மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Wednesday, April 16, 2025

கள்ளம், கபடம், காமம் எபிசோடு : 36

 

ரம்யா ஷால் போடாத டாப்ஸில் இள மாங்கனிகள் துள்ள, வாசல் காதவை திறந்து பார்த்தால்.,  வெளியே.. ராகுல் இல்லை.  வந்தது இந்து..

“ஏய்ய்.... கடன்காரி நீ எங்கடி இப்போ?”

“என்னக்கா இது ப்ரீ ஷோ.. ஷால் போடு முதல்ல” இந்து கண்ணடித்தாள்.

“ ச்சீ வாடி உள்ள” அவள் ஷாலை போட்டாள்.

“பெருசு இருக்கா?”

‘ அது கிடக்கு. உள்ள தூங்கறாரு”

‘அக்கா அந்த ஜிம்முல.”அவள் இழுக்க.,

“ யம்மா தாயே  உனக்கு ஒரு  கும்பிடு. இப்பதான் எங்க மாமனார்கிட்ட நல்லா வாங்கி கட்டிகிட்டேன்.. இனி எந்த பிரச்சனையும் என் காதுல போடாத.. இனி நான் ஜிம்முக்கு வரதா இல்ல. ஜிம்மிய பத்தி எதுவும் எங்கிட்ட பேசாதே”

 

 ரம்யாவுக்கு இப்போது அவளுக்கு சமகால பிரச்சனை தான்,  ஒரு பக்கம் ராகுல் கடன் பிரச்சனை என்றால், இன்னொரு பக்கம் ஜிம்மில் ஒரு புதிய  ஆண் பயிற்சியாளர் வந்திருப்பது தான். அவளுக்கு ஜிம்மென்றால் உயிர். உடலை கட்டுக் கோப்பாய் வைத்திருப்பது அழகு மட்டுமல்ல, ஆரொக்கியமும் கூட என்பதில் ரம்யா உறுதியாக  இருந்தாள்.

 கல்யாணம் ஆகி பிள்ளை பெற்ற பிறகு தனது உடல் அழகை பேணாமல் இருப்பது மிகப்பெரிய குற்றம் என்பது அவளது கருத்து. தன்னுடைய உடலுக்கு எதிராக தான் செய்து கொள்ளும் தீங்கு அது என அவள் உறுதியாக நம்பினாள்.

அதுக்காகத்தான் கணவனை நச்சரித்துதிரட் மில்’ போன்ற ஜிம்  எக்யூப்மென்டுகள்  எல்லாம் வாங்கினாள்.

 

அதே சமயம் அப்பார்ட்மெண்டில் இருக்கக்கூடிய அதே ஜிம்மில் மதிய நேரம் லேடிஸ்க்கு ஓபன் என்பது அவளுக்கு மன மகிழ்ச்சியை தந்தது.  ஆனால் அது ஒரு சில ஆண்டுகள் கூட நீடிக்க வில்லை .  எஸ்தர் போன் பிறகு லேடி டிரெய்னர் கிடைக்கவில்லை. அவள் நெட்டில் லேடி டிரைனர் யாராவது பக்கத்தில் இருக்கிறாளா?’ என தேடி பார்த்தாள். இல்லை.  எல்லாமே ஆண்கள் தான்.

ஜிம்முக்கும்  அவளுக்குமான இடைவெளி அதிகமாகி கொண்டே வந்தது. இன்று  காலையில் கூட, அவள் குளித்து முடித்துவிட்டு உள்ளாடைகளூடன்  தன் உடலை திரும்பிப் பார்த்தாள். ஒரே ஒரு இரண்டு மாதம் ஜிம்முக்கு போகாதது தெளிவாக இடுப்புக்கு கீழே தெரிந்தது .இதே கதியில் போனால் சீக்கிரம் நம் ஆண்டியாகி விடுவோம் என அவள் நினைத்துக் கொண்டிருக்க, இப்போது மீண்டும் இந்து ‘ ஜிம்மில் ஒரு பிரச்சனை ‘ என ஆரம்பிக்கிறாளே

“ஜிம் மேட்டர் எதுவும் எங்கிட்ட சொல்லாதே”

“இல்லக்கா ஜிம்முல ஒரு பெரிய பிரச்சனை..ஆகிடுச்சி உனக்கு தெரியாதா?”

