அந்த செல்வராஜ் கிராமத்தில் மாயாண்டி சுற்றி திரிந்த காலம் ஒன்று இருந்தது. வயதுக்கு மீறிய கற்பனைகளையும் தான் வாழ்க்கை சூழ்நிலைக்கு மீறிய சிந்தனைகளையும் கொண்டிருந்த ஒரு அபூர்வமான ஆளாக செல்வராஜ் என்கிற மாயாண்டி இருந்தான்.
சாதாரண மக்கள் பார்க்கும் காட்சிகள் எல்லாம் அவனுக்கு இயல்பிலேயே திரையில் பார்ப்பது போல இருந்தது . அவனுக்கு அந்த கிராமத்து பச்சை வயல்களும் , ஒற்றையடி பாதையும் திரை காட்சிகளாக மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.
அவன் வயதாக வயதாக அந்த கிராமத்தில் சொல்லப்பட்ட கேள்விப்பட்ட நேரில் பார்த்த பல கதைகள் அவன் மனதுக்குள் இயல்பாகவே திரைக்கதை அமைத்து எழுத தொடங்கியது. மிக அழகான கிராமத்து பெண்கள் ரவுடி மாப்பிள்ளை கட்டிக்கொண்டு அவஸ்தைப்படும் கதைகள் அவன் நெஞ்சை பிழிய வைத்தன. அவன் இது போன்ற பல கதைகளை இன்னும் மெருகேற்றி தன் மனதிற்குள் வைத்துக் கொண்டான். ஏன் எல்லா கிராமத்து பெண்களும்
டவுன் மாப்பிளைக்கு ஏங்குகிறார்கள்? என யோசித்தான். அவர்களுக்கு எது? ஏன்
பிடிக்கிறது என அறிந்து கொள்ள ஆசைப்பட்டான்.
அவன் மூளைக்குள் ரகசியமாக பல திரைக்கதைகள் உருவாகின . அவை பெரும்பாலும் தமிழ் சினிமாவிற்கு மிகவும் உகந்ததாக இருந்தது. பிரசவத்திற்கு பயப்படும் ஒரு கிராமத்துப் பெண்ணைப் பற்றிய கதை, மாமன், மச்சான், சீர் செனத்தி வந்த பிரச்சினைக்கு பிறகு அந்த குடும்பங்கள் எப்படி பிரிந்தன? அதன் விளைவுகள்? மூன்று தலைமுறைகளாக ஒரு சிறு விஷயத்திற்கு சண்டை போட்டு பிரிந்த இரு குடும்பங்களின் நாந்காவது தலைமுறை இணைந்தால் அது எப்படி இருக்கும்? என்பது போன்ற பல வித்தியாசமான திரைக்கதைகள் அவன் மனதில் ஒலித்துக்கொண்டே இருந்தன.
ஒருவழியாக மாயாண்டி கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, சென்னைக்கு பல சினிமா கனவுகளோடு வந்த போது ஏறத்தாழ 20 க்கும் மேற்பட்ட முழு நீள சினிமா கதைகள் ,அவன் மனதில் பவுன்டட் ஸ்கிரிப்ட் தயாராக இருந்தன.
ஆனால் அவனை யாருமே அங்கே சீண்டவில்லை. அவனை விட பல
திறமைசாலிகள் அங்கே சிங்க்கிள் டீக்க்கு சிங்கி அடித்து கொண்டிருந்தார்கள். அவர்கள் அங்கே தனிக் கூட்டமாக இருந்தார்கள்.
அவன் அன்னியப்படுத்தப்பட்டான்.
அவனது நிறமும், அவனது கிராமத்து
பேச்சும் மற்றவர்களை தள்ளி போக செய்தது. எங்கு போனாலும் அவன் புறக்கணிக்கப்பட்டான். உதாசீன படுத்த பட்டான். அவனால் பல சினிமா திரைக்கதைகளை யோசிக்க முடிந்தது. கோர்வையாக கதைகளை சொல்ல முடிந்தது.
ஆனால், சினிமாவை பற்றி அங்குலம் கூட தெரிந்திருக்கவில்லை . டிராலி, கேமிரா எதுவும்
புரியவில்லை.
