காமம் கலந்த கதைக்கு பெரும்பாலும் மனம் திறந்து வாசகர்கள் பாராட்டுவதில்லை.
ஆனாலும் அதை மீறி பல வாசகர்கள் மெயிலில், தனி செய்தியில் பாராட்டிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
சமீபத்தில் ராம கிருஸ்ணன் என்னும் வாஸகர் தனிபெரும் பாராட்டு மடலை எழுதி ழுப்பி இருக்கிறார்.
இது போன்ற வாசகர்களின் உற்சாகத்தால் தான் நான் தொடர்ந்து எழுத விருப்பமாக இருக்கிறேன் ,
இவருக்கு எனது அடுத்த படைப்பு அன்பளிப்பாக அனுப்பி வைக்கப் படும்,
------------------------------------------------------------------------
காம பெருநதி– ஒரு மதிப்புரை
பெருமதிப்பிற்குரிய என். வி அவர்களுக்கு ,
என் பெயர் ராம கிருஷ்ணன். சினிமா துறையில் உதவி இயக்குனர்.
காம பெருநதி நான் படித்த உங்களின் முதல் புத்தகம். எப்பேர்பட்ட நாவல்,, அற்புதமான எழுத்து பிரவாகம்..
சில சமயங்களில் நல்ல உணவகங்கள் பொது வழிகளில் இருப்பதில்லை. நம்முடைய ருசிக்கான தேடலைப் பொறுத்தே அவற்றைக்கண்டடைய முடியம்.உணவகங்கள் விஷயத்தில் நாம் தேர்வு செய்யவதற்கு நமக்கு நண்பர்கள்,அலை பேசி செயலிகள் போன்றவை உதவுகின்றன.
ஆனால் இலக்கியத்தில் அப்படி விலாசங்கள் எளிதில் கிடைப்பதில்லை. அதிலும் காம நாவலில் அது எப்போதுமே கிடைக்காது. பல இடங்கள் சுற்றிய பின்னேரே நான் இங்கு வர நேர்ந்தது.
உங்களைப் படிக்க வெகு தாமதம் தான், ஆனால் பாதகம் இல்லை,முன்பே வந்திருந்தாலும் எனக்கு இவ்வுளவு பாதிப்பை இந்த நாவல் கொடுத்திருக்காது, என் மனம் இதைத்தாங்கும் அளவிற்குப் பண்பட்டிருக்காது.
அதனால் நான் தாமதமாய் வந்ததும் என்னளவில் நலம் என்றே கருதுகிறேன்.
இந்த நாவல் என்னுள் ஏற்படுத்திய பாதிப்புகளை இப்படி கீழ்க்கண்டவாறு தொகுத்து இருக்கிறேன். இதை நான் review எழுதும் மன நிலையில் எழுதவில்லை,நான் விமர்சகன் அல்ல, இங்கு நான் ரசிகனாக சௌம்யா, கிருபா, ஷாம் அபர்ணா, சந்திராவுடன் சுற்றிய நாட்களை மட்டும் தொகுத்து பதிவு செய்ய நினைக்கிறன்.
நாவல் அமைப்பு
முதல் பாகம் அபர்ணா மற்றும் சௌம்யாவின் பின்னனி வாழ்க்கை குறிப்பு.
தி.ஜா. , ந.பா, ஜெயகாந்தன் ஆகியோரின் எழுத்துக்கு குறைவில்லாமல் ஒரு விஸ்தாரமான விவரிப்பு, படித்ததும் திகைத்து போய் விட்டேன். சௌம்யாவின் கல்யாண கலாட்டா நாவலில் தம்பதியரின் பிரிவிற்கான முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
கதை மெல்ல சௌம்யா, சந்திராவின் அந்தரங்கத்துக்குள் நுழைகிறது., சந்திரா, கிருபாவுர்டன் புணர்ந்து விட்டு , அந்த பழியை முருகேசனிடம் போட., திடுக்கென நிமிர வைக்கிறது.
பக்கங்களை கடத்த அல்லாமல், கிருபா, சந்திராவின் காரில் மலர்ந்த எதேச்சையான இச்சை உறவை சொல்லும் போது நாவல் பல சாரு நிவேதிதாவை, ஞானியை தாண்டி வாசகனை திக்கு முக்காட வைக்கிறது.
அது மட்டுமல்ல ஒரு டாக்டரின் வீட்டில் டிரைவராக பணி புரியும் கிருபாவின் காமகளி ஆட்டங்கள் யூனிக்காக இருக்கிறது. அதிலும் திடீரென வரும் ரேணுகா தேவியின் டிரான்ஸ்போர்ஷன் யாரும் எதிர்பாராதது.
