அதே வேளையில் அதே வீட்டில் வெளியே
கார்டனில்.,
நேரம் இரவு நடுநிசி தாண்ட செல்வராஜா மற்றும் தணிகா மட்டும் அமர்ந்திருந்தார்கள்.
“ என்னப்பா இந்த நேரம் எல்லாம் முடிஞ்சு இருக்கும்ல ?” என்றான் செல்வராஜூ .
“ஆமாங்க கையை கொடுங்க . பெரிய இடத்துல சம்பந்தி
ஆகிட்டீங்க” என கை நீட்டினான்.
“தணிகா., இதெல்லாம் கேக்குறதுக்கு கொஞ்சம் அசிங்கமா இருக்கு இல்ல?”
“ இல்ல செல்வா. நமக்கு வேற வழி இல்ல, நம்ம ரொம்ப அசிங்க படுத்தப்பட்டிருக்கோம் ., அவமானப்படுத்தப்பட்டு இருக்கோம். நான் ஒன்னு சொல்லட்டுமா ?”
“என்ன?”
“ எப்படிப்பட்ட ஆம்பளைக்கும் தலைகுனிவு என்றது அவனுங்க பெத்த பொண்ணுங்களால தான் வருங்க்கிறது சரியாத்தான் இருக்கு.
இப்ப பாரு இந்த ரங்கராஜுக்கு
அவர் பொண்னு தலைகுனிய
வெச்சிருக்கு. “
“ஆமா ஒரு பக்கம் ரங்கராஜுவை நினைச்சா எனக்கு கஷ்டமாத்தான் இருக்கு . நமக்கு அவரு மேல எந்த வருத்தமும் இல்லை, ரொம்ப நல்ல மனுஷன். ஆனால் சமூகத்தில் நமக்குன்னு ஒரு இடம் கிடைக்க வேண்டும்” ன்னு நேர்மையா முன்னேறி போராடி என் வாழ்க்கையை தொலைச்சது தான் மிச்சம்
அந்த நிலைமை என் பையனுக்கு வரக்கூடாது. அப்படின்னு தான் ஒரு பெரிய இடத்தில் சம்பந்தம் வைச்சிக்கனுமுன்னு இந்த வேலையும் செய்யத் துணிஞ்ச்சிட்டேன்..”
“........”
“இது ரொம்ப தப்பு தான், டைரக்டர் செல்வராஜாவா நினைச்சாலும் நான் செஞ்சது தப்புதான், ஆனா இந்த சொசைட்டில ஒதுக்கப்பட்ட ஒரு ஆளோட பிரதிநிதியா நினைக்கும்போது, எனக்கு வேற வழி தெரியல அதான் “என்றான்
“நீங்க ஒன்னும் வருத்தப்படாதீங்க. நம்ம என்ன அந்த பாப்பாவை கெடுத்து அவள் வாழ்க்கையை கெடுத்து சீரழிக்கவா இந்த வேலையை செய்றோம்? . இல்லையே? ஒரு பெரிய
இடத்து பொண்ணை நமக்கு மருமகளாக்கிக்க ஆசைபடறோம்.
நாமளும் தான் பணம் வெச்சிருக்கோம்.
நம்ம கிட்ட இல்லாத பணமா? சோ நமக்கு
அடையாளம், அங்கீகாரம் தான் தேவை. அதுக்கு
துருப்பு சீட்டு தான் இந்த சுஷ்மிதா.” தணிகா செல்வராஜாவை சமாதானம் செய்ய
முயன்றார்.
“ஆமா கரெக்ட். அவ இந்த வீட்டுக்கு மருமகளா வரணும்.”
“ சரியா சொன்னீங்க நாம யாருக்கும் எந்த துரோகம் செய்யக் கூடாது. அந்த பொண்ணு இந்த வீட்டுக்கு மருமகளா வரணும் .இன்னும் சொல்லப்போனா, இப்போ இன்னிக்கி தேதிக்கு நம்ம பையனுக்கும் செம்ம மார்க்கெட் இருக்கு. பாலிவுட்ல கூட நடிக்க கூப்பிடறாங்க.. அவனுக்கு அந்த பொண்ணு சுஷ்மிதா ஒரு மாற்று குறைச்சல் தான். ஆனா வெளிய தெரிஞ்சா இந்த நியூஸ் பெரிய பரபரப்பா ஆயிட்டா , அவன் எங்கேயோ போய்டுவான்.
அதற்காகத்தான் இவ்வளவு பிளான் போட்டோம். மாதேஷ் வேற எந்த பொண்ணை கட்டி இருந்தாலும், ஏன் உலக அழகியையே கட்டினாலும், இந்த நியூஸ் பாப்புலர் ஆகாது .கொஞ்ச நாள்ல பாரு , இந்த இண்டஸ்ட்ரி ஃபுல்லா பத்திக்க போகுது.”
“சரி செல்வராஜா. இந்த விஷயம் நம்ம பொண்ணுக்கும் , அண்ணிக்கும் தெரியாது இல்ல” என்றான்.
“ அவங்களுக்கு எத்வும் தெரியாது.
ஏன் ஆவன்
அண்ணன் தர்மராஜனுக்கு கூட இந்த விஷயம் எதுவும் நான் சொல்லல. “
“அப்புறம் நான் உன் கூட கேக்கனுமுன்னு
நினைச்சேன். பூஜா சர்மா பின்னால தர்மராஜா சுத்திட்டு இருக்கானாம். ஒன்னா கேர்வான்ல
இருக்காங்க்களாம். கட்டி
வெக்க போறீயா? “
“ஆமா தணிகா.. சேட்டு பொண்னு.பெரிய
பேக் ரவுண்ட் இல்ல. ஆனாலும் கட்டி வெக்கப் பாக்குறேன். அவன் பர்சனாலிட்டிக்கு பூஜா
ரொம்ப ஓவர் தான் . இருந்தாலும். இப்படி ஏதாச்சும் கொலா பிரேஷன் நடந்தாத்தான் நம்ம
வம்சாவழியோட பரிமாணம் மாறும் இல்லே” செல்வராஜா சொல்ல.,
செல்வராஜா தான் பிறந்து வாழ்ந்து
வளர்ந்த அடையாளங்களை முற்றிலும் அழித்தொழிக்க ஆசைபடுகிறான் என்பது தணிகாவுக்கு
புரிந்தது.
“நம்மளுடைய ஃபேமிலி கலர் மாறும், இல்ல நம்ம ஜாதி என்ன ? ன்னு இனிமே எவனும் யோசிக்க மாட்டான் இல்ல? ரெண்டு மூணு தலைமுறை கழிச்சு பாரேன்., என் பெயர் இல்ல, எங்க அப்பன் பேரு இல்லை, எல்லாம் மறந்து போகும்” என்றான்.
அவர்கள் எதையோ ஒன்றை அழிக்க, எதையோ ஒன்றை பெற, எதையோ ஒன்றை அந்த நட்ட நடுநிசி நேரத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள்.
Kkk part 3 eppo NV sir
ReplyDelete