மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Wednesday, December 3, 2025

க.க.கா பாகம் 5 : எபிசோடு : 197

அவனது முதுகையே கொஞ்ச நேரம் கோபத்துடன் பார்த்தாள் ரேகா.  இவன் மாறவே இல்லை. அதே டென்ஷன், எரிச்சல், சிடுசிடுப்பு...

ஆசையாய் அவனது தலையை கோதி முடியை வார போனால், “கையில ஏன்டி இவ்ளோ பெரிசா நகம்.. பாரு எப்பூடு கீறிடுச்சி?” என்பான்.

கல்யாண நாளன்று மெத்தையில் சாய்ந்திருந்த கணவனின் மார்பில் சாயப்போக.,

“ஸ்ஸ்ஸ் அப்பா ..ச்ச்சீ தள்ளி போடி”

“ எ..என்னங்க ஆச்சு?’

“தலையில என்ன கிளிப்பா?. இங்க பாரு. நல்லா பூறிட்டே.” மாரை காட்டினான்

அவள் கூந்தலில் இருந்த கிளிப் அவன் மார்பில் சன்னமாய் கோடு இழுத்து விட்டிருக்க., “ ஐய்யோ சாரிங்க... இருங்க.. மருந்து போடறென்”

“எதுக்கு இப்படி தொப்புன்னு மேள விழறே?” காயம் பட்ட எரிச்சலில் அவன் கத்துவான். இருவருக்கும் எல்லா பொருத்தமும் இருக்கிறது தான். ஆனால் முக்கியமான அந்த யோனி பொருத்தம் இருக்கிறதா? சரியாக பார்த்தார்களா தெரியவில்லை? கூடலுக்கென்று போனாலே அவர்களுக்குள் ஏதேனும் சண்டை? வாக்குவாதம்., வெறுப்பு. ஒரு முறை,  இருமுறை என்றால் பரவாயில்லை.. எப்பவுமா? எல்லாருக்கும் இப்படி நடக்குமா?

சிலமுறை  அவனாகவே வருவான். சினிமா பாட்டு பாடி., ரொமான்ஸாக வருவான்.. “ யப்பா சிகரெட் நாத்தம்” அவள் கத்த., அவன் மூடே மாறிவிடும். இன்னொரு முறை.

“ ஏங்க தாங்க முடிலங்க வேர்வை வாசனை. அதான் அத்தினி சென்ட் இருக்குலே? போட்டுதான் வாங்களேன் ”  இவளும் சில சமயம் பிரச்சனையானாள்.

“வாசனையை மோந்து ஆம்பளை படுக்க நீ என்ன தேவ்டியாவா?” விஷம் கக்கும் வார்த்தைகள்  அவன் தூவ, அவர்கள் படுக்கை முள்ளாக மாறும்.

கூடலுக்கான அஸ்திவாரமே நறுமணம் வாசனையும்., ஆசை வார்த்தைகளும் தான் என்பதை அவன் அறவே மறந்தான். அந்த கோபம் சாப்பாட்டில் வெளிப்படும்.

“என்னாடி மயிரு சாம்பார் வெச்சிருக்கே? உப்புமில்ல., காரமுமில்ல., த்தா.. “ எச்சில் பருக்கைகள் பறக்கும். அவர்களுக்கு எது பிரச்சனை எதுவென சரியாக தெரியாதது தான் பிரச்சனை ஆக இருந்தது.

ஒரு  ஞாயிறு மதியம் சாப்பிட்டு விட்டு  கால் நீட்டி தரையில் உட்கார்ந்திருந்த புருஷனின் மடியில் அவள் ஆசையா படுக்க.,’

“ஏய்ய்ய் எந்திருடி,வயசு வந்த பொண்ணுங்க வீட்டுல இருக்க,  நேத்து தான். தாலி கட்டு குடித்தன பண்ன வந்தா பொண்னாட்டம் மடியில விழுந்து புரள்றே?”

“ஏங்க?”

“புத்தி தெரிஞ்ச  பொம்பளை பசங்க, இருக்காங்க”

“அய்யோ நீங்க புருசன் இல்ல மாமியார்.. உங்க கிட்ட வந்து சிக்கனேன் பாருங்க”,

“ஏன்டி சொல்லமாட்டே? அங்க இங்க தினத்துக்கும் குடிச்சி வரானுங்களே அந்த மாதிரி நான் இல்லியே!  சந்தோஷப்படு”

“ அய்யோ குடிகாரனுங்களே மேலு உங்களை விட” அவள் சொல்லி முடிக்கும் முன்னே, “ ப..ளா... ஆ... ர்ர்ர்ர்” என அறை விழுந்தது. வார்த்தையில் ஜெயிக்க முடியாத போது அடி உதை தான் ஆயுதம். யார் மேல் தவறு? என பிரித்து அறியாதபடி அவர்களுக்குள் சண்டை எழுந்தது.

