மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, June 3, 2022

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1764

 

சம்பத்து  மேடை ஏறும்போது..,

"போறாம்பா மங்குனி மடையன்" யாரோ சொல்ல ., அவன் திரும்பி  பார்த்து நிற்க..,

யார் யார்? அட இந்த மரிக்கொழுந்து வாசம் ஏன் இப்படி அடிக்குது எம் மேல..தூத்தெறீக்க

"ஏம்பா? நிக்குறே.? தலைவர் கூப்பிடறார் வா" கையை பிடித்து இழுத்தார்கள்.

'சப்பானி சம்பத்து' காதுக்கு நெருக்கமாய் யாரோ கூப்பிடார்கள்.

யார்? யார்? திரும்பி திரும்பி அவன் தலையை ஆட்டி பார்க்க. அவன் செய்கை பார்ப்போருக்கு வினோதமாக இருக்க.,

"யோவ்வ் என்னய்யா  பண்னிகிட்டு இருக்கே? லூசு மாதிரி" லோக்கல் ஆள் கத்த.,

"யோவ்வ்......, லூசு கீசுன்னா செருப்பு பிஞ்ச்சுகிடும்"

அவனை சமாதானப்படுத்தி பின்னால் கூட்டி போனார்கள்.

"குடிச்சிருக்கான் தலைவரே.. " போட்டு கொடுத்தார்கள்.

அவன் முறை வர., " பேச சொல்லலாமா?' தலைவரிடம் கேட்டார்கள்.

"பேசட்டும்., பேசுவான்ல?"

"சொதப்பிட போவுது.,கவனம்"

அவனை பேச கூப்பிட்டார்கள்.

எப்போதுமே அவன் ஆவலாய் மைக்கை தேடி போவான். இப்போது அவனிடம் இருந்தது பயம் நடுக்கம் மட்டுமே., சப்பானி சம்பத்து' .,சப்பானி சம்பத்து' ., குரல் கேட்டு கொண்டே இருந்தது

அவன் மைக் அருகே போக.. இந்த மரிக்கொழுந்து வாசனை..ச்சே இத்தனை பெரிய திறந்தவெளி அரங்கத்தில் மரிக்கொழுந்தை  கொட்டியவன் யார்?அவன் மனம் குழப்பமாக இருந்தது. புத்தியில் கோர்வை இல்லை.

"மான்புமிகு தலைவர் அவர்களே.., நான். ஹலோ சம்பத் பேசுகிறேன் எப்படி இருக்கீங்க ?..ஹலோ மதுரை....வணக்கம் மதுரை..." என்னென்னமோ உளரினான்.

"வரப்ப பாத்தேன் நிறைய ஜனங்க...லைட்டு..எல்லாம் போட்டிருக்கீங்க. ..பச்சை., மஞ்சள்.. மஞ்சள்னா நிக்கனும்..ரெட் ஸ்டாப்... கிரீன் மட்டும் விழாது....எங்க கட்சியில எல்லா கலரும் இருக்கு., இதுவே நீங்க செஞ்சா தப்பு.. நாங்க செஞ்சா சரி... ' அவன்  என்ன பேசுகிறொம் என்பதே தெரியாமல் சம்பந்தம் சம்பந்தமில்லாமல் பேசினான்..

அழகு தமிழில்  கம்பீர குரலில் சம்பத்தின் வீரவுரையை எதிர் பார்த்திருந்த  கூட்டம் தலையில் அடித்து கொண்டது.,

நிறைய பேர் கவலைப்பட்டார்கள். தலைவர் முகம் இருண்டது , அவனை நிறுத்த சொன்னார்.

அன்றுமுதல் சம்பத் குரல் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியது,

சென்னையில் இன்னும் கூட்டங்களில் பேசினான். ஆனால் எடுபடவில்லை. அவனிடம் கோர்வையாக பேச்சே இல்லை. எதுவும் நினைவில்லை.. எல்லவற்ரையும் உளறினான்.. அடிக்கடி நோய்வாய்பட்டான். புத்தி சீராகவில்லை. உணவும் ஜீரனமாக வில்லை. அதன் பின் கட்சியில் அவன் இடம் சற்குணத்துக்கு வந்தது. சற்குணத்துக்கு சீட் கிடைத்தது. யாருக்கும் சந்தேகமே வரவில்லை. சோகமாக பொறுப்பேற்றான்.

சற்குனம் சந்தோஷமானான்...

No comments:

Post a Comment