சிவா பெரிய இலக்கு கொண்டு வெறித்தனமாக ஓடிக் கொன்டிருந்த்தான். அவன்
முன்னே இருந்த அந்த வாத்தியாரின் மகள் அவன் கவனத்தை கொஞ்சம் கூட அசைக்கவே இல்லை.
அந்த வாத்தியார் மனைவிக்கு
அதனலாலயே சிவாவை ரொம்பவும் பிடித்து விட்டது.
“என்ன ஒரு ஒழுக்கம், படிப்புல கவனம் அந்த புள்ளைக்கு”
பாரட்டி பாரட்டி மாய்ந்தாள்.
கணிதப்பாடம் என்றாலே பயந்த சிவா, இப்போது கணக்கு பாடத்தின் மீது தனி கவனம் செலுத்தினான். சிவாவுக்கு
அந்த பயம் போய் கொஞ்சம் கொஞ்சமாக கணக்கு மேல் காதல் வந்தது. அவன் ஆறே மாதத்தில் கணிதத்தில் பெரிய நிபுணன் ஆனான்.
அவனுக்கு கணிதம் உட்பட மற்ற பாடங்கள் குறித்து பெரிய தேடல்
இருப்பதைக் கண்டு கணபதி வாத்தியாரும் வியந்து போனார். அவனது வறுமை கண்டு மனமிரங்கி அவனுக்கு, இன்னும் நேரம் செலவழித்து
சொல்லி கொடுத்தார்.
“எது கஷ்டமா இருக்கோ., அதில் மட்டுமே கவனம் செலுத்து சிவா. அப்புறம் உன்னை அடிச்சிக்க ஆளே கிடையாது” என்கிற வாசகங்கள் அவன் செவிகளில் தொடர்ந்து சூழ்ந்துகொள்ள அந்த ஆண்டு இறுதித் தேர்வில் மாவட்டத்தில் முதலாவது வந்தான்.
பள்ளிக்கூடம் அல்லோகலப்பட்டது. கணபதி வாத்தியாருக்கு மாலை
போட்டார்கள். வாத்தியார் மகள் சோகமானாள்.
வாத்தியார் மகளுக்கு பெரிய பிரச்சனை. அவள் கல்வியில் சிறந்த
பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தது தான். அவர்களது சுற்றுவட்டாரத்தில்
பி எச் டி, ‘டாக்டரேட்’ படிக்காதவர்கள் மிகக் குறைவு. முதுநிலை படிப்பு படிக்காதவர்களை
அவர்களது வீட்டில் படிக்காத ஜென்மங்கள் என அழைப்பார்கள்.
“நல்ல மார்க்கா? பர்ஸ்ட் மார்க்கா?. தயவு செஞ்சி ‘ கிளாஸ் ஃபர்ஸ்ட்’, ‘ஸ்கூல் ஃபர்ஸ்ட்’னு மக்கு மாதிரி உளறாதே., கிளாஸ் ஃபர்ஸ்ட்லாம் ஒரு மேட்டரா? டிஸ்டிரிக்ட்
பர்ஸ்ட், யூனிவர்ஸிட்டி பர்ஸ்ட் அப்படின்னா மட்டும் பேசு” அம்மாவே
இடித்துரைப்பாள்.
அதற்காகவே அவளும் அவள் தம்பியும் உரு போட்டுப் படித்தார்கள்.
ஒரு மார்க் குறைவாக வாங்கினாலும் ‘வாத்தியார் புள்ளை மக்கு’ங்கிற கதையா
இருக்கே..ன்னு சொல்வாள். வேதனைப்படுவாள்.
பிள்ளைகள் வேலை படிப்பு, படிப்பு தான் என சொல்லி கொடுத்து
வளர்க்கப்பட்டவள் அவள்.
