எதிர்பார்த்தபடி அதற்கு அடுத்த வாரம் சுஷ்மிதா திடீரென மாதேஷ்க்கு கால் செய்தாள். வழக்கமாக 'என்னடா வாடா போடா 'என பேசுவாள். ஆனால் இந்த முறை அப்படி எதுவும் அவள் பேசவில்லை.
அவள் யோசித்து யோசித்து பேசுவதாக
அவனுக்கு பட்டது.
"எ எதுக்கு எனக்கு டூ வீக்கா கால் பண்ணல?" என்று மட்டும் கேட்டாள்.
" நான் எதுக்கு கால் பண்ணனும்? என் அக்கா உனக்கு பிரண்டா நான் உனக்கு பிரண்டா?" என்றான் மாதேஷ
"ஏன் அப்போ நீ எனக்கு கால் பண்ணி பேசுணதே கிடையாதா" ஓஹோ இப்ப பெரிய ஆக்டர் ஆகிட்டீங்க .சாரு கொஞ்ச நாள்ல டாப் ஹீரோ ஆக போறிங்க .அந்த
கெத்த என்கிட்ட காட்டுறீங்களா ?" என்றாள்.
" இப்ப எதுக்கு சுஷ்மிதா என்கூட சண்டை போடுற ? நீ இப்படி கத்தி பேசுற. உங்க வீட்ல யாரு என்னன்னு கேட்டு ஏதாச்சும் கேக்க போறாங்க"
"நான் தனியாதான் இருக்கேண்,
"
"எங்க ?"
"மொட்டை மாடில"
"ஓ ஒளிஞ்ச்சிருந்து தயங்கி என்ன பேச்சு எங்கிட்ட:?"
'...................."
" இவ்ளோ நாளா இல்லாம இப்ப என்ன புதுசா உங்களுக்கு தயக்கம்?"
"அ.அ. அதெல்லாம் ஒன்னும் இல்ல"
'..ம்ம் என்ன இருந்தாலும் ரங்கராஜ் சார், பேமிலி எங்கே ? செல்வராஜா பேமிலி எங்கே? என்றான்
சம்பந்தமில்லாமால் இதெல்லாம் அவன் பேசுவது அவளுக்கு கொஞ்சம் விசித்திரமாகவே தெரியவந்தது.
காதல் உருவாவதற்கு முன்பு இரண்டு நண்பர்களுக்கு இடையே நிகழ்ந்த உரையாடலின் வாசம் அதில் அதிகமாகவே இருந்தது
அவள் கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தாள். அவளுக்கும் இரு மனதாக இருந்தது. பார்ட்டியில் அந்த
பெண் மாதேஷ் பற்றி பேசிய வார்த்தைகள்
காதில் ரீங்காரமிட்டது.
' தான் தவறு செய்கிறோமோ?' என்று யோசித்தாள். அவன் என்ன ஜாதியோ? என்ன எழவோ இருந்துவிட்டுப் போகட்டும் . அது பிரச்சனையில்லை.
ஆனால், என்ன இருந்தாலும், அவன் நம்மை விட நான்கைந்து வயது குறைந்தவன் . யாராவது கேட்டால் கூட நாம் என்னவென்று சொல்வது? இந்த பேச்சை இப்படி நிறுத்தலாமா ? கத்தரிக்கலாமா ? என நினைத்துக் கொண்டிருக்கும் போதே,
அவன் மறுபடி " என்ன உன் பிரெண்ட்ஸ் எல்லாம் ஹாப்பியா ? எதனாச்சும் சொன்னாங்களா?" என கேட்க
"என்ன சொல்லணும்?"
" ஒன்னும் இல்ல, யார் கூப்டும் , எங்கும் போகாதவன், உனக்காக உன் பிரண்ட்ஸ் க்காக அவ்வளவு தூரம் அந்த ஓட்டலில் பார்ட்டிக்கு வந்தேனே.. "
அவள் மௌனமாக இருந்தாள்.
