மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, November 3, 2023

அனுமதிக்கப்பட்ட துரோகங்கள் : பாகம் 34 – எபிசோடு எண் : 40

 

சுமதிக்கு திருமணமாகி , ஊட்டிக்கு சீசன் டூர் போன போது அது நிகழ்ந்தது.

அன்று வீணாவுக்கு பர்த் டே வேறு.

ஊட்டியின் அடிவாரத்தில் இருந்த ஒரு பண்னை வீட்டில் விஜய்க்கு சொந்தமான அந்த சொகுசு வீட்டில்., தன்னுடைய பிறந்த நாளில் மாலை நேரத்தில் அறையில் படுத்து இருந்தாள். ஆண்டுக்கு மூன்று முறையாவது இந்த இரு  ஜோடிகளும் இங்கே தங்குவதுண்டு.,

அவள் வெளியே போய் விட்டு வந்த களைப்பில் தன் அறையில் படுத்திருந்த  வீணா திடீரென கண்விழிக்க., வீட்டில் யாருமில்லை. வந்த இடத்தில் தன்னை தனியே விட்டு விட்டு எங்கே போனான் இந்த உதய்? அவள் தேட., எங்குமே யாரும் இல்லை. வீட்டின் பின்னால் வேலைக்காரர்கள் மட்டும் புல்வெளியை சுத்தம் செய்து கொன்டும் நீச்சல் குளத்தில் நீரை மாற்றிக் கொண்டும் இருந்தார்கள்.

எங்கே போனார்கள் இவர்கள் ?., சாப்பிட்ட உடனே தூங்கி விட்டோம். முன்னாள் இரவு வீணாவின் அடுத்த நாள் பர்த் டே என்பதால் கிளப் ஒன்றிற்கு கூப்பிட்டு போனான் இந்த விஜய். இரவு தூங்க லேட் ஆகிவிட்டது. மேலே  வந்து விழுந்த  உதய்யை கூட “ இன்னிக்கு வேணா எருமாடு “ என சொல்லி தள்ளிவிட்டாள்.

ஆனால் ஆறு மணிக்கே “வா.. சன்ரைஸ் பாக்கலாம்” என சொல்லி எழுப்பி விட்டான் உதய்.

“வேனாம் …ப்ளீஸ் விடுங்களேன் உதய்”

“ஏய்ய் பர்த் டே பேபி இப்படியா தூங்கறது? இன்னிக்கு உனக்கு செம கிப்ட் ஒன்னு வாங்கி தரேன்”

“ஒன்னும்  வேணாம். சென்னை போனா பாத்துக்கலாம்., ப்ளீஸ்”

“முடியாது எழுந்திருடி”

“அய்யோ என்னை விடுங்களேன்..எனக்கு தூக்கம் வருது”

“தூங்கறதுக்கா ஊட்டி வந்தீங்க சிஸ்டர்” அன்பாக கேட்டான் விஜய். அவர்கள் ரூமை எட்டி பார்த்து குரல் கொடுத்தான் விஜய்,

விஜய் குரலை கேட்டு முட்டிக்கு மேல் போன கவுனை கீழே இழுத்துகொண்டு பாத்ரூம் ஓடினாள் வீணா. பத்து நிமிடத்தில் ரெடி யானாள். சுமதியும் வர.,

மறுபடி ஊர் சுற்றல்.. ஷாப்பிங்க்.. ஆட்டம், பாட்டம்.

“ ரூமுக்கு சீக்கிரம் வந்து ரெஸ்ட் எடுக்கனும்..” வீணா சொல்ல.,

 “ அட… நாளைக்கு மார்னிங்க் சென்னைக்கு போறிங்க. திரும்ப எப்ப வர போறிங்களோ? லெட்ஸ் எஞ்சாய்”

“ஆமா.. லஞ்சுக்கப்பறம் ஒரு மூவி போறோம்” விஜய் சொன்னான்.

