மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Saturday, May 28, 2022

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1759

தானாகவே ஒரு மேசை கரண்டி வளைவதை பார்த்து அவனுக்கு திகில் ஆனது.

"ஒண்ணும் பயப்படாதே, இதுவும் என்னுடைய அதிகபட்ச சக்தி அவ்வளவுதான். அதாவது, ஒரு அசாத்தியமான மிகப்பெரிய உள்ளுணர்வு பெற்றவர்கள் கூட இவ்வளவு தான் பண்ணமுடியும். அதுவே, அந்த உள்ளுணர்வு வேறு ஒரு உடம்பிலேயோ, வேற ஒரு ஆன்மாவோடு கலக்கும் போது, அந்த ஆன்மாவிற்கு இருக்கக்கூடிய இயல்பான சக்தியை ஸ்பாயில் பண்ணிட்டு, அந்த ஆன்மா இருக்கக்கூடிய உடம்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இதுதான் பேய் பிடிக்கிறது. தவிர, மற்றபடி இந்த உலகத்துல பேய் பிசாசு எதுவுமே கிடையாது. படத்துல வராப்பல மரத்தையெல்லாம் தூக்கி அடிக்கிற சக்தி பேய்க்கு கிடையாது".

"..........."

" இன்னும் உனக்கு புரியும்படி சொல்லனும்னா கல்யாணம் ஆன பெண்கள் கணவன் கூட இருந்துட்டு, சுத்தமா இல்லாம மொட்டை மாடியில துணி வெச்சிட்டு அல்லது அவங்க மாதவிலக்கு ஆகிற போது, மொட்டை மாடியில் உச்சி வெயிலில் சுத்திக்கிட்டு அவங்களுக்கு இது போன்ற அமானுஷ;யமான விஷயங்கள் நடக்கிறதே என நீ கேள்விப்பட்டிருப்பே?"

"ஆ. ஆமாங்க சார்.எங்க ரிலேஷன் பொண்ணுக்கு அந்த மாதிரி ஆகி இருக்கு".

"யெஸ், அதை தான் நானும் சொல்றேன். அதுபோல சுத்தம் இல்லாத சமயத்தில் இது போன்ற கெட்ட ஆன்மாக்கள் அவங்கள தன் பக்கம் திருப்ப முயற்சி பண்ணும்.அவங்க புத்தியை தடுமாற வைக்கும். இந்த ஆன்மாக்களுக்கு அழிவு இருக்கா? இல்லையா? என்பது இதுவரைக்கும் எந்த ஆய்வுகளையும் சரியா நிரூபிக்கப்படவில்லை. ஆனால், இந்த ஆன்மாக்கள் இந்த பூமியில் அதனுடைய நிறைவேறாத ஆசைகளை தீர்த்துக் கொள்ளும். அப்படின்ன்னா இதுபோல ஏதேனும் சுத்தமில்லாத உடம்புகளை தேடிக்கிட்டே தான் இருக்கும். தினமும் பூஜை பண்றவங்க, அன்னதானம் போடுறவங்க, இன்னொரு உயிருக்கு உதவியாக இருக்கனுனும் என்று நினைக்கிறவங்க, பட்சிகளுக்கும், விலங்க்குகளுக்கும் உணவு வைக்கிரவங்க, கோபம், காமம், பொறாமை இல்லாதவங்க, புது ஆளுங்ககிட்ட கூட புன்னகையோட பேசறவங்க இவங்க கிட்ட கெட்ட  ஆன்மாக்கள் ஒருபோதும் நெருங்கறதே கிடையாது. நெருங்கவும் முடியாது. "

"நல்ல மேட்டர் சார்'

"உனக்கு இன்னொரு விஷயம் சொல்றேன். இது போல உள்ளுணர்வு உனக்கு அதிகமாக இருக்கும்போது, அதை நீ முறையா செயல்படுத்துனேன்னா உன்னால எல்லாத்தயும் எல்ல காலத்தையும் எந்த கணக்கும்  இல்லாம  கணிக்க முடியும்"

"அப்படின்னா?"

"உன்னால இன்னைக்கு மழை வருமா?, வராதா? என சொல்ல முடியும். இன்னும் கொஞ்சம் தீவிரமாக பிராக்டீஸ் பண்ணுனா, அடுத்து என்ன நடக்கப் போகிறது? என சொல்லமுடியும். இன்னும் முயற்சி பண்ணினா நாளைக்கு என்ன நடக்கும்? அப்படின்னு சொல்லமுடியும்"

";எல்லாம் கரெக்ட் சார். இதெல்லாம் தெரிஞ்சு நான் என்ன பண்ணபோறேன். இந்த உள்ளுணர்வு ஏன் நமக்கு?. "


