மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, October 31, 2023

அனுமதிக்கப்பட்ட துரோகங்கள் : பாகம் 34 – எபிசோடு எண் : 38

 

  ஐயோ  தாரிணி இப்ப என்ன பண்றது?” அவனால் கொஞ்சம் கூட சிந்திக்கவே முடியவில்லை.

ஒரே சம்பவம் ஒரு ஆளுக்கு நடந்த சம்பவம், ஒரே ஒரு ஆளால் நடந்த சம்பவம்,சொல்லப் போனால் ஒரு ஆளின் சபலம் எத்தனை கிளை சம்பவங்களை ஏற்படுத்தி விட்டது? எத்தனை பாதிப்புகள்? எத்தனை விளைவுகள்?

தாரணி சிவாவிடம் வந்து விசாரிக்க சொன்ன மாப்பிள்ளை பையன். அதாவது தாரிணியை பெண்பார்க்க வந்த மாப்பிள்ளையை சிவா விசாரிக்க அவனது ஒர்க் ஷாப்புக்கு போக.,  அது அந்த மாப்பிள்ளைக்கும் தெரியவர அவன் நேருக்கு நேராக சிவாவை பார்த்து தன்னை பற்றி சிவாவிடம் எல்லாம் சொல்லலாம் . இந்த சம்பந்தம்  நல்லபடியாகமுடிய வேண்டும் என்பதற்காக சிவாவின் வீட்டை தேடி வந்தான் .

அவன் வந்ததும் அதே  ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறு மணி ஆகிவிட்டது . அவன் அந்த தெருவுக்கு வரும்போது,  அந்த சிவாவின் வீட்டு வாசலில் சிவாவும், தான் பார்த்த மணப்பெண் தாரிணியும் இருக்க என்ன நடந்தது?’ என கூட்டத்தில் விசாரித்தான்.

அப்போதுதான் சிவாவும் தாரிணியும் அறையில் ஒன்றாக கிடந்ததை பற்றி பலரும் பேச , அவன் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி வண்டியை திருப்பிக் கொண்டு போய் விட்டான்.

பெற்றொரிடம் போட்டு உடைத்து விட, அவர்கள் தங்களுக்கு இந்த சம்பந்தம் பற்றிச் சொன்ன ஆளை பிடித்து சகட்டுமேனிக்கு திட்ட., அந்த புரோக்கர் கிராமத்தில் தாரிணி வீட்டிற்கு போய் சொல்ல.,

ஒரு அழகான மண் பானை பட்டென உடைந்து விட்டது. திரும்ப சரி செய்ய முடியாது.

தாரிணியின் வீடும் தெருவும்  ஊரும் ஒன்று தான். வீடு தான் ஊர்., ஊர் தான் வீடு.

“படிக்கறதுக்கு எல்லை தாண்டி அனுப்பாதே.. அனுப்புனா எல்லை தாண்டிடுவாளுங்கன்னு சொன்னேன் கேட்டியா” என ஒரு பாட்டி ஒப்பாரி வைக்க.,.

தாரணி எவ்வளவோ தனது வீட்டாரிடம் சொல்லி பார்த்தாள். அவர்கள் கேட்கவே இல்லை.

உன்ன நல்ல பொண்ணுன்னு நெனச்சேன்.,  நல்லா தாண்டி வளர்த்தேன்?,  நீ எப்போ கல்யாணத்துக்கு முன்னாடி எவனோ ஒருத்தன் கூட,  சோரம் போனியோ.,  இனிமேல் நீ  இந்த வீட்டுல இருக்க லாயக்கில்லை ., “

அம்மா”

“வெளிய  போடி.. எங்கனாச்சூம் போடிஎன சொல்ல தாரணி என்ன செய்வதென்று தெரியாமல் அழுதாள்.

“அம்மா நான் மனசறிஞ்ச்சு ஒரு தவறும் பண்ணலம்மா ., சொன்னா கேளுங்க ., நான் போன சமயத்துல என் பிரண்டுக்கு ஒரு பிரச்சனை அவனைக் காப்பாத்த நான் பொய் சொன்னேன்..”