“அய்யோ  நான் வரலப்பா”

‘அப்ப டிவி பாத்துகிட்டு இருங்க” விஜய்  நக்கலடிக்க

நால்வரும் சன்ரைஸ் பார்த்துவிட்டு ஹோட்டலில் சாப்பிட்டு அப்படியே ஹார்ஸ் ரைடிங்க் போனார்கள்., மதியம் வீட்டுக்கு வர, உணவு தயாராக இருக்க,. சாப்பிட்டு தூங்கியவள் தான் வீணா.  மூவியாவது.. ஆவியாவது..

இப்போது மணி  ஐந்தாகிறது.  மூன்று பேரும் மூவி விட்டு இன்னும் வரவில்லையோ?

இந்த தூங்குமூஞ்சியை விட்டு எங்கே போனார்கள்? திரும்ப திரும்ப  ஷாப்பிங்,

சென்னையில் இல்லாததா இங்கே இருக்கிறது?. இந்த உதய் கூட , விஜய்க்கு ஈகுவலாக செலவு செய்கிறான். அவர்களுடன் நம்மால் ஈடு முடியுமா?

அவள் தோட்டத்திற்கு வர., ஒரு வேலைக்கார பெண்., ஓடி வந்தாள்.

“அம்மா ., அய்யாங்க,.சுமதி அம்மா எல்லாம்  சினிமா போய்ட்டு இப்ப தான் வீட்டுக்கு வந்துட்டு போனாங்க..,  ஒரு அரை மணி நேரம் இருந்தாங்க.. டீ., ஸ்னாக்ஸ் சாப்பிட்டு மறுக்கா போயிட்டாங்க… நீங்க தூங்கறதை பாத்துட்டு எழுப்பாம போயிட்டாங்க..”

“அடாடா.. எழுப்ப வேன்டியது தானே”

“நீங்க திட்டுவீங்கன்னு  போய்ட்டாங்க,. பக்கத்துல ஒரு பிளவர் ஷோவாம் ”

உண்மைதான். எழுப்பினால் திட்ட செய்வோம்.

“டீ போட்டு தரட்டுங்களா?’

“வேணாம்,…” அவள் திரும்ப வீட்டிற்குள் நுழைந்தாள். அவளுக்கு வெறுப்பாக இருந்தது. 

ஹாலில் பெரிய திரை டிவி பார்த்தாள். அட இந்த டிவியில் ஒரூ படம் கூட முழுதாக பார்க்கவில்லையே.

அவள் சோபாவில் உட்கார்ந்து  டிவியை ஆன் செய்தாள். ஆன் ஆகவில்லை. டிவி சென்சார் முன் ஏதோ ஒரு துணி இருக்க., அலுப்பாய் அந்த துணி அகற்ற போக., அந்த துணிக்கு அருகில்., கல் பதித்த ஒரு நீளமான கனமான, டாலரில் மயில் டிசைன் போட்ட தங்க செயின். சட்டென எடுத்து பார்த்தாள். பத்து சவரனுக்கு மேல் இருக்கும்.

இதை யார் இங்கே வைத்தார்கள்?. கல் பதித்த தங்க ஆரம். பத்து சவரனுக்கு குறையாம இருக்கும். அவள் ஆசைப்பட்ட மாடல்,. செயின்.. பென் ஸ்டான்ட் பக்கத்தில் யாருக்கும் தெரியாமல் எப்போது வைக்கப்பட்டதோ? தூசாக இருக்கிறது. ஒரு வேளை இந்த சுமதியே இங்கே செயினை வைத்து விட்டு மறந்திருக்கலாம். மித மிஞ்சிய வசதி. தொப்புளுக்கு மேல் கஞ்சி. அப்படி ஒரு பணக்கார வாழ்க்கை.

தங்க செயினை ஹாலில் போட்டு மறந்து போய் விட்டாள் என்றால் அது தான் செல்வ செழிப்பு. பண இறுமாப்பு. சுமதிக்கு அழகு குறைவாக இருக்கலாம். ஆனால், பணத்தில் லட்சுமி கடாட்சம் ., அழகான வசதியான மில்லியனர் மாப்பிள்ளை கிடைத்து விட்டான். விஜய் கூட அவள் காட்டும் நெருக்கம் இருக்கிறதே.. அப்பபபப்பா ஆதர்ஷமான தம்பதிபோல அப்படி ஒரு காதல்.. ஒரு சீன்.

