
அவன் படப்பிடிப்பு தளத்திற்கு
வர., அவனை மட்டும் உள்ளே அனுமதித்தார்கள். செல்வராஜா உள்ளே போக.,
"யெஸ் " என்றான்
தங்கா., ஜோசப் தங்கதுரை
அங்கே தங்கா வேறொரு பரிமாணத்தில்
இருந்தான். கையில் சிகரெட்.. கூட ஐந்தாறு அடி பொடிகள்.
"வா மாயாண்டி"
தனது உன்மையான பேரை எல்லார்
எதிரிலும் சொல்லி அழைப்பதிலேயே அவன் வெகுவாக மாறிவிட்டான் என்பது செல்வராஜாவுக்கு புரிந்தது.
"என்னடா இப்படி பண்ணி
வெச்சிருக்கே? தணிகாவை ஹீரோன்னு சொல்லிட்டு,. மாத்திட்டே. "
" நான் மாத்தல. புரட்யூசர்
ஒத்துக்கலப்பா. அவன் மூஞ்சை யாருக்கு தெரியும்.? அவனை போயி ரொமான்ஸா நடிக்க சொன்னா?"
“ஏண்டா இதை சொல்லியே அவன்
சட்டை பாக்கெட்டுல எவ்ளோ காசு எடுத்திருப்பே?”
“எவ்ளொ எடுத்திருப்பேன். டோட்டலா ஒரு டென் தவ்சன்ட் இருக்குமா?”
“டேய் தங்கா., நன்றி மறக்காதே..,
அதை சொல்லித்தானே முத்து கிட்ட இருந்து, கதையை
வாங்கி கொடுத்தேன். சரி கோ- டைரக்டரா முத்துவை ஏன் போடலை?"
"இது என் படம் மாயாண்டி..
நான் தான் எல்லாம்.. அதில்லாம அவன் என்ன ஜாதி..? அவனை போயி என் கூடவா? நீ வேணா போட்டுக்க..
அவனை.."
"டேய்ய் ஜாதின்னா அடிச்சிடுவேன்..ஜாதியை பாத்தா நாம பழகுனோம்
? ”
“ஏன் அதான் இங்க முத்திரை. அதில்லாம இங்க சினிமா இல்ல ”
“ அப்ப அவன் கதையை திருடாதே"
"ஏன் நீயும் அதை தானே
செய்யறே?. கரிச காட்டு குருவி உன் கதையா?"
" நான் விலை கொடுத்து
வாங்குறன். ஓசியல எடுத்துக்கல. மரியாதையாய் அவனை டீமுல இழுத்து போடு"
"எதுக்குடா அவன்?
சதா வெத்தல பாக்கு போட்டு புளிச் புளிச்சுன்னு ஸ்பாட்ல முழுக்க துப்பவா? நோ வே.. "
"ஜோசப்.."
"டேய்ய்.. இனிமே தங்கான்னு
கூப்பிடு. "
‘தங்கா' என்னும் ஜோசப் திட்டம் போட்டு நண்பர்களை ஏமாற்றியது அவனுக்கு தெளிவாக தெரிந்தது.
சினிமா உலகம் சார்பில்
உள்ள பல சங்கங்களுக்கு அவர்கள் எங்கெங்கோ போனார்கள்.
"படத்துல மியூசிக்
யாருன்னு தெரியுமில்ல? பெரியவர் பண்றார். பிரச்ச்சனை பண்ணாதீங்க. முதல்ல அவன் படம்
எடுத்து முடிக்கட்டும்", என்றார்கள்.
படம் முடிக்கப்பட்டது.
"சரி.., படம் பிராசசிங்க்,
போஸ்ட் புரட்க்ஷன் ஆகட்டும்" என்றார்கள். ஆனது.
"சரி டப்பிங்க்..
ரீ ரிகார்டிங் முடியட்டுமே" முடிந்தது.
.." இருங்க சார்..
படம் பிசினஸ் ஆகட்டும்"
பிசினஸ் ஆகவில்லை. படம்
ஆகவில்லை.
"பாத்தீங்களா. பாம்பு
சுருண்டுடுச்சி.. இதுக்கு போய் இவ்ளோ அக்கப்போரா?"
அவர்களுக்கும் ஆச்சரியம்.
