மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, June 15, 2021

திரும்புடி பூவை வைக்கனும் (பாகம் 25) 1444

 ஹரிஷ் கிராண்டனி   ரொம்ப நாளைக்கு பிறகு ஓஎம்ஆர் வீடுகள் இருக்கக்கூடிய அந்த புராஜெக்ட் சைட்டை சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு மிக அருகில் வெள்ளை சல்வார் கம்மீஸ் இல் தேவதையாக அவன் சென்னை மனைவி வந்தனா நின்றுகொண்டிருந்தாள்.  சுற்றிலும் கிராண்டநி நிறுவனத்தின் உயரதிகாரிகள் டை கட்டி பவ்யமாய்  நின்றிருந்தார்கள்.

அவர்கள் அருகே இன்னும் பவ்யமாய் கை கட்டியபடி மனோ, குணா ,வாசு என ஏராளமான ஆட்கள் இருந்தார்கள் . ஹரிஷ் அந்த ப்ராஜெக்ட் விஷயமாக பல கேள்விகளை கேட்டுக்கொண்டே பார்வையிட்டான்.

நிறைய அன் சோல்ட் ப்ளாட்ஸ் இருக்கே ..மனோ.."

"சார்... இல்ல சார் ஓஎம்ஆர் ல நிறைய வீடுகள் வந்துடுச்சி .. இங்க வாட்டர் பிராப்ளம் வேற...ஆஃபர்ன்னு  பார்த்தீங்கன்னா.. நிறைய கொடுக்குறாங்க "

"இருக்கட்டும் நமக்குன்னு ஒரு நேம் இருக்குல்ல "

'அதான்சார் வாரம் பத்து பிளாட் போயிட்டு இருக்கு சார்..'

'சரி... சரி பிரைஸ்  ஏதாவது குறைக்க முடியுமான்னு  பாருங்க"

"மத்த பில்டர்ஸ் எல்லாம் பேன்.. ஏசி எல்லாம்  ஃபிரியா கொடுக்குறாங்க சார் "

"வேற?"

"யூசுவல் எலக்ட்ரிக்கல் அப்ளையன்ஸ் எல்லாம் ஃபிரியா கொடுக்குறாங்க சார் "

" சரி நாம அவங்களை விட  பெஸ்டா கொடுப்போம். மாடுலர் கிச்சன் ஃப்ரியா கொடுத்துடுங்க."

" மாடுலர் கிச்சன்  ப்ரீயா.. 5 லேக் ஆகும் சார்'

" அவ்ளொ ஆகாது...மொத்தமா செய்யும்போது நமக்கு ரெண்டே கால் ரூபாய்ல பண்ண முடியும். சிட்டில பெஸ்ட் இண்டிர்யரை பிடிங்க... நாளைக்கே பிக்ஸ் பண்னுங்க"

" யெஸ்சார்"

" மாடுல கிச்சன் பீரின்னு  ஒரு வாரம் நியூஸ் பேப்பரில் ஃபுல் பேக் ஆட் கொடுங்க..  எனக்கு இன்னும் ஆறு மாசத்துல இந்த ப்ராஜெக்ட் கம்ப்ளீட்டா சேல்ஸ் பண்ணனும். பண்டு வராம ஸ்டாப் ஆகி இருக்கு.. அப்ப எப்படி இந்த புராஜெக்டை முடிச்சி வெளிய வற்ரது? "

"சார்... ஸ்ரீபெரும்புதூரில் நம்மது புது  ப்ராஜெக்ட் லாஞ்ச் பண்ணதுல நிறைய பணம் இருக்கு.  அதை எடுத்து செலவு பண்ணி இந்த ப்ராஜெக்டை முடிக்கலாமா சார் "

"நோ..தப்பி தவறி கூட அந்த மாதிரி செய்யாதீங்க அது ரொம்ப பெரிய தப்பு இப்படி ஒரு ப்ராஜெக்ட் பண்ட்ஸ் எடுத்து  இன்னொரு பிராஜெக்ட்க்கு கண்டிப்பா யூஸ் பண்ண கூடாது . பெரிய பெரிய பில்டர்  எல்லாம்  காணாம போனதுக்கு இதான் காரணம்..என் கம்பெனியில் அந்த மாறி நடக விடக்கூடாது. "

"அப்ப சேல்ஸ் இல்லன்னா என்னபண்றது சார்..?’:

"கேபிடலை இன்கீர்ரீஸ் பண்னுங்க... கண்னன் சார் கிட்ட அடிஷனல் ஃபண்டு கேட்டு மெயில் பண்னுங்க,.. அதுக்குள்ள  இந்த புராஜெக்ட மார்கெட்டிங்க இம்ப்ரூவ பண்னுங்க..."

"யெஸ் சார்.."

எல்லோரும் அவன் சொன்னதை கேட்டுக் கொண்டார்கள் .குறித்துக் கொண்டார்கள்.