அதே தெருவில் வசிக்கும் டாக்டர் சாரங்கனின் நீண்ட நெடு நாள் இச்சையை விவரித்துவிட்டு, பணிபெண் சந்திராவை கைக்குள் போட்டு படுக்கையில் வீழ்த்தி, அவள் மூலமாக சௌம்யாவின் வீட்டில் நுழைய அவர் திட்டமிட்டு சௌம்யாவை தொடுவதுடன் முதல் பாகம் நிறைவு,.
இரண்டாம் பாகத்தில் அபர்ணா கலவி இடம் பெற்றிருந்தாலும் நிஜமன சூரன் கிருபா தான். தனி ஆவர்த்தனேமே நிகழ்த்தி விட்டான். ஒவ்வொரு பக்கமும் நிரம்பி வழியும் பாலுடா பாட்டிலை நினைவுப் படுத்துகிறது.
மூண்ராம் பாகத்தில் எதிர்வீட்டு இரு சுந்தரிகளுடன் பல ஆட்டங்கள்., திரிசம்கள்., லாஜிக்கலான பினைவுகள்., அப்புறம் கிளைமாக்ஸ்.
அப்பப்பா கிளைமாக்ஸில் ஒவ்வொரு வரியும் ஆயிரம் மணிரத்னம் படங்களுக்கு ஒப்பானவை. இயல்பானவை..
பெரும்பாலும் நாவல்கள் அமைப்பு என்பது ஒரு பொதுவான தளத்தில் பங்குகொள்ளும் வெவ்வேறு மனிதர்களின் கதைகளாக அல்லது அனுபவங்களாக இருக்கும். அதாவது, கதை மாந்தர்கள் அனைவரும் கதையின் மையச்சரடில் இணைக்கப்பட்டிருப்பார்கள். நாம் அது போன்ற நாவல்களில் பெருநதிகளில் பயணம் செய்யும் அனுபவத்தை அடையலாம். அது ஒரு வகையான பயணம்,அது எல்லோரும் செய்ய கூடியது.
ஆனால் அதே நதி,கிளை நதிகளாகப் பிரிந்து பல ஊர்களுக்குள் சென்று அங்கிருந்து கால்வாய்களாகப் பிரிந்து குளத்தில் சென்றடைவது வரை பின்தொடர்வதென்பது இயலாத காரியம்.எத்தனை கிளை நதிகளில் செல்வது? கிளை நதிகளில் இருந்து பிரியும் வாய்க்கால்களில் எதைத் தேர்வு செய்து பின்தொடர்வது? இப்படி செய்து கொண்டே இருந்தால் அந்த ஆட்டத்திற்கு முடிவும் உண்டோ? அப்படி ஒரு ஆட்டமே காமப் பெரு நதி. அந்த நதி தான் சௌம்யா., மனோகரன்.
நதியின் கிளைகளாக நான் தொகுத்துக் கொண்டவை
சந்திரா - கிருபா, சௌம்யா- கிருபா, சந்திரா- சாரங்கன்., கிருபா - சுஜி., கிருபா - ரேணு...
எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், கதையில் பல இடங்களில் நான் கற்பனை செய்து வைத்திருந்தது பல காட்சிகள் அப்படியே பிரதிபலிக்கப்பட்டிருந்தது. படிக்கும் போதே காட்சிகள் விரிகின்றன.
நாவலில் எவ்வுளோவோ இடம் இருந்தும் இதை ஏன் வியக்கிறேன் என்றால் கற்பனையே sub consciousnessஇல் செய்வது தான்; ஆனால் அந்தக் கற்பனையின் உள்ளும் ஒரு sub consciousness இருந்து கற்பனையில் நாம் உருவாக்கிய விஷயங்களில் நாம் உணராத சிலவற்றைப் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதை முதன் முதலாக அனுபவபூர்வமாக உணர்ந்தேன்.
கிருபாவின் பகுதிகள் அனைத்தும் நான் வாசிக்கும் பொழுது எதோ நானே அந்த வீட்டில் கார் ஓட்டியது, சௌம்யாவிடம், ரேனிவ்டமும் பல வருடங்கள் வேலை பார்த்தது போலவும் அனைத்தையும் மிக நெருக்கமாகவும் உணர்ந்தேன். வாசிப்பை வாழ் நிகர் அனுபவமாக்குகிறது உங்கள் எழுத்துகள்.