ரேகாவை போலவே திருச்சி தான் சேகருக்கும் சொந்த ஊர்.  ஆனால் வேலை நிமித்தமாக எப்போதோ அவர்கள்  சென்னைக்கு குடும்பத்தோடு வந்து விட்டார்கள்.  தூரத்து சொந்தம் என்பதால் இந்த வரன் கிடைத்தது. சேகருக்கு சொந்த பிசினஸ் என்றார்கள் . ஆனால் இவள் வந்த சில ஆண்டுகளிலேயே பிளாஸ்டிக் டப்பா தயாரித்து விற்கும் பிசினஸ்  நொடித்துப் போய் விட்டது./ சேகர் அவ்வளவுதான் என எல்லோரும் நினைத்தபோது அவன்  மார்பிள் ஷீட் டீலர்ஷிப் எடுத்தான்.  நிறைய சம்பாதித்தான். ஆனால் போட்டி கம்பெனிகள் நிறைய  உருவாக அவனால் தாக்குபிடிக்க முடியவில்லை. எல்லா தொழில்களையும் செய்து பார்த்து கடைசியாக இந்த ஆடிட்டர் ஆபீஸில் வேலைக்கு சேர்ந்தான்.

 கொஞ்ச நாளிலேயே தலைமை ஆடிட்டர்க்கு வலது கரமாக மாற அவனுக்கும் உயர்வு வந்தது.  சென்னையில் சொந்த பிளாட் வாங்கும் அளவிற்கு அந்த குடும்பத்திற்கும் வலு இருந்தது.

ஆனால் ஆபீஸ், குடும்பம், சொந்த வீடு, என்று இருந்த சேகருக்கு மனைவியிடம் பேசுவதற்கு தான் நேரம் கிடைப்பதில்லை.

எப்போது பார்த்தாலும் அவசரம், அவசரம், அவசரம், வேகம், வேகம் தான். எல்லாமே சீக்கிரம் முடிந்து விட வேண்டும் அவனுக்கு . பொறுமையும் இல்லை எதற்கும் காத்திருக்க வேண்டும் என்பதும் தோன்றவில்லை.

ஒருமுறை திருப்பதி போக திடீரென முடிவெடுத்து குடும்பத்துடன் சென்டிரல் போனான். திருப்பதி ரயில் வரவே இல்லை. 10 நிமிடம் லேட்., 20 நிமிடம் லேட் என சொல்லிக் கொண்டே போக., அவன் பொறுமை இழந்து., திருவள்ளூர் வரையே போகும் எல்க்ட்ரிக் ரெயிலில் ஏறச்சொன்னான்.

“ஏங்க.. கொஞ்சம் வெயிட் பண்ணலாங்க”

“தேவையில்ல. எதுக்கு வெயிட் பண்ணனும்? மூவ் ஆகிட்டே இருக்கனும்.  வாங்க” என்றான். திருவள்ளூரில் இறங்கி அரக்கோணம் டிரெயினை பிடித்தான். பின் அங்கிருந்து பஸ்ஸில் ஆந்திரா, புத்தூரில் இறங்கி.,  பயங்கர அலுப்புடன் பின் ரேனிகுன்டாவுக்கு பஸ்., அங்கிருந்து திருப்பதிக்கு இன்னொரு பஸ். பிடித்து செல்லும் போது., இவர்கள் போக வேண்டிய ரெயில் திருப்பதி போய் திரும்ப ரிடர்ன் சென்னைக்கு போய்க் கொண்டிருந்தது. ரேகாவுக்கு வாழ்க்கையே வெறுத்து போனது. இன்னும் பத்து நிமிடம் காத்திருந்தால், இன்னேரம் அதே ரெயிலில் போய் இறங்கி, மேல் திருப்பதிக்கே போய் இருக்கலாம். அவசரம் எதற்கெடுத்தாலும் அவசரம், அதனால் உண்டாகும் வீண் தாமதம். அறிவு கெட்டவன்.

எல்லா ஆண்களுமே இப்படியா? இவன் தான் இப்படியா?

இவன் பண்ண லீலையை சென்னை வந்த பிறகு இவள் அப்பார்ட்மென்டில் யாரிடமோ சொல்ல, எல்லாரும் சிரிக்க.,  சேகர் கடும் கோபம் கொண்டான். விளைவு ஒரு வாரம் இவளிடம் பேசவில்லை. வீட்டில் சாப்பிடக்கூட இல்ல.

“ நான் என்ன முட்டா புண்டயாடி?” என கெட்டவார்த்தை பேசினான்.

 ஆனால், அவனிடம்  இந்த அவசரம் மட்டும் தான் குறையே தவிரஅவன் ஒரு நல்ல குடும்ப பாதுகாவலன். தனது குழந்தைகளையும் மனைவியையும் குடும்பத்தையும்  சரிவர பார்த்துக் கொள்ளும் ஒரு சராசரி நடுத்தர அவனுக்குரிய ஆணுக்குரிய எல்லா அம்சங்களும் அவனுக்கு இருந்தது.

புகையில்லாமல் சத்தமும் இல்லாமல் அவனது இவி வண்டி  சீறிப் போவதையே பார்த்தாள் ரேகா.

‘இங்கிருந்து அடையார் எப்படி போக., இன்னும் அரை மணி நேரம் ஆகும் ? எவ்வளவு டிராபிக்? எவ்வளவு வண்டிகள்?  திருப்பங்கள்? கடவுளே இவன் பத்திரமாக போய், பத்திரமாக வர வேண்டும்” ஒரு ஐந்து வினாடி அவனைப் பற்றி அவள் பிரார்த்தித்து விட்டு திரும்பி ராதா மெடிக்கல்ஸ் படிக்கட்டு ஏறினாள் ரேகா..


  



கள்ளம் கபடம் காமம்- 1 - 6

மொத்தம்  240 எபிசோடுகளையும் படிக்க.. 

No comments:

Post a Comment