மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Monday, May 1, 2023

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 32 Episode No. 2052 ( திபூவை இறுதி பாகம்)

 

இன்று சுரேஷ் ஞாயிற்று கிழமை காலையிலேயே ஒரு வேனில் பெட்டி படுக்கையோடு ஏறப் போக ,.அதை கொஞ்சம் கூட எதிர்பாராத இந்த கூலிப்படை உடனுக்குடன் தகவல்களை பரிமாறிக் கொண்டு அவரைப் பின்தொடர்ந்தார்கள்.

ஆனால் சுரேஷ் ஒரு வேனில் ஏறி அந்த மலர் குடும்பத்துடன் பூந்தமல்லி பெங்களூர் சாலையில் பயணிக்க சென்னையில் வைத்துக் கொள்வது உசிதம் இல்லை என்பதால் அந்த ஆம்னி வேனின் பின்னாலயே தொடர்ந்தார்கள்.

கிண்டியில் தங்கி இருந்த கூலிப்படை போரூரில் போய் சிபுவின் டவேரா காரில் போய் ஏறி கொண்டது . தப்பான நம்பர் பிளேட் உடைய டெம்போவும் பின் தொடர்ந்த்து. 

டெம்போ டிரைவரையும் ஸேர்த்து இப்போது 5 பேர்,. கையில் போதுமான ஆயுதம் இருக்க., அவர்கள் சென்னையின் எல்லை தாண்ட காத்திருந்தார்கள். சீரான இடைவெளி விட்டு சுரேஷின் வேன் பின் தொடர்ப்பட்டது.

ஆனால் வேன்., பெங்களூரை நோக்கி போக., லிங்கப்பாவுக்கு தக்வல் கொடுத்தார்கள்.

 

நோ.. நோ.. அவன் பெங்களூர் வர மாட்டான்,., மேபி.. அந்த ஃபேமிலி கூட எங்காவது கெஸ்ட் ஹவுஸ்,. பிக்னிக் இல்லன்னா கோயில் போகலாம். குளோசா பாலோ பண்னுங்க..ஹைவேஸ் காலியாய் இருந்தா., போட்டுடுங்க.. அவன் உடம்பு மிஞ்ச கூடாதுஎன்றார்.

பெங்களூரு ஹைவேஸை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால், அதிலும் பல சிக்கல்கள் இருந்தன.

டோல்கேட், சிசிடிவி கேமரா போன்ற கண்காணிப்பு விஷயங்களுக்காக அவர்கள் இன்னும் தங்களது செயலை நிறைவேற்றாமல் இருந்தார்கள்

லிங்கப்பாதான் தொடர்ந்து போன் செய்து கொண்டே இருந்தார்.

வேன் வேலூர், ஆம்பூர், கிருஷ்ணகிரி என வர லிங்கப்பா மாற்றி யோசித்தார்.

டேய்ய்ய் இனிமே அந்த டெம்போ வேனாம், கட் பண்னி அனுப்பு

ஏன் சார்

ஆக்சிடென்ட் செட்டப் இனிமே ஒத்து வராது., அவன் வேன் கர் நாடாகா வரட்டும். அந்த வேணை மடக்கி வழிபறி பண்றாப்பல பண்ணி அவனை போட்டுடுங்கஅவனை மட்டும் போட்டா அது பெரிய சிக்கல் ஆயிடும். எல்லாருக்கும் டவுட் வரும். கூட ஒன்னு ரென்டு  பேரை சேத்து போடுங்க

யெஸ் சார்

பார்த்து, சரியாக பிளான் பண்ணுங்க முடிஞ்ச வரைக்கும் அவன் கூட வந்தவர்களுக்கும் காயம் இருக்கட்டும். நகை பணத்துக்காக ,கொள்ளை அடிச்சா போல பிளான் பண்ணிடுங்க

அந்த வேனை மடக்கி எல்லோரிடமும் நகைக பணத்தை ராப்பரி பண்றப்ப , கண்டிப்பாக சுரேஷ் எகிறிகிட்டு வருவான். அதை சாக்காக வைத்து அவனைக் கொன்றுவிட வேண்டும் என ஒரு அவசர திட்டம் தீட்டி விட்டார்கள்.