காலேஜ் டைமில் இவளை தகர கொட்டாவில் வைத்து அந்த சிவா பண்ண வேலையெல்லாம் சொன்னால்?

கல்யாணத்திற்கு முன்னே சோரம் போன ஒரு பெண்ணுகு இப்படி ஒரு வாழ்க்கை. ஆனால் நமக்கு? மாச சம்பளக்காரன்.   நேற்று கூட கிளப்பில் என்பதாயிரம் ரூவா பில். டக்கென ஒரு லட்ச ரூபாய்க்கு செக் நீட்டுகிறான் விஜய்,. பணம் பணம்  மிதமிஞ்சிய பணம். அது தரும் திமிர். அந்த திமிரில் தான் வீட்டை சுற்றி இவ்வளவு வேலைக்காரர்கள் இருந்தும் ஹால் டிவி டேபிளில் சர்வ சாதாரணமாய் 10 சவரன் தங்க செயின் அனாதையாக இருக்கிறது.

வள் கைவிரல்களில் அந்த பத்து பவுன் தங்க ஆரம் ஜொலித்து கொண்டிருந்தது.  அது தோழியின் வீடு. கண்டிப்பாக நகையும் சுமதி உடையதாக இருக்கும். லேசாக ஆரம் பில்லையில் தூசி  மண்டி கிடக்கிறது.  எத்தனை நாளோ இது இந்த இடத்தில் யார் கண்ணிலும் படாமல் கிடக்கிறது?.

ஏன் சுமதிக்கே இது பற்றி மறந்து போய் இருக்கலாம். வீணாவிற்கு லேசாக சபலம் தட்டியது .

வீணா ஐந்து நாட்களாக ங்கே இருக்கிறாள். அவளது கணவனும் அவளும் ஊட்டியில் உள்ள இந்த சுமதி வீட்டிற்கு ஆண்டுக்கு பலமுறை வருவார்கள்.  இங்கே தங்கியிருந்து டேரா போட்டு போட்டியை ஒரு ரவுண்ட் அடித்து விட்டு அதன் பிறகு சென்னைக்கு திரும்புவார்கள் . நாம் வருகிறோம் என்றால் சுமதியும் கணவனை கூட்டி கொண்டு இங்கே வந்து விடுவாள். அவனும் முகம் சுளிக்காமல் கிளம்பி வருவான். அதுபோலதான் இந்த முறையும் வந்திருக்கிறாள்.

ஆனால் எந்த முறையும் கிடைக்காத ஒரு அதிர்ஷ்டம் இப்போது கிடைத்திருக்கிறது. பலமுறை யோசித்தாள. இந்த வேலையை செய்யலாமா? வேண்டாமா? என்ற இரண்டு மனதாக அவள் இருந்தாள். சுமதி அவளது உயிர்தோழி. அதனால் தான் இருவருக்குமே திருமணம் ஆன பின்னும் அவரது நட்புறவு இன்னமும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது .அவளுக்கு போய் துரோகம் செய்யலாமா? யாருக்காவது தெரிந்தால்?

சுமதியும் விஜய்யும் சென்னைக்கு வந்தால்  நிச்சயம் வீணாவின் வீட்டில் தங்காமல் செல்லமாட்டார்கள். இத்தனை ஆண்டுகால பழக்கம் நட்பு ஜஸ்ட் ஒரு 10 சவரன் நகைக்காக தொலைத்துவிட வேண்டுமா? என நினைத்தாள். ஆனால், நகை மிக அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற நகையை வாங்க வேண்டும் என்றுதான் அவள் ஆசைப்பட்டு இருந்தாள்.

