மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Saturday, May 28, 2022

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1760

"சரிங்க சார், பொழைக்கிறதுக்கு நிறைய வழி இருக்கும்போது ஏன் இந்த மாதிரி மனித குலத்தை சீர்படுத்த உள்ளுணர்வை பற்றி சொல்லி கொடுக்க, சொல்லி உங்க டைமை வேஸ்ட் பண்றீங்க" என்றான் ஈஸ்வர்.

"தம்பி அப்படி சொல்லக்கூடாது. நார்மலான வாழ்க்கை வாழ்றதற்கு இங்கே நிறைய பேர் இருக்காங்க. ஆண்டவன் நம்பள இந்த வேலைக்காக தேர்ந்தெடுத்திருக்கிறான். அதனால்தான் நமக்கு ஓர் சிறப்பு சக்தியை கொடுத்து இருக்கான். இங்க பாரு நான் ஆராய்ச்சி பண்ணி எவ்வளவு விஷயம் எழுதியிருக்கேன். பார். "

ஒரு புத்தக கட்டை தூக்கி போட்டார்.

" ஒரு விளம்பரம் பார்க்கிறீங்க டிவில. அடுத்த விளம்பரம் என்ன வரும்னு யாருக்காவது தெரியுமா? ஆனால், இதை படிச்சு ப்ராக்டிஸ் பண்ணால் உன்னால் அது கண்டு பிடிக்கமுடியும். நான் சொல்வேன். "

இன்னொரு புத்தக கட்டு

"இங்க பாரு இந்த புக்கை பாரு, ஒரு லாட்டரி சீட்டு இன்னைக்கு விக்கிறாங்க. எந்த சீட்டு, எந்த நம்பர் அடிக்கும் என்று உன்னால கண்டுபிடிக்க முடியுமா?. இதை படிச்சு பாரு, உனக்கு அது புரியும். "

"அட"

"இந்த புக்கை பாரு.. இதோ பார் இது எலக்சன். இங்க கிட்டத்தட்ட ஒரு 225 பேர் எலக்சன்ல நிப்பாங்க. எந்த கேண்டிடேட் ஜெயிப்பாங்க அப்படின்னு சொல்ல முடியுமா? இந்த புக்கை படிச்சுப் பாரு, உனக்கு உன்னால அத சொல்லமுடியும். '

"அசத்துறீங்க சார்"

"அது மாதிரிதான் இத பாரு அடுத்த வருஷம் கோல்ட் ரேட் கண்டுபிடிக்கணும்னா, இத பாரு அடுத்த வருஷம் எவ்வளோ மழை, எந்த இடத்தில் புயல் எங்க சரியா கிராஸ் பண்ண போகுது, எது விளையாட்டில் நிறைய முன்னுக்கு வரணும்னா கரெக்டா இந்த புக்கை எல்லாம் படிச்சா தெரிஞ்சுக்கலாம். "

"ஓ மைகாட்"

"அது மட்டுமில்ல., மனப்பாடம் பண்ணி படிக்கிறதுல முன்னுக்கு வரணும் அப்படின்னா இதோ இந்த புக்கை பார்த்து படித்து தெரிஞ்சுக்கலாம் ., இயல்பாவே புத்தி மந்தாமா இருக்கா.. தோ இதை பயிற்சி பண்னனும்..உள்ளூணர்வை  வளத்துக்கனுமா? இதோ.. வீட்டுல இருக்குர ஆன்மாவை சுத்தப்படுத்தனுமா? ஒத் இந்த புக்கு.. ஒருத்தருக்கு புத்தியில நிரைய டிஸ்டர்பன்ஸா இதோ இந்த புக்கு... ஒருத்தர்கிட்ட நீங்க உலகத்துல எந்த மூலையில் இருந்தாலும் விர்ச்சுவலா பேசனுமா? பாக்கனுமா? தோ இந்த புக்கை படி... மன நலம் சரியில்லையா? இந்த புக்குதன ரெஃபரன்ஸ்அவ்வளவு ஏன் உலகையே இருந்த இடத்துல உக்காந்துகிட்டு தடை  இல்லாம சுத்தி  வரனுமா ? தோ இதை படிங்க. இது மெடிசனுக்கு. இது செக்சுக்கு. இது வசியத்துக்கு..." அவர் சொல்லி கொண்டே போக.,

"சார்..." ஈஸ்வர் முற்றிலும் பேச்சிழந்தான். எப்பேர்பட்ட புதையல் இது. அவற்றை எடுத்து தடவி பாத்தான்.

"ஆனா ஒன்னு இதை எடுத்த உடனே படிச்சி செயல்படுத்திட முடியாது. முதல்ல உங்க ஆன்மாவை சுத்தம் பண்ணிக்கனும்.. நல்லது செய்ய ஆரம்பிக்கனும்.  தியானம் , குண்டலினின்னு பயிற்சி செய்து உள்ளூணர்வை மேம்படுத்திக்கனும். பார் மொத்தம் 17 தொகுதி போட்டீருக்கேண் ஒவ்வொன்னும் 200 பக்க்கத்துக்கும் மேல" என சொல்லி கிட்டத்தட்ட 17 விதமான பைண்ட் செய்யப்பட்ட புத்தகங்களை எடுத்து அவன் பார்வைக்கு வைத்தார் சமரன்.

9 வயது வரை ஒவ்வொரு மனிதன் செய்யும் தவறும் அவனை பாதிப்பதில்லை. 9 வயதிற்கு மேல்தான் அவனது செயல்கள் கண்காணிக்கப்படுகிறது என்ற விஷயமும் அந்த காலத்தில் போர் காலங்களில் 9 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களை அழைத்து போகாம இருந்ததன் காரணமும் அவனுக்கு புரிந்தது.  அது மட்டுமல்ல, சமரன் எழுதிய பல ஆய்வு நூல்களை எடுத்துக்கொண்டு பல வரலாற்று நூல்களையும், அமானுஷ்ய நூல்களையும் படித்து ஒன்றுடன் ஒன்று ஒப்புமை படுத்திக்கொண்டான். அதில் சொல்லப்பட்டிருந்த சமரனின் ஆய்வுகள் அனைத்துமே நூறு சதவீதம் பொருந்தி வந்தது

"சார்.. இந்த புக்சையெல்லாம் இப்ப இருக்குர ரீடர்ஸ் படிப்பாங்கன்னு நினக்கறீங்களா?'

"சொல்ற விததுல சொன்னா படிப்பாங்க ஈஸ்வர்.. இதெல்லாம் படிச்சா மனுஷ வர்க்கமே உசரத்துக்கு போய்டும்.. யோசிச்சு பாரு, எல்லாரும் ஞானியாகிட்டா சண்டைக்கும் சச்சரவுக்கு இடமே கிடையாது, திருட்டு, கொள்ளௌ, குற்றம் கிடையாது. உலகின் மேம்பட்ட இனமா, மனித இனம் ஆகிடும். அதுக்கு நிதி திரட்டதான் நிரைய கம்பெனியை காண்டாக்ட் பண்றேன். எல்லாரும் இழுத்தடிக்கிறாங்க. எனக்கு எந்த பிராபிட்டும் வேனாம். என் ஆராய்ச்சி எல்லாருக்கும் போய் சேரனும்.  கால் பிராக்சர் ஆனதில இருந்து  என்னால அலைய முடியல.. எனக்கு மர்கெட்டிங்க் அறிவு பெருசா இல்ல. எனக்கென்னமோ  உன் கூட சேர்ந்து இதை பெரிய அளவில கொண்டு போக முடியும்னு தோனுது..ஈஸ்வர்' சமரன் நம்பிக்கையாக சொல்ல.,

"எ.என்னப்பா?

சமரன் சொன்ன  எல்லாவற்றையும் கேட்டு., அவர் தூக்கி போட்ட புத்தக கட்டை பார்த்து  ஈஸ்வர் பயங்கரமாக சிரித்தான்.

"ஏம்பா சிரிக்கிற?".. என கேட்டார்.

"இல்ல சார், இவ்ளோ எல்லாம் கண்டுபிடிச்சி இருக்கீங்க, உள்ளுணர்வில பெரிய ஆளா இருக்கீங்க, என்ன நம்பி இதையெல்லாம் சொல்லணும் என்று எப்படி உங்களுக்கு தோணுச்சு? உள்ளுணர்வு அப்ப மட்டும் வேலை செய்யவில்லையா? "என கேட்டான்.

"தம்பி, நீ சொல்றது எனக்கு புரியவில்லையேப்பா", என சொன்னார் சமரன்.

". ரைட் சார், நான் நேரடியாகவே கேட்கிறேன். உங்களால எவ்வளவு கிலோ மீட்டர் வேகத்துக்கு ஓட முடியும்? உங்க உடைஞ்ச காலை வெச்சுகிட்டு".

அவருக்கு ஏதோ விபரீதமாகப் பட்டது.,

" நான் அவ்வளவு வேகமாக ஓடக்கூடிய ஆளு இல்லையேப்பா, "

"ஓகே.அதான் எனக்கு வேணும்.. அப்போன்னா சரி சார் "என சொல்லி ஒரே வினாடியில் 17 புத்தக கட்டுகளையும் எடுத்துக் கொண்டு அவன் தெருவை நோக்கி ஓடத் துவங்க,

அதிர்ச்சியில் உறைந்து விரைத்து பார்த்து திகைத்து  'ஏய்... ஏய்... " என வார்த்தை வராமல் நாற்காலியில்  உட்கார்ந்து கொண்டு ஈஸ்வர் புத்தக கட்டுகளை தூக்கி கொண்டு தலை தெறிக்க ஓடுவதை விழிகள் வெறித்து பார்த்தார் மானுடத்தை உய்விக்க வந்த அரிய பிறப்பான சமரன்.


 --------------------------

வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்., 

உடனே படிக்க இந்த லிங்கை அழுத்தவும்

4 comments:

  1. Super update. He has become thief at last.

    ReplyDelete
  2. Sir balakinaran son Surya va

    ReplyDelete
  3. N V Neenga balakumaran son a
    Already enaku oru doubt erunthuchu enniki athu clear aiduchu

    ReplyDelete
  4. NV SIR neenga balakumaran son a

    ReplyDelete