மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, September 7, 2023

அனுமதிக்கப்பட்ட துரோகங்கள் : பாகம் 34 – எபிசோடு எண் : 6

 அவரது உள்மனம் வேறாக இருந்தது.

‘என் பொண்னு முதல்ல வந்தா என்னா? என் கிட்ட படிக்கிற பையன் வந்தா என்ன? எனக்கு எல்லாம் சந்தோஷம்தான்  என வெளியே பீற்றிக் கொண்டு, உள்ளே குமைந்தார்.

அவனை வரவழைத்து பேசினார். அவன் படிக்கும் ஸ்டைலை கேட்டு வியந்தார்.

“அடிக்கடி படிக்கறது தப்பு., ஒன்னையே படிச்சிகிட்டு இருக்காதே.. பலதும் படின்னு சொல்வார் சார் எங்க பெரியப்பா..

அது சரிடா.. எப்படி 85 கட்டுரையை மனப்பாடம் பண்றே?

“ஆஅஹஹஹ யாராச்சும் 85 கட்டுரையை படிக்க முடியுமா சார்?

பின்னே?

“கட்டுரை எழுத சொல்றது நம்மளை மனப்பாடம் பண்ணி எழுத வைக்க இல்ல சார்.. நாம  கிரியேட்டிவை வளர்க்க சார்..நீங்க சப்ஜெக்ட் சொன்னா., நான் எந்த கட்டுரையும் எழுதுவேன் சார்..

மாணவன் ஆசிரியனை செருப்பால் அடித்தான்.

அவன் கட்டுரை, கவிதை எல்லாம் எழுதினான்.

நாட்டுபுற நாய்க்கு  அறிவை பாத்தியா? அவர் புழுங்கினார். அவன் உலக அரசியல், பண்டைய தமிழர்., சே குவாரா, யூத அரசியல் , எண்ணெய் வர்த்தகம் பேசினான். சீனா ஏன் இலங்கைக்கு ஹெல்ப் பண்ணுதுன்னு பத்து நிமிடம் சொன்னான்.

“சரிடா இதெல்லாம்., எங்கடா படிக்கிறே?

“லைப்ரரில..சார்

நம்ம  லைப்ரரிலயா?

“ நாசமா போச்சு..,  நம்ம  லைப்ரரில என்ன புக்கு சார் இருக்கு? ..இன்னும் குழந்தைங்க காமிக்ஸ், சிறுவர் உலகம், வாங்கி வெக்குறாங்க., நான் சொன்னது பப்ளிக் லைப்ரரில., அப்புறம் நெட்டுல நிறைய  இங்க்லீஷ் ஆர்டிக்கிள் இருக்கு சார்.. ஒன்னு விடாம படிப்பேன்..இவன் விசேஷமானவன்,

‘சரி எப்ப தான் படிப்பே?

“எப்ப ப்ரீயா இருப்பேனோ அப்போ?

“ப்ரீயா இருப்பியா? வேறெங்க போவே?

“பெரியப்பா எங்கனாச்சும் வெளிய பர்னிச்சர் வேலைக்கு கூட்டி போவாரு சார்.. அவர் கூட ஒத்தாசைக்கு வேலைக்கு போவேன்…

அவர் அயர்ந்து போனார்.

“அப்ப படிப்புக்குனு என்ன டைம் ஒதுக்குவே?

“சார் அப்படியெல்லாம் டைம் டேபிள் போட்டு படிக்க மாட்டேன் சார்.. அம்மா கிட்ட பேச., அண்ணா கூட பேச டைம் டேபிளா போடுவோம்?. படிப்பும் ஒரு உறவு  மாதிரி தானே சார். .எப்ப தோனுதோ அப்ப கையில் புக்கு இருக்கும் சார்..

அறியா பிள்ளை சிவா., கணபதியை  கலங்கடித்தான்.

அவனை வாரி அணைத்து கொள்ள நினைத்தார்.  அவரது கண்டிப்பான வெளி உலக மிடுக்கு அதை தடுக்க.,

“அதுக்கில்லப்பா.., கணக்கெல்லாம் பத்து முறை போட்டு பாக்கணுமில்ல?

“ஏன் சார் பத்து முறை? எனக்கு ஒன் டைம் சொல்லி கொடுத்தா போதும் சார். ஆனா ஸ்கூல்ல சரியா எனக்கு சொல்லி கொடுக்கல சார்..

அவன் மீது அவருக்கு ஏனோ பொறாமை குறைந்தது.

“சரி பயப்படாதே.. நான் உனக்கு சொல்லி தரேன்

அவர்  பாடத்தை நேர்மையாக சொல்லி தந்தார். ஒருவேளை முதலாவதாக வந்தால், டிவி பேட்டியில நம்ம பேரை இவன் சொன்னால் போதும் ‘ என நினைத்தார்.

அவர் சாப்பிட்ட உணவில் ஏதோ ஒரு நல்ல உணவு செரிமாணம் அவரது ரத்தத்தையும், சித்தத்தையும் சுத்தம் செய்து தூய்மை ஆக்கியது. ஒரே பாடத்தை மகளுக்கும், மாணவனுக்கும் வஞ்சனை இல்லாமல் சொல்லித் தந்தார். அவன் மீது காழ்ப்பில்லாமல் நடந்து கொண்டார்.

நல்ல அறிவா , பண்பான பையன் அருகே இருந்தால் அது தனது மகளுக்கும், மகனுக்கும் பயன்படும் என நினைத்தார்.

என்ன தான் மாணவன் மீது  நம்பிக்கை இருந்தாலும், மகளின் மீதான பாசம் அடிக்கடி ஓவர்டேக் செய்யத்தான் செய்தது.

“ஒன்று மகள் முதல் வருவாள்., இல்லை  சிவா முதல் வருவான் அவர் மனைவியிடம் அடித்து ஆருடம் சொன்னார்.

ஆனால் மகளின் மீதான தவறான கல்வி முறை அவளை சீர்குலைத்தது.

 

ஆம்.. கணபதி வாத்தியாரின் மாணவன் சிவா 12 ஆம் வகுப்பு தேர்வில் மாவட்டத்தின் முதல் மாணவன் ஆனான் சிவா.. அந்த அரசு பள்ளி வரலாறில் 200க்கு 200 வாங்கிய ஒரே ஆள் என்ற பெயரைப் பெற்றான்.

அவனது புகைப்படம் தினத்தந்தியின் எல்லா பதிப்புகளிலும் வெளியாக அவன் ஒரே நாளில் பிரபலமானான். அவனை ஒரு தெம்மாங்கு, கால்குலேட்டர் என்றெல்லாம் கிண்டல் செய்தவர்கள்எனக்கு அப்பவே தெரியும், அவன் மிகப் பெரிய படிப்பாளி” என புகழ் ஆரம்பித்தார்கள்.

ஆனால் கணபதி வாத்தியாரின் மகள்?

அவள் மாவட்டத்தில் முதல்  நூறில் கூட இல்லை. வீடு அதிர்ச்சியானது.

சரி அவள் அவள் என்கிறோமே..  அவளுக்கு பெயர் இல்லையா? அவள் பெயர் நந்தினி.. அது வீட்டுப் பெயர் .

ஆனால் ,பள்ளியில் அவள் மிருதுளா.



பாகம் 34 ஐ இப்போதே முழுதும் படிக்க : 

650 பக்கங்கள்


No comments:

Post a Comment