அவர்கள் வருவதற்குள் இதை எடுத்து வைத்து விடலாம். அல்லது எங்காவது ஒளித்து வைத்து விடலாம். அப்படி இல்லை என்றால் ஏதோ இந்த ட்ரெஸ்ஸிங் டேபிள் இடையே தள்ளிவிடலாம் . சுமதிக்கு இப்படி ஒரு நகை இருப்பது தெரியுமோ தெரியாதோ? அப்படியே நகை காணோம் என்றால் இங்கே பல வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். அதில் யர் மீதாவது பழை போடலாம்.

“யெஸ்.. டீ போட வந்தாளே ஒரு பெண். அவள் மீது பழி போடலமா?”

தப்புதான். வேறு வழி தெரியவில்லை.

பத்து சவரன்,. இன்றைய தேதிக்கு மூனரை லட்சம் . விட்டு விட்டு போக முடியாது. இப்போது எடுத்து போக முடியாது. காணொம் என தேடினால்  மாட்டி கொள்வோம்.  இங்கேயே ஓரமாய் தள்ளி விடலாம். ஒளித்து வைப்போம்.

இன்று மாலை முதல் நாளை நாங்கள் கிளம்பும் வரையில் சுமதி இந்த நகை காணாமல் போன பேச்சை எடுக்கவில்லை என்றால்,  நைசாக இதை எடுத்துக் கொண்டு விடலாம் .

ஆனால் அப்படி ஆகாது. சுமதிக்கு நகை காணோம் என்ற விஷயம் தெரிய வரவே , அவள் தெரிந்து கொள்ளவே நிறைய நாட்கள் ஆகலாம் சுமதி மிகப் பெரிய பணக்காரி. அவளுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. அப்படியே காணவில்லை என்றாலும் வீடு முழுக்க தேடிக் கொண்டிருப்பாள். ரூம் ரூமாக போய் தேடுவாள். போலீசில் சென்று புகார் கொடுப்பாளா என்ன?

அப்படி போனால்?  இல்லை.

அதற்கெல்லாம் வாய்ப்பு இருக்காது. அவள் அப்படி செய்யக் கூடியவள் இல்லை, இது அவர்களுக்கு கிள்ப் சார்ஜ் போல கூடுதல் செலவு அவ்வளவு தான், துணிந்து ரிஸ்க் எடுப்போம்.

இந்த கொழுத்த நகை சுமதிக்கு சாதாரணமாக இருக்கலாம். என்னை போன்ற நடுத்தர பெண்களுக்கு இது மிகப்பெரிய முதலீடு. விட முடியாது. விடவே முடியாது. அவள் அந்த நகையை எடுத்து டிவி டேபிளின் பின்பக்கம் தள்ளிவிட்டாள். முனையை,மட்டும் எடுப்பதற்கு வாட்டமாக மேல் நோக்கி வைத்தாள். பின் ஒன்றுமே நடவாதது போல வெளியில் வந்தாள். அந்த பெண்ணை கூப்பிட்டாள்.

“சுகர் கம்மியா ஒரு டீ போடு” சொல்லி விட்டு ரூமுக்கு போய் படுத்தாள்.  நகை காணாதது ஒரு பிரச்சனை ஆனால் இந்த பெண்ணை சொல்லலாம். அவள் வேகமாக திட்டமிட்டாள்.

இல்லை. இல்லை. ஒரு பெண் போதாது. ரென்டு மூனு பேர் வேன்டும். திரும்ப வெளியே வந்து தோட்டத்தை பெருக்கிய இரு பெண்களை  கூப்பிட்டாள்

“ ரூம்ல பெட்ஷீட் மாத்தனும்.. ஹால் சோபாவை சுத்தம் செய்யனும்...”

“தோ வரேம்மா” அவளை ரூமில் விட்டு வீணா வெளியில் சுற்றினாள்,. பின்  ஹாலுக்கு போய்,. ஓரக்கண்னால் செயின் வைத்த இடத்தை பார்த்தாள். டீ குடித்து விட்டு பின் ரூமுக்கு குளிக்க போனாள்.

வெளியே வர அவர்கள் மூவரும் வந்து விட்டிருந்தார்கள். வீணாவும் கொஞ்ச நேரத்தில் குளித்துவிட்டு வந்தாள். வெள்ளை சுடிதாரில் அமர்க்களமாக டிரஸ் செய்திருந்தாள்.

