மதுமிதாக்கு கர்ப்பபை பலமிழந்த விஷயம் கேள்விப்பட்டதும்,
நளினி தலையில் கை வைத்துக் கொண்டாள்.
“ அப்போ உங்க கருப்பையை தான் செக் பண்ணனும்” என்றாள்
சொல்லிவிட்டு டாக்டர் மேடத்திடம் அழைத்து போக, அவருக்கும் சோகம் தொற்றிக் கொண்டது.
மதுமிதாவை பரிதாபமாக பார்த்தாள்.
“ இங்கே பாருங்க அதே இத சொல்லி காசு புடுங்கற ஆஸ்பத்திரி
இது கிடையாது. நான் ரொம்ப நியாயமா தான் நடந்துகிட்டேன். ஆனா நான் பண்ண தப்பு உன்னோட
கருப்பையை எவ்வளவு குவாலிட்டின்னு பார்த்திருக்கணும்?. பார்த்திருந்தால் இந்த மெத்தட்
உங்களுக்கு சரியா வந்திருக்காது? ஏன்னா ஒரு டெஸ்ட் பேபி கருப்பையில் வைசிக்க, கருப்பை வழக்கத்தை விட அதிகமான ஆரோக்கியமா இருக்கணும்.
“வாங்க உங்க கருப்பையை டெஸ்ட் பண்ணலாமுன்னு சொல்ல,
பரிசோதித்து விட்டு, வரும்போது ஒரு உதட்டை பிதுக்கினாள்.
‘சாரி மதுமிதா ! சாரி ஷில்பா! மதுமிதாக்கு குழந்தையை தாங்குற அளவுக்கு கருப்பை
பலமாக இல்லை. 55 நாள் கருவையே அந்த கருப்பை தாங்க முடியல. தேங்க் காட் சிக்ஸ், செவன்
மந்த்ல இந்த ஏடாகூடம் நடந்திருந்தா?’ ’ என சொல்ல மதுமிதா உடைந்து போய் அழுதாள்
“ இங்கே பாருங்க! ஏற்கனவே நீங்க நிறைய காசு செலவு
பண்ணிட்டீங்க, ரொம்ப டைமும் ஆகி போச்சு. உங்க சைட்ல இருக்குற ஒரே ஆறுதல். உங்க கணவருக்கு
இருக்கக்கூடிய ஆரோக்கியமான விந்து தான். மத்தபடி உன்னிடம் எதுமே சரியானதா, சிறப்பானதா
இல்லை.
மத்தவங்கள
மாதிரி இதை மருந்து மாத்திரை குணப்படுத்த முடியும்னு நான் சொல்லி ஆசை காட்ட மாட்டேன்.
கண்டிப்பா குணப்படுத்தலாம். ஆனால் அதற்கு நீண்ட நாள் ஆகும். ஏன் இன்னும் மூணு வருஷம்
கூட ஆகலாம். உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே. ஆனா மூணு வருஷம் கழிச்சியும் ஆரோக்கியமான
முறையில் கருத்தரிக்ககூடிய சக்தி உங்களுக்கு இருக்கும்’ என்பதை என்னால சொல்ல முடியாது”
என அந்த டாக்டர் சொன்னார்.
“உங்களுக்கு வாடகை தாய் மெத்தட் தான் சரியா இருக்கும்”
டாக்டர் மேடம் தீர்மானமாக சொல்ல., மதுமிதா அழுது கொண்டே உட்கார,
“சரி வா வீட்டுக்கு போலாம் மீதி வீட்டில் பேசலா”ம்
என சொல்ல நளினி பின்னாடியே வந்தாள்.
‘உன் கூட பேசணும்கா” இருவரும் நிற்க,
“என்ன?’
“இங்கு பாருங்க மதுமிதா நான் சொல்றது தப்போ? சரியோ?
நீ நல்லா யோசிச்சு பார்த்து நீ முடிவு எடுத்துக்கோ.
