அந்த வீக் எண்ட் சந்தியாவின் பிறந்தநாள் விழாவிற்காக செல்வராஜா வீட்டிற்கு சென்றிருந்தாள் சுஷ்மிதா.
மிகக் குறைவான நபர்களே விருந்துக்கு அழைக்கப் பட்டிருந்தார்கள். செல்வராஜாவும், அவனது மனைவியும் ஒரு சில வார்த்தைகள் பேசிவிட்டு ஒதுங்கிக்கொள்ள, வித்யாவும்,
சுஷ்மிதாவும் மொட்டை மாடியில் நின்று பேசினார்கள்.
ஆனால் அவளது தம்பி விவரம் பற்றி எல்லாம் பேசவில்லை .தணிகாவும், இந்த சுஷ்மிதா- மாதேஷ்
விவகாரம் வித்யாவுக்கு தெரிய கூடாது என்பதாய் காய் நகர்த்தினார்கள் .
'என்ன இருந்தாலும் அது ஒரு பொண்ணு, அதுவும் நம்ம வீட்டு பொண்ணு. நாளைக்கு கல்யாணம் கட்டிக்கிட்டு வேற இடத்துக்கு வாழ போற பொண்ணு .என்னைக்காச்சும் ஒரு நாளு நம்ம தகிடுதத்தம் தெரிஞ்சுடுச்சின்னா
அசிங்கமாகிடும்,. அதனால அவளை வெச்சிதான் பிளே பண்றோம் 'என்பது அவளுக்கு கண்டிப்பா தெரியக்கூடாது என்று ககச்சிதமாக திட்டம் தீட்டீனார்கள்.
சந்தியாவின் பர்த்டே என்பது ஒரு சாக்கு, சந்தியா ஒரு தூண்டில்
புழு,. அவ்வளவுதான் . அதை வச்சுதான்: சுஷ்மிதாவை கவுக்கணும் . வயதான ரங்கராஜை வீழ்த்தி அவன் பொண்ணை கட்டணும் என திட்டம் தீட்டி இருந்தார்கள்.
தனக்குப் பின்னாலே ஒரு பெரிய சதி நடக்கிறது , என்பதும் ஒரு பெரிய குடும்பத்தை சிதைக்க போகிறார்கள் என்பதை ஏதும் தெரியாமலேயே, பெரிய இடத்து பெண்
சுஷ்மிதவை , வித்யா தனது வீட்டிற்கு வர வைத்திருந்தாள்
இருவரும் தோழிகள், படிப்பு, கல்யாணம் பற்றியும் பேசினார்கள் .
"அப்பா பொண்ணு பாத்துட்டு இருக்காரு, இப்போ தர்மராஜன் ஒரு படம் பண்றான். சூப்பர்
லவ் ஸ்டோரி.. சப்ஜக்ட் அது முடிஞ்ச உடனே எனக்கு மாப்பிள்ளை பார்ப்பாங்க,அப்புறம் எங்க
அண்ணனுக்கு மேரேஜ்" வித்யா சொல்ல.,
" ஓ உங்க அண்ணனே அவன் படத்துல நடிச்ச ஒரு நடிகையை கட்டிக்க போறதா சொல்றாங்களே"
"ஆமா பூஜா சர்மா. அதுக்காகத்தான் முதல்ல எனக்கு கல்யாணம் பண்ணி அனுப்ப போறாங்க, அதுக்கு அப்புறம் தர்மராஜனுக்கு, "
"அப்ப மாதேஷ்க்கு?"
சுஷ்மிதா சொல்லி விட்டு நாக்கை கடித்து கொண்டாள்.
"அவனுக்கு இப்ப தான் 22 வயசாவுது. இவ்ளோ சீக்கிரம் எதுக்கு? மாதேஷ் சினிமாவுல பெரிய ஹீரோவா வரப்போறான் . இப்பவே வந்துட்டான். இன்னும் பெருசா வருவான் .அப்படி வரும்போது வெளியில எந்த பொண்ணுங்க பிரச்சினையும் வரக்கூடாது என்று நினைக்கிறாங்க அம்மா"
"..ம்.. "
"சரி சுஷ்மி உனக்கு மேரேஜ் எப்போ ?" என்றாள்.
" தெரியல இருபத்தி ஆறு வயசு ஆயிடுச்சு . அப்பா நிறைய மாப்பிள்ளைகளை சொல்றாரு . ஆனா எனக்குத்தான் செட் ஆகல. பிஜி முடிச்சிட்டு டாக்டரேட் பண்ணனும்னு ஆசை ."
"அட யாருடி இவ? நீ பிஜி முடிச்சதே
பெரிய விஷயம் . படிச்ச வரைக்கும் போதும் . முதல்ல ஒரு ஆள கட்டிக்கிட்டு குடித்தனம்
பண்ணு. ஆண்டி ஆன அப்புறமா கல்யாணம் பண்ணிக்குவே?'
