மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, May 31, 2024

கள்வெறி கொண்டேன் முதல் பாகம் - EP 3

அத்தியாயம் 3

 

அது நடந்த 5 மாதங்களுக்கு பின் பரசு குடும்பம் சென்னைக்கு மாறியது.

சென்னைக்கு  கிளம்பும் போது, என்ன தான் டெல்லி பிடிக்கவில்லை என்றாலும். இந்த பதினொரு வருசம் இருந்த அரசாங்க வீட்டை விட்டு பிரிவது கடினமாக இருந்தது.

அது ஒரு மினி பங்களா. ஓல்ட் டைப்தான். ஆனாலும் அந்த வீட்டின் கட்டடகலை தென்னிந்திய கட்டடக்கலை போல இருக்கும் அவளுக்கு அது தான் டஹய்வீடு. என்னமோ தெரியவிலை மனதுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது.

. பலகணி, ஜன்னல், கதவுகள் அலமாரிகள் ஒவ்வொன்றும் கலை அம்சத்துடன் இருக்கும். விஸ்தாரமான வீடு , அகலமான தாழ்வாரம் என அஞ்சு  சென்ட்டில் அமைந்த  அதிகாரிகளுக்கான வீடு அது. கிச்சனே படுக்கயறை போல பெரிதாக இருக்கும். அதில் மொத்தம் 4 படுக்கை அறைகள், அதில் இரண்டை பூட்டி வைத்துவிட்டு, இரண்டை பூட்டி இருந்தார்கள்.

சாமான்களை எல்லாம் வண்டியில் ஏற்றி விட்டு, விஜி அந்த வீட்டை பிரிய மனமில்லாமல் ஜன்னல் கிரில்லை போட்டு சுரண்டி கொண்டிருக்க, பரசு வந்து அணைத்துகொண்டான்.

அவள் ஏறிட்டு பார்க்க, அவளது மோவாயில் நீர் முட்டி நிற்க

"இங்க பார்.. நாங்கல்லாம் நாடோடி மாதிரி. அதுக்கு தான் இத்தினி காசு,  சம்பளம்., இந்த வீட்டை விட மடிப்பாக்கம் கோர்ட்ரஸ் ரொம்ப மாடர்னா இருக்கும். ரோ ஹவுஸ் சிஸ்டம் . உனக்கு ரொம்ப பிடிக்கும். அங்கயும் இதே மாதிரி டான்ஸ் கிளாஸ் நடத்து.. நீயும் உங்க தங்கச்சியும் ஆட்டம் போடு. யாரு கேட்டா?"

"..................." அவள் மௌனமாகவே இருந்தாள். வீட்டைப் பற்ரிய துக்கம் இன்னும் அவளுக்கு மேலிட,

"இங்க பாரு விஜி. ஒரு பொருளை விட்டு பிரியறோம், இல்லை இழக்கறமுன்னா. அது சம்பந்தமா நடந்த கெட்டதை  நினைச்சுக்கனும். "

"ச்சீ என்ன பேச்சு இது?"

"ஆமா அப்பத்தான் பிடிப்பு போகும். "

"இந்த வீட்டுல எந்த கெட்டதும்  நடக்கல.  நீங்க பெரிய அதிகாரி ஆனீங்க. அவார்ட் வாங்கினீங்க. .ஷோபனாவுக்கு ரொம்ப வருஸ்ம கழிச்சி கல்யாணம் ஆச்சு. ஷிவானி பெரிய மனுஷி ஆனா..நான் டான்ஸ்ல ரொம்ப பேமஸ் ஆனேன்.' அவள் இன்னும் பேச முடியாமல் நன தழுதழுக்க.

"ம்ம் கரெக்ட் தான். ஆனா,. இங்க தான்..."

"................"

"நம்ம ஷோபனாவுக்கு டைவர்ஸும் ஆச்சு.."

"ப்ச்... என்னங்க?"

" நீ சொன்னதால நான் சொல்றேன். அதே மாதிரி நாம் இங்க வந்த., அந்த மாசம் தான்,,, உனக்கு.." அவன் பாதியில் நிறுத்த

"வேணாம் சொல்லாதீங்க"

"யூ காட் அபார்ஷன் ஆப்டர் அ லாங்க் டைம் பிரக்னன்சி"

"சொ...சொல்லாதீங்கன்னு சொல்றேன்ல?" அவள் சீறீனாள்.

ஜெய்ப்பூரில் இருந்து மாற்றலாகி, டெல்லி வந்த போதெல்லாம் விஜிக்கு, ஷிவானிக்கு பிறகு 5  வருசம்  கழித்து இன்னொரு மலர் தன் வயிற்றில் உருவாகி இருக்கிறது என தெரியாது. பையனோ? பொணோ யார் கண்டா?

அத்தை மட்டும் 'என்னடி என்னடி?" என எச்சரித்தாள்.

"அதெல்லாம் ஒன்னுமில்லத்தை. அடிக்கடி இப்படி  நாளு தள்ளி போவுது."  அவள் வயிற்றில் தப்பி தவறி உருவான சில வாரங்கள் கருவோடு வீட்டை காலி செய்து கொண்டு டெல்லிக்கு வந்து சேர., வீட்டில் பொருள்களை ஏறக்கட்டி சுத்தம் செய்ய , அயராத  வேலை காரணமாக அந்த கரு சிதைந்து போக., அப்படியே ஒடுங்கி போய் விட்டாள் விஜி. என்ன செய்தும் அடுத்த இன்னொரு கருவை தன் மணி வயிற்றில் கொண்டு வரமுடியவில்லை.

அத்தை அதற்காகவே அடுத்த சில மாதங்கள் பேசாமல் இருந்தாள்..

"சரி இப்ப எதுக்கு அதெல்லாம் கண்ணை துடைச்சுக்கோ. சோ உனக்கு நான் சொல்றது இது தான் . ஒரு இடத்தை விட்டு பிரியனுமுன்னா அங்க நடந்த கசப்பான விஷயத்தை  நினைச்சுகிட்டா அந்த இடத்தை விட்டு போகனும்னு தோனும். அதுக்காகத்தான் சொன்னேன்.. கிளம்பு. யார் கண்டா. போன இடத்துல ஏதாச்சும் புதுசா கிடைக்குதான்னு" பரசு அவள் வயிற்றறை தடவ.

" ச்சீ வெளிய அத்தை இருக்காங்க, கூட ஷிவானி இருக்கா..இப்ப போய்" அவள் விலக., அவன் சிரித்தான்.

"எனக்கு என்னமோ இந்த வீட்டை விட்டு போறது கஷ்டமா இருக்கு.."

"அதான் சொன்னேனே. ஒரு வீட்டை விட்டு போகனுமுன்னா, அந்த வீட்டுல நடந்த நமக்கு பிடிக்காத விஷயத்தை.. நினைச்சுக்கனுமுன்னு''

'அச்சோ என்ன பேச்சு இது. விடுங்கோ ப்ளீஸ்"

"..விஜி இந்த வீடு ரொம்ப ஸ்பெஷல். அப்படி ஈஸியா யாருக்கும் அல்லாட் பண்ண மாட்டாங்க.. ஒருவேளை ஒரு அஞ்சாறு வருஷம் கழிச்சி எனக்கு டெல்லியிலயே மறுபடியும் போஸ்டிங்க போட்டா., இந்த வீடே கேக்குறேன். போதுமா?" 'அவன் அவளை சமாதனப்படுத்தினான்.