"மறுநாள் பேப்பர்ல நியுஸ் வந்துச்சு, ராஜன் நடிகர் ரங்கா வீட்டு பொண்ணு கூட குத்தாட்டம்னு.. அப்ப என்மேல ரொம்ப கோபப்பட்டார்"
" நான் உன்ணை அங்க ஆட்டம் போடவா கூப்பிட்டேன். அவங்க எல்லாரையும் அறிமுகப் படுத்த கூப்பிட்டேன். நீ தான் கொழுத்து போயி, அவங்க மடியில் போய் உட்கார்ந்துட்டே. ச்சே எனக்கே ஒரு மாதிரி ஆயிடுச்சு "
" நான் எங்கே சுஷ்மிதா போனேன்.? . அவங்க தான் அங்கங்க கைய வச்சு தேச்சு விட்டாங்க . உங்க பிரன்ட்ஸெல்லாம் உன்னை மாதிரி
நல்லவளுங்க இல்ல சுஷ்மிதா"என்றான்
"இப்படி பேசாத
மாதேஷ். அவங்க பண்ணா, உனக்கு அறிவு இல்லையா?"
" ஐயோ உன் பிரண்ட்ஸ் எல்லாம் உன்ன மாதிரியே டீசண்டான பொண்ணுங்கன்னு
நினைச்சேன். அவளுங்க இப்படி எல்லாம் பண்ணுவாங்கண்னு எனக்குஎன்ன
தெரியும். ஒருத்தி என் பனியனுக்குள் கை விட்டு., பிசையறாங்கடி"
"....................டியா?"
".........................."
" அக்கான்னு கூப்ட்டே.. அப்புறம்
வா. போ.. இப்ப.. என்ன 'டி' யா?"என சுஷ்மிதா கேட்டாள் .
இருவரது குரலும் வெகுவாக மாறிப் போயிருந்தது .
"சாரி சுஷ்மி ஒரு ஃபுளோவில வந்துச்சு.. பை தி பை, இந்த வாரம் ஏங்காக்கா அக்லயா பர்த்டே. வீட்டுக்கு
வருவே இல்லே?"
" ,ம்ம் கூப்ட்டா.. நீ
இருப்பியா?'
" நீ வரேன்னா நான் இருக்கேன்.."
"அப்பாவுக்கு புதுப்பட ஆடியோ ரிலீஸ் ஆகி இருக்கு .,அங்க போகணும்"
" அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்,. நீ கண்டிப்பா வா உனக்கு ஒரு கிப்ட் வச்சிருக்கேன் " என்றான்.
" என்ன கிப்ட்டு .."
"நீ வா "
"என்னனு சொல்லு மாதேஷ்"
"நீ வா சொல்றேன் , நீ வா தரேன்"
" நீ சொல்லு வரேன் " அவள் சிணுங்கினாள்.
"முடியாது நீ வா, நான் தரேண்"
"போடா லூசு"
சுஷ்மிதா போனை வைக்க
"யாரடி போன்ல இந்த நேரத்துல?" அம்மா கேட்டாள்.
" இ..இல்லம்மா அந்த வித்யா தம்பிதான் . மாதேஷ் "
"ஏய் அவன் கூட உனக்கு என்னடி பேச்சு? . போன வாரம் அவனை
ஹோட்டலுக்கு கூப்ட்டு கூத்தடிச்சது போறதா நாயே?"
" ஐ,.ஐயோ அம்மா அவன் சின்ன பையன் தான் அம்மா. என் ஃப்ரண்ட் தம்பி "
"இருக்கட்டும்., என்ன இருந்தாலும் அவ ஒரு ஆம்பள பையன். அது இல்லாம இப்போ ஸ்டார் லெவலுக்கு
வந்துட்டு இருக்கான்.