“என்னடி சொல்லு|’

“ அக்கா” அவள் சொல்லும் போதே அழ,

“ஏய்ய் என்ன ஆச்சு இந்து.. சொல்லு” ரம்யா பதைபதைக்க.,

“என்னடி ஆச்சு? யாராச்சும் ஏதாச்சும் சொன்னாங்களா?”

“அக்கா எனக்கு பயமா இருக்கு? அந்த ஜிம் ஆள் இருக்கானே,  ரேகா தம்பி தப்பான ஆளா இருக்கான்“

என்னடி  என்ன சொல்ற?   நீதான் ரெகுலரா ஜிம் போயிட்டு இருக்கே இல்ல? அந்த ஜிம்  ஆள் கூட, ரொம்ப நல்லவன். நல்லா பேசுறான். நம்ம நினைச்ச மாதிரி இல்ல அப்படி எல்லாம் சொல்லிட்டு இருந்தியேடி. இப்ப என்ன பண்னான்?”

 ஆமாக்கா ஆரம்பத்துல அவன் மேடம் ,சிஸ்டர் ,அப்படித்தான் கூப்பிட்டு இருந்தான்.  அதுக்கப்புறம் பேர் சொல்லி கூப்பிட்டான். நான் பெருசா எடுத்துக்கல. நேத்து என்ன ஆச்சுன்னா..”

என்னடி ஆச்சு?”

அக்கா நேத்து பேசிட்டே இருக்கும்போது உங்களுக்கு வயித்துல சதை இருக்குன்னு டக்குனு வயித்துல கை வச்சிட்டான் “

“ஏய்ய்ய் என்னடி சொல்ற ?” ரம்யா கடும் அதிர்ச்சியில் கண்கள் விரிந்தன .

நேத்தே ஏண்டி சொல்லல?’

எனக்கு ரொம்ப ஷாக் ஆயிருச்சுக்கா.  இந்த மாதிரிலாம் பண்ற வேல வெச்சிக்காதீங்கன்னு’ சொன்னேன்.  உடனே ஏன் ஒரு ட்ரைனர் நான் சொல்லக்கூடாதா?” அப்படின்னு சொல்லிக்கிட்டு பின்னாடி தட்டி இங்கே பார் சதை கொழுத்து கிடக்குன்னு சொன்னாங்க்கா” அவள் சன்னமாய் அழ,

ஏய் என்னடி சொல்ற? உன்னை தொட்டானா?  அவள் தோளைப் பிடித்து உலுக்கினாள்.

“எனக்கு அழுகை வந்துருச்சு. போடான்னு அவனை  தள்ளி விட்டு வந்தேன்.  மனசே கேக்கல. எங்க வீட்டுக்காரர் கிட்ட சொல்லிட்டேன் ...”

“சொல்லிட்டியா?” ரம்யா திகைக்க

“ஆமாக்கா.  வீட்டு ஆம்பளைங்களுக்கு , இதுபோல விஷயம் சொல்லலண்னா, இவனுக்கு குளிர் விட்டு போயிடும். அதான் எங்க வீட்டு வீட்டுக்காரர் கிட்ட சொல்லிட்டேன்

அப்புறம்?”

அப்புறம் அவர் காலைல அவன புடிச்சு கேட்டாரு ஜிம்முல ? அவன் மதிக்கவே இல்ல அப்படி தான் செய்வேன்னு சொல்றானாம்

அவள் தலையில் கை வைத்துக் கொண்டுஅய்யய்யோ என்னடி சொல்ற? இவ்ளோ நடந்திருக்கா ?”

ஆமாங்கா

அதுக்கு தாண்டி நான் படிச்சு படிச்சு சொன்னேன் . மேல் டிரைனர் வேணாம்.  வேணாம்னு சொன்னேன் . ஃபீமேல் டிரெயினர் போடுங்கன்னேன்.  அந்த சங்கீதா பொம்பளை கேட்கவே இல்லை . ரேகாவும் கேக்கல”

“என்ன சொல்றா ரேகா?”

