பெங்களூரில்..,
பெரியப்பா கிரான்டனி மாளிகை
போய் காரில் வேகமாக இறங்கினார்.
கார்கள் பிரேக் இடிக்கும் கிரீச் சத்தம் அந்த மாளிகையில் ஆளை கலவரப்படுத்தும்
அமானுஷ்ய சத்த்த்தால்
கிரான்டனி மாளிகை வாசலில் அழுது
கொண்டிருந்த ஹரீஷை பிடித்து செவுளில் அறைந்தார். அவனது
பிரத்யேக பாதுகாவலர்கள் பார்த்து
கொண்டிருக்க ., அவர்கள் எதிரில் அந்த அரிதான
சம்பவம் நடக்க .,
“என்னாடா பண்ணி வெச்சிருக்கே.. நாயே., ” அவன்
சட்டையை பிடித்து உலுக்கினார்.
‘அய்யோ… பெரியப்பா.. நான்
இல்ல பெரியப்பா”
“என்
கன்னு முன்ன நிக்காதே… இனிமே உன்னை. பெங்களூர்ல நான் பாக்க கூடாது.. கிரான்டனிக்கும்
உனக்கும் சம்பந்தமில்ல’ன்னு எழுதி கொடுத்துட்டு ஓடுடா
நாயே”
அவன் பொத்தென அவர் காலில்
விழுந்தான்.
“பெரியப்பா
..யார்.. எதுக்குன்னு
தெரியாது..? உண்மை
தெரியாம நீங்க.., என்னை
போய்..” அவன்
அலற,.
“அப்ப
இங்க என்னடா மயிர புடுங்க்கிட்டுருக்கே? ஓசூர்
போவாம?”
“அய்யோ ., என
தம்பிப்பா அவன்.. அவனை போயி…”அவன்
முகத்திலடித்து அழுதான்.
“ நம்புங்க
பெரியப்பா.... எனக்கு
இனிமே இந்த கம்பெனி கூட வேனாம் . இந்த பழி
மட்டும் போடாதீங்க”
“டேற்ய்ய்ய்ய்
.. இன்வேஸ்டிகேஷன் போய்
கிட்டிருக்கு.. பாத்துடறேன்டா… பேரு
வெளிய வரட்டும், எவனா இருந்தாலும் உசுரோட
எரிச்சிடறேன்.. ஹேய்ய் கண்ணன் எங்கடா?” கிராண்டனி பங்களாவின் தலைமை
செக்யூரிட்டி அதிகாரியை பார்த்து கேட்க.,
“சார்
அவர் லொகெஷன்.. ஹோசூர் கிட்ட காட்டுது சார்” அந்த அதிகாரி
பணிவாய் சொல்ல.,
ஹரீஷை ஒரு முறை முறைத்து விட்டு., அவர்
காரில் ஏறீ..,ஓசூர்க்கு போடா” என்றார்
டிரைவரிடம். ‘கமிஷனர்க்கு
போனை போடு’ என்றார் உதவியாளரிடம்
அவர்
போனவுடன்., அவர் பின்னாலேயே., ஹரீஷும்
பவித்ராவுடன் காரில் போனான். முன்னாலும் பின்னாலும் எஸ்
கார்ட்ஸ் வாகனங்கள் புறப்பட,. தனி காரில் தானே டிரைவ்
செய்தபடி காரை ஓட்டினான் . அழுது கொண்டே வண்டி ஓட்டினான்.
“சரி
அழாதீங்க.. ஒன்னும் ஆகாது” பவி
சொல்ல.,
“என்
தம்பிடி..அவண்”
“இப்ப
சொல்லுங்க.. நான்
தான் அவரை வரவழைச்சி சீக்கிரம் ஜே எம் டி ஆக்குங்கன்னு தலை தலையா அடிச்சிகிட்டேன். எங்கப்பான்
பேச்சை கேட்டு, இப்ப பாருங்க….ம் “ அவளும்
அழுதாள்.
“அய்யோ
கடவுளே சுரேஷ். என்ன ஆச்சுடா.. யார்டா
இப்படி பண்னா? “ ஹரிஷ்
அரிதாக அழுதான். அவன் அழுகையும் அவளுக்கு
வியப்பாக இருந்தது.
“டிவில
என்னமோ சொல்றானே? .. ஏதோ
மங்களூர் ., ஹோட்டல்ல ஆறு மாசத்துக்கு
முன்னாடி சுரேஷ்க்கும்
இவனுங்களுக்கும் நடந்த சன்டைல தான்., இப்படி
ஆகி போச்சுன்னு சொல்றாங்க., நாம
கூட அந்த கல்யாணத்துக்கு மங்களூருக்கு போயிருந்தோமே. அது
பத்தி உனக்கு தெரியுமா? “ ஹரீஷ்
அழுது கொண்டே கேட்க.,
பவித்ரா
திடுக்கிட்டாள்.. சுரேஷ் அந்த ஹோட்டலில் தன்
கற்பை காப்பாற்றியவன் அல்லவா? இந்த
ஹரீஷ் பாரில் குடித்து விட்டு மயங்க்கி
கிடந்தான். சுரேஷ் மட்டும் இல்லயென்றால்
அந்த மூனு பேரும் என்னை.. ‘
அவள்
பதில் ஏதும் சொல்லாமல் அழுதாள்.
No comments:
Post a Comment