நீ பொய் சொன்னதாக இருக்கட்டும்., ஊர் உலகத்தில் உன்ன பாத்து என்ன சொல்லுவாங்க.,  நீயும் அவனும் ஒண்ணா கிடந்ததாக தானே சொல்லுவாங்க..” அப்ப எகிற

ஐயோ அப்பா ., அது ஒரு புது இடம்., புது ஆளுங்க..,  புதுசு இல்ல  அங்க என்ன பத்தி யார் வேணா தப்பா பேசட்டும்..ஆனா.,  அதே இடத்தில பிறந்து வாழ்ந்து பேரும்., புகழுமா இருக்குற என் பிரண்டு பேரு தப்பா போயிடக்கூடாதுன்னுதான்.,  அந்த முடிவு எடுத்தேன் என்னை பத்தி உங்களுக்கு தெரியாதா? உங்க பொண்ணை  புரிஞ்சுக்க மாட்டீங்களா ? “

ஏய்ய்ய் .. நீ ஆயிரம் சொல்லுடி ., ஆனா இப்போ என்னன்னு வந்திருக்கு தெரியுமா? நீ யார்கிட்டயோ சோரம் போனவளாம். இனி உன்னை யார் கட்டுவாங்கடி?.’

“யாரும் கட்ட வேணாம்”

இந்த ஊர்ல எல்லாம் நீ நினைச்ச மாதிரி எந்த இடமும் புது இடம் இல்ல.,   புது ஆளுங்க. ,இல்ல.உலகம் எண்றது ஒரு ஆளு கூட இன்னொருத்தரை சம்பந்தம் பண்ணி வெச்சிருக்கு.. உன்ன பத்தி அங்கே யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சே..ஆனா., நீ தப்பு பண்ண பத்தாவது நிமிஷம்  நம்ம கிராமத்துல எல்லாருக்கும் விஷயம் தெரிஞ்சு இருக்கு..”

அப்பா பேசினார்.

“இது  இவ்ளொ பெரிசா ஆகுமுன்னு நினைக்கலப்பா.. ஒரு பொண்ணை காப்பத்த போய் நானே பலி ஆகிட்டேன்மா..சின்ன விஷயம் தானேன்னு.. நான் நினைச்சேன்மா”

  இல்ல., பெரிய விஷயம் பண்ணிட்டே ., நீ படிச்ச பொண்ணு கொஞ்சமாச்சும் யோசிச்சியா?” என திட்டி திட்டி தீர்த்தார்கள்.

விவாதம்., சண்டையாகி அடி தடியாகி., துக்கம் தாளாமல், அம்மா விஷம் குடிக்க போனாள். அப்பா தன்னைத்தானே அடித்துக் கொண்டு அழுதார். அந்த குடும்பமே ஒரே நாளில் சின்னாபின்னமானது.

ஊரெல்லாம் ஒன்று சேர்ந்து அந்த குடும்ப தலைவனை தேற்றும்படி ஆனது.

 

 ஒரு பொறுப்புள்ள மனிதனுக்கு , குருவாய் போற்றப்ப்ட்டவனுக்கு ஏற்பட்ட முறையற்ற காமத்தால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. அந்த வீடுகளில் நிம்மதி இறந்தது .

நல்ல மதிப்பெண் எடுத்து நல்ல முறையில் தேர்வு பெறலாம் என காத்திருந்த வீணா அந்தப் பரீட்சையில் சுமாரான மதிப்பெண் வாங்கினாள்.

ட்யூஷன் மூடப்பட்டது,. அதில் படித்த மாணவர்கள் ., படிப்பை தொடர முடியாமல்,. கடைசி கட்ட முக்கியமான தேர்வுகளில் மார்க் வாங்க முடியாமல் தவித்தார்கள். சிவாவின் பெரியப்பா வெளியே தலைகாட்ட முடியவில்லை.

