சுகன்யாவை முதன் முதலில் பெண் பார்க்க வந்தபோது அவள் கண்ணில் பட்டது.. ஜன்னலுக்கு நேரே
உட்கார்ந்திருந்த ஜீவாதான். ஒல்லியாக
மீசையில்லாமல் அடர்த்தியான தலைமுடியில்... இருந்த ஜீவாவை பார்த்து சந்தோஷமாய் மிரண்டாள்.
"ஏய் என்னடி?
பையன் ஜம்முன்னு இருக்க்கான்"
"ஏய் சும்ம
இருடி.. பாக்க சின்னவனா தெரியறான்.. இரு மாப்பிள்ளை யாருன்னு விசாரிப்போம்.." தோழிகள் மணி அடித்தார்கள்.
"இருக்கறதுல
இவன் தான் மாப்பிள்ளை மாதிரி இருக்கான். இவன் தான் பிரபு “
" "நீ சொல்றது கரெக்ட் ஆனா அங்க பார்.. பார் ரெண்டு பேரு தனியே இருக்காங்க.. அதுல ஒருத்தன் பட்டு
சட்டை போட்டு இருக்கான்.. அவன் தான் பிரபுவோ?"
"ஆமாண்டி .அந்த சிலுவை போட்ட பக்கத்துல ஒருத்தன் படபடப்பா இருக்கானே .. மானிறமா?"
“…………………………."
தோழிகள் குழப்ப, சுகன்யா மிரண்டாள். கடவுளே எனக்கு யாரை கொடுக்கப் போகிறாய்?
"கட்டம் போட்ட சட்டை கழுத்துல சிலுவை தொங்க்குது..அவன் மாப்பிள்ளையா இருக்க
வாய்ப்பில்ல. தலைமுடி கூட வாரம இருக்கான்.. அவனா இருக்காது."
"ஆமாண்டிபட்டுசட்டை தான் மாப்பிள்ளை.. ஆனா இந்த பையன் தான் பாக்க பளீச்ச்சுன்னு இருக்கான்"
"அட
ஆமாம்...ரொம்ப நெர்வசா இருக்கான்.. ஒருவேளை இவன் தான் பிரபுவோ"
தோழிகள் ஜன்னலில் பார்த்து ஆளாளுக்கு அபிப்ராயம் சொல்ல.,
"அய்யோ யார் தான் பிரபு?" சுகன்யா சலிப்பாக கேட்க.,
"ஏண்டி
போட்டோ பாக்கலியா?"
"கேட்டோம்
கொடுக்கல.. நேர்ல பாத்துக்கங்கன்னு சொல்லிட்டாங்க"
"அப்ப
அந்த சுமார் மூஞ்சி தான் மாப்பிள்ளையா
இருக்கனும். ஆளு ஜம்முன்னு இருந்தா போட்டோ கொடுத்து அனுப்பி இருப்பாங்களே"
"நீ சொல்றது
சரி தான்"
"ஏய் சும்மா இருங்கடி...புரோக்கர
விசாரிப்போம்."
அந்த பளீச் பையன் பிரபுவாக இருந்தால்
இப்பவே ஓகே சொல்லலாம் என அவள் நினைக்க...,
அப்புறம் அந்த மானிறத்தான் தான் பிரபு என குண்டு போட்டார்கள்.
"அய்யோ உங்க ஒரே பொண்ணுக்கு மாப்பிள்ளை
இப்படியா?" தோழிகள் சுகன்யாவின் பெற்றொரை சீண்ட.,
"என்ன
அவனுக்கு கொறைச்சல் ? மாசம ஒன்னரை லட்சம் சம்பளம். பாக்க மோகன்
மாதிரி இருக்கான்"
"மோகன்
மாதிரியா? எந்த
காலத்து ஹீரோவை சொல்றே? ஏன் ஆண்டி ? பொண்னை
இனியா மாதிரி பெத்து வெச்சுட்டு. .மோகனுக்கா ஜோடி சேக்குறே.. வாடி போலாம்"
தோழிகளே., அவள் மண
வாழ்க்கையின் ஆரம்பத்துக்கு குழப்பம்
ஏற்படுத்த .,
‘எனக்கு தம்பியை புடிச்சிருக்கு ‘என சொல்ல
முடியாமல்., ‘எனக்கு இப்ப கல்யாணம் வேனாம்’ என பொதுவாக சொன்னாள் சுகன்யா.
No comments:
Post a Comment