சௌம்யா, சந்திரா, கிருபா, ஷாம்., பிரசன்னா ஆகியோரின் காமஇச்சைகளும்
Transgressive – a violation of moral or social boundaries.
சமூக வரையறைகளை ஒழுக்கங்களை மீறுவது என்று இதை என்று மொழிபெயர்த்துக் கொள்ளலாம். உயர்வானவை மட்டுமே சமூகத்தின் விழுமியம், அது நாம் ஒன்றாகச் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்ட வரையறை.
எல்லா காலங்களிலும் மனித இச்சைகள் மீண்டும் மீண்டும் தர்க்கங்களை மீறியே செல்கிறது. அதனால்தான் விழுமியங்களுக்கு அனைவரும் உரத்த குரல் கொடுத்து விட்டு, pornography-ஐ சத்தம் இல்லாமல் பார்க்கிறார்கள்.
எனது அலுவலக நண்பன் ஒருவன், பக்தி சிரத்தைகளில் அவனை மிஞ்ச முடியாது. ஒருநாள் அவன் கைபேசியில் youtubeஇல் டைப் செய்யப் போகும் பொழுது ஒரு பிரபல நடிகை பேரைப் போட்டு பக்கத்தில் hot என்று டைப் செய்து இருந்தான். இது அவனது அந்தரங்கம், நான் நுழைய இடமில்லை.
ஆனால் இந்த மனிதர்கள்தான் பொதுத்தளத்தில் transgressive என்ற வார்த்தைக்கு எதிர்வினையாற்றுபவர்கள். தங்களிடம் ஒரு குற்ற உணர்வு இருப்பதாலேயே அவர்கள் இதை மறுக்கிறார்கள். இந்தக் குற்ற உணர்வு நீங்கி உங்களிடம் நீங்கள் சகஜமாக இருக்க வேண்டும் என்றால் சௌம்யாவின் அந்தரங்கங்களுக்குள் நுழைய வேண்டும். அவளது அந்தரங்கம் ஒரு கடல். இறுதி வரை அவள் புணர நினைக்கும் ம்யூஸ்,பாரிஸில் தனது எதிர்ப்பைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்கும்.
காமத்தின் உச்சத்தை அடைய தினம் துடிக்கும் மனம், இதய அடைப்பிற்கும் முக்கிய காரணமாக காம இச்சைகள் பூர்த்தி அடையாமல் தினம் சுய போகம் செய்ததினால் உண்டான மனஅழுத்தம், காஸ்டிலியான மெத்தை வாங்கி அதன் மேல் கலவி கொள்ளவேண்டும் என்ற ஆசை , அலைபேசியில் அவள் கேட்கும் சந்திராவின் காமப் பேச்சுக்கள் என்று ஸௌம்யாவின் வாழ்க்கையில் பல வகைகள் உள்ளன .
ஆனால் அவை அனைத்தையும் மனோகரனைக் கண்டவுடன்ம் தூக்கி எறிகிறாள்.
" நான் அழுக்காயிட்டேன்.... கசங்கிட்டேன் மனோ" என அவள் தலையில் அடித்து அழும்போது ஒரு காம கதை காவிய கதை ஆகிறது.
இது போன்ற நாவல்களை வெறும் morality அடிப்படையில் செக்ஸ் கதை என்ர அளவில் நிராகரித்தால் இழப்பு நமக்கே.இது சமகால வாழ்வின் ஒரு அப்பட்டமான உண்மையைப் பேசுகிறது. இலக்கியம் சமூகத்தின் மனசாட்சி,இது நாம் எவ்வுளவு sexually deprived -ஆக இருக்கிறோம் என்று நமக்கு உணர்த்தும். இன்று காமம் ஒரு commodity. இதனை வலைத்தளங்கள் நம்மால் நம்ப முடியாத வகையில் புணரும் காட்சிகள், பல நூறு வகைகளில் புணர்ச்சி, இப்படி காமம் தினமும் நமக்கு உற்பத்தி செய்து கொடுக்கப்படுகிறது.
இந்த நுகர்வுத்தன்மையில் இருந்து நம்மை எப்படிக் காப்பது என்பதை நீங்கள் சௌம்யா பாதையில் சென்று பார்த்தால்தான் தெரியும்.
கிருபா, ஷாம்,. சௌம்யா எலலம் கோடானுகோடி இந்தியர்களைப் போல sexually deprived, அவர்களும் எத்தனையோ வழிகளில் முயற்சித்தாலும் இச்சை மட்டுமே எஞ்சுகிறது. ஆனால் யாரின் அத்துமீறல் எதுவும் ஆபாசமாகத் தெரியவில்லை.