“சிவா இனிமே இங்க இருக்க வேணாம். அவன் ஊருக்கு போகட்டும்’ பெரியம்மாவே சொன்னாள். சிவா இடைவிடாமல் அழுதான். கல்லூரி பணிக்கும் அவனால் போகமுடியவில்லைல்

தாரிணியும் மாய்ந்து மாய்ந்து அழுதாள்.  இனி இந்த குடும்பத்தில் இனி எந்த ஊரில் நாம் இருக்கக் கூடாது’ என முடிவுடன் தாரணி குடும்பமும் ஊரை விட்டு செல்ல பேக்கப் செய்தது .

பல தலைமுறைகளாக அந்த  மண்  வீதியில் வீடு கட்டி வயல், தோப்பு, தோட்டம் என வாழ்ந்த  தாரிணி குடும்பம் அந்த ஊரைவிட்டு போகும் கடைசி  நிமிடங்களில் இருந்தது.

பிள்ளைகள் போல் வளர்த்த கால் நடைகளை பேரம் பேசி விற்கும் போது தான் அந்த வீட்டின் முன்னால் காரில் போய் இறங்கினான் சிவா. கூடவே அவனது பெரியம்மாவும், பெரியப்பாவும்

தாரிணிக்கு ஒன்றும் புரியவில்லை.

அவள் குடும்பமும் திகைத்தது. ஊரும் கூடியது

என்ன ஏது?” என்று அவர்கள் பதறி, விசாரிக்க.

நானும் தாரணியும் ஒருத்தர ஒருத்தர லவ் பண்ணது உன்மை தான், நானும் அவளும் அந்த ரூம்ல ஒண்ணா பேசிக்கொண்டிருந்தது உண்மை தான். எங்கப்பா எங்க ஜாதியில மாப்பிள்ளை பாக்குறார் . பிரிஞ்சுடலாம்னு சொன்னா.. “

“…………….”

“அவ என்னை வேண்டாமுன்னுட்டா., அப்பா உடைஞ்சிடுவார் வேணாமுன்னு சொல்லிட்டா. இதான் நடந்தது. அதுக்குள்ள என்னை பிடிக்காதவங்க ஒன்னா சேந்து கதை கட்டிட்டாங்க “

‘…………….”

“இப்ப நான் அவளை கல்யாணம் பண்ணிக்கிறேன்.,  அவளை பொண்ணு கேக்க தான் நான் வந்திருக்கிறேன்என சொல்ல அவன் பின்னால் பெரியப்பாவும் பெரியம்மாவும் கைகூப்பி நிற்க., அந்த குடும்பத்திற்கு வேறு வழி தெரியவில்லை.,

‘இல்ல தம்பி. நாங்க வேற ஆளுங்க” தாரிணி அப்பா சிவாவின் காரும், பவிஷும் பார்த்து திகைக்க

“அட வீட்டுக்கு அழைச்சிட்டு போய் சம்பந்தம் பேசு.. மாரப்பா.. ” ஊர் உத்தரவிட்டது. சிவா சிரித்தான். தாரிணி கண் மலங்க சிரித்தாள் அம்மா சிரித்தாள்.

கொஞ்ச நேரத்தில் அந்த வீடு குதூகலமானது. பெரியவர்கள் சந்தோஷப்பட்டால், வாண்டுகள் உற்சாகமாக இருப்பார்கள். ஆடுவார்கள். பிள்ளைகள் பிஞ்சு பாதம் பட மண் தெருவில் அங்குமிங்கு ஓடி ஆட, அந்த மிகசிறிய ஊர் சந்தோஷப்பட்டது. மக்கள் மகிழ்ச்சியெனில் மண் மகிழ்ச்சியாக இருக்கும். மண் மகிழ்ச்சி எனில் குளுமையாக  இருக்கும்., குளுமை என்றால் மழை வரும். கோடையை கடந்த ஜூன் மாத முதல் வாரத்தில் முதல் மழை அங்கே பொழிய துவங்கியது.