வண்டி ஓசூரை தாண்டி நெடுஞ்சாலையிலிருந்து விலகி இடது புறம் செல்ல ..

பானசங்கரி கோயில் எல்லை உங்களை வரவேற்கிறது என தமிழிலும் கன்னடத்திலும் எழுதி இருக்க.

லிங்கபாவுக்கு விஷயத்தை சொன்னார்கள்.

ஆஅமா அவங்க குல தெய்வம் அங்க இருக்கு., பட், அந்த ஃபேமிலி  ஏன் அங்க போகுதுன்னு தெரியல.,எவ்ளோ தூரம் அது? “

சார் ஹைவேஸ்லயிருந்து கோயில் 19 கிலோ மீட்டர்.”

ஓகே அப்ப நடுவுல வெச்சி மடக்குங்க. அங்கெல்லாம் னடமாட்டம் கம்மியாத்தான் ஒய்ருக்கும், நியூஸ்க்கு காத்துகிட்டிருக்கேன்

லிங்கப்பா போனை வைத்தார்.

இன்றோடு கதை முடிஞ்சி  போச்சு. சுரேஷின் கதை. இனி மருமகன் ஹரீஷ் தான். நான் தான்.. இது ஹரீஷ்க்கு சர்ப்ரைஸ். எதுக்கு சென்னை போயி அதை படி, இதை படின்னு  சொல்லி சவ்வு மாதிரி இழுக்கனும். ஒரே ஒரு ஆக்சிடென்ட்..,மர்கயா

அந்த ஏ எல் எஃப் குரூப்புக்கு சுரேஷ் மருமகனாகிட்டா. நிவேதாவை சுரெஶ் கட்டிகிட்டா , அப்புறம் நாம தான் அவங்களுக்கு கார் கதவு திறந்து விடனும் இந்த கல்யாணம் நடக்க கூடாது, ஒரே கல்லூல மூனு மாங்கா..

அவர் சிபு சொல்லப் போகும் வெற்றி செய்திக்காக காத்திருந்தார்.

 

சுரேஷின் வேன் பானசங்கரி கோயிலை நோக்கி 40 கி.மீ வேகத்தில் செல்ல ,.

இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்? என  கூலிப்படையில் ஒருவன் கேட்க,

எப்படியும் ஒரு முக்கா மணி நேரம் டிராவல் இருக்கும். எனக்கு தெரிஞ்சி இப்போ எதுவும் பண்ண முடியாது. அவன் கோயிலுக்கு போயிட்டு வரட்டும். என்று காத்திருக்கலாமா ?” என்றான்.

நோ நோ அப்புறம் சிச்சுவேஷன் எப்படி இருக்குன்னு சொல்ல முடியாது. இப்பவே மடக்கலாம்.” என இன்னொருத்தன் சொல்ல சுரேஷ் சென்ற வேனை 30 மீட்டர் இடைவெளி விட்டு தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்கள்.

கொஞ்சம் ஸ்லோவா போ..கேப் விட்டு ஃபாலோ பண்ணுஏதாச்சும் டர்னிங்க் வரப்ப வண்டியை மடக்கலாம்சிலுவை சென்ற கார் இன்னும் தனது வேகத்தை குறைக்க., அதான் தப்பாய் போய் விட்டது.

அவர்கள் போன சாலையின் குறுக்கே வேறொரு இணைப்பு சாலையில்  இருந்து வந்த 3 கல்லூரி பேருந்துகள் அந்த இடைவெளியில் நுழைந்து விட்டன. சுரேஷின் வேனுக்கு பாதுகாப்பாக பின் தொடர.,

ச்சேதப்பு பண்ணிட்டோம்…” நொந்து கொண்டனர். கல்லூரி கும்பல் ஓவென கத்தி கொண்டே அவர்களை தாண்டி போனது.

 

அந்த சாலையில் அவர்களால் ஒருபோதும் அந்த பேருந்தை ஓவர் டேக் செய்து சுரேஷின் வேனை நெருங்க முடியவில்லை.

மச்சி இவன் தப்பிச்சுகிட்டே இருக்கான்பா

இனிமே அவன் தப்பிக்க முடியாது.,” சிபு தீர்க்கமாய் சொன்னான்.

 

No comments:

Post a Comment