மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, November 2, 2023

அனுமதிக்கப்பட்ட துரோகங்கள் : பாகம் 34 – எபிசோடு எண் : 39

 

வீணாவிற்கு நெடுநாள் கழித்து தான் சிவாவின் கல்யாணம் பற்றி தெரிந்தது. சிவாவுக்கு நடந்த அவமான நிகழ்வு குறித்து வீணாவும் சுமதியிடம் சொல்லவில்லை. சுமதியும் வீணாவிடம் ஏதும் சொல்ல வில்லை. சுமதி நெஞ்சழுத்தக்காரி தான் என நினைத்து கொண்டாள்.

ஆனால், நான் சிவாவை காதலிக்கிறேன் என தெரிந்திருந்தால் கட்டாயம் சுமதி சிவாவிடம் பழகி இருக்க மாட்டாள் என்பது வீணாவுக்கு உறுதியாக தெரிந்திருந்தது.

அதனால் சிவாவின் வருகை, அவர்களது நட்பில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. மனதில் ஓரம் இந்த கரும்புள்ளி இருந்தாலும் வீணா எந்த சமயத்திலும் அதை வெளிக்கட்டிக் கொள்லவில்லை.

கல்லூரி படிப்பு முடிந்ததும் வீணாவுக்கு கோவை, கொடிசியாவில்  கண்காட்சி  நடத்தும் ஒரு நிறுவனத்தின் மார்க்கெட்டிங் அலுவலகத்தில் வேலை கிடைத்தது. சுமதியோ அப்பாவின் மிகப்பெரிய தொழிற் சாலையை நிர்வகிக்க போனாள்.

முதலில் வீணாவுக்கு சென்னையின் ஐடி ஆபிசர் உதய் கூட திருமணம் ஆனது., வீணா தேனிலவுக்கு ஊட்டிக்கு வரும் போது அம்மா வீட்டுக்கு வரும்போதும் சுமதியுடன் மணிக்கணக்கில் பேசி பேசி ஜாலியாகவே இருந்தாள். அடிக்கடி அவள் வீட்டில் பேட்மின்ட்ன் ஆடினாள்.

அதன் பின் அடுத்த ஆண்டில் சுமதிக்கும் கோவையில் பெரிய் மில்லியனர் பையன் விஜய்க்கும் திருமணம் ஆகி விட., சுமதி சென்னைக்கு வரும்போது வீணா வீட்டில் சில நாட்கள் தங்குவதும்., வீணாவும் அவளது கணவன் உதய் கோயம்புத்தூர் வரும்போது தோழி சுமதியின் வீட்டில் தங்குவதும் வாடிக்கையாக ஆகிப்போனது.

தாங்கள் எப்படி நெருக்கமான தோழிகளாக இருந்தார்களோ அப்படியே அவர்களது கணவன்மார்களும் அன்னியோன்யமாக இருந்தார்கள். சுமதியின் கணவன் பெரிய பணக்காரன்., முதலாளி என்பதால், துவக்கத்தில் “சார்’ போட்டு பேசினான் உதயா.

 உடனே சுமதியின்  கணவன் விஜய் அதை ஏற்காமல் உரிமையாக “பேரை சொல்லி கூப்பிடுங்க” என சொன்னார். எல்லோருக்குமே அது மிகவும் சந்தோஷம்.

விஜய் வீணாவை சிஸ்டர் எனக் கூப்பிடுவதும், அதேபோல வீணாவின் கணவன் உதய் சுமதியை சிஸ்டர் என கூப்பிடுவதும் அவர்க்ளின்  நட்பையும், நம்பகத்தன்மையையும் அதிகாமக்கியது

எந்த வரையறையும் இல்லாமல் நட்பு ஒன்றே பிரதானமாக இருக்க இரு குடும்பமும் நெருங்கி பழகியது. ஓரிருமுறை வீணாவின் கணவனுக்கு பிசினஸில் பிரச்சினை வந்தபோது அதைக்கூட சுமதியின் கணவன் தீர்த்து வைத்தான். பண உதவியும் செய்தான். வீடு கட்ட பணம் தந்தான்.  எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இனிய குடும்ப நண்பர்களாகவே சுமதியும் கணவனும் வீணாவின் கணவனும் இருந்தார்கள்.

இந்த நாங்கு பேருக்கும் பொதுவான பிடித்தமான விஷயம் பாட்மின்டன் ஆடுவது தான். அண்னன் தங்கை எனவும், கணவன் – மனைவி எனவும் இரட்டையராக பேட்மின்டன் ஆடி மகிழ்ந்தார்கள்.

எல்லாமே சரியாகத்தான் இருந்தது. ஆனால் வீணாவிற்கு மட்டும் அந்த எண்ணம் வராமல் இருந்திருந்தால்., பிரச்சினையே இருந்திருக்காது அவளது நடுத்தர புத்திதான் அவளது வாழ்க்கையில் மிகப்பெரிய சறுக்கல் உண்டு பண்ணியது. அல்லது சுமதியின் மீதிருந்த ஒரு உள்ளார்ந்த மறைமுக பொறாமையும் கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம். யார் கண்டது?

 

No comments:

Post a Comment