அவர்கள் சாமான்கள் வண்டியில்  வர, அவர்கள் விமானத்தில் வந்து சென்னை சேர்ந்தார்கள். சென்னையில்  கோர்ட்ரஸ் வீடு அமர்க்கமாய் இருந்தது. தனி தனி காம்பவுண்ட்.. பிரைவசி. கொஞ்ச நாளில் விஜி டெல்லி வீட்டை மறந்து போனாள்.

சேலையூர் கிரிஸ்டி கல்லூரியில் ஷிவானி ஐ டி பிரிவில் சேர., அடுத்த 4 ஆண்டுகள்  விர்ரென ஓடின.

விஜி அடிக்கடி பிறந்த ஊருக்கு போய் வந்தாள்.  மகிழ்ச்சிக்கும் இன்பத்துக்கும் குறையில்லாத அந்த குடும்பத்தில் அவர்கள் சென்னைக்கு வந்த அஞ்சாவது வருசம், அதாவது இந்த வருசம் தான், ஒரு சறுக்கல் வந்தது.

பரசுவின் அம்மா நோய்வாய்ப்பட்டு மேலோகம் போய் சேர்ந்தாள்.

திடீர் ஜூரம்., கபம், சேர மூன்று மாதம்  குடும்பத்தை பாடாய் படுத்தி விட்டு பரசுவின் அம்மா ஒருவழியாய் கயிலாயம் போய் சேர., விஜிக்கு ஒரு கை இழந்தது போல இருந்தது.

பேரன் பேத்தி பாக்கமா போறேனடி? என கூட சொல்லவில்லை.

"கடைசிவரைக்கும் உன்னை மேடைல ஏத்திவிட்டு அழகு பாக்காம போவறேனே. அதான் என் கவலை"

அடாடா அத்தையின் மனசு யாருக்கு வரும்?. அவளே தன் மகள் வயிற்றில் பொண்ணா பிறப்பாளா? ஷிவானி வயத்தில பொண் குழந்தை பிறந்தா அது அத்தையா தான் இருக்கும். அப்போதே அவள் தீர்மானித்து விட்டாள்.

'அம்மா செத்து ஒரு வருசம் ஆகி, திவசம் கொடுக்கறத்துக்கு முன்னாடி, ஷிவானிக்கு கல்யாணம் பேசி முடிச்சிடனும்.."

பரசு தீர்மானித்தான். பல ஜாதகம் பார்த்து பொருத்தம் பார்தது ரகுபதியை ஓகே செய்தான். ஷிவானிக்கும் பிடித்திருந்தது.

"ரகு ரொம்ப மேன்லியா  இருக்கார்மா"

"என்னது?" விஜயலட்சுமி சீற.

"இல்லம்மா ஹானஸ்டா., மெச்சூர்டா இருக்கார்..ரொம்ப ரெஸ்பெக்டா பேசறார். நாலட்ஜபிள் பர்ஸன்,. ஷார்ப் மைன்ட்..ஹியூமனடிக் ஹார்ட்..ஸ்டராங்க், பிசிக்க்

"ஏய் போதும்டி"

"ஏங்க வயசு டிஃபரன்ட் இருக்கே..இவளுக்கு 21 அவருக்கு 29 பரவாயில்லையா?" விஜயலட்சுமி தயங்கி தயங்கி பரசுவைக் கேட்க

"ஏன் நாம கட்டிக்கலையா? 11 வருசம் டிபரண்ட்ல? ஒன்னும் பாத்தா அப்படி தெரில. யங்கா தான் இருக்கார்.. ஸ்போர்ட்ஸ் பெர்சன்.. அதில்லாம நம்ம ஷிவானி திமுதிமுன்னு இருக்கா.. அவளுக்கு 24, 25 பசங்கள்ளாம் ரொம்ப சின்னவனா தெரியும்.. பாக்க,  அக்கா, தம்பி போல இருந்தா ரொம்ப கஷ்டம்.  லைப் பூரா ஏட்டிக்கு போட்டியா இருக்கும்."

பரசுவின் வாதம் விஜிக்கு சரியாக தான் பட்டது. ஷிவானி பக்கத்தில் நிற்க வேண்டும். அவளை ஆண்டு அனுபவிக்க வேண்டும், ஊர் மெச்ச குடித்தனம் நடத்தனும் என்றால் ரகுபதி பாஸ்கரன் தான் சரி..ஆள் மாநிறமா இருந்தாலும் களையா இருக்கான். நுனி   நாக்கில் ஆங்கிலம், பல ஊர் பாஷை பேசுகிறான். ஷிவானிக்கு ரொம்ப மேட்சிங். அந்த தம்பதி ரொம்ப யோசிக்கவில்லை.

 

கார்த்திகையில் பேசி முடித்து இதோ, தை மாச ஜாம் ஜாமுன்னு கல்யாணம். மண்டபத்தை தவிர, வெளிய பெரிய அண்டா வைத்து வருவோர் போவோர்க்கு பூந்தி கொடுத்தார்கள். இரன்டு அண்டா தீர்ந்து போய்,. மூனாவது அண்டா ரெடி செய்து வாரி இறைத்தார்கள். உச்சி வெயிலில் நீர் மோர் கொடுத்தார்கள்.

"பரசு சார், ரொம்ப சந்தோஷம்., என்ன தான் சென்ட்ல் கவர்ன்மென்ட்டுனாலும், மாச சம்பளக்காரரச்சேன்னு நாங்க கொஞ்சம் யோசிச்சோம். ஆனா தடாபுடால்னு தூள் கிளப்பிடீங்க. ஸ்டேட்டை தூக்கி சாப்பிட்டுட்டீங்க" அவர் தன்னை சொன்னார்.

மண்டப வாசலில் ரகுபதியின் அப்பா பாஸ்கரன் பரசுவின் தோளைப் பிடித்து அழுத்திக் கொண்டார். ரகுவின் அம்மாவும் கைகூப்பி  நன்றி சொன்னாள்.

" நீங்க  சந்தோஷமா இருந்தா போதும். அப்ப தான் உங்க வீட்டுல  என் பொண்ணு சந்தோஷமா இருப்பா"

"அட சம்பந்தி சார்.. என்னங்க நீங்க., இனிமே அது அவங்க வீடு. நாங்க யாரு நாட்டாமை பண்ண.? கல்யாணம் முடிஞ்சி தேனிலவு போய்ட்டு வரட்டும்,. அதுக்கப்பறம் நங்க நல்லூர் வீட்டுலஇருந்து  நாங்க கிளம்பிடுவோம். எங்க கோயம்புத்தூர்ல பூர்வீக வீட்டுக்கு போய்டுவோம். அவங்க வீட்டுல உன் பொண்ணு ராஜ்ஜியம் தான்" ரகுவின் அம்மா சொல்ல,

"என்னங்க  தடக்குன்னு கிளம்பறீங்கன்னு சொல்றீங்க. குழந்தைகளை தனியா விட்டுட்டு.."