இப்ப கூட கேட்கல அக்கா நான் போய் சொன்னா,  ஒரு ட்ரெயினர் நீ செய்ற எக்சர் சைஸ் என்னென்ன தப்புன்னு  விலாவரியா சொல்றான் .அதுல என்ன பெரிய குற்றத்தை கண்டுபுடிச்சிட்டேன்னு சொல்லிட்டாக்கா”

“அடிப்பாவி”

“என்னக்கா காலைல ஜிம்முல அவ்ளோ பெரிய பிரச்சனை ஆச்சு.  உனக்கு எதுவும் தெரியாதா?”

எனக்கு எதுவும் தெரியாதுடி.  எனக்கு யாரும் எதுவும் சொல்லலையே

இனிமேல் நான் ஜிம்முக்கு போறதா இல்லக்கா.  அவன் கண்டிப்பா மேல கைய வைப்பான். “

“அதெப்படி வைப்பான்?  ஏண்டி சும்மா  விட்டீங்க அவனை ? “

‘அவனை என்னக்கா பண்ண சொல்றே?  என் வீட்டுக்காரரே பயந்த சுபாவம் . நான்தான் அவரை உசுப்பேத்தி அவன்கிட்ட,  சண்டை போட கூட்டிட்டு வந்தேண்.  ஆனால் அவன் சரியாக பதில் சொல்லலக்கா.  நான் இனிமேல் ஜிம்முக்கு ஜிம்முக்கு போகலைக்கா. அதான் நீ த்ரெட் த்ரெட் மில் என்ன கம்பெனி வாங்கி இருக்கேன்னு பார்த்துகிட்டு, அதேபோல எங்க வீட்டுக்காரர் கிட்ட கே கேட்கப் போறேன்”  என அவள் சொல்ல ,

ரம்யாவுக்கு ஒன்றுமே பேச என்ன பேசுவது ?என்று புரியவில்லை. ஏன் இங்கே பெண்களுக்கு இப்படி பாதுகாப்பு இல்லை? வீடு என்ற வளையத்தை தாண்டி வெளியே வந்து விட்டாலே, எப்படி சுலபமாக பெண்கள் மீது கை வைக்க இந்த ஆண்களுக்கு துணிச்சல்  வந்துவிடுகிறது ?

ரேகா என்ன தான் லாஸ்டா சொல்றா?’

“அவங்க என்ன சொல்லுவாங்க?  தம்பிக்கு சப்போட்டா தான் பேசுவாங்க.  நான்  பனியன்ல எல்லாத்தையும் காட்டிகிட்டு போறேனாம்.  குடும்ப பொண்ணு மாதொரொ டிரஸ் பண்னலியாம். “

“.......................”

“உன்கிட்ட எதுவும் சொல்லலயாக்கா.  ஏங்கா?  இப்படி ஆம்பளைங்க இருக்காங்க?  எப்போ எவ  மாட்டுவாளோன்னு காத்துட்டு இருக்கானுங்க. “

‘....................”

இந்த சொசைட்டில குழந்தை இல்லன்னா அது ஏதோ பெரிய குத்தம் மாதிரி பாக்குறாங்க . வூட்டுகாரன் சரியா கவனிக்கலன்னு கமென்ட் அடிக்கிராங்க. கைய வெச்சா  டக்குன்னு விழுந்துருவான்னு நினைக்கிறாங்க.. இவங்க புத்தியை எதால அடிக்கிறது? எங்கக்கா நாம ஓடறது?“

”ஏய்ய்  இந்து  இதை நீ  சும்மா விடக்கூடாதுடி. ரேகாவோட தம்பியை அடிச்சி துரத்தனும் “

