மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Wednesday, September 6, 2023

அனுமதிக்கப்பட்ட துரோகங்கள் : பாகம் 34 – எபிசோடு எண் : 4

வீணாவின் அபரதமான அழகையும் இளமையையும் பார்த்து எத்தனையோ பையன்கள் பெருமூச்சு விட்டாலும் கூட., இந்த இரண்டு பெண்களை ஏறெடுத்தும் பார்க்காமல் ஒருவன் இருந்தால் என்றால் ,

அவன் பெயர் சிவா .முழு பெயர் சிவக்குமார்.

அதே கல்லூரியில் எம்.எஸ்சி கணிதம் முடித்து மேத்ஸ் வாத்தியார் ஆகிவிட்டான். அவனது குடும்பம் பொள்ளாச்சி அருகே ஒரு கிராமத்தில் , மிக சாதாரணமான ஒரு விவசாய குடும்பம் .படிப்பதற்காக கோயமுத்தூரில் பெரியப்பா வீட்டில் தங்கி இருக்கிறான். பெரியப்பாவின் வீடு அத்தனை வசதியானது இல்லை . அவருக்கு பில்டிங்க் ரிப்பேர் & இண்டியர் பணி. சுமாரான வருமானம். சிவா தன் வீட்டில் தங்கி படிக்க தம்பியிடம்  காசு ஏதும் வாங்கவில்லை.

“ஏன்டா நானும் தான் ரெண்டு பெத்தேன். தத்தாரியா போச்சுங்க..இவனாச்சும் படிக்கட்டும்.. இவன் கையெழுத்தை பாத்தியா? அவ்ளோ அழகு… பெரியப்பா சிலாகித்தார்.

தம்பி மகன் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக அவர் தனது சக்திக்கு மீறி செலவு செய்து, வீட்டு மொட்டை மாடியில் ஒரு சிறிய தகர கொட்டகை அமைத்துக் கொடுத்திருந்தார்.

 தனது குடும்பத்தை முன்னேற்ற தனது படிப்பு எத்தனை முக்கியம் என்பதை தெரிந்து கொண்ட சிவா பேய்த்தனமாக படித்தான்.

படித்துக் கொண்டே இரு ., படிப்பு ஒன்று தான் உன்னை முன்னேற்றும்என அவனது பத்தாங் கிளாஸ் வாத்தியார் சொல்ல அதை அவன் ஒரேயடியாக கெட்டியாக பிடித்துக்கொண்டு அவன் படிப்பை தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் இருந்தான்.

“ஏண்டா உனக்கு வர வர மார்க் குறையுது?என கிளாஸ் வாத்தியார் கேட்க,

 “கணக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு சார் ., “

இங்க பார் சிவா. இந்த உலகத்துல எந்த பாடமும் கஷ்டமும் இல்லை படிக்க ஆரம்பிக்கிறப்ப அது உனக்கு கஷ்டமா இருக்கும்.  அந்த பாடத்தை தவிர வேறு எதையும் யோசிக்காதே .அப்பதான் அந்தப் பாடம் உனக்கு கைகூடும்என அவனது   கிளாஸ் வாத்தியார் சொல்ல., இதுவும் அவனுக்கு வேத வாக்கியமானது.

சிவா விழுந்து விழுந்து படித்தான். கஷ்டப்பட்டு படித்தவுடன்.. கடைசி நாள்களில், அவனது கணக்கு வாத்தியார் காசு வாங்காமல், ட்யூஷன் சொல்லி கொடுக்க., கணக்கு ஓரளவு அவன் கைக்கு வந்தது.

பொது தேர்வு முடிந்து பத்தாங்கிளாசில் மாவட்டத்தில் மூன்றாவவதாக இருந்தான். தலைமை ஆசிரியர் கண்கலங்கி அழுதார்.

“டேய் சின்ன ஊரு இது., நம்ம அரசு பள்ளி கூடத்தை எல்லாருக்கும் தெரிய வெச்சுட்டியே..

தேங்க்ஸ் சார்

சரி.. பதினெட்டு மார்க்ல பர்ஸ்ட் பிளேஸை உட்டுட்டியே.ப்பா.

“இ..இல்ல சார் .. மேத்ஸ்ல சென்டம் போட்டிருந்தா… முதல் வந்திருப்பேன்.

“ஆட ஆமா… மத்த பாடமெல்லாம் 90 க்கு மேல எடுத்திருக்கே

“யெஸ் சார்..

“ஸரி இரு.. ஏ எச் எம் சாரை கூப்பிடு…

ஆள்கள் பரபரத்து ஓட,.

அந்த ஒடிசலான தேகம்  உடைய கணபதி சார் ஓடி வந்தார்.

“சார் இவன். சிவா..சிவகுமர்

“தெரியும் சார்..

“இவனுக்கு பிளஸ் ஒன், பிளஸ் டூ ரென்டு வருஷமும் நீங்க தான் ஸ்பெஷல் கோச். .ஸ்பெஷல்லி மேத்ஸ்க்கு

“யெஸ் சார்..

“இவன் புராகிரஸை பாத்து., மாசம் ஒரு ரிப்போர்ட் கொடுங்க… இவன் ரொம்ப ரேர் ஸ்ட்டுடன்ட்,. யூஸ் ஹிம்… ஸ்கூல் உங்களுக்கு ஒரு அமௌன்ட் கொடுக்கும்.. ஓகே?“

“யெஸ் சார்.. இவனோட அரையாண்டு பேப்பர் தமிழ் செகண்ட் பேப்பர் எங்கிட்டதான் கரெக்ஷ்ன்,  வந்தது சார்..ஆடி போயிட்டேன்.. மொத்தம்  நாலு  கட்டுரை எழுதி இருக்கான்,,  எல்லாமே சூப்பர் சார் . செம்மை கிரியேட்டர்..

“ ஓ ஐ சீ….. எல்லாரும் மகிழ்ந்த்தார்கள். தினமும் 4 டூ 6 சிவா., தன் ஏச் எச் எம் கணபதி வீட்டுக்கு போய் படித்தான் .

“ஸார் உங்களுக்கு சிரமமா இல்லையா?

“ஏன்?

இல்ல., ஸ்கூல் முடிச்சுட்டு வீட்டுக்கு போயி திரும்ப அங்க இன்னொரு வேலையா இருக்குமே? சக வாத்தியார் கேட்க,.

“அட போய்யா ஓய்..வீட்டுல என் பொண்ணும் இதே பாடம் தானே.. இவனுக்கு தனியாவா சொல்லி கொடுக்க போறேன்?. நெல்லுக்கு இறைக்கற தண்ணி, புல்லுக்கும் போகட்டுமே? என்ன?’’ என்றார்.

ஆனால் அவருக்கு நெல் எது? புல் என்று தான் தெரியாமல் இருந்தது.

அந்த சிறுத்தை கணபதி சாரின் வீட்டுக்கு போன போது அங்கே அவன் வயதில் அவன் வகுப்பு பயிலும் ஒரு மருண்ட மான் இருந்தது ., அதன் அழகும் வனப்பும்  இளமைச் செருக்கும், அந்த சிறுத்தையை அசைக்க கூடவில்லை.

அந்த பெண்ணுக்கு தன் அழகின் மீது சந்தேகம் வந்தது.,

 


பாகம் 34 ஐ இப்போதே முழுதும் படிக்க : 

650 பக்கங்கள்


No comments:

Post a Comment