இந்த ஹாஸ்பிட்டல் ரொம்ப லீகல் ஆஸ்பிட்டல். ஆனா டெக்னாலஜி எல்லாம் ஒரு அளவுக்கு தான்
இருக்கும் .
சென்னை அடையார்ல ஒரு நல்ல ஆஸ்பத்திரி இருக்கு. எல்லா
வசதியும் இருக்கு. நம்ப அங்க போய் ஒரு தடவை ஒரே ரவுண்டு முன்னாடி டெஸ்ட் பண்ணிப்போம்.
கண்டிப்பா இன்னும் ஒரே ஒரு தடவை சான்ஸ் கொடு. அந்த கருமுட்டை தானம் ஷில்பாவோ இல்ல வேற
யார்கிட்டயாச்சு நம்ம வாங்கி இருக்கலாம்.”
‘.....................”
“ ஒரே ஒரு தடவை தீனா அண்ணாவை அழைச்சிட்டு வா நம்ம
லாஸ்ட்டா ஒரே ஒரு தடவை ட்ரை பண்ணலாம். நமக்கும் வேற வழி இல்ல’ என சொல்ல,
அதன்படி ஒரு மாதம் கழித்து அந்த பெரிய நவீன மையத்திற்குச்
சென்றார்கள். அவர்கள் “இதெல்லாம் பெரிய மேட்டரே மூணு அட்டெம்ப்ட்ல உங்க வயித்துல குழந்தையை
வளர வைக்க முடியும்” என்றார்கள்.
ஆனால், அவர்கள் கேட்ட தொகை அதிகமாக இருந்தது.” 7 லட்சம்”
என்றதும் வாய் பிளந்தார்கள்.
“ ஏழு லட்சம் என்றது குழந்தை செல்வத்துக்காக நீங்க
செலவு பண்ண போறீங்க.”
‘ இல்ல சார் நான் ஏற்கனவே நாங்க 5 லட்சம் ரூபாய்க்கு
மேல இந்த ரெண்டு வருஷத்துல பண்ணிட்டோம். இதனால் எங்க வீட்டுக்காரருக்கு கடன் ஜாஸ்தி
ஆயிடுச்சு. ஒரு ரெண்டு லட்சம் நா முயற்சி பண்ணலாம்“
“ அய்யய்யோ! இது கத்திரிக்காய் வேபாரம் கிடையாது.
ஏழு லட்சம் அப்படின்றது வெறும் டாக்டர்ஸ் எகீப்மென்ட் மெடிசனுக்கு மட்டும்தான் .ரூம்
ரென்ட், ஃபுட் தனி காசு, நீங்க ஒரு ரெண்டு வாரம் தங்குறாப் போல இருக்கும்” என வெடிகுண்டு
தூக்கி போட்டார்கள்.
“ஒரு வேளை மூன்று தடவையும் ஃபெயிலியர் ஆயிடுச்சு அப்படின்னா?”
நளினி துணிந்து கேட்க,
“ஒன்னும் பிரச்சனை இல்ல அதுக்கு அப்புறம் ஒரு மூணு
அட்டெம்ப்ட் ட்ரை பண்ணுவோம் ஆனா அதுல உங்களுக்கு 50% ஆஃபர் இருக்கு” என்றார்கள்..
என்னது 50% ஆஃபரா? இதுல கூடவா?
“ சரி அதுவும் சரியா வரலைன்னா?” ஷில்பா ஆத்திரமாக கேட்க
“ஒன்னும் பிரச்சனை இல்ல உங்க வீட்டுக்காரர் அவருடைய
விந்தணுவை எடுத்து இன்னொரு பெண்ணோட கருப்பையில் வைச்சிடுவோம். அப்படி வைக்கும்போது
எந்த பிரச்சனையும் வராது.
“வாடகைத்தாய் முறையா?”
“ ஆமா “
“இதுக்கு எவ்வளவு சார் ஆகும்?”