யாரை நம்புவது? யாரை நம்பக் கூடாது? என அவனுக்குத் தெரியவில்லை , தங்க இடம் கொடுத்த நண்பனிடம் இரண்டு மூன்று கதைகளை சொல்ல, அந்த நண்பன் ஒரு உதவி இயக்குனரிடம் சொல்ல, அந்த உதவி இயக்குனர் அவனது இயக்குனரிடம் சொல்ல மாயாண்டியின் சில கதைகள் அவனுக்கே தெரியாமல் பல மாற்றங்களுடன் திரையில் வந்து ஓடிக் கொண்டிருந்தது.
முதல் மூன்றாண்டுகள் மிகவும்
கஷ்டபட்டான். அப்போது தான் தணிகா என்னும் ஒரு
நடிகன் அறிமுகமானான். ஒரு சில
கிராமத்து படங்களில் நடிக்க துவங்கி
இருந்தாலும் பெரிய வருமானம், நிரந்தர வாய்ப்பு அவனுக்கு இல்லாமல் இருந்தது.. அவன்
தான் மாயாண்டி , செல்வ ராஜாவாக ஆகுவதற்கு முன் தங்க, திங்க, சினிமா உதவி இயக்குனர்
வாய்ப்புக்கு என நிறைய உதவிகள் செய்தான்.
அங்கு தான் முத்து, ஜோசப் தங்கா எல்லாம் மாயாண்டிக்கு அறிமுகமாகி
நட்பானர்கள்.
தணிகா முயற்சியில் மிகவும் அரும்பாடுபட்டு ஒரு இயக்குனரிடம் மாயாண்டி
செல்வராஜ் உதவி இயக்குனராக சேர்ந்தான்.
அந்தப் படத்தில் தணிகா தான் ஹீரோ.
சம்பளம் இல்லாத ஹீரோ.
அந்த இயக்குனருக்கு ஒரு மண்ணும் தெரியவில்லை ,தயாரிப்பளர் சொன்னதற்கு எல்லாம் தலை ஆட்டினார். ஒருகட்டத்தில் தயாரிப்பாளரே டைரக்டருக்கு எப்படி படம் எடுக்க வேண்டும் என கற்றுத் தந்தார் .
கதாநாயகியின் அக்கா போலீஸ் ஸ்டேசன்
எஸ். ஐ என்பதை தயாரிப்பாளர் ஸ்கூல் டீச்சர் என மாற்ற சொன்னர் .
“ஏன் சார்?”
“எனக்கு சொந்தமா ஒரு ஸ்கூல் இந்த
ஊர்ல இருக்கு. அவளை டீச்சராக்கு. இடத்தை யூஸ் பண்னிக்கலாம்” என்றார். மாயாண்டி
அப்பவே திரும்பி வர நினைத்தான். தணிகா தான் தடுத்தான்.
“அந்த ஸ்கூல்ல டீச்சருக்கு ஒரு பிரண்டை போடு.
இங்க்லீஷ் மிஸ் ஓகேவா? “
‘சார்..”
“ நல்லா கவர்ச்சியா ஒரு பொண்ண அந்த கேரக்டருக்கு போட்டுக்க”
“எதுக்கு சார் தேவையில்லாம? ஏற்கனவே ஹீரோயின் படத்தில் இருக்காங்க. ஹீரோயின் அக்கா
இருக்காங்க. “
“ அட அவ பாட்டுக்கு ஒரு பக்கம் இருக்கட்டும் . இவ ஒரு பக்கம் காட்டட்டும்.. “
“என்னது ?”
“அந்த இங்லீஷ் டீச்சருக்கு வலிப்பு
நோய் வரும். பாத்ரூம்ல விழுந்துடறா. அதை பாத்துட்டு., ஹீரோயின் அக்கா யாரையோ
உதவிக்கு கூப்பிட போரா. அந்த சமயத்துல அந்த பக்கம் வர வில்லன் இங்லீஷ் டீச்சரை
ரேப் பண்னிடறான்..’
‘வலிப்பு வந்தவளை கெடுக்கறதா?