" அச்சோ பரசு சார்., என்ன தான் மானே தேனேன்னு, தங்கமா வெல்லமா இழைஞ்சாலும் காலப்போக்குல ஒரு சின்ன பிணக்கு, வந்தாலும் எல்லாருக்கும் கஷ்டம்.."

"அச்சோ என் மக. அப்படியெல்லாம் .."

"அட உங்க மகளை சொல்லலங்க. ஷிவானி தங்கமான பொண்ணு. ஆனா, காலம் ஒரே மாதிரியா இருக்காது, ஒரு அடி தொலைவா இருந்தா தான். பிடிமானம் இருக்கும். அவங்களுக்கு  நாங்க தர்ர பெரிய பரிசு தனிமை, சுதந்திரம்..  நாம பொழுது முச்சூடும் வீட்டுல இருந்தா, அச்சோ வீட்டுல பெரியவங்க இருக்காங்களே., நேரத்துக்கு வீட்டுக்கு போகனுமுன்னு விழுந்தடிச்சி ஓடியாறனும். எதுக்குங்கறேன்..? இது அவங்க லைப். அவங்க இஷ்டம்." ரகுபதியின் தந்தை பாஸ்கரன் சொல்ல,

"சார் ரொம்ப பெரியவங்க நீங்க.." பரசு நா தழுதழுத்து, அருகே இருந்த பிளாஸ்டிக் சேரில்  உட்கார,

"இப்ப அவங்களுக்கு என்ன குறை?. ரகுவுக்கு பெருங்களத்தூர்ல வேலை, நங்கநல்லூர் டூ மடிப்பாக்கம் 3 கிலோ மீட்டர் தூரம்.. .ஷிவானிக்கு வேனுமுன்னா அங்க போகட்டும். இல்ல உங்க வீட்டுல ஆசைப்பட்டங்கன்னா, நங்க நல்லூருக்கு ஓடியாறட்டும். நாங்க என்னாத்துக்கு நடுவுல அங்க?"

"பட்டும் படாம பேசறீங்களே?"

"அச்சோ பெரிய வார்த்தை., இது விலகி இருக்கிறது தான்., உதறி நிக்கறது இல்ல, குழந்தைங்க சந்தோஷமா வாழையா, ஆலமரமா வளரட்டும்.. எதுக்கு குரோட்டன் செடி மாதிரி தொட்டியில வெக்கறது?" பாஸ்கரன் சொல்ல., பரசுவுக்கு கொஞ்சம் மயக்கம்  வருவது போல இருக்க, கண்கள் சொருகி, வாய் கோணி,. சேரிலிருந்து சாயப்போக..

"என்னங்க.. என்னங்க......? " விஜயலட்சுமி பிடிக்க போக., அவர் இன்னும் துவள பாய்ந்து  வந்து தன் கரங்களில் பிடித்து தாங்கினார்.. பாஸ்கரன்.

"தண்ணி கொடுப்பா.. தண்ணி கொடுப்பா..."

திடீரென பரபரப்பு அதிகமாகி, கூட்டம் சேர.,

"ச் சே ஒன்னுமில்லப்பா... காத்து விடுங்க" மணமக்கள் மண்டபத்துக்கு வாசலில் ஓடிவர,

சில நிமிட களேபரத்துக்கு பின் பரசு கண்விழித்தார்.

"அப்பா என்ன ஆச்சு?" ரகு கத்த,

"சக்கரைப்பா. இப்படி தான் ஆளை தூக்கும்..."

பரசு மலங்க மலங்க விழித்தார்.

"டயாலில்ஸ் பண்றீங்களா? என்ன? "

"சே அதெல்லாமில்ல"

"மன்னிக்கனும் சக்கரை எவ்ளோ?'

"இருனூறு. மாத்திரை போடல.. அத தவிர அலைச்சல் .."

"ஆமா. பெரிய காரியத்தை பண்ணிட்டா ஒரு மன நிறைவு, திருப்தி., ஒரு மூச்சடைப்பு அதான்., எதுக்கும் மாத்திரை போடுங்க.. வேட்டியை சரியா கட்டுங்க"

"சம்பந்திம்மா . மாத்திரை எடுத்தாங்க"

"தோ" அவள் மண்டபத்தில் நுழைந்து தங்கள் அறைக்கு  நடந்தாள். மண்டப வாசலில் வேட்டி சரிய,  கணவன் மயங்கியது அவளுக்கு, அந்த இடத்தில் ஒரு மாற்று குறைவாக இருந்தது.

மாத்திரை எடுத்து திரும்ப அடி வயிறு தளர்வாக இருக்க, தொடைகள் துடிக்க,.திடீர் அவஸ்தையாக உடல் நெகிழ., வயிற்று தசைகள் இழுத்து பிடிக்க. ஏதோ ஒன்று கரைய..

அய்யோ டேட்ஸா.? விரல் விட்டாள். ச்சே டேப்லட் போட்டிருக்கனும். எப்படி விட்டேன்? ஆனா இன்னும் நாள் இருக்கே.? வேலை, அலைச்சல்.. அதான் சீக்கிரமா ஆகிடுச்சி..

 பரசுவின் டேப்லட்டை எடுத்து தங்கை ஷோபனாவை தேடி கொடுத்து அனுப்பி தனது ஹான்ட் பேக்கை துழாவி, அடியில் ஒளித்து வைத்திருந்த பேட் எடுத்து கொண்டு பாத்ரூமில் நுழைந்தாள் விஜயலட்சுமி.


 

கள்வெறி கொண்டேன் முதல் பாகம் இப்போதே பெற "




என் வி யின் அனைத்து நூல்களையும் படிக்க.

Authornv(dot)com

 

என் வி யின் படைப்புகள் பற்றி அறிய..

thirumbudi(dot)blogspot(dot)com

 

இந்த   நாவலினை விமர்சனம் செய்ய.

Naveenavathsayana(at)gmail.com

கள்வெறி கொண்டேன் முதல் பாகம் - EP 2

அத்தியாயம் 2

 

அவர்கள் ஒரு அதிசயமான மாமியார் – மருமகள் தான்

"குழம்பு கரண்டிய, சாம்பார்ல போடாதே.. சாம்பார் கரண்டியை ரசத்துல போடாதே" என அல்பமாய் மருமகளை விரட்டும் மாமியார் அல்ல, பரசுவின் அம்மா.

" இந்தாடி சாவி. இதுவரைக்கும் நான் ஓட்டுனேன். இனிமே நீ ஓட்டு. உன்னால முடியலன்னா சொல்லு.. நான் பாத்துக்கறேன். இது உன் புருஷன். உன் குடும்பம், உன் வண்டி...பாத்துக்க" அவள் ஒதுங்கி விட,.