வாவ் டிரஸ் சூப்பரா இருக்குடி” சுமதி சொல்ல.,

அவளை ஏறிட்டுப் பார்க்கவே வீணாவிற்கு அவமானமாக இருந்தது. என்றாலும் கூச்சத்தை பார்த்தால் எப்படி பணம் சம்பாதிப்பது? அவள் சிரித்தாள். சோபாவில் சரிந்து உட்கார்ந்திருந்த உதய்யை பார்த்து வீணா முகம் சுளித்தாள்.

ராஸ்கல் மூக்கு முட்ட குடித்திருக்கிறான். விஜயும் தண்ணி அடிக்கிறான் தான் .ஆனால் எவ்வளவு நாகரிகமாக இருக்கிறான்?.

சுமதி ரூமுக்கு போக.,

“ஏன் இவ்ளோ  நேரம்?” வீணா பொதுவாக கேட்க.,  

சிஸ்டர்.. ஐயோ அது பெரிய கதை. வன் ஜாலியா தண்ணி அடிக்கணும்னு சொன்னாண். சரி அண்ணே பார்லர் போய் தண்ணி அடிச்சா சுமதியை எங்கே விட்டு போறது?ன்னு கேட்க., இவன் அடம் பிடிக்கிறான்.. சரின்னு சுமதியை ஒரு பார்க்குல விட்டுட்டு ,.இவனை பார்லருக்கு தள்ளிட்டு போனா. அதை விட்டு வரவே மாட்டேங்கிறான்.”

“மூவி பாத்துட்டு வீட்டூக்கு வந்தீங்களாமே? “

“ஆமா.. வந்தோம். டீ சாப்பிட்டு கிளமிபிட்டோம்.. ப்ளவர் ஷோ பாக்க... “

“ஆனா லிக்கர் பார்லர் போறது தான் உங்க பிளான் போல.,”

“சரியா போச்சு.. உங்க ஹப்பி கேட்ட கேக்க வேண்டியதை .,எங்கிட்ட கேட்டா” விஜய் இன்னும் ரென்டு பாட்டிலை எடுத்து வைத்தான்.

“அய்யோ என்ன இது?” வீணா அழ.,

“ஹலோ.. உங்களை யாரும் கட்டாயபடுத்தல. சுமதி கேட்டா”

“அடிப்பாவி..”

“ஜஸ்ட் ஒரு பன் தானே வீணா..”  சுமதி சொல்ல

“எதாச்சும் பண்னிக்கங்க.. எனக்கு வேணாம்..” வீணா சொன்னாள். ஆனால் அந்த இடத்தை விட்டு எழுந்தால், அவர்களை நோஸ் கட் செய்தாற் போல் ஆகும் என்பதால் அமைதியாக இருந்தாள்.

சுமதி டிவியை ஆன் செய்தாள்.

இரவு வர,. மதுவும்., டின்னரும் சேர்ந்து உள்ளே போக.,  அரைகுறை போதையில் இருந்த உதய்யும் ஃபுல்லாக ஏற்றிக் கொண்டான்.

அங்கே சுமதியும் ரெண்டு ரவுன்ட் அடித்து கண் சொருக.,

“அடிபாவி குத்து விளக்கு மாதிரி இருந்துட்டு, தண்னி அடிக்கிறியே’

“வீணா இதெல்லாம் இங்க வந்தா தான்.. ஊர்ல மாமியார் முன்னாடி இருக்க முடியுமா? ஒரு சேஞ்ச்சுக்கு தான்”

“ சுமதி சிஸ்டர் நீங்க  அடிங்க ஸிஸ்டர”  உதய் சியர்ஸ் சொன்னான்.

ச்சே மனைவியின் பிறந்த நாள் அதுவும் இப்படி இருக்கிறானே.