“இதுக்கு ஆஃபர் எல்லாம் கிடையாது மேடம்,. அகைன் நீங்க ஒரு ஏழு லட்சம் கட்றா போல இருக்கும்”
என சொல்ல
‘அட போடா!
என்றபடி மூவருமே எழுந்து வந்து விட்டார்கள்.
அடையாறு கடற்கரையில் போய் மூன்று பெண்களும் சோகமாய்
உட்கார்ந்து கொண்டார்கள். தன்னுடைய ஒரு குழந்தையை
சுமக்க கூடிய வலு தனக்கு இல்லாத போனாலும் தனக்கு தோழியாய் இரு பெண்கள் பக்கத்தில் உட்கார்ந்து
இருப்பது மதுமிதாவுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.
நீண்ட நேரம் கடலை வேடிக்கை பார்த்துவிட்டு கிளம்புகையில்,
மூவரும் கைகளை மாலையாக பிடித்துக் கொண்டு, கடல் அலைகளில் கால்களை நனைத்துக் கொண்டார்கள்.
கடல் அலை அவளது காலில் பட பட அவளது உடம்பில்
ஏதோ ஒரு சிலிர்ப்பு உண்டானது.
இந்த பெரிய கடல் முன் தங்களது இருப்பு ஒன்றுமில்லாததாக
தோன்றியது. கவலை லேசாக குறைந்தது போல இருந்தது.
இந்த நாட்டில் எத்தனையோ குறைகளுளுடன் எத்தனையோ பெண்கள்
இருக்கிறார்கள். அவர்களுடன் ஒப்பிடும்போது நம்முடைய குறை எல்லாம் பெரிய குறையே இல்லை.
முடிந்தால் பெத்துக்கலாம் இல்லை எனில் தத்து எடுத்துக்கலாம்’ என்பதாய் அவள் நினைத்துக்
கொண்டு கரையில் கால்களை ஊண்றிக் கொண்டு, மணல் அலையில் அரித்துக் கொண்டு போவதை பார்த்தபடி நிற்க.,
“நான் ஒரு விஷயம் சொன்னா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே?”
என இருவரையும் பார்த்து பொதுவாக கேட்டாள் நளினி
“ஏன் என்ன ஆச்சு? சொல்லு”
“ இப்போ உங்க கணவருடைய விந்தணுவை இன்னொரு பெண்ணோட
சினை மூட்ட, இல்ல வாடைக தாய்க்கு ஏழு லட்ச ரூபாய் வரைக்கும் பீஸ் கேக்குறாங்க சரியா?
“ ஆமா “
“அப்போ நீ உன்னுடைய கணவருடைய விந்தணு இன்னொரு சினை
முட்டையில் சேக்க நீ சம்மதிக்கிற சரிதானே”
“ ஆ...ஆமா “
“மதுமிதா அக்கா நல்லா நான் சொல்றத கேளு. உனக்கு புரியும்படி
சொன்னா, வேற ஒரு பொண்ணு மூலமா உன் புருஷனுக்கு ஒரு குழந்தை பெத்துக்க சொல்லலாம். அந்த
டாக்டர் சொன்னத கேட்ட இல்ல? ஒவ்வொன்னுத்துக்கும் ஒரு டேரிஃப் வச்சிருக்காங்க. இவனுங்க
கடைசி வரைக்கும் நமக்கு ஃபேவரா இயற்கையான முறையில குழந்தையை கருத்தரிக்க விட மாட்டாங்க.
இங்க நல்லா இருக்குறவங்களுக்கு ஆயிரம் பிரச்சனை சொல்லுவாங்க. உனக்கு எக்கச்சக்கமான
பிரச்சனையை இவங்க சொல்லிக்கிட்டே இருப்பாங்க. பிரச்சனை அதிகமாக, அதிகமாக அவங்களுடைய
கட்டணம் அதிகமாகிட்டே இருக்கும்”
“ஆமா”
'‘நான் ஒன்னே ஒன்னு கேக்கறேன் உன்னுடைய கணவனோட விந்தணு
எடுத்து இன்னொரு பெண்ணுடைய கருப்பையில் வைத்து குழந்தை பெத்துக்கறதுக்கு நீ ஓகே சொல்ற?