" அத்தை நீங்க?"

" நான்  ஜன்னல் சீட்டுல கன்னம் பதிச்சி தூங்கற சாதராண , சௌகர்யமான பயணி. .அவ்ளோ தான்"  பர்சுவின் அம்மா நாசுக்காக விலகிவிட்டாள்.  ஜெயகாந்தனை கையில் எடுத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டாள்.

அந்த வீட்டில் பரசுவும் அவளும் சுதந்திரமாக ஆட்டம் போட்டார்கள். வருஷம் திரும்பும் முன்னே கையில் குழந்தை.. ஊரே மெச்சியது. 'என்ன கொடுப்பினை?' என சிலாகித்தது.

'அந்த திருஷ்டியே வினையாகி விட்டது.

"டக்குன்னு இன்னொன்னை பெத்து தொலைக்காதே..பால் ஒன்னுக்கு குடுத்துகிட்டே இன்னொன்னு வயித்தால போறதை அள்ளனும்" விஜியை அவள் குடும்பம் உருட்ட., அந்த அலுப்பே அவஸ்தையாகி விட்டது.

அவர்கள் பிள்ளை செல்வத்தை தள்ளிப் போட .மூனு வருஷம்  நிர்மலாமாக ஓடிப் போக., அதன் பின் எந்த விசேஷமும் வரவில்லை. அய்யோ என்னாச்சு..? கடவுளே!

"தப்பு பண்ணிட்டோம். அப்பவே வர விட்டிருக்கனும்..." பரசுவும் கூட புலம்பினான்.

"அட இவளுக்கு பேச்சு துணைக்கு ஒரு புள்ளையை தரலையே"

"புள்ளை பாவம், ஒத்த ஆளா சுவத்துக்கிட்ட பேசிகிட்டு, பந்து போட்டு விளையாடுது" விஜிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

குடும்பம் சென்னையிலிருந்து  குண்டூருக்கு  நகர்ந்தது. அத்தோடு நிற்கவில்லை.

பரசுவுக்கு அடிக்கடி பணி நிமித்தம் இடம் மாற்றல், ஓயாத பணி, கடும் அலைச்சல், நாள்கள் ஓடி, ஆண்டுகள் ஓட., பத்து வயதில் பூரிப்பாய் ஷிவானி வளர்ந்து  நிற்க.,

பரசுவுக்கும்  'சர்க்கரை'  லேசாய் எட்டி பார்க்க., அத்தோடு ரெண்டாவது  குழந்தையைப் பற்றி அவர்கள் யோசிக்கவில்லை.

ஆனால், ஷிவானியை பாக்கவே கண்கள் போதவில்லை. அவள் வீடு முழுக்க நிறைந்திருந்தாள். அவர்களை விட பாட்டி, தன் பேத்தி ஷிவானி மேல் உயிரையே வைத்திருந்தாள்.

 இருந்தாலும், "அத்தை.. காப்பி" என நொட்டென தரையில் வைத்து விட்டு விசிறலாக போகும் வழக்கமான மருமகளாக விஜி இல்லையென்பதால் , அந்த வீடு ஒற்றை பெண் பிள்ளையோடு மகிழ்ச்சியாகவே இருந்தது.

 

அதற்கு நன்றியாகத்தான் விஜியை பரத நாட்டியத்தில் புகுத்தினாள் பரசுவின் அம்மா. ஆம் விஜியின் தங்கை ஷோபனா அடிக்கடி விஜி வீட்டுக்கு வரப்போக இருக்க, சில முறை மாதக்கணக்கில் அக்கா, மாமா வீட்டுடன் ஷோபனா தங்க, அவள் மூலமாகத்தான்.,  அக்காவின் மாமியாருக்கு,  விஜியின் பரத நாட்டிய திறன் பற்றி தெரிய வந்தது.

“அக்கா விஜி காலேஜ்லயே நிறைய கிளாசிக்க்ல டான்ஸ் காம்படிஷியன்ல டிராபி வாங்க்கியிருக்கா..”

“அட  சொல்லவேயில்லையே.. பாட்டு தான் கத்துண்டிருக்கான்னு நினைச்சோம்...”

“பாட்டும் வரும். ஆனா டான்ஸ் தான் அவளுக்கு பிரைம்.. மேரேஜுக்கு முன்னாடியே டான்ஸ் கிளாஸ்  நடத்திண்டிருந்தா. மாசம் எட்டாயிரம் வரும்..”

“அட இத பார்ரா? ஏன் சொல்லல?" பரசுவின் வீடு வியந்தது.

குண்டூர், ஜெய்ப்பூர் என நகர்ந்து டெல்லியில் போய் விழ, அங்கே வேறொரு விஜி உதயமானாள். எல்லாம் அத்தை கைங்கர்யம்.

விஜி சொல்ல சொல்லக் கேளாமல், டெல்லியில் இருக்கும் போது பரசுவின் அம்மா நாட்டியப் பயிற்சிப் பள்ளி பலகை ஒன்றை வீட்டுக்கு முன்னாடி மாட்டி விட்டாள்.

“எதுக்கு அத்தை? இப்ப போய் இதெல்லாம், அவரு எதுனாச்சும் சொல்ல போறாரு” விஜயலட்சுமி தயங்க.,

“அடசும்மா இருடி., பொம்பளை பிள்ளைகளுக்கு தானே கத்து தர போறே? அதும் வீட்டோடு தானே?” அவள் உறுதியாய் நிற்க,

இருபது பேர் வரை வந்து அரசாங்க கோர்ட்ரஸ் மொட்டை மாடியில்  வந்து ‘தைய தக்க தாத்தோம் தோம் தீம்..’ என குதித்து விட்டு போனார்கள். பரசு சார் ஒய்ப் என்னும் சொலவடை போய், 'விஜயலட்சுமி மேடத்தோட ஹஸ்பேன்ட்' என ஆகிப் போனது..

அத்தை அத்தோடு நிற்கவில்லை ‘டெல்லி தமிழ் நாட்டிய சங்கம்’ போய் பேசி  சபாவில் ஸ்டேஜில் ஆட, விஜயலட்சுமிக்கு ஒரு டேட் வாங்கப் போராடினாள். பரசுவுக்கே ஆச்சரியம்.

ஆனால் அது நடக்கவில்லை; விஜியை விட அத்தைக்கு பயங்கர வருத்தம்,. விஜி அத்தையை கட்டிக் கொண்டாள். ;

"போறூம் போங்க..இதுக்கு மேல என்ன ஆடறது?. ஊருக்கு ஏண் ஆடனும் நீங்க என் மேல இவ்ளோ ஆசை வெச்சிருக்கீங்களே.. அது போதும்..”

“போடி. பைத்தியம்... அவ அவ அம்பது வயசுல தாம் தோம்னு குதிக்கிறா? உனக்கென்னடி..?.” விடாமல் அவள் யாரை யாரையோ போய்  பார்த்தாள். ஒன்றும் பலனிக்கவில்லை.