பத்தாம் கிளாஸில் அம்மாவுக்கு பி.பி வந்து ஹாஸ்பிடலில்
சேர்க்கப்பட, அம்மாவை பார்க்க வந்த அவளுக்கு “இங்க என்னடி பண்றே? வீட்டுக்கு போய்
படி. நீ டிஸ்டிர்க்ட் ஃபர்ஸ்ட் வந்து உன் அத்தை மூஞ்சில கரியை பூசனும்” என அம்மா சொல்ல இவள்
வாழ்க்கையே வெறுத்து போனாள். அக்காளின் வழியையே பிள்ளையும் பின்பற்ற அந்த வீடே
வெறிச்சோடி போயிருந்தது. வளர் இளம்
பிள்ளைகள் இருக்கும் வீட்டுக்கே உண்டான குறும்பு, குதூகலம் தொலைத்து விட்டு அந்த
வீடு ஒரு அமைதியான நூலகமாக இருந்தது.
உறவினர்களுக்காகவே அந்த வீட்டின் இரு பிள்ளைகளும்
வளர்க்கப்பட்டார்கள்.
பாடப்புத்தகமே அறிவு என்கிற தவறான சித்தாந்தத்தில் அவர்கள்
போதிக்கப்பட, முதல் மார்க் மட்டுமே சந்தோஷம் என்ற நிலைக்கு ஆளானர்கள். அதில்
அதிகம் பாதிக்கப்பட்டது அவள் தான்.
தீபாவளிக்கு பட்டு தாவணி போட்டு வந்து அம்மாவிடம் காட்ட,
“போதும்., போதும் அலட்டுனது அரை பரீட்சை வருது. படிக்க போ” என துரத்தப்பட்டாள்.
அவளுக்கு தீபாவளியும்., பொங்கலும் மிக சாதாரணமாண நாள்களானது.
சுற்றிலும் வெடியும் மத்தாப்பும் வீடுகள் அல்லோகலப்பட., இவர்களின் வீடு மட்டும் ஆராவமின்றி
இருந்தது. தன் பிறந்த நாளில் பிதாகரஸ் தேற்றத்தினை உரு போட்டு படித்தது அவள்
மட்டும் தான்.
படிப்பு படிப்பு சகலமும் படிப்பு சதா எந்த நேரமும் படிப்பு..
அதற்கும் பலன் கிடைத்தது.
சிவா மூன்றாவது வந்த அதே ஆண்டு டென்த் டிஸ்டிரிக்ட்டில் ஐந்தாவது
வந்தாள் கணபதி வாத்தியார் மகள்.
வீடு முறைத்தது. ஏன் முதல் வரவில்லை? என கோபித்துக்கொண்டு
அம்மா சாப்பிடமல் போனாள்,
“அப்பா வேலை பாக்குறது கவர்மென்ட் ஸ்கூல் . அதுல என்ன பெரிய
கோச்சிங் இருக்க போவுது? அங்க படிக்கிற ஒரு பையன் மாவட்டத்துல மூனாவது வரான்.
உனக்கென்ன கேடு? ஒரு லட்ச ரூவா கட்றோம்.. மனுஷியாடி நீ?” அம்மா அவள் தொடையை வெடுக்கென
கிள்ள
“ அ அம்மா” அவள் அலறினாள்.
“பொட்ட பொண்ணா போயிட்டே..? அதான் விட்டு வைக்கறேன்” அப்பா உறுமினார்.. முறைத்தர்.
கவலையில் கூடுதலாக இரண்டு சிகரெட் பிடித்தார்.
அதே வாரத்தில், ஏழாம்
வகுப்பு படிக்கும் பிள்ளை கணிதத்தில் 90 வாங்க அப்பாவின் பெல்டால் அவனது முதுகு
தோல் உரிக்கப்பட்டது..
“அய்யோ மேத்ஸ் வாத்தியார் புள்ளை சென்டம் வாங்கலன்னா., இதை விட
அவமானம் உலகத்துல இல்ல’.. நான் தூக்கு மாட்டிக்கறேன்..” என அவர் ஸ்டூலை தேட.,
“அய்யோ. நான் இனிமே காசி , ராமேஸ்வரம், போறேன்’ என அம்மா நாடகம் போட
..அக்காளும் பிள்ளையும்., அழுதார்கள்.