விளங்கும்” மாயாண்டி எழுந்து வந்து விட்டான்.
‘அவன் கிடக்குறான். கவர்சி.
இருக்கனும்பா. ஜம்புன்னு ஒரு படம். ஏன் ஓடுச்சி .. தோ கோச்சிகிட்டு போறாணே இந்த ஈர
வெங்காயத்துக்கு தெரியுமா?”
“தெரியாது சார்?”
“எது?”
“ ரொம்ப பழைய படம் ஜம்பு ஏண்
ஓடுச்சின்னு தெரியாது“
“ம்கூம்”
“ எல்லாம் கிளாமர் தம்பி.. நல்லா இறக்கி ஜாக்கெட்டை போட சொல்லு., ஹீரோயின் அக்காளையும் தொப்புளுக்கு கீழே புடவை
கட்ட சொல்லு. இந்த இங்கீலீஷ் டீச்சரை சென்டர் முந்தானை போட சொல்லு.”
திரும்ப வந்தான் மாயாண்டி,
“ஸார் நீங்க சொல்றது ரொம்ப
அமேச்சூர் தனமா இருக்கு. மலையூர் மம்பட்டியான் காலத்து சீனா இருக்கு.
இங்க ‘அப்பாவை அவரோட முதல்
சம்சாரத்தை பழிவாங்கற ஒரு அக்கா- தங்கை
கதையை எடுக்க வந்திருக்கோம்...”
“ நல்லா பழி வாங்கட்டும்.. வேணாம்னு
சொல்லலியேப்பா. அந்த இங்கிலீஷ் டீச்சர் சப்போர்ட் ரோல் தானேப்பா...”
“சாரி சார் , என் கதைல அதுக்கு
இடமில்ல”
“தூக்கிட்டு போடா உன் கதையை..
மரத்து நிழல்லுல பல்லு குத்திகிட்டே
நாப்பது கதை சொல்லுவேன்டா நான்” அந்த தயாரிப்பாளர் லோக்கல் ஆள். கரும்பு விவசாயம். முக்கியமான
தொழில் அவருக்கு. ஊர் பண்னையார் வேற.,
“அண்ணே விடுங்க அவனை ” என்றார்
இயக்குனர்.
“நீங்க சொல்ற மாதிரியே சிறப்பா
செஞ்சிடலாம்” இயக்குனர் தலை ஆட்ட., மறு
நாள் சென்னையிலிருந்து சிவப்பாய் தள தளவென ஒரு நடிகை வரவழைக்கப்பட்டாள்.
“தம்பி இவதானா? “
“ஆமாங்க.”
“ ம்ம் பாவாடையை கீழே இறக்கி போடச் சொல்லு, எல்லா சீன்லயும் தொப்புள் தெரியனும் ‘ என சம்பந்தமே இல்லாமல் அவர் ஒரு கேரக்டரை கதையில் உட்படுத்தினார் .
அடுத்த நாளில் இங்க்லீஷ்
டீச்சர் ரேப் சீன் வர., ஒரு மலையாள நடிகனை கூட்டி வந்து நடிக்க வர. அந்த ஆள்
யதார்த்தம் என்ற பேரில், “ இங்லீஷ்ல எனக்கு பிடிச்ச மூன்று எழுத்து எஸ். இ .
எக்ஸ்.. என டயலாக் சொல்லி கொண்டே
ஜன்னல்களை, கதவை ஒவ்வொன்றாக மூடிக் கொண்டே வர’
“கட்..” எனக் கத்தினார்
தயாரிப்பாளர்
‘சார்?”
‘ஏன்யா கொத்தும் கொலையுமா ஒரு பொண்ணு
நிமித்துகிட்டு படுத்து கிடக்கா.. மாரெல்லாம் நட்டுகிட்டு இருக்கு. மேல பாஞ்சி நசுக்க வேணாமா?
இவன் என்னய்யா டயலாக் பேசி கிட்டு
இருக்கான்.. ஹெல்புக்கு கூப்பிட போன ஹீரோயின்
அக்கா வந்துடாது. இந்தாளு வேஸ்ட்யா .சீன்ல ஒரு லாஜிக் வேணாமா?,” பண்ணையார்
பதறினார்.
