அவன் ரூமுக்கு வந்து அழுதான். இனி சினிமா துறையில் இருப்பதா? ஊருக்கு திரும்பி போவதா?
இல்லை ஊரில் இருக்கும் கொஞ்சூண்டு நிலத்தில் விவசாயம் செய்வதா ? என அவன் பல மனதாய் குழம்பி கிடக்க .,
“போச்சு பிரயோஜனம் இல்லாத அஞ்சு
வருசம். இன்னும் எதிர்காலம் முழுக இப்படியே போனா? என்ன ஆகறது?” அவன்
முடிவெடுத்தான். நண்பர்கள் யார் சொல்லியும் கேட்கவில்லை.,
ஒரு வெள்ளிக்கிழமை அவன் எழும்பூர்
சென்று ரயில் ஏறப் போக.,
“டேற்ய்ய்ய் நாட்டுபுறத்தான்…
ஹோய்ய்ய்ய்“ இரைச்சலோடு தாவி வந்து பின்னாடி கட்டிப்பிடித்து கொண்டார்கள்.
“ நாட்டுபுறத்தான்
நில்லுடா.ஏய்ய்ய்” பயணிகள் மிரள.,
“செல்வராஜா.அ நீ ஜெயிச்சுட்டேடா ஏய்ய்ய்ய்”
“ஏய்ய்...என்னடா ஆச்சு” அவனுக்கு
ஒன்றும் புரியவில்லை.,
“மச்சி உன் புரட்யூசர் ராஜாகண்னு மேன்சனுக்கு
போன் பண்ணார்டா.. உடனே வரனுமாம். ஹீரோ கிடைச்சிட்டாராம்”
“... நி ஜமாவாடா?’
“கோயிலுக்கு போயிருக்கன்னு சொல்லி
சமாளிச்சோம்..உடனே போகனுமாம். ஆட்டோ பிடிச்சி போ...”செல்வராஜா அழுதான்
“ஆட்டோக்கு காசு”
தணிகா காசு கொடுத்தான்.
அவர் வீட்டு வாசலில் போய் தன் பேரை
சொல்ல மேலே போக சொன்னார்கள்.
“இங்க பாரு செல்வராஜா., நான் இதுவரைக்கும்
வெறும் டிஸ்ட்ரிபியூட்டர் தான். உனக்காக
தான் முதல் தடவை புரட்யூசர் ஆகறேன். ரிஸ்க் எடுக்கறேன். ?”
“யெஸ் சார்”
“ உன் மேல நம்பிக்கை வை. உன் கதையில் நம்பிக்கை வை. இது இரண்டும் இருக்கா உனக்கு?”
“ இருக்கு சார் “
“ சரி இந்த படத்துக்கு மியூசிக் யார்கிட்ட போக போற ?” என கேட்க.
“ இது என்ன சார் கேள்வி? யாராச்சும் ஒருத்தர் கிட்ட போக வேண்டியது
தான்.” அவன் ஓரிரு பேர்களை சொன்னான்.
“ அப்படியா சரி நான் ஒன்னு சொல்றேன் . கேக்குறியா?”
“ சொல்லுங்க சார்”
“ பேசாம படத்துக்கு பெரியவர்கிட்ட போலாமா?”
“சார்” அவன் அதிர்ச்சியில் எழுந்துவிட்டான்
“பெரியவர்கிட்ட மியூசிக் கிடைச்சா உனக்கு
ஓகேவா?”
“சார்.. “ அவன் விழிகள் வியப்பால்
விரிய
“ஏன் என்ன ஆச்சு?”
“ என்ன சார் சொல்றீங்க? நம்ம படம் . ரொம்ப சின்ன படம். நானும் புது இயக்குனர். நீங்களும் புதுசு.. எனக்கெல்லாம் அவர் மியூசிக் போடுவாரா?”
“ போடுவார் உட்காரு நான் பேசிட்டேன். உன்ன வர சொல்லிட்டாரு.”
“சார் என்ன சார் சொல்றீங்க? என்னால் நம்பவே முடியலையே. அவர் மியூசிக் . என் கனவு சார்” என்றான்.
“எனக்கு தெரிஞ்ச தயாரிப்பாளர் நண்பர் மூலம் சார் கிட்ட பேசினேன் . வர சண்டே வர சொல்லி இருக்காரு, சன்டே கிளம்பு போறோம். சிச்சுவேஷனை சொல்லி சாங்ஸ் வாங்கிக்கலாம். அதுக்கப்புறம் நம்ம ஷூட்டிங் கிளம்பலாம். “
“ என்ன சார் சொல்றீங்க இன்னும் நான் டீமையே டிசைட் பண்ணலையே”
“ அது ஒன்னும் பிரச்சினை இல்லை, டெக்னிக்கல் டீம் எல்லாம் நான் அடுத்த வாரம் அரேஞ்ச் பண்றேன் படத்துக்கு ஒரு புது பொண்ணை ஹீரோயினா பாத்து
வெசிருக்கேன்..”