கதை கேட்ட போது மனசை உருக்கியதே இந்த முத்துவோட கதை.. என்ன ஆயிற்று?. ஏண் போனி ஆகவில்லை? கூட்டமாய் போய் பிரிவியூ பார்த்தார்கள்.
படம் நன்றாகத்தான் வந்திருந்த்தது. என்ன தான் ஏமாத்துக்காரன் ஆனாலும் ‘ பிலிம் மேக்கிங்கில்
தங்கா பிச்சு உதறிவிட்டான்.
ஒரு ஆண் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
மிகவும் முரட்டுத்தனமாக இருந்தால் தவறில்லை " என்ற ரீதியில் வந்த
ஹீரோ திரையில் புதிதாக இருந்தான்.
வேறு சமூகத்து கதாநாயகியை ஒரு பாழடைந்த பங்களாவுக்கு தூக்கி வந்து தன் காதலை ஹீரோ கூறும் விதம் அலாதியாக இருந்தது.
"ஒரு காலத்துல ரொம்ப சந்தோஷமா இருந்தேன்டி. என்னைக்கு உன்னைப் பார்த்து இந்த எழவெடுத்த லவ்வ நான் பண்ண ஆரம்பிச்சனோ அன்னைக்குப் பிடிச்சது சனியன்…'' என்று ஹீரோ பேச ஆரம்பிக்க அயர்ந்து போனான் தணிகா.
ச்சே இந்த
படத்துக்கு நம்மளாலே கூட இப்படி ஒரு எஃபக்ட் போட முடியாது. தங்கா
செஞ்சது சரி தான். ஆனா அவன் முத்துக்கு செஞ்சது துரோகம்' என தணிகா, தங்காவை
மன்னிக்கும் முடிவுக்கே வந்துவிட்டான்.
பைத்தியமான ஹீரோ மொட்டை
அடித்து வேட்டியை ஒரு கையால் பிடித்துக் கொண்டு நடக்க,. முத்துவின் ஒவ்வொரு வரியும்
நேர்த்தியாக படமாக்கப்பட்டிருந்தது.
இசை அநியாயத்துக்கு உயர்
தரத்துக்கு போட்டிருந்தார் பெரியவர். என்றாலும் போனி ஆகவில்லை.
தங்கா குடித்து எங்கோ படுத்திருக்கிறான்
என சொன்னார்கள்.
" நம்மளை ஏமாத்துனான்
பாரு. அதான் இப்படி" என தணிகா சொல்ல.,
"இல்லடா .அது என்
கதைடா. என் கதை எப்படி தோக்கும்?. மயிலை முண்டக கண்ணி கோயிலுக்கு போய் மனமுருகி வேண்டினான்.
மறு நாள் யாரோ ஒரு கரும்பு
வியாபாரி விலைக்கு வாங்கியதாக தகவல் வந்தது. படம் ரிலீஸ் ஆனது. குறைவான தியேட்டர்கள்
தான் , முதல் இரண்டு வாரம். .சுமாரான கூட்டம். ஆனால் தனியார் தொலைக்காட்சி முதல் தடவை
படத்தை பார்த்து விட்டு. 20 ஆண்டுகளில் இப்படி
ஒரு படம் வரவில்லை. என கொளுத்தி போட. மற்ற ஊடகங்கள் விழித்து கொண்டு என்ன ஏது வென பார்க்க.,
அடுத்த வாரங்களில் கூட்டம் வர ஆரம்பிக்க..,
திரையுலக வி ஐ பி க்கள்
வந்து குவிய., ஒரு உச்ச நடிகர் பாராட்டி கடிதம் எழுத., அதன் பின் நடந்தது எல்லாம் தமிழ் திரையுலகின் அபூர்வ நிகழ்வுகள்.
டைரக்டர் தங்கா' விற்கு
அதில் பெரிய பேர் கிடைத்தது. பட்டு வேட்டி .,சட்டையில் எல்லா டிவிக்களிலும் தான் ஜெயித்த கதையை விழிகள்
விரிய உணர்வு பொங்கச் சொன்னான்.
MAYATHIRAI FULL NOVEL 670 Pages : Original Cost Rs.360
Now only Rs.290
Get Coupon code : mtpart35
Limited days Only
No comments:
Post a Comment