 அவன் அங்கிருந்து கிளம்ப ரெடியானான்.. சுந்தரியை காத்திருக்க சொல்லிவிட்டு . அந்த ப்ராஜெக்டில் கட்டி இருந்த மாடல் ஃபிளாட்டில் நுழைந்தான் ஹாலில் போடப்பட்டிருந்த சோபாவில் உட்கார்ந்தான் உயரதிகாரிகள் எல்லோரும் வாசலில் நிற்க மனோ மட்டும் அவனை பின் தொடர்ந்து வந்தான் .

"என்ன மனோ எப்படி இருகீங்க?"

பை ன்சார்.."

'ம்ம்..கீர்த்தனா எப்படி இருக்காங்க"

"வெரி மச் பைன் சார்.."

"ஒரு நாளைக்கு கூட்டி வாங்களேன்.."

"ச.அ.சார்.ர்.ர்"

"அட நம்ம வீட்டுக்கு லஞ்ச் சாப்பிட வரலாமே" ஹரீஷ் கனிவாய் சொல்ல.,

"யெஸ் சார்.."

ஹரீஷ்க்கு கீர்த்தனா அந்த ஹோட்டலில் வைத்து அறைந்தது ஞாபகத்துக்கு வந்து இம்சித்தது..

நமமி போலவே சுரேஷும் அவளிடம் இந்த நேரம் அறை வாங்க்கி இருப்பா நென நம்பினான்..

"சுரேஷ் என்ன பண்றான்?"

"கொய்ட்டா இருக்கார் சார்.. பைன்.."

"படிக்கிறானா  . க்ளாஸ் போறானா?"

"போறாரு சார்..ஆனா..,  அந்த எஸ் ஏ ப் சர்டிபிகேட் இன்னும் கொடுக்கலை..எக்சாம் கூட எழுத முடியல.. ரொம்ப வெக்ஸ் ஆகி இருக்கார் சார்.."

"ஓ...ஐ சீ..."

ஹரீஷ் உள்ளுர மகிழ்ந்தான்.. இந்த மனோ சுரேஷ்க்கு ஜால்ரா வாக இருப்பான்... சுரேஷ்க்கு ஏண் சர்ட்டிபிக்ட் கிடைக்கவில்லை என  இவனுக்கு தெரியக்கூடாது... என உறுதியாக இருந்தான்.

சுற்றிலும் பார்த்தான்..  எலக்டிரிக் பணிகள் முடிவடையாமல் அசிங்கமாக தொங்க்கி கொண்டிருக்க..

"என்ன மனோ.. இந்த ப்ராஜெக்ட்ல எலக்ட்ரிகல் வேலை நிறைய பெண்டிங் இருக்கு.  யார் பார்க்கிறாங்க."

"ஜீவான்னு ஒரு பெரிய காண்ட்ராக்டர்.. நீங்க தான் லெட்டரெ கொடுத்து  அனுப்பி ரெகமண்ட் பண்னீங்க"

"இஸிட்..எத்தனை புராஜெட்..?"

"இந்த ஒன்னு தான்...'

:அப்ப கூட இதுல என்பது வீடுங்க இருக்கே ..ரொம்ப லேசியா ஒர்க் நடக்குதே...யாரு அவன் ஜீவா கூப்பிடுங்க"

"நானே கூப்பிட்டு வார்ன் பண்னிட்டேன்... முரைப்பா இருக்கான்.. எதை கேட்டாலும் உங்க பேரை சொல்ரான்.. " மணோ போட்டு கொடுக்க

" அட யாரவன்.. ? ஜீவான்னு ஒரு பேரை நான் கேள்விப்பட்டதே இல்லையே?  ஏன் இந்த மாதிரி புது ஆளுங்க கிட்ட கொடுக்குறீங்க.  இவர் பெரிய ப்ராஜெக்ட்டுக்கு வேலை செஞ்ச்சி இருக்காரா ?"

"இல்ல சார் ..ஆனா  நம்ம சீஃப் ஆர்கிடெக்ட் குணாவும்  வாசுவும்  நீங்கதான் அப்ரூவல் கொடுத்ததாக  சொன்னாங்க "

"ஞாபகம் இல்லையே அந்த குனாவையும் வாசையும் கூப்பிடுங்க"  என்று சொல்ல மனோ உற்சாகமாய் வெளியே வந்து குணா,  வாசு இருவரையும் கை தட்டி கூப்பிட  இருவரும் ஓடி வந்தார்கள்..

வாங்கடா தொலைஞ்சீக...

"சார்..'

"சேர்மன்  உங்க ரெண்டு பேரையும் கூப்பிடறார்.."

அவர்கள் விழுந்தடித்து உள்ளே செல்ல மனோ பின் சென்ரான்

To Continue story part 25 pl click on the link




No comments:

Post a Comment