இல்லக்கா எனக்கு சண்டை போடுற அளவுக்கு மனசுல தெம்பு இல்லக்கா.  எங்க வீட்டு மாமியாரே,  நீ சும்மா தளுக்கு  மொழுக்குன்னு குதிரை மாதிரி போய் நின்னா, அப்படித்தான் கையை வைத்து அமுக்குவாங்கன்னு சொல்றாங்க.  என் மனசு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா?’ என இந்து அழுகை அடக்கி கொண்டு பேச,  “ இந்து இல்லடி.  அவனை  சும்மா விட கூடாது வாடி பார்த்துடலாம் .அவன் சரிப்பட்டு வரலைன்னா ரேகா கிட்ட போகலாம் .  வா ரெண்டுல ஒன்னு பாத்துடலாம்.அவள்  தலைமுடியை வாரி, கொண்டை  போட்டுக் கொண்டு வீட்டிலிருந்து இந்துவுடன்  போனாள்.

“இப்ப எங்கடி இருக்கான்? ஜிம்லயா? ரேகா வீட்டுலயா?’

 ஜிம்லதான். அவனுக்கு ஒரு வேலை வெட்டியும் கிடையாது. அவங்க அக்கா சொன்னதெல்லாம் பொய்க்கா. அது ஒரு வேலை வெட்டி இல்லாத சோத்து தண்டம். இவனுங்க பொழைக்கறதுக்கு நாம பலிகடாவா?”.

இந்து சொல்ல சொல்ல ரம்யாவுக்கு கோபம் ஏறிக்கொண்டே வந்தது வேகமாக ஜிம்முக்கு போனாள். மதிய நேரமும் ஜிம் திறந்திருந்தது.

“அவர்கள் உள்ளே நுழைந்தார்கள். முதல் அறையில் யாருமில்லை.

“வாடி உள்ளே போகலாம்’

“ அக்கா உள்ளே தான் அவன் இருக்கான்..”

“சரி வா”

“இல்ல  நீ போ. நா வரலை. அவன் என்ன பார்த்தா, கண்டபடி ஏளனமாக பேசுவான் . எனக்கு என்னமோ அவன் கிட்ட சண்டை போட வேணாம்னு தோணுது . வா போலாம்’

“அப்படியெல்லாம் விட முடியாதுடி. என்கிட்ட அந்த மாதிரி பேசினான்னா, கால்ல இருக்கிற கழட்டி மூஞ்சில அடிப்பேன்’  சொல்லிவிட்டு அவள் வேகமாக உள்ளே போனாள்.

உள்ளே அந்த புதிய ட்ரெயினர் ரேகாவின் தம்பி நின்று கொண்டிருந்தான் . முதுகு பக்கம் திரும்பிக் கொண்டிருந்த அவனை  ரம்யா சொடுக்கு போட்டு கூப்பிட்டாள்.

“ஹலோ இங்க பாருங்க,. நீங்கதான் ட்ரைனரா ?” என ரம்யா அதிகாரமாக கேட்டான்.

 அவன்  எஸ்என்ற படி திரும்ப

“ஏ...ஏய்ய்ய்”

“ ஓ மை காட்.... ஏய்ய்ய் நீயா?”

“ஏ.. ஏய்ய்  நீ நீயா.?” ரம்யாவின் அத்தனை சப்தநாடியம் அடங்கி ஒடுங்கி  உறைந்தது. அந்த இடமே நிசப்தமானது. ரம்யாய்ன் விழிகள் நிலை குத்தி நின்றன.

ஏஏய் நீயாடா ? அவள் உதடுகள் உச்சரித்தன. அவள் முகம் வெளுத்தது.

 அவன் கண்ணிலும் ஷாக் தெரிந்தது

டார்லிங்க் நீ எங்கடி இங்க சென்னைல?”

 “ஏஏய் நீயாடா ரேகா தம்பி ஜாக்கி ?”

ஆமா நான் தான்  ரேகா அக்கா தம்பி  ஜாக்கி .புல்லட் ஜாக்கிஎன்றான் அந்த  ஜேகே என்கிற புல்லட் ஜாக்கி. ரம்யாவின் கால்கள் நகர மறுத்தன.

ரம்யாவின் கண்கள்  மெல்ல இருண்டன.

(தொடரும்)

 

( கள்ளம், கபடம், காமம் முதல் பாகம் முற்றும்)

TO BUY ALL PARTS CLICK HERE 


No comments:

Post a Comment