“சரிங்க சார். மேல விழுந்துடறேன்
சார்.” வில்லன் பதறி ஒத்துக் கொண்டான்.
“ஸ்டார்ட்..”
வில்லன் அந்த நடிகை மீது தொப்பென
விழ..
“ஆ,...” நடிகை கத்த,.
“கட் கட்”
தயாரிப்பாளரே எழுந்துபோய் அவனை
தள்ளினார்.
‘ முன்டம் அப்படியாவா மேலவிழுவே?
ஒரு நாசுக்கு வேணாம்” கத்த., மலையாள நடிகர் டைரக்டரை பார்க்க,. மாயாண்டி பட்டென
தலையில் அடித்துக் கொண்டு வெளியே போனான்.
“ இங்க பாருய்யா.. யோவ் டைரக்டர் எப்படி விழனும்னு
அவனுக்கு சொல்லி கொடு”
“ நானா?”
“சரி விடு... நான் விழுந்து
காட்றேன்”
‘என்னது ?” யூனிட் பதற.,
“..ம் கூக்க்க்ம் . இப்ப
பாருய்யா.. யோவ் சேட்டா என்னை பாரு..”
யூனிட் நமுட்டு சிரிப்புடன்
வேடிக்கை பார்க்க.,
“. ஏய் வாடி அன்னிக்கு என் மேலய
தக்காளிய தூக்கி அடிச்சேல்ல. இப்ப பாரு உன் ரெண்டு தக்காளிய என்ன பண்றேன் பாரு.” அவள்
மீது விழுந்தார்.
தயாரிப்பாளர் ஆள் குட்டை . ஆனால்
அதிக பருமன். தன் நூத்து சொச்ச எடையுடன் அந்த நடிகை மீது பொத்தென விழ..மொத்த
உடலும் நசுங்கியது போல அவள் ‘அய்யோ.” என கத்த அவர் அதிய மதிக்காமல் அவள்
முகமெங்கும் முகர்ந்தார்.. முலைகளில் முத்தமிட்டார்..
“கட் கட்...எழுந்திருங்க சார்.. இவ்ளோ
குளோசா வேணாம் சார். “
“அதை நீ கட் பண்ணிக்கப்பா”
“ஏன் சார் அந்த தக்காளி டயலாக்
வருது ?. அந்த பொண்ணு இதுக்கு முன்னாடி எப்போ சார் வில்லனை அடிச்சாங்க?” டைரக்டர்
கேக்க.,
“ஏற்கெனவே வில்லன் அவ கிட்ட
மார்கெட்ல.,வம்புக்கு இழுத்திருக்கான். அவ ஒரு கடைல இருந்த தக்காளியை எடுத்து
வில்லனை அசிங்கப்படுத்துறா.. அதுக்கு இப்ப ரெவஞ்ச்.. எடுக்கறான். எப்பூடி?”
“நீங்க டைரக்டரா ஆகி இருக்கலாம்
சார்”
‘அட போப்பா நான் வேற உன் பொழைப்பை
கெடுக்கனுமா? சரி அந்த பொண்ணு தரையிலயே கிடக்கே. எங்கேயா அந்த வில்லன் நடிகன்?
சட்டு புட்டுன்னு மேலவிழ சொல்லு., ’
“அவன் அப்பவே கிளம்பி ரெயிலுக்கு
போய்ட்டான்யா. அவன் நடிக்கலையாம். ”
“அடடா.. ஏன்பா? சரி விடு..பேட்டா
மிச்சம். யாரும் வேணாம்.. நானே நடிக்கிறேன் ‘
“அய்யய்யோ” நடிகை உட்பட ஒட்டு மொத்த யூனிட்டே கெஞ்சியும் அவர் ஒத்து கொள்ளவில்லை. அந்த
நடிகையின் முலைக் காம்பு தன் நெஞ்சைக்
குத்த, அந்த சுகத்தை அவரால் விட
முடியவில்லை.
