மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, April 27, 2021

திரும்புடி பூவை வைக்கனும் - 1390

 கோவை., காந்திபுரம்... கால்பந்து மைதானம்..

அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை 11 மணிக்கு நடக்கும் பயிற்சி போட்டியில்  மாவட்ட அளவில் கால்பந்து வீரர்களை தேர்வு செய்யும் குழு வந்து இறங்கியது.  கோவை மாவட்ட அணியோடு மோத சேலம் அணி வந்து இறங்க ...

 கலெக்டர் முன்னிலையில் இரண்டு  அணிகளும் கலந்து கொண்டன. 

அவன் திறமை மேல் அந்த அணியின் கால்பந்து கேப்டன் மிகவும் நம்பிக்கை கொண்டிருந்தான் அந்த அணியின் கேப்டன் பாலாஜி..

"மச்சான்.நம்ம டீம் ஜெயிக்கிறது கூட முக்கியமில்லை . அங்கே உன் பர்பமான்ஸ் பார்த்தா எல்லாமே ஆடி போடுவானுங்க. கால் தரையில் படாம. ஒரு சம்மர் சால்ட் அடிச்சி பந்தை பாஸ் பண்ணுவியே..அதே  மாதிரி...ஒரு ஷாட் ஆடி..சேலத்து காரனுங்க ஆடி போய்டுவானுங்க.." என்றான்

"..ம் அசத்திடுவோம்..."

"  நீ பால் கொண்டுவர ஸ்டைல  எனக்கு தெரிஞ்சி தமிழ்நாட்டிலேயே நான் பார்த்ததே கிடையாது ..எனக்கு ஒரு நல்ல வேலை கிடைச்சிருக்கு..நான் செட்டில்ட்... இந்த கேம். வின்னிங்க் இல்ல லாஸ்..எனக்கு,  ஒரு பிரச்சனையுமில்ல.. நம்ம டீம்  ஜெயிக்காம கூட  போகலாம்.. பரவால்ல..  ஆனா உனக்கு கோவை டிஸ்ரிக்ட்ல இருந்து ஸ்டேட் டீமுல  ஆட சான்ஸ் கிடைக்கனும்.."

'......."

"நல்ல   வேலை இல்லாம இருக்கிற உனக்கு இந்த கால்பந்து உன்ன பெரிய இடத்துக்கு கொண்டு  போகும் .. புரியுதா?" என்றெல்லாம் சொல்லி அவனை ஊக்குவித்து இருந்தான் கேப்டன்.

"சண்டே 2 மணிக்கு நம்ம மேட்ச்.. நீ பதினொக்குக்கே வந்துடு....வார்மிங்க் செய்யலாம்.."

சரிடா"

சாரதியும் அந்த நாளுக்காகத்தான் காத்திருந்தான். திறமை காட்ட ஒரு மேடை., நல்ல வாய்ப்பு ...

"இன்நிக்கு மேட்ச் இருக்கும்மா"

 அவன் கிளம்பும்போது அம்மா சாப்பிட்டு போ என்றாள்

"என்னமா சாப்பிட இருக்கு? "

" அரிசி உப்புமா இருக்குடா"

" ஐயோ அதெல்லாம் எனக்கு வேண்டாம் . என்னெய் ..ஊத்தி வழிச்சிருப்பே.. வயிறு புரட்டிகிட்டு வரும்..."

என சொல்ல

"சரி பொங்கல் சாப்பிடறியா? "

"அய்யோ... வேணாம் எனக்கு கம்பங்களி கொடு "என்றான்

கம்பங்களி   கூழ் குடித்தால் பசி அதிகம் எடுக்காது உடல்திறன் கொடுக்கும் அதே சமயம் வயிறு கனமாக இருக்காது. நன்றாக ஓட வேண்டும் என்றால் வயிறு கணமாக இருக்கக்கூடாது.

அம்மா தட்டில்  நேற்றூ இரவு தயாரித்த கம்பங்க்களி  வைக்க

"தயிர் குடும்மா.."

"தயிர்க்காரி வரவே இல்லையேடா "என்றாள்

"கொஞ்ச நேரம் பொறு அவ டைம் தான் "

தயிர் இன்றி   இந்த கம்புகூழை  குடிக்க முடியாது

"ஒரு அஞ்சு நிமிசம் பொறு..அவ வந்துடுவா என்றாள்..  அவன் பத்து நிமிடம் வரை பொறுத்திருந்தான்..

 அவள் வரவே இல்லை..

 அவனால் அதை குடிக்க முடியவில்லை . சாப்பிடாமலும் போக முடியவில்லை.

"சரி அவ பக்கத்து தெரு தானே . கிண்னம் கொடு.. போயிட்டு வந்துடறென் " என்று சொல்லி ஷார்ட்ஸ் மேலே டீசர்ட் போட்டு ஷூ கூட போடாமல் அவசரஅவசரமாக  தயிர்காரி வீட்டுக்கு  ஓடினான்..

No comments:

Post a Comment