 அந்த ஓட்டு  வீட்டின் பின்னால் தாரணி சிவாவை  கட்டிக்கொண்டு அழுதாள்

கடைசில நீ எனக்குப் புருஷன் ஆயிட்டியா  சிவா” அவள் அழுதாள்.

“நீ புருஷன் இல்லை ., எனக்கு தெய்வம் பெரிய இக்கட்டிலிருந்து அவமானத்தில் இருந்து அசிங்கத்திலிருந்து என காப்பாத்திட்டே.. நீ சொன்னது பொய்யின்னு எங்க அம்மாவுக்கு  அப்பவுக்கு தெரியும். “

“……………..”

“ஒன் ஹவர் கழிச்சி  நீ வந்திருந்தா எங்களை பாத்திருக்கவே முடியாது. நாங்க கிளம்பி இருப்போம். அதுக்கப்பறம் நீ இந்த ஊர்ல வந்து என்ன சொன்னாலும் யாரும் நம்ப போவதில்ல. நீ சொன்னது மட்டுமில்ல நீ சொன்ன நேரம், தான் முக்கியம்.. நீ தெய்வம் சிவா ”

“ஐயோ அப்படி அப்படி சொல்லாத தாரணி., நீதான் என்னை காப்பாத்திட்டே..  இல்லன்னா சுமதி வீட்டாருங்க,.  என்னை கண்டம் துண்டமாக போட்டிருப்பாங்க,.  நான் பெரிய தப்பு பண்ணிட்டேன். “

‘…………..”

கல்யாணத்துக்கு முன்னால இன்னொரு பொண்ணு கூட ஆசைப்பட்டு தப்பு பண்ணது பெரிய பாவம்னு நல்லா புரிஞ்சுகிட்டேன்., தாரிணி. இது வயசுல வந்த கோளாறு தானே அப்படி நினைச்சுகிட்டு என்ன காப்பாத்த நீ துணிஞ்சி உன்னையே பணயம் வைச்சிட்டே.. எல்லாத்துக்கும் மேல.,  இப்போ கூட நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்னு வந்தப்போசீ சீ நீ எவ்ளோ ஒருத்தி கூட ஆட்டம் போட்டவன் தானே’ அப்படின்னு சொல்லி என்ன அசிங்கப்படுத்தி திட்டாம.,  என்ன உன் புருஷனா ஏத்துக்கிட்டே..”

‘…………………”

“ நீ என்னை மனுஷனா ஏத்துக்கிட்டதுக்கு உனக்கு காலம் புல்லா நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன்” என சொல்லி அவளை இறுக்கமாக அணைத்துக்கொண்டான்

“சிவா….”

“ம்….”

“ நான் ஏன் உன்னை ஏத்துகிட்டேன்னா.,?”

“.ம்”

“……………..ஏன்னா ஐ லவ் யூ”

“……………….”

“இப்ப இல்ல,. ஏழு வருசமா..”

“தெரியும்..”

“மிருதுளா வந்ததும் நான் ஒதுங்கிட்டேன்..”

“தெரியும்… எதுவும் சொல்ல வேனாம் போதும்..” அவன் அந்த மானிறத்தழகியின் உதடுகளை தேடினான்.

சிவா நீ இருக்கிற இருப்புக்கும், அழகுக்கும், வசதிக்கும் ஏணி வச்சாலும் எட்டாது. நானும் அந்த பொண்ணுங்க மாதிரி.,  இந்த மாதிரி வெளுப்பும் இல்லை நாகரீகமும் இல்லை .. வசதியான வீடும்  இல்ல.. நான் உனக்கு ஓகே வா?”

“ம்ம்ம் ஓகே தான். இந்த மாசத்துல எது முதல் முகூர்த்தம்”

“ஏன்”

“அந்த தகர கொட்டைகைல போட்டு உன்னை உரிச்சி பாக்கத்தான்..”

“..சீச்ச்சீ “ தாரிணி சிணுங்க.,கூடத்தில்  பெரியவர்கள் பேசி சிரித்து கொண்டிருக்க., வெளியே மழை வெளுத்து வாங்கியது.

1 comment: