மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Sunday, April 17, 2022

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 27 - 1723

 அடுத்து வந்த நாட்களில் மலர்விழிக்கு டைரி எழுத நேரமில்லை, முகநூலில் பதிவு போட நேரமில்லை, புதுக்கவிதை நூல்கள் எழுத நேரமில்லை, கம்ப்யூட்டர் சென்டருக்கு போக பிடிக்கவில்லை , அம்மாவிடம், சித்தியிடம், சஞ்சனாவிடம் பேச நேரமில்லை..


அவள் சுரேஷ்ஷையே கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்தாள். அவனுக்காக உருகினாள். அவர்கள் ஊர் ஊராக சுற்றினார்கள். தியேட்டர் ,மால் என இளம் காதலர்கள் போல திரிந்தார்கள். இந்த உலகையே வென்றது போல் மலர்விழி சந்தோஷத்தில் ஜொலித்தாள் .அவளது உயிர் உடல் ஆவி எல்லாம் சுரேஷ் சுரேஷ் என்று கதறியது .அம்மா வீட்டில் இருந்தால்,  சுரேஷ்சை ரகசியமாக ஆபீசுக்கு வரவழைத்தாள். அம்மா வீட்டில் இல்லை என்றால் அவனை தன் அறைக்கு அழைத்து வந்தாள்.


 இத்தனை ஆண்டுகாலம் அவள் எதையெல்லாம் தவற விட்டாளோ  அதை எல்லாம் சுரேஷிடம் கேட்டு கேட்டு பெற்றாள்.  சுரேஷ் அந்த குடும்பத்தில் ஒருவனாகினான்.


அவனை தங்கை சஞ்சனா வீட்டிற்கும் கூட அடிக்கடி அழைத்து சென்றாள். சஞ்சனாவும் அம்மா கேட்ட அதே கேள்விகளை மலர்விழிடம் கேட்டாள்.


"மலர் செம்மை ஹாண்ட்சம்மா இருக்கான். பையன்..நைஸ் லுக்..."


'ச்சி சும்மா இருடி..."


'அய்யோ கடிச்சி தின்னுடலாம் போல இருக்கான்..வெள்ளரிக்கா மாதிரி... என்ன புரப்போஸ் பண்ணிட்டியா?'


"போடி லூசு...."


" அவன கூட்டிகிட்டு சுத்திகிட்டே இருந்தா எப்படி?  புடிச்சிருந்தா கட்டிக்க வேண்டியதுதானே . ஸ்டூடன்னு யோசிக்கிறீயா? பாக்க மெச்சூர்டா இருக்கான்... குழந்தங்களை கூட ரொம்ப பாசமா பாத்துக்கறான்.. உன்னை கூட பாத்துப்பான்..."


"கல்யாணம்லாம் நான் யோசிக்கலடி.... "


"அப்புறம் ஓசியிலேயே சாப்பிட்டுவிட்டு போய்ட போறான்..." என சஞ்சனா சொல்ல


"ஹெய்ய்ய்  அவன் சாப்பிட்டான் அப்படின்னு யார் சொன்னது?"


" பின்னே ?"


" நா  நான் தாண்டி சாப்பிடுறேன் " என சொன்னாள்.


"அட  வெட்கங்கெட்ட அக்கா "


மலர் வெட்கப்பட,  நீண்ட நாள் கழித்து மலர்விழியின் முகத்தில் தெரிந்த மினுமினுப்பும்  குதூகலமும் பூரிப்பும் பார்த்து சஞ்சனா அதிசய பட்டாள்.


 இத்தனை நாள் மூடிக்கிடந்த இவ்வளவு மன்மத கதவுகளை உடைத்து உள்ளே புகுந்த சுரேஷின் ஆளுமை குறித்து  ஆச்சரியப்பட்ட படியே.. கல்லையே  கரெக்ட் செய்து  கரைத்து விட்டானே அவனுக்காக இவளை  ஏங்க வைத்து விட்டானே பொல்லாத ராஸ்கல்..'  என எண்ணி ஆதங்ககப்பட்டாள்.


"சரி இப்ப  என்னதான் முடிவு பண்ணி இருக்க?"


" நான் எதுவும் முடிவு பண்ணல.  எதுவும் நம்ம கையில இல்ல. அந்த பையனை வளைச்சு போட எங்க சென்டர்ல எத்தனையோ பொண்ணுங்க  அலையறாளுங்க.. அவங்க யாருக்கும் கிடைக்காமல் அவன் எனக்கு கிடைச்சுருக்கான்.  இது நான் ப்ளான் பண்ணியா கிடைச்சது ? நெவர். எனக்கு எது எது நடக்க வேண்டுமோ அது நடக்கட்டும்.  போற வரைக்கும் போகட்டும் . ஓடர வரைகும் ஓடட்டும்.. அவனை கல்யாணம், குடும்பம்னு அவன் மேலவிழுந்து பிடுங்க எனக்கு மனசில்லை.. என்ன தான் இருந்தாலும் அவனுக்கு நான் செகண்ட் ஹான்....."


"வாயை மூடு மலர்.."


அவள் வாயை பொத்தினாள் சஞ்சனா... "பர்ஸ்ட் ஹாண்ட் சரியில்லன்னா நாம என்ன பண்ண?'


ஆனால், மலர்விழி  சுரேஶின் மீதான அனுகுமுறை மீது தெளிவாக இருந்தாள். எந்த சூழ்னிலையிலும் அவனை இழக்க அவள் தயாராக இல்லை. சுரேஷ் சஞ்சனாவிடமும், மலர்விழியின் சித்தி சுஜாதாவிடம் கூட இனிமையாக பழகினான்.  ஆனால் சஞ்சனாவின் கணவனுக்கு மட்டும் இது சரியாக படவில்லை.


" என்னடி இது உங்க அக்கா கல்யாணம் பண்ணிக்காம ஒரு பையன் கூட சுத்திட்டு இருக்கா.  நம்ம வீட்டுக்கு வேற  கூட்டிட்டு வரா.." என ஆரம்பிக்க


"சும்மா இருங்க அவன் யார் தெரியுமா? கிராண்டி ப்ராஜெக்ட் எம்டி பெரிய மல்டி மில்லியனர்.. ஜஸ்ட் அவங்க ப்ரண்ட் தான்.. ரொம்ப நல்ல டைப்...வெல்விஷர்"


அவனது பின்னணி பற்றி சஞ்சனா  சொல்ல அவன் வாயடைத்துப் போனான். " என் இன்சூரன்ஸ் பிசினஸ்க்கு ஏதாச்சும் லீட் கிடைக்கும்.. எனக்கு ஒரு இண்ட்ரோ கொடு"  என்றான் அவளும் கொடுத்தாள்.  அவனும் சினேகமாக சஞ்சனாவின் குழந்தைகளும் சுரேஷுடன் நெருக்கமானார்கள்.


இரு குடும்பமும் சந்தோஷத்தில் திக்குமுக்காடியது.  ஒரு நிஜமான ஆதரவான வலிமையான ஆண் கரத்தில் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக அந்த எல்லா பெண்களுமே நம்பினார்கள் .  சுரேஷ்க்கும் உணர்வு பூர்வமாக ஒரு குடும்பம் கிடைத்ததாக மகிழ்ந்தான்.


எவ்வளவுதான் ஒரு குடும்பத்தில் சந்தோஷமும் பரஸ்பர நம்பிக்கையும் இருந்தாலும் காலங்களும் நேரமும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அதனால்தான் நமது வாழ்க்கை பல திருப்பங்களும் குழப்பங்களையும் அவ்வப்போது சந்தித்து கொண்டு நகர்கிறது.


 அதனால் தான் வாழ்க்கை பல சமயங்களில் இனிப்பாகவும் ,சில சமயங்களில் கசப்பாகவும் இருக்கிறது.  சுஜாதா,  சஞ்சனா குடும்பத்திற்கும் அப்படித்தான் நடந்தது ,அதற்கு காரணம் சஞ்சனாவின் முதல் குழந்தை வர்ஷா . வர்ஷாவுக்கு உண்டான  பிரச்சினை , அந்த பிரச்சினையை தீர்க்க போன இடத்தில் உண்டான பிரச்சனை,  அந்த பிரச்சனையை சரிசெய்ய முயலும் போது உண்டான புதிய பிரச்சனை,  புதிய மனிதர்கள், அவர்களின் தொல்லைகள்.


நாம் சந்தோஷத்தின் உச்சியில் இருக்கும்போது இப்படியே இருந்து விடக் கூடாதா இப்படியே இருந்து விடக் கூடாதா என நினைப்போம்.  ஆனால் வாழ்க்கை நம்மை இப்படியே இருந்து விட ஒரு போதும் அனுமதிக்காது இவர்களையும் அப்படி அனுமதிக்கவில்லை . அது கெட்டதையும் கொடுத்தது நல்லதையும் கொடுத்தது. சில நேரங்களில் சந்தோஷம் பறி போக சில நேரங்களில் கற்பும்......

(பாகம் 27 முடிந்தது )


5 comments:

  1. இனி பாகம் 28 இல் பயங்கரமான ஓரு Invisible வில்லன் வர போகிறான் இந்த பாகம் திகிலூட்டக்கூடிய மற்றும் திரில்லர்ரான புதுமையான பொக்கிஷமாக இருக்கும் 🥳

    ReplyDelete
  2. Why suresh did not send pic of malar and him in bed to harish???

    ReplyDelete
  3. Dear EN vee pleae bring all in amazon...we are wating..we wil purchase.. we are in abroad.. we can not read from part 31.. pl do help

    ReplyDelete