‘ ...சா..சார் ஹீரோ ?” அவன் அந்த முக்கியமான கேள்வியைக் கேட்டான்.
ராஜாகண்னு விழித்தார்.
“ அதான் உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல செல்வராஜா”
“பரவால்ல சொல்லுங்க சார்”
“ செல்வராஜா என்னை தப்பா நினைக்காத., வேற வழி தெரியல .,அதனாலதான்”
“எ.. என்ன சார் சொல்றீங்க ? என் கிட்ட உங்களுக்கு என்ன சார்
தயக்கம்?’
“அது வந்து..”
“சொல்லுங்க சார் “
“என்ன சொல்ல., பேசாம நானே ஹீரோவா நடிக்கலாமுன்னு..”
“ஸா.சார்..”
அவன் குடித்த கூல்டிரிங்ஸ் வயிற்றிலிருந்து மறுபடியும் மார்பில் ஏறியது, தொண்டை அடைத்தது,”
‘ இந்த ஆளா?
அடபாவி எருமைக்கு சட்டை போட்டது போல் இருக்கிறான் .இந்த
ஆளா?”
ராஜாகண்னு ஆள் கறுப்பு., முத்துன முகம். நாப்பது வயசு ஆளு. கிராமத்து காட்டான். சுருட்டை முடி, கட்டையான மீசை, இவனை திரையில் காட்டினால் எப்படி ஒத்துக் கொள்வார்கள்?”
அவன் முகம் போன போக்கை பார்த்து
விட்டு,
“ செல்வராஜா சத்தியமா எனக்கு ஹீரோவா நடிக்கிற ஆசை எல்லாம் கிடையாது. உன்னோட ஹீரோ கேரக்டருக்கு நான் நடிச்சா தான் சரியாக வரும்” என அவன் சொல்ல,
அவன் மனதில் இதற்கு முன்பு பொள்ளாச்சியில் இங்கிலீஷ் டீச்சரை
ரேப் செய்ய வில்லன் போட்ட புரட்யூசர் போல
, இப்ப ஒரு ஆள்..இங்க.. அவனாச்சும் விலன். அய்யா.. ஹீரோவுக்கு ரெடி யா இருக்காரே.
ச்சே நமக்கு மட்டும் ஏன் இப்படி..?”
பண்ணையாராக நடித்த அந்த தயாரிப்பாளர் முகம் வந்து போனது. எல்லாம் தயாரிப்பாளரும் இப்படித்தான் அலைகிறார்களே கண்டிப்பா வேணுமுன்னா., ரூமில போட்டு வச்சிக்க வேண்டியது தானே? அதுக்கு ஏன் சினிமாவை பயன்படுத்தணும்? சினிமா அப்படிங்கறது வித்தையைக் காட்டற பொதுமேடை.
அங்குபோய் காம
ஆட்டம் போடுகிறார்கள் . இந்த விவஸ்தை கெட்ட மனசு இவங்களுக்கு எப்படி வருது?
அவன் உள்ளுக்குள் பல்லைக் கடித்தான்.
“கொஞ்சம் யோசிச்சி சொல்லலாமா சார்?”
“ செல்வராஜா இதுல யோசிக்கிறது ஒண்ணுமே இல்ல., நல்லா யோசிச்சு பாரு., நல்ல கதை, நல்ல இசை, ஆனா இதெல்லாம் மத்த ஹீரோக்களுக்கு சொன்ன புரியல, நடிக்க மாட்டேன் என்றாங்க.. எனக்கு உன்னோட கதையோட
டெப்த் புரியுது புடிச்சிருக்கு,.என்னை மாதிரு புது ஆளு இந்த படத்துக்கு சரியா
வரும். நிச்சயம் இந்தப்படம் ஜெயிக்கும். நான் ஹீரோவா நடிக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். என் படத்துல நான்தான் ஹீரோ “
“சார் அதுக்கு இல்ல சார், இந்த படத்துல கொஞ்சமாச்சும் ஜனங்ககிட்ட தெரிஞ்ச
ஃபேசா இருக்கணும்..”
“ ஒத்துக்குறேண், ஆனா பெரிய நட்சத்திரம் இல்லாத குறையை இந்த பெரியவர் ம்யூசிக் கண்டிப்பாக தீர்த்து வைக்கும் நம்பு.. இன்னொன்னு சொல்றேன். பெரியவர்கிட்டயே
நான் தான் ஹீரோன்னு சொல்லி தான் டேட்ஸ் வாங்கி இருக்கேன். அவர் கூட என்னை ஹீரோவா ஒத்துக்கிட்டாரு “ என்றார் ராஜாக்கண்னு.
அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
“ஓகேன்னா
., இந்தா அட்வான்சை பிடி..”
ஐம்பதாயிரம் ரூபாய் கொடுக்கப்பட ,
அவன் கை நடுங்க வாங்கி கொண்டான்.
“அப்புறமென்ன? வர வெள்ளி பூஜை ஓகேவா?’
“ஓ..ஓகே சார்..”
Part 3 release eppo
ReplyDelete