"என்ன தம்பி இப்படி சொல்லிட்ட! இந்த ஒட்டுமொத்த உலகமே உள்ளுணர்வு என்ற விஷயத்தில் தான் இயங்குது. ஒரு மனுஷன் கடகட என்று முன்னேறுறான்;, அப்படினா அவன் அறிவாளியா இருக்கணும்னு அவசியம் கிடையாது. அவனுக்கு எதிர்காலத்தை கணித்திட அறிவும். உள்ளுணர்வும் அதிகமா இருக்கனும.; இந்த பாதையில் போனால் சரியாக வரும், இந்த பாதை தவறான பாதை என ஒரு வண்டி ஓட்டறவனுகு அந்த உள்ளுணர்வு கரெக்டா சொல்லணும். ஸ்போர்ட்ஸுல செஸ் எடுத்துக்கங்க. செஸ் ஆடும் போது இந்த அசாத்தியமான உள்ளுணர்வு கண்டிப்பா உங்களுக்கு தேவை. எது சரியான் மூவ்னு  வேகமா கெஸ் பண்னனும்..  க்ரிக்கெட்ல இந்த பால் பவுன்சாரா? புல்டாசான்ன்னு முன்னாடியே பேட்ஸ்மேனுக்கு தெரிஞ்ச்சாஃபுட்பாலுல ., இந்த பால் லெப்ட்ல அடிப்பானாரைட்ல  அடிப்பானான்னு கோல் கீப்பர் முன் கூட்டியே கெஸ் பண்னா? " சமரன் விளக்கினார்

'அட ஆமாம் சார்"

"இதைதான் விளையாட்டுல என்ன சொல்றாங்கன்னு அப்படினா, இம்மீடியட் ரிப்ளக்ஷன் அப்படின்னு சொல்றாங்க.  உதாரணமாக கிரிக்கெட் ஆடும்போது ஸ்லீப் பொசிஷன்ல நிற்கிற ஆள் எப்பவுமே அதிக ரிப்ளக்ஷன் இருக்கக்கூடிய ஆளத்தான் நிற்க வைப்பாங்க ஏன்ஏனென்றால், ரியாக்ட் பண்ண டைம் அங்க ரொம்ப குறைவு. டென்னிஸ் மட்டுமல்ல, எல்லா விளையாட்டுக்கு ரிப்ளக்ஷன் என்ற உள்ளுணர்வு ரொம்ப முக்கியம். பந்து வர்றத்துக்கு முன்னாடியே, இது இந்த பக்கம் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு என சொல்லி வர்றதுதான் உள்ளுணர்வு. படிப்புக்கும் அதான்"

"கரெக்ட் சார்'

"உள்ளுணர்வு சரியா இருந்தா விளையாட்டில் மட்டுமில்ல, எல்லாத்திலுமே ஜெயிக்கலாம்" அவர் விரிவாக பேச அதிர்ந்து போய் இருந்தான் ஈஸ்வர்.

"அது மட்டுமல்ல தம்பி, என் உள்ளுணர்வு பொறுத்தவரை பார்த்தீங்கன்னா, உனக்கு நான் ரொம்ப நாள் கழிச்சு இவளோ ஆழமா இதப்பத்தி கேட்கிற ஆள் நீயாகத்தான் இருக்குற. அதனாலதான் இத உன்னை நம்பி உன்கிட்ட சொல்றேன். இங்கே பார் என சொல்லி தனது பழைய பெட்டியை திறந்து நிறைய கட்டைக் காகிதங்களை எடுத்து மேசையில் வைத்தான்.

இது எல்லாமே 25 வருஷமா நான் ஆராய்ச்சி பண்ண ஆராய்ச்சியோட முடிவுகள். இது எல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாக போடணும்னு ஒரு நினைப்பு எனக்கு இருக்குது. இது மட்டும் புத்தகமாக வெளியே வந்துச்சுன்னா இது ஒட்டுமொத்த மனித குலத்துக்கே பயன்படக்கூடிய புத்தக தொகுதியா இருக்கும். இது எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படணும். உலகம் பூரா போய் சேரணும் என்று தான் என்னோட ஆசை. ஆனால், அதுக்கான நிதி கிடைக்கல. நிதி வேண்டும் என்பதற்காகத்தான் இந்த மாதிரி கண்காட்சிக்கு, தனிப்பட்ட நிறுவனங்களுக்கு போய் ஆன்மாக்கள், உள்ளுணர்வுகள், வாழ்வியல் முன்னேற்றம் அப்படி என்று நிறைய தலைப்புகளை பேசி வருகிறேன்"  என்று சொல்லி நாற்காலியில் சாய்ந்தார் சமரன் 

 ------------------------------

 

வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்., 

உடனே படிக்க இந்த லிங்கை அழுத்தவும்

No comments:

Post a Comment