நேரங்கெட்ட நேரத்தில் அவன் உன்கிட்ட பேசி ஏதாச்சும் வம்பு எடுத்து விடாதேடி. "
"அப்படில்லாம் இல்லமா. அவன் அக்கா
பர்டேக்கு இன்வைட் பண்ணான்"
" அங்க இங்க சுத்தாதடி. நைட் 11 மணி ஆனா போதும். போனை எடுத்துட்டு பால்கனிக்கு வந்துடறே? அப்புறம் அவர்கிட்ட யார் பதில் சொல்றது? போய் ஒழுங்கா படி. " என அம்மா சொல்ல. சுஷ்மிதா போனை சார்ஜ் போட்டு விட்டு ரூமுக்கு போனா:,
எதிரே தங்கை சந்தியா 'என்ன?" என்று சைகையில் கேட்டாள்
" ஒன்னும் இல்ல உன் வேலையை பாரு "
"என் வேலையை தான் பாக்குறேன் .ஆனா மேடம் கொஞ்ச நாளா சரி இல்ல ன்னு சொன்னாங்க."
" நான் என்னடி சரியல்ல? .”
“ பார்க்
ஓட்டலில போயி அந்த மாதேஷை கூப்பிட்டு பார்ட்டி கொடுத்து இருக்க ., அங்க இருக்கிற செக்யூரிட்டி புட்டேஜ்லாம் உங்க அட்டகாசம்
ரிகார்ட் ஆகி இருக்கு. வெளிய தெரிஞ்சா என்னாவும் தெரியுமா? “
“வேணாம் சந்தியா. ஓவரா போவாதே”
“ அதென்னடி உங்க
பிரண்ட்சுக்கெல்லாம் கொஞ்சம் கூட வெக்கமே இல்லே"
"ஏய்ய்"
"அப்படி அலையறாளுங்க..,அவனும்
அவன் மூஞ்சியும். சே.."
"ஷ்ட அப் சான்டி "
"அய்யோ அய்யாவை சொன்னா.
மேடத்துக்கு கோபம் பொத்துகிட்டு வருதே..ஹோட்டல்ல ரொம்ப அசிங்கம் பண்ணி
இருக்கீங்க.. அப்பாதான் ஹோட்டல் செக்ரியூட்டி கிட்ட புல்லா வீடியோ அழிக்க சொல்லி இருக்கார்.. அவன் கையை புடிச்சி நீ
தூக்கிட்டு, உன் மேல சாச்சிக்கிட்டு வரே.. மீடியாக்கு தெரிஞ்சா எவ்ளோ அசிங்கம்
தெரியுமா?’
அவள் திகைத்து போய் நிற்க.,
“ போயும் போயும் அவனை கூப்பிட்டு லூட்டி அடிப்பியா நீ? உன் வயசு என்ன அவன் வயசு என்ன?"
" ஏய்ய் அசிங்கமா பேசாத. உனக்கு தெரியாதா ?அவன் அக்கா வித்யா என் பெஸ்ட் பிரண்டு அப்படின்னு, அவங்க வீட்டுக்கு நான் ரொம்ப வருசமா, வரப் போக இருக்கேன். அவனை சின்ன வயசிலிருந்தே எனக்கு தெரியும். நாங்க ஃப்ரண்ட்ஸ் தான். '
“நீ எனக்கு
புத்தி சொல்லாதே “
" அப்ப அக்லயா உன்னை பத்தி என்ன நினைப்பா?. பாத்து நடந்துக்க.. அந்த ஃபேமிலியே
சரி இல்லன்னு, ஒரு பேச்சு அடிபடுது . அதில மாட்டிக்க
போறே."
"அதெல்லாம் நான் பாத்துக்கறேன்.. நீ உன் வேலையை பாரு.