ஆனால், இதுவும்  நல்லது தான். மூவரும் தண்னி அடித்திருக்கிறார்கள். எல்லாரும் மட்டையாகி விட்டால் நகையை கொன்டு போய் ஹான்ட் பேக்கில் வைத்து விடலாம். அவள் மார்பு படபடக்க காத்திருந்தாள்.

கொஞ்ச நேரத்தில் சுமதியை கை தாங்கலாய் ரூமுக்கு கூட்டி போனான் விஜய் . “ பை சிஸ்டர்”

“பை அண்ணா”

அவர்கள் ரூமில் போய் கதவை தாழ் போட,. அவள் உதய்யை பார்த்தாள். அவனை ஆத்திரமாக எட்டி உதைத்தாள். டிவி பார்த்து போரடிக்க., அலுப்பாய் ரூமுக்கு போனாள்.

அரை மணி நேரம் காத்திருந்தாள். நகையை இப்போது எடுக்கலாமா? இல்லை காலையில் எடுக்கலாமா? காலை 11.30 க்கு கோயம்புத்தூரிலிருந்து பிளைட்.

இங்கிருந்து 9 மணிக்கே கிளம்பியாக வேண்டும். காலை சந்தர்ப்பம்., எப்படி இருக்குமோ? இனி சுமதி இந்த நகையை தேடுவாள் என்கிற நம்பிக்கை எனக்கில்லை. நைஸாக போய் எடுத்து பத்திரப்படுத்தலாம்.

அவள் மெதுவாக ஹாலுக்கு போனாள். உதய் கை கால்களை விரித்து நினைவிழந்தவன் போல தூங்கி கொண்டிருக்க., அவள் டிவி ஸ்டான்ட் அருகே போக., அவள் செயின் போட்ட இடத்தில் கை விட்டாள் . செயின் தட்டுபட்டது. மெதுவாக இழுக்க., செயின் வந்தது. ஆனால் பட்டையான ஆரம் சிக்கி கொண்டது. அழுத்தம் கொடுத்து இழுத்தாள் வரவில்லை. என்னாடா இது வம்பா போச்சு.., அவள் ட்ராயரை இழுக்க., அதுவும் வரவில்லை. பேசாமல் செயினை அறுத்து விடலாமா? வேண்டாம்.

டாலரில் மயில் அத்தனை அழகு. அதை விடுவானேன்? அதை எடுக்க., பின் வாட்டத்தில் இழுக்க உயரமாக இருக்க வேண்டும். அல்லது ஸ்டான்டில் ஏறி அந்த பக்கமாய் இழுத்தால் வரும்.

செயினை உள்ளே போடும் போது எளிதாக இருந்தது. எடுக்கும் போது இவ்ளோ கஷ்டமா?

அவள் ஸ்டான்ட் மீது ஏறாமல் டீபாயை டர்ர்ரென தள்ளி கொண்டு டிவி ஸ்டான்ட் அருகே வந்து அதன் மீது ஏறி தடுமாற்றமாய் நின்று வெளீயே தெரிந்த செயினை பிடித்து டிராயர் ஒட்டையிலிருந்து செயினை பிடித்து மெல்ல ஆட ஆட்டி எடுக்க இப்போது செயினும் டாலரும் கொஞ்சம் கொஞ்சமாக வர,.  அவள் மூச்சை பிடித்து சத்தம் போடாமல் போராடி எடுக்க.,

ஹாலில் உதய் குறட்டை சத்தம் விட ., அவளது இதய துடிப்பு ஓசை பயங்கரமாய் கேட்க., அந்த தங்க செயின் திக்கி திணறி நுனியில் மாட்ட,

யாராவது வந்து விடப் போகிரார்கள்?. அவள் பயந்து வேகம், வேகமாய் அவள் கையை உயர்த்தி இழுக்க.,

ஹக்க்க்கெ’ செயின் முழுதும் அவள் கைக்கு வர.,

யப்பாடி…” முழு செயினையும் அவள் தன் உள்ளங்கைக்குள் அடக்கி கொள்ள.,

“வெல்டன் சிஸ்டர்” என்றபடி ரூமிலிருந்து வெளியே வந்தான் விஜய்.

No comments:

Post a Comment