“படிச்சி காட்றோம்மா.. சாண்ஸ் கொடும்மா” என கெஞ்சினார்கள்.
உலகில் அடிப்பதும் அவமானப்படுத்துவதும் மட்டும், சித்திரவதை
அல்ல, சந்தோஷத்தின் உச்சியில் இருக்க வேண்டிய பிள்ளைகளை நமது சுயலாபத்துக்காக
வளைப்பதும், அவர்களின் நேரத்தை பறிப்பதும் கூட பெரிய சித்திரவதை தான்.
அந்த வீட்டில், அந்த பிள்ளைகள் பெருமைக்காகவே வளர்க்கப்
பட்டார்கள். அலங்கரிக்கப்பட்டார்கள்.
அந்த பெண் எப்படியும் பிளஸ்
டூவில் மாவட்ட ஆட்சியர் கையால் கோல்ட் மெடல் வாங்க முடிவெடுத்தாள். சகலத்தையும்
துறந்தாள். அப்பா படு உக்கிரமானார். அரசுப்பள்ளியின், உதவி தலைமை ஆசிரியர்., வீட்டிலும் கடும்பணி ஆற்றினார். செட் டாப்
பாக்ஸ், டிவி, டிஷ் எல்லாம் ஓய்வெடுத்தன. செல்போன் தூர வீசப்பட்டன.
“ஸ்கூலுக்கு எல்லாம் ரெகுலரா போகனுமுனு அவசியமில்ல. வீட்டுலயே
இரு படி. நான் நாலு மணிக்கே வந்துடறேன் கிளாஸ் எடுக்கறேன்..”
வாத்தியார் ஸ்கூலுக்கு கட் அடித்து விட்டு வீடு வந்தார்., பிளஸ்
ஒன் பதிலா பிளஸ் டூ பாடத்தை சொல்லி கொடுத்தார்.,
“அய்யோ., பிளஸ் ஒன் படிக்கிற டைமுல., பிளஸ் டூ புக்ஸா?”
அம்மா ஆச்சரியய்பபட.,
“ஆமா., அவ ஸ்கூல்ல பிளஸ் ஒன் படிக்கட்டும். நான் பிளஸ் டூ சொல்லி
தரேன்.. டிஸ்டிரிக்ட் ஃபர்ஸ்ட் கன்பார்ம். யாருக்கும் தெரியக்கூடாது..” கணபதி தனது திட்டத்தை
விவரிக்க.,
“அய்யோ என் ராசா” அம்மா அவர் கன்னத்தை வழித்து திருஷ்டி கழித்தாள்.
ஒரு ஆண்டு வளரக்கூடிய நாட்டுக் கோழியை தவிர்த்து, நாப்பதே நாளில் முதிர்ச்சி அடையும் பிராய்லர்
கோழியாக தன் மகளை வார்த்தெடுக்க திட்டமிட்டார். வேலையை ஆரம்பித்தார்.
ஒரு படி விட்டு இன்னொரு படி தாண்டும் தவறான வேலையை அவளும் செய்ய
ஆரம்பித்தாள். பலன்? பிளஸ் ஒன்னில் சுமாரான மதிப்பெண். அம்மா கவலைப்பட,
“பரவாயில்ல . நம்ம எய்ம் பிளஸ் ஒன் இல்லை. பிளஸ் டூ தான்,. இது
ஒரு டிரயல் .. இந்த மெத்தர் ஒர்க் அவுட் ஆச்சின்னா.. நம்ம பையனுக்கும் இதே
மெத்தட்தான். அவன் ஒன்பதாவது படிக்கிறப்பவே., பத்தாம் கிளாஸ் பாடம் எடுக்க
வெச்சிடுவேன்”
அப்ப , எதற்கு ஒன்பதாம் வகுப்பு வைத்திருக்கிறார்கள்? என அந்த
அறிவு ஜீவியிடம் யாரும் கேட்கவே இல்லை.
பாகம் 34 ஐ இப்போதே முழுதும் படிக்க :
650 பக்கங்கள்
No comments:
Post a Comment