அவரே களத்தில் குதித்துவிட்டார். அந்த நடிகையின்
மீது படுத்து கொண்டே., தக்காளி டயாலாக் பேச.. “சார் தக்காளி எல்லாம் சொல்லாதீங்க. சென்சார்ல
கட் பண்னிருவாங்க..”
“ஓ சார். மறுபடி பண்றேன்..” அந்த
ஆள் மறுபடி மறுபடி விழ.. அந்த நடிகை அவனது ஹிம்சையை தாங்க முடியாமல், அவரது
காதோரம் “எதுக்கு இத்தனை பேர் முன்னாடியாவா?” என நடிகை கிசுகிசுக்க., அந்த ஆள் இளித்து கொண்டே எழுந்தான்.
அன்று இரவு சூட்டிங் முடிந்த பின்னும் அந்த பண்ணையாரும் இங்லீஷ் டீச்சரும் கிளாஸ் ரூமை விட்டு வெளியே வரவில்லை. அந்த இங்க்லீஷ் டீச்சர் கேரக்டரை ஏன் உருவாக்கினார்? என்பது மாயாண்டிக்கு தெரிந்து இருந்தது. ஆனால் அந்த இயக்குனர் அது பற்றி எல்லாம் கவலை படவில்லை.
மறுனாள் அவர் பட்டப் பகலிலே குடித்துவிட்டு மட்டையாகி விட்டிருந்தார் . உச்சி வேளையில் வெயிலில் மர நிழலில் வேட்டி அவிழ்ந்த்து படுத்து இருந்த இயக்குனரை பார்த்ததும் அவனுக்கு வேதனையாக இருந்தது .
இப்படிப்பட்ட ஒரு இயக்குனரிடம் வேலை செய்யவா தான் வந்தோம்?’ என அவன் நினைத்து வேதனைப் பட்டான். படத்தின் ஹீரோ, நமக்கு
சான்ஸ் வாங்கி தந்த தணிகாவிடம் கூட சொல்லாமல் கொள்ளாமல் ரயிலேற ஸ்டேஷனுக்கு வர.,
ஸ்டேஷனில் அங்கே ஏற்கெனவே சிமென்ட் இருக்கையில் தணிகா தனியே உட்கார்ந்திருந்தான்.
“டேய்ய் தணிகா நீயும் வந்துட்டியா?”இருவரும் அழுதார்கள்.
“ நீ ஏண்டா”
“ அந்த பண்ணையார் எனக்கு அண்ணன்
கேரக்டர பண்ண போறாராம். ஓடியாந்துட்டேன்”
“என்னது”
“ஓரு நியாயம் வேணாமா?
“ சினிமா ஏன்டா இப்படி செல்லரிச்சி
கிடக்கு?”
“இந்த மாதிரி சூடு , சொரனை இல்லாத
டைரக்டர்ஸால தான்.,”
“சரீ நீ என்னடா பாதில கிளம்பிட்டே?
படத்துல கன்டியூனிட்டி இல்லண்னா எப்படிடா?”
“அட போடா.. இந்த படத்துல நான் இந்த ரென்டு வாரத்துல
நான் நடிச்ச ஒரே சீனு.., ‘ஆத்தா நான் பாஸாயிட்டேன்’ ங்க்கிறது தான் அதை வேற யாரை
வெச்சியும் எடுக்க முடியாதா?”
‘சரி அப்ப என் கதை? என் கதையை
கொடுத்திருக்கேமே”
“ஏய் நீ வேறடா. இவனுங்க சத்திமா
உன் கதைக்கு கிட்ட கூட போகமாட்டாங்க..வேற
ஒன்னு எடுப்பானுங்க, எடுத்து முடிக்கவும் மாட்டாங்க.. அப்படியே முடிச்சாலும்
ரிலீஸ் செய்ய மாட்டாங்க ., ”
இருவரும் சிரித்தார்கள்
.சென்னைக்கு ரயிலேறினார்கள்.
அவர்களுக்கு
எதிர்காலத்தை நோக்கிய பயத்தை விட சென்னைக்கு போனால் ரூமில் முத்துவும், ஜோசப்
தங்காவும் கலாய்ப்பார்களே என்று தான் அதிக பயமாய் இருந்தது.
No comments:
Post a Comment