இவர்கள் பேசிக் கொண்டிருந்த போதே,
மேலே மாதேஷ், தர்மராஜன், தணிகா
எல்லாரும் ஒருவர் பின் ஒருவராக வந்தார்கள்
'வாங்க ஹீரோ சார்' என வித்யா தன் தம்பியை கூப்பிட ,
ஏனோ சுஷ்மிதாவால் முன்பு மாதிரி அவனை நேருக்கு நேராக பார்க்க முடியவில்லை. தலையை குனிந்து கொண்டாள். எல்லோரும் ஒரு வட்ட மேஜையில் உட்கார்ந்து கொண்டு பேச பேசி அரட்டை அடிக்க ஆரம்பிக்க.,
ஏனோ மாதேஷ் சொல்வதற்கு மட்டும் பதில் பேசாமல் சுஷ்மிதா இருந்தாள்.
" என்னடா சுஷ்மித கிட்ட சண்டையா? பேசவே மாட்ற ?" தணிகா கொளுத்தி போட,.
"என்ன உங்க ரெண்டு பேருக்கும் சண்டையா ?" என வித்யாவும் கேட்க..
"அ.. அதெல்லாம் ஒன்னும் இல்லையே " என்றான் மாதேஷ்.
அவன் மனதில் தணிகா ஏற்றிவிட்ட விஷம் ஏறிக் கொண்டிருந்தது. அவர்கள் இரண்டு பேரின் விழிகள் அடிக்கடி சந்தித்துக் கொண்டன .
தப்பு தப்பு என அவள் மனது சொல்லிக் கொண்டே இருந்தது. பார்ட்டியில் ஓட்கா பரிமாற
" ஐயோ எனக்கு வேணாம் " சுஷ்மிதா எழ,
"சும்மா நடிக்காதடி, நாம தொட்டுக் கூட பார்க்காதது போல, அதான் அம்மா
இல்லையே . மாதேஷ் எல்லாத்தையும் சொல்லிட்டான். ஹோட்டல்ல நீங்க கொடுத்த பார்ட்டி பத்தி "
என சொல்ல எல்லோரும் சிரித்தார்கள்.
சுஷ்மிதாவுக்கு வெட்கமாக இருந்தது .
என்ன இருந்தாலும் தனிகா வெளியாள். அவனுக்கு தன்னை பற்றி செய்திகள் எல்லாம் போவது என்பது சுஷ்மிதாவுக்கு பிடிக்கவில்லை.
தர்மராஜன்தான் ' பரவாயில்ல சிஸ்டர்ஸ். எங்களுக்காத் தான்" என சொல்லி,
"சுஷ்மிதாவுக்கும், வித்யாவுக்கும்
ஒரே ஒரு ரவுண்டு ஊற்றினாள் . அடுத்த ரவுண்டுக்கு ஆண்கள் போக, பெண்கள் எழுந்து கொண்டார்கள். இருவரும் மாடியை
விட்டு இறங்கி போய்,
ஹாலுக்கு பக்கத்திலிருந்த கார்டனில் உட்கார்ந்துகொண்டு கொஞ்ச நேரம் பேசினார்கள். பின்
" சரி சுஸ்மிதா எனக்கு நீ ஓட்கா குடிச்சது ஒரு மாதிரியா இருக்கு, அப்பா அம்மாக்கு தெரிஞ்சா சத்தம் போடுவாங்க, நான் ரூம்ல போய் படுத்துக்குறேன். எனிவே தேங்க்ஸ் பார் கமிங் .என் பர்த்டே பார்ட்டிக்கு வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் ..நீ தனியா கார்ல தானே வந்தே? போய்டுவே இல்ல? " என கேட்க
" நீ போ அகல். ,நான் போயிடுவேன் நீ போ " என்று சொன்னாள்.
அவள் சென்ற பிறகு அவள் காரில் ஏறி வீட்டுக்கு போவதா? இல்லை மாதேஸ் உடன் பேசிவிட்டுப் போவதா?' என யோசித்தாள்.
' வேண்டாம். இந்த நிலையில், இந்த நேரத்தில் மாதேஷ் கீழே வரும் வரை காத்திருந்து இருப்பது நல்லது இல்லை, பார்ப்ப்வரக்ள் தப்பாய் நினைப்பார்கள். நாம் போய்விடுவது உசிதம், அவள் கிளம்பினாள்.
சே மாதேஷை தனியாக சந்திக்க முடியும், அவனிடம் ஏதாவது பேசலாம் என ஆசை ஆசையாக வந்தோம். அவனை தனியாகவே பார்க்க முடியவில்லையே 'என நினைத்துக்கொண்டே அவள் காரை நோக்கி போக,
"ஹய சுஷ்மிதா.. எங்க
கிளம்பிட்டே? இவ்ளோ சீக்கிரம்?" என்றபடி வந்தான் தனிகா.
" இல்ல அங்கிள்.. வீட்டுல அம்மா தேடுவாங்க.
" அட என்னம்மா இதோ இருக்கு பெசன்ட் நகர். எவ்ளோ நேரம் ஆயிட போவுது ? மாதேஷ் உன்கிட்ட ஏதோ பேசணும்னு காத்துட்டு இருக்கான் . உன்னை வரசொன்னான் .போ."
'மாதேஷ்ஷா?'
" ஆமாம்மா . மேல போ..." என்றான் தணிகா.
No comments:
Post a Comment