பரசும் செல்வாக்கை பயன்படுத்திப் பார்த்தான். எல்லாரும் வணிகமயமாக இருந்தார்கள். விஜயலட்சுமிக்கு வாய்ப்பு தரவில்லை.

"சார் .25 வயசுக்கு மேல நாங்க யாரையும் மேடை ஏத்தறதில்ல. இப்ப உங்க மேடத்துக்கு சரின்னு சொன்னா., நிறைய விஐபி வீட்டுல இருக்குற பொம்னாட்டிகள் எல்லாம் கிளம்பி வந்துடும். எப்பாவோ ஆடுன ஆட்டத்த பெருசா பேசி சான்ஸ், ரெக்கமண்ட் லெட்டர்  வந்து நிக்கும்.. அவங்களுக்கென்ன ஆடுவாங்க. கூட்டம் பாக்கனுமில்ல. சாரிங்க”

“கலைக்கு வயசில்லையே”

“ஆமா.. ஆனா. இப்ப கலைக்காக யாரு ஆடறா.?, புருஷன் பெரிய பதவில இருக்கார்ங்க்கிர திமிரு. உங்களை சொல்லலை. அவங்களுக்கு சொல்றேன். அதை சாக்க வெச்சி.. நான் நினைச்சா நான் நாட்டிய சபாவில ஆடுவேன்னு சவால் விட்டு ஒரு  55 வயசு பொம்பளை உடம்பை தூக்க முடியாம தூக்கிட்டு வந்து சபாவில சான்ஸ் கேட்டா. கையில மினிஸ்டர் லெட்டர்”

“அப்புறம்?”

“மினிஸ்டர் சம்சாரத்துக்கே இங்க சான்ஸ் இல்ல’ன்னு சொல்லி அனுப்பி வெச்சோம்” அந்த சபா செகரட்டரி பரசுவுக்கு நேரடியாக தன் பதிலை சொல்ல., அத்தோடு விஜயலட்சுமியின் மேடை  நாட்டிய பக்கம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.

யூட்யூப், ஆல்பம், டான்ஸ் ஸ்கூல் இது போதும் ‘ என அவளும் மனதை ஆற்றிக்  கொண்டாள்.

ஷிவானி பிளஸ்டூவை தொடும் போதே, பரசு ஷிவானியின் காலேஜ் & மேரேஜ் எல்லாம் சென்னையில் தான் இருக்க வேண்டும் என தீர்மானித்திருந்தான். அம்மாவும் சென்னை, மயிலை என பிடுங்கிக் கொண்டிருந்தாள்

அவளுக்காகவே 5 ஆண்டுக்கு முன்பாக பரசு குடும்பம் சென்னை வந்து சேந்தாச்சு.

'ஷிவானிக்கு மாப்பிள்ளை தமிழ்நாட்டுல தான்.." விஜி கூட உறுதியாக சொன்னாள். விஜிக்கும் எப்போடா சென்னை போவோம்? என இருந்தது.

சென்னை போனால் பிறந்த வீடு ரொம்ப பக்கம். அடிக்கடி போகலாம், வரலாம். இந்த ஷோபனா கூட அடிக்கடி வரலாம். டெல்லியாக இருந்தால் வரபோக ரொம்ப சிரமம்.

டெல்லி அதிக குளிர். அதிக வெப்பம். ச்சீ ஊரா இது? ஊர் மட்டுமல்லம் ஆட்களும் விஜிக்கு பிடிக்கவில்லை. சின்ன சின்ன ஆம்பளை பசங்களுக்கு கூட திமிர் ஜாஸ்தி. கேட்டால் கல்ச்சர் மிஸ்மேட்ச்சாம்.  நல்ல கூத்து,.

டெல்லியில் ஷிவானியின் பர்டே பார்ட்க்கு பிளா ஸ்டூ படிக்கும் அவளது ஆண் பெண் நண்பர்கள் வீட்டுக்கு வர, 

"ஷி இஸ் மை மாம்..டான்சர். பரத நாட்டியா." ஷிவானி சூல்ல

" ஓ பகுத் அச்சா...". வியந்து போன அதில் ஒரு பதினெட்டு வயசுப்  பையன் சல்வார் கமிஈஸ் போட்டிருந்த ஷிவானியின் அம்மா விஜய லட்சுமியை தடாலென கட்டிப்பிடித்து வணக்கம் சொல்ல முயல " சீ " என விலகி போய் அவனை தள்ளி விட, அவன் நேரே போய் டிவி ஸ்டாண்டில் போய் முட்டி, வழுக்கி கொண்டு தரையில் விழுந்தான்.

' ராஸ்கல்ல்ல்ல்' கடுமையாக அதிர்ந்து போனாள். விஜி.

அதை விட அவளது நண்பர்களுக்கு பெரிய அதிர்ச்சி.

"க்யா ஹோகையா?"

"என்னம்மா இப்படி பண்ணிட்டே.. ?"

"போடி அறையாம விட்டேனே"

"அய்யோ பட்டிக்காட்டு அம்மாவா நீ? ..ஜஸ்ட் ஹக்கிங்க் தானேம்மா.. அவன் சின்ன பையன் இல்லே"

"ப்ச் மீசை முளைச்சா அது ஆம்பள தான்.. என்னால அவனுங்க கூட கை கூட கொடுக்க முடியாது"

"போம்மா.. அதுக்கு போயி அவனை உதறிட்டியே..நல்லா பயந்துட்டான்"

"நல்லா தவடையில ஒன்னு கொடுத்திருக்கனும். அவன் அம்மாவை இப்படி கட்டி பிடிப்பானா?

"ஆமாம்மா.. இது அவங்க கல்சர்..உனக்கு கல்ச்சர் மிஸ் மேட்ச்"

"ச்சீய் என்னால் முடியாது.. உன் சினேகிதிகங்களை  கூட என்னால கட்டி புடிக்க முடியாது.. தூர  இருந்தே வணக்கம்,  சொல்ல சொல்லு.. இல்ல வெளிய இது"

"இட்ஸ் ஆட்ராஷியஸ் மம்மி.."

"போடி.."

பாவம் அவன் ரொம்ப ஷாக் ஆயிட்டான்..

"தீபக் சாரி. என் ஒய்ப் .. கொஞ்சம் கன்சர்வேடிவ்.."

"கொஞ்சம் இல்ல ., ரொம்பவே.,"

டான்ஸுல இடுப்பு தெரியாம டற ஒரே லேடி., இவங்களும் இவங்க சிஸ்டரும் தான்...எங்க சித்தி ஷோபனா"

 ஷிவானி அலட்டாலாய் சொல்லி தோளை குலுல்க..

"எனாஃப் ஷிவானி.பர்டே பார்டியை பாரு.." பரசு அதட்ட

"போங்க டாடி எனக்கு பர்டே மூடே போச்சு..."

"அதெல்லாம் ஒன்னுமில்ல, சியர்ஸ் பரசு தான் ஈடு கொடுத்தான்.

அன்று இரவுகூட, அந்த சம்பவத்தை நினைத்து வீட்டில் பரசும் ஷிவானியும் மாறி மாறி பேச.

" அட விட்றா.விஜிக்கு யார்டா தெரியும்? யாரு பழக்கம். ?  நாம தான் உலகம். அவ நம்மளை தாண்டி யார்கிட்ட பழகியிருக்கா சொல்லு.. இங்க பாரு ஷிவானி கண்ணு. யாரையும் வீட்டுக்கு அழைச்சிட்டு வராதே.. உங்கம்மாவுக்கு பிடிக்காது.. விஜியை யாரும் ஒன்னும் சொல்லாதீங்க. அவ வளப்பு அப்படி. சொக்கதங்கம் " அத்தை சிபாரிசுக்கு வந்து விஜியை காப்பாற்றினாள்.


 

 கள்வெறி கொண்டேன் முதல் பாகம் இப்போதே பெற "




என் வி யின் அனைத்து நூல்களையும் படிக்க.

Authornv(dot)com

 

என் வி யின் படைப்புகள் பற்றி அறிய..

thirumbudi(dot)blogspot(dot)com

 

இந்த   நாவலினை விமர்சனம் செய்ய.

Naveenavathsayana(at)gmail.com

Wednesday, May 29, 2024

கள்வெறி கொண்டேன் முதல் பாகம்


பாகம் – 1

அத்தியாயம் 1

சென்னை.

தை மாத ஆரம்பத்தின் குளிரும், லேசான வெப்பமும் கலந்த காலை நேரம்.

முந்தைய நாள் இரவு முழுக்க ‘கொட்டி தீர்த்த மழை’யின் சுவடு அதிகாலை தார்சாலையின்  கண்ணாடி போன்ற பளீச்சென தெரிந்தது.

 கோயம்பேடு  100 அடி சாலையின் மத்தியில் இருந்த அந்த நட்சத்திர ஓட்டலில் திருமண விழா ஒன்று மிக வெகு விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. நகரத்தின் மிக முக்கியமான விஐபிகள் திருமண அரங்கில் நிறைந்திருந்தார்கள் .

அங்கிருந்த பலருக்கும் பொதுவான விஷயம் பணம். ஆம் எல்லாருமே எலைட்டான ஜனங்கள். எதற்கெடுத்தாலும் ஆங்கிலத்தில் விசாரித்து,  ஆங்கிலத்தில் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

சர் புர்' ரென கார்கள். அதனால் பரபரப்பு. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை அது ஒரு பெரிய இடத்து திருமணம் .

மாப்பிள்ளை  ரகுபதி பாஸ்கரன் மாநில அளவிலான டென்னிஸ் பிளேயர். அவனை மீடியாக்களுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. எக்கச்சக்க பேர் காமிரா, மைக்கை தூக்கி கொண்டு வந்துவிட்டார்கள். மீடியா வெள்ளை வேன்கள்.

ரகுதான் சென்னை. அவனது அப்பவுகு கோவை. ரகுவிற்கு தனியார் நிறுவனத்தில் பெரிய பதவி. செம்மையான வருமானம். அப்பா ரிட்டையர்டு உப தாசில்தார். மண்டபம் முழுக்க அந்த பணம் வாரி இறைக்கப்பட்டிருந்தது. ரகு ஆறேகால் அடி தொன்னுத்தி சொச்ச கிலோ உடம்பு. உயரத்துக்கேற்ற அகலம். ஆனாலும் ஃபிட்னஸ்ஸில் கனக்கச்சிதம். வயது முப்பதுக்கு அருகே இருக்கலாம். ஆனால் கட்டுகோப்பான உடற்பயிற்சிகள் இன்னும் இளமையானவனாக, மண மேடையில் பக்கத்தில் நின்றிருந்த பேரழகி மணமகளுக்கு இணையானவாக கம்பீரமாக நின்றான்.

கொஞ்ச நேரம் முன்னாடி தான் அவளுக்கு தாலி கட்டி பொண்டடடியாக்கிவிட்டு உற்சாகமாக கை கொடுத்து கொண்டிருந்தான்.

காமிராக்கள் இடை விடாமல் கண் சிமிட்டின. நிறைய விஐபிகள் வந்து போட்டோ பிடித்தனர்.இந்த படங்கள் எல்லாம் நாளை தமிழ் & ஆங்கில நாளேடுகளில் வெளியாகும்.   

மணமகள் ஷிவானி. அதிக மேக்கப் இல்லாமல் அனுஷ்கா சாயலில் இருந்தாள். ஐந்தே முக்கால் அடி உயரத்தில் 34 இஞ்சு புஷ்டியான மார்பகங்களோடு தங்க நிறத்தில் மயக்கும் கருவிழிகள், சங்கு கழுத்து, சரிவான இடுப்பு,  சந்தன  நிற உடல் கட்டோடு ஜொலித்தாள் ஷிவானி, அவளது பேரழகிற்கே மணமகன் கிடைப்பது அரிதாக இருந்தது.

 “நீ கைக்கு அடக்கமா இருக்கே., ஆனா உன் பொண்ணு வாட்டச்சாட்டமா இருக்காளே., எங்க போய் மாப்புள்ளை புடிக்க போறே?”  அத்தை தன் மருமகளிடம், ஷிவானி அம்மா விஜய லட்சுமியிடம் அடிக்கடி சொல்லி கிண்டல் செய்வாள்.

ஷிவானி அவளது அப்பா போல. பரசுராமன் போல ஆஜானுபாகு தோற்றம். ஏதாவது சீரியலில் டைட்டில் ரோலுக்கு அப்ளை செய்தால், உடனே செலக்ட் ஆகி விடக்கூடிய கவர்ச்சியும், அழகும், இளமையும் அவளிடம் அளவுகதிமாக மேலோங்கி கிடந்தன.

ஒருகாலத்தில் டெல்லியில் இருந்தபோது பள்ளிக்கும் போகும் வயசிலேயே பசங்க பைத்தியம் பிடித்து போக, இங்க சென்னையில் வந்து கல்லூரிக்கு சேர, மடிப்பாக்கம் ஏரியாவே அல்லோகலப் பபட்டது. தெருவுக்கே ஷிவானி பேரை வைக்கலாமா? என அரும்பு மீசை பையன்கள் முழி பிதுங்க, எங்கிருந்தோ வந்த டென்னிஸ் காரன் ‘ரகுபதி பாஸ்கரன்’ ஷிவானியை தட்டிக் கொண்டு போய்விட்டான்.

எல்லாம் பணம், டப்பு செய்யும் வேலை.

ஆனால், ஷிவானிக்கேற்ற மணமகனாய் ரகுபதி வந்தான். மானிறம் என்றாலும், அடர்த்தியான தலை முடி, திடமான தோள்கள், 48 இஞ்சுக்கு மேலாக விரிந்த நெஞ்சு, கனமான தோள்கள், டிஷர்ட்டின் தையைலை பிரிக்க துடிக்கும் புஜங்கள்.  நிலைக்கதவு போன்ற முதுகு, ஒட்டிய வயிறு ஆகியவற்றால் இளமை, வேகம் சுறுசுறுப்பு, மீடியா, புகழ் என அவன் கொஞ்சமும் குறைவில்லாமல் ஷிவானிக்கு ஏற்றவனாக இருந்தான்.

இவர்களின் ஜோடிப் பொருத்தம் பார்த்து எல்லாரும் திகைத்து போனார்கள். ஷிவானியின் அப்பா பரசுராமுக்கு கை கொடுத்தார்கள்.

“ நீ இந்தியா முழுக்க ஊரு சுத்தினாலும், கடைசியில நீ சென்னையிலயே மாப்பிள்ளை புடிச்சிட்டியேப்பா. அதுவும் ஸ்போர்ட்ஸ் மாப்பிள்ளையை. புடிச்சிட்டே.” சிலாகித்தார்கள்.

“ மாப்பிள்ளை நல்ல பர்சனாலிட்டி.ஃபிட்டான பிசிக்..நம்ம ஷிவானி குட்டிக்கு பர்பெக்ட் மேட்ச்..” உறவுகள் சொல்ல பரசு குளிர்ந்து போனார். கல்யாணத்திற்கு  ஏகப்பட்ட அரசு உயர் அதிகாரிகள் வந்திருந்ததால் போலீஸ் பந்தோபஸ்தும் போடப்பட்டிருந்தது.

 

மணமகள் ஷிவானி என்னும் அழகுப்பெண்ணின்  தந்தை  பரசுராம் ஆரம்பத்தில் மைலாப்பூர்காரர். அப்புறம் மத்திய அரசு பணியில் சேர அவர் நாட்டுடமையாக்கப்பட்டவர் ஆனார். காரணம், வேலை. எங்கெங்கே தூக்கியடிக்ககப்பட்டு கடைசியில் டெல்லி. இப்போது சென்னை.

 பரசு மத்திய அரசில் ஒரு முக்கிய துறையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவருக்கு மத்திய மந்திரிகள் பலர் வெகு பரிச்சயமாக இருந்தார்கள். டெல்லியில் பணிபுரிந்து இருந்த பரசு, இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் மாற்றலாகி தற்போது சென்னையில் செட்டில் ஆகி இருக்கிறார். தற்போது என்றால் கடந்த 5 ஆண்டுகளாக சென்னை வாசம் தான்.

பரசுவின் மகள் ஷிவானி காலேஜில் நுழைய ஆரம்பித்ததில் இருந்து சென்னை மடிப்பாக்கம் தான்.

டெல்லியில், ஹிந்தி, பானிபூரி., பீடா போன்ற சமாச்சாரத்தை யெல்லாம் விட்டு விட்டு சென்னை வந்து செட்டில் ஆனதில் பரசு அம்மாவுக்கும் சரி.,  அவரது மனைவி, ஷிவானி அம்மா விஜயலட்சுமிக்கு சரி டன் டன்' டன்னாக ஆனந்தம்.

பரசுவின் மனைவி விஜயலட்சுமி டெல்லியில் இந்த போது புகழ்பெற்ற பரதநாட்டிய டான்சராக இருந்தாள். மொட்டை மாடியில் டான்ஸ் ஸ்கூல் நடத்தினாள். ‘மறந்த  நாட்டிய முத்ததிரைகள்’   என தனி ஆல்பம் போட்டிருக்கிறாள். இப்போதில்லை, ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு. அவளது தங்கை ஷோபனாவும் அவளும் சேர்ந்து ஆடிய பல நடனங்கள் யூ ட்யூபில் இப்பவும் சக்கைப்போடு போட்டிருக்கின்றன. விஜயலட்சுமி அப்போதெல்லாம் ஹிந்தி டிவிக்களில் நிறைய பேட்டி கொடுத்திருக்கிறாள்.

இருவரின் நடனத்தைப் பார்த்து தான்  நீண்டகாலமாக திருமணம் ஆகாத அவளது தங்கை ஷோபனாவுக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வரன் கூட கூடி வந்தது. அதெல்லாம் தனிக்கதை. பேசி பலனில்லை.

 

டெல்லியில் அந்த குடும்பம் அரசு அதிகாரிகள் குடியிருப்பில் வெகு நாள் தங்கி வாசம் செய்தது. நீண்ட நெடிய காலத்துக்குப் பின் பரசுவின் ஓயாத  நச்சரிப்பு மற்றும் செல்வாக்கின் காரணமாக அவனுக்கு சென்னையில் மாற்றல் கிடைத்தது. திருவான்மியூரில் அலுவலகம், மடிப்பாக்கத்தில் வீடு.

“பெருமாளே! என்னடா இது? மயிலாப்பூரு போலாம்னு’ சொன்னியே. இங்க காட்டுல வந்து தள்ளிடியே?” பரசுவின் அம்மா கோபித்து கொண்டாள்.

“அம்மா புரிஞ்ச்சுக்கோ. இப்ப மயிலையில நமக்கு தெரிஞ்சவா யாருமில்ல.. எல்லாம் அதை விட்டு போயாச்சு. மயில, ட்ரிபிளிகேன்லாம் ரொம்ப நெரிசல். பொல்யூஷன் ஜாஸ்தி. ஜனங்கல்லாம் அவுட் ஆப் சென்னை நகர ஆரம்பிச்சிட்டா.. பெருங்களத்தூர் டூ மணலி, அப்புறம்  இந்தாண்டை தின்னணூர் வரைக்கும் இப்ப சென்னை தான். இந்த மடிப்பாக்கம், புழுதிவாக்கம், நங்கனல்லுர்லாம் ஹார்ட் ஆஃப் சென்னைம்மா.."

"மடிப்பாக்கம்லாம் ஒரு காலத்துல காடுடா பரசு"

"அது ஒன்ஸ் அப்பான் எ டைம். இப்ப அப்படில்ல., நிஜமான டீசன்டான சென்னையே இப்ப சௌத் சென்னை தான். சரவணா ஸ்டோரே இங்க வந்தாச்சு.. நான் கூட மடிப்பாக்கத்துல தான் லேண்ட் வாங்க்கி வீட்டை கட்டப் போறேன். மயிலையை மறந்துடும்மா” பரசு என்னதான் சமாதானம்  சொன்னாலும்,  

'மயிலையும், அல்லிக்கேணிய தவிர இங்க பூலோகத்துல மனுஷா வாழ்றதுக்கு வேற என்ன இடம் இருக்கு சொல்லுங்கோ?" என்பாள்.. "  பரமுவின் அம்மா.

அவளுக்கு தினமும் பெருமாளை சேவிக்க வேண்டும்.

" காலைல சுப்ர பாதம்,. காதை சொக்க வைக்கிற வேத சப்தம். ரத்னா கஃபே ஹோட்டல் காபி.., மெரீனால வாக்கிங்.. அடடா வேற ஒன்னும் வேனாம் போ.. இங்கத்த ஜனம் மாதிரி வேற எங்கயும் வராது.." இத்தனைக்கும், அம்மா ஸ்ரீரங்கத்துக்காரி.

"சென்னை கூட நிரந்தரம் இல்லம்மா. மத்திய சர்க்கார் வேலைன்னா அப்படித்தான் அங்கங்க தூக்கி அடிப்பான். என்னை அடிச்சது ரொம்ப கம்மி. ரொம்ப கேப் விட்டு தானே அடிக்கிறான்."

" போதும்டா ஆந்திரவில ஆறு  வருசம். உபி யி ல நாலு வருசம். இங்க டெல்லில பதினொரு வருசம்.. ஷிவானி படிப்பு ரொம்ப கெட்டு போச்சு.."

"என்ன நஷ்டம் இப்ப? நாலு பாஷை பேசறா"

"பேசி..? எதுக்குடா  மத்த  நீஷ பாஷை? தமிழ் போறுமே" அம்மா ஒரு நாலாயிர திவ்விய பிரபந்த பிரியை.. அவளது பூர்வீகம் ஸ்‌ரீரங்கம், என்பதால் ஆழ்வார் புராணத்தின் எல்லா பாசுரமும் மனப்பாடம். அவள் ருதுவாகி கல்யாணம் ஆகும் வரைக்கும் திருச்சியை தாண்டி வந்ததில்லை.

பரசுவின் அப்பா தான் மயிலை. கல்யாணம் கட்டி பத்தொன்பது வயதில் மயிலை வந்து சேர்ந்து விட்டாள். பரசுவின் அப்பா ஹைகோர்ட்டில்  பெரிய லாயர். மயிலையில் பெரிய ஓட்டு வீடு.

அதெல்லாம் பழைய கதை. பரசு காலேஜில் நுழையும் போதே அவர் போய் சேர்ந்து விட்டார்.  அதன் பின் அவள் ஒன்டிக்கட்டை. அம்மா காத்திருப்பார்களே என்பதற்காகவே வீடு விட்டால் காலேஜ் , காலேஜ் விட்டால் வீடு என ஒழுக்கமாக வளர்ந்த பிள்ளை பரசுராமன். அவன் உத்தியோகம், உயர்வெல்லாம்  அவனது உழைப்பு, அவனது கல்வி மட்டும் தான். ஆனால், அடித்தளம் போட்டது மட்டும் அம்மா.

பரசுவுக்கு சென்ட்ரல் வரித்துறையில் வேலை கிடைத்ததுமே, மணப்பெண்ணுக்கு அலைந்தாள். ஆடி ஓடி ஸ்ரீரங்கத்து விஜயலட்சுமியை தேடி தேடிப்பிடித்தார்கள்.

"ஆஹா என்ன ஒரு முழி., ? அடர்த்தி தலை முடி போ.. ஜடையை எடுத்து முன்ன போட்டா பாதி தொடை வரைக்கும் தொங்கிகிட்டு இருக்கு. அந்த சிரிப்பும், கண்ணும்., உதடும். பொம்னாட்டிகளுக்கே  சிம்ம சொப்பனம் தான். உன் மருவம சாட்சாத் ராணிதான் போ.. என்னமா சமைக்கிறா., வெங்கலம் சிணுங்கற மாதிரி ஒரு நாதம். கேட்டுகிட்டே இருக்காலம் போல. நல்ல தனம், ரொம்ப அளவான பிருஷ்டம்" யாரோ ஒரு பெண்மணி பரசுவின் அம்மாவிடம்  சொல்ல., "போதும்" என நிறுத்திவிட்டாள்.

"சாகற வரைக்குமா அழகு வரப் போறது?"

"ம்ம் இவ அழகு செத்தப்பறமும்  நிலைச்சிருக்கும். ஏதோ ஒரு வம்சம். தப்பி தவறி அங்க பொறந்திருக்கு"

அப்படித்தான் விஜயலட்சுமியை வாயரா புகழ்ந்தார்கள் பரசு பக்க உறவுகள். நேரில் போய் பார்த்தபின் அது உண்மைதான் என பரசுவுக்கு, அவனது அம்மாவுக்கும் தோன்றியது.

அதே போல அந்த பக்கமும் சலசலப்பு இருந்தது.

உறவு, நட்பு பரிவாரங்கள் இல்லாமல் தன்னம் தனியே இருவர் அம்மாவும் பிள்ளையும் ரெண்டே பேர் பெண் பார்க்க வந்ததே பெண் வீட்டாருக்கு பிரமிப்பாக இருந்தது.

"அம்மா சாது, பிள்ளை சொக்க தங்கம். சுளையா இருவதாயிரம் ரூவா. மத்திய சர்க்கார் வேலை.. 60 வயசு வரைக்கும் நான் ஸ்டாப் சர்வீஸ்.  நாத்தனார், ஓரகத்தி பிடுங்கலே இல்ல. பையன் காதுல பாரு வைரக்கல் டாலடிக்குது. டக்குன்னு ஓகே சொல்லு. ஒன்னுக்கு ரென்டு பொம்னாட்டி பிள்ளைங்க வெச்சிருக்கே. டக்குன்னு ஒன்ன தள்ளி விடும் ஓய்"

“மெட்ராஸ்லாம் வேணம்.. ஸ்ரீரங்கம், கும்பகோணம், இல்லாட்டி  சிதம்பரத்துல தான் பாக்கறோம்.” விஜியின் அப்பா தயங்கினார்.

“ஏன் மயிலாப்பூர்க்கு என்ன கொறைச்சல்? இது 2001.. ப்பா. 1960 இல்ல. அவனவன் அமெரிக்கா, ஆஸ்திரேலியாங்க்கிறான்.. பொண்ண பெத்து ஃபாரின்ல தாரை வாக்குறான். நம்ம சென்னைக்கென்னப்பா...? எட்டி மிதிச்சா எட்டு மணி நேரம்”

“விஜி இப்ப தானே காலேஜ் முடிச்சா. கொஞ்ச நாள் போகட்டுமேன்னு பாத்தேன்..”

“ நல்லா பாத்தே போ. சரி அவ தங்கை ஷோபானா ரொம்ப சின்ன பொண்னு. இல்லண்ணா.,அவளுக்கே பேசலாம்”

“அய்யயோ.. விஜிக்கே பேசுங்கோ. ஷோபனா இன்னும் படிக்கட்டும்” அப்பா பரசுவின் சம்பந்ததை ஒத்து கொண்டார்.

சொந்தங்கள் விஜயலட்சுமியின் குடும்பத்தை நெருக்க. கும்ப கோணத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி  மயிலையைச் சேர்ந்த பரசுவின் கரம் பிடித்தாள்.

இதோ முழுதாய் 21 ஆண்டுகள் ஓடிவிட்டன. பெண் வளர்ந்து கல்யாணத்துக்கு நிற்கிறாள்.


 

 கள்வெறி கொண்டேன் முதல் பாகம் இப்போதே பெற "




என் வி யின் அனைத்து நூல்களையும் படிக்க.

Authornv(dot)com

 

என் வி யின் படைப்புகள் பற்றி அறிய..

thirumbudi(dot)blogspot(dot)com

 

இந்த   நாவலினை விமர்சனம் செய்ய.

Naveenavathsayana(at)gmail.com