அவள் தன் அறைக்கு படுக்கப் போனாள். ஆனால் அவளுக்கு மனது மனதில் பல கேள்விகள் ஓடிக் கொண்டிருந்தது. நாம் செய்வது தவறா? தமிழ் சினிமாவின் உயிர் நாடி ரங்கராஜ்ஜின் பெண்ணாக இருந்துகொண்டு இப்படி செய்யலாமா?
உண்மையில் எனக்கும் மாதேஷ்க்கும் இடையே இருப்பது என்ன? நமக்கு அவன் சரிப்பட்டு வருவானா ? இது எத்தனை பெரிய அசிங்கம்? யாரெல்லாம் என்ன புறம் பேசுவார்கள் ? சின்ன பையனா பார்த்து புடிச்சிட்டியா? என சொன்னால் அது எவ்வளவு கேவலம் ?
அந்த பார்ட்டியில் போதை அதிகமாகி ஒரு பெண் இன்னொருத்தி இடம் சொல்லிக்கொண்டிருந்தாள்
"இப்படி ஒரு பையன் கிடைச்சா லட்டு மாதிரி தூக்கி வைச்சிகிட்டு வேலைக்கு எங்குமே அனுப்ப மாட்டேன். வீட்டிலேயே வச்சி கஞ்சி ஊத்துவேன்"
" ஆமாமா நல்லா இருக்கும். அவன் உனக்கு கஞ்சி ஊத்துவான். நீ அவனுக்கு கஞ்சி ஊத்து " என ஆபாசமாக சொல்ல எல்லோரும் சிரித்தார்கள்
"அப்படி இல்லடி, பொதுவா நம்ம விட அஞ்சு வயசு மேல ஒரு பையனை கட்டுகிறோம். நமக்கு 45 ஆயிடும் போது அவனுக்கு 50 ஆயிடும் .அதுக்கு மேல நம்மளை சீண்ட மாட்டான் .ஆனால் இப்படி ஒரு வயசு கம்மியா பையனை கட்டிக்கட்டோமுன்னா , நம்ப வயசானாலும் இவன் நம்மளை விட மாட்டான். தாங்கு தாங்குன்னு தாங்குவாண்டி '
'எனக்கு இப்படி இப்படி ஒரு சின்ன வயசுல பையனைக் க்கட்டனும் தாண்டி ஆசை " என பாத்ரூமில் நின்று பேசிக் கொண்டிருந்ததை. சுஷ்மிதா கேட்டிருந்தாள்.
“சுஷ்மிதா மாதிரி நானும் ஒரு சின்ன
பையனா பாத்து புடிக்க போறேண்டி..”
“ஸ்ஷ் அவ காதுல விழப் போவுது”
அவர்கள் உரையாடல் எல்லாம் அவள் மனதுக்குள் சென்று அவள் மூளைக்குள் பல கலவரங்களை வெடிக்க வைத்துக் கொண்டிருந்தது .
இதுவே அவன் நம்மை விட ஒரு வயது ஆவது குறைவாக இருந்தால் கூட இப்போதே அவன் காலில் விழுந்து ' தயவு செய்து என்னை ஏற்றுக் கொள்" என சொல்லலாம்.
அவனை கட்டிபிடித்து அழலாம். அவன் என்னை விட சின்னவனாக போய்விட்டான் . அதுதவிர 'அக்கா அக்கா' என கூப்பிட்டவன். இப்போது மீசையும் தாடியும் ஆக இருக்கிறான் என்பதற்காக எப்படி வெட்கத்தைவிட்டு அவனிடம் ஐ லவ் யூ என சொல்வது?
இது ஜஸ்ட் பருவ கவர்ச்சி தானோ?
ஒருவேளை
அவன் சொன்னாலும் நாம் எப்படி ஏற்றுக்கொள்வது ? ப்ரண்ட் வித்யா என்ன நினைப்பாள். அவள் பலவிதமான போராட்டங்களில் நடுவே தூங்கி போனாள்.
No comments:
Post a Comment