நாம் இன்று பின்பற்றிக் கொண்டு இருக்கும் போலிதனமான ஒழுக்கவியலும் நமது நுகர்வு மனப்பான்மையும் நம்மை ஒரு மன அழுத்தத்திற்குள்ளாக்குகிறது என்பதை காமப் பெரு நதி பட்டவர்த்தனமாகக் காட்டுகிறது.
இந்தியாவின் பெரு நகரங்களில் ஆண் பெண் இருவரும் சகஜமாய்ப் பேசுவது இயல்பான ஒன்று. ஆனால் மற்ற அனைத்து ஊர்களிலும் பொது இடங்களில் பேசினாலே அப்பன் காதுக்கு விஷயம் போய் விடும். முதலில் அடி ,அப்புறம் தான் விசாரணை. இது போன்ற பல அடக்கு முறைகளில் சிக்கித் தவித்த ஒரு தலைமுறைக்கு கட்டற்ற ஒரு சுதந்திர வெளியாக, நோட்டமிட எந்தக் கண்களும் இல்லாத, சமூகத்தின் எந்த வரையறையாலும் ஒழுங்கு செய்யப்படாத ஒரு தளமாக இணையம் அமைகிறது. ஆணோ அல்லது பெண்ணோ எத்தனை பேருடன் வேண்டுமானாலும் பேசலாம். அதிலும் சொந்தமாக கணிணி வைத்திருக்கும் வீட்டில் எவ்வுளவு மணி நேரம் வேண்டுமானாலும் பேசலாம்.
இங்கு உரையாடும் ஆண்களும் பெண்களும் பொது இடங்களில் கண்ணியமாகப் பேசினாலும் அவர்களின் அந்தரங்கக் கனவுகள் இணையத்தில் நிறைவேற்றப்பட்டன. சமூகத்தில் இணையத்திற்குப் பின்பு ஆண் பெண் உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்களை பற்றி சமூகவியாளர்கள் ஆராய நாவலின் இந்தப் பகுதி ஒரு தொடக்கப் புள்ளி. (இது குறித்த ஆய்வுகள் வந்துஇருக்கின்றனவா என்று தெரியவில்லை) இது போன்ற விவாதங்களைத் துவக்கத்தான் நமக்கு transgressive நாவல்கள் தேவை. சமூகத்தின் விழுமியங்களை ஒரு தலைமுறை முழுவதும் மீறத் தூண்டிய கட்டாயம் எது என்ற கேள்வியை எழுப்புகிறது நாவலின் இந்தப் பகுதி.
மலையளவு புற்கள் இருந்தாலும் ஒரு ஆடு அதன் வயிற்றளவே உண்ணும். என்னால் முடிந்த வரை தொகுத்து உள்ளேன். இந்த வாதங்கள் அனைத்தும் நான் உங்கள் எழுத்துடன் நடந்த சம்போகத்தில் உருவாக்கி கொண்டேன்.
1300 பக்கங்கள் கொண்ட இந்த நாவலைப் படிப்பதற்கு எனக்கு 10 நாட்கள் தேவைப்பட்டன. இந்த வருடத்தின் ஆரம்பத்தின் மிகத் தீவிரமான நாட்கள் என்று சொல்லுவேன். அதை கொடுத்ததற்கு மிக்க மகிழ்ச்சி.
பி.கு : சில பேர் மட்டுமே நாவலை வாங்குவதாகவும், தமிழில் நாவல் எழுதுவது வீண் என்று உங்கள் பிளாகில் குறிப்பிட்டுஇருந்தீர்கள். வருந்துகிறேன். நீங்கள் காலத்தின் பொக்கிஷம்.. காம அருவி.. இயற்கையான வயாகரா... உங்கள் எழுத்துக்களின் நினைவோடு படுக்கையில் புகுந்தால்., கட்டில் அனுபவம் புதுமையாக இருக்கும்..
நன்றி
ராம கிருஸ்னன்.
-----------------
இவருக்கு எனது அடுத்த படைப்பு அன்பளிப்பாக அனுப்பி வைக்கப் படும்
VAIRA VARIGAL
ReplyDeleteஒவ்வொரு வார்த்தையும் உண்மை சொறிந்த வார்த்தைகள்
ReplyDeleteSUper review.. also yiou must be good writer and creator Bro
ReplyDeleteHai NV
ReplyDeleteWHEN YOU RELEASE KAMA PURUNADHI CLIMAX EPISODE?