அப்படின்னா யோசிச்சு பாரு. அதுக்கு உங்க கணவர் பேசாம அந்த பொண்ணு கூட டைரக்டா படுத்துக்கலாமே”
அவள் சொல்லி நிறுத்த. அலை வேகமாய் அடிக்க
மதுவும் ஷில்பாவும் திகைக்க.,
”ஏய்ய் வாலு? என்ன சொல்றே நீ? கேக்கவே உடம்பு கூசுது”
“நீ நல்லா யோசிச்சு பாரு! அறிவியல் முறையில, அதாவது
செயற்கையா சேக்குறதுக்கு பல லட்சம் தேவைப்படுது. அதுக்கு பதிலா, கரு இயற்கை முறையில்
சேர்ந்தால் தான் என்ன?”
“.......................”
“ இப்போ ஐயோ என்னால முடியாது “
“அப்படின்னா ஏழு லட்ச ரூபாய் எடுத்து வெளியே வை “
‘ஐயோ என்கிட்ட பணம் இல்லையே “
‘அப்போ வேற வழியில்ல., “
“ ஏய்ய் நளினி என்ன சொல்ற “ ஷில்பாவின் உடல் நடுங்கியது.
“ஷில்பா மேடம் நல்லா யோசிச்சு பாருங்க, இந்த இவங்க
குழந்தை பெத்துக்கணும்னா நிறைய பணம் செலவு பண்ணனும், அதுக்கு பதிலா ஏன் அவ்வளவு கணவருடைய
உயிரணுவை நீங்க ஏத்துக்க கூடாது”
“வாட்..? அய்யோ என்ன சொல்றீங்க?” ஷில்பா மதுமிதாவை
பார்த்தாள்.
“ சரி விடுங்க. நீங்க விலகுங்க. நான் ஏத்துக்கிறேன்.
."
".........................."
".ஆமா. எனக்கு பணம் தேவையா இருக்கு. உங்க கணவரை
, தீனா சாரை இரண்டு தடவை தான் பார்த்தேன். அதுக்கு முன்னாடி அவர்கூட எனக்கு எந்த பழக்கமும்
இல்லை. உங்க கணவரோட விந்தணுவை நான் வாங்கி கருப்பையில வச்சிக்கறேன். “
“ என்ன சொல்ற நீ ? புரிஞ்சுதாண் பேசுறியா”
“ இங்க பாரு மதுமிதாக்கா. என் உடம்பு ஆரோக்கியமான
உடம்பு என் உடம்புல ஒரு நோயும் கிடையாது. கண்டிப்பா உன் புருஷன் கூட படுத்தா மூனே தடவை
நான் பிள்ளை பெத்துப்பேன். ஆனா எனக்கு மூனு லட்சம் போதும். எந்தவித பிரச்சனையும் இல்லாம
குழந்தை பெத்து உன் கையில கொடுத்துட்டு போயிட்டே இருக்கேன். அந்த கல்கி படத்துல வர
மாதிரி.. எதுக்கு பார்ட் பார்ர்டா கருமுட்டை, கருப்பை தானம் எல்லாம்? இந்த உடம்பையே
தானமா தரேன். என்ன சொல்ற?”
“ ஏய் வாய மூடு நீ பேசறது கொஞ்சம் கூட சரியில்லை.”
“ இங்க பாரு உன்னுடைய துக்கத்தையும் துயரத்தையும்
தாங்கமாட்டாமாதான் சொல்றேன். நான் பணம் காசு சம்பாதிக்கிறதுக்காக இதை சொல்லல. இப்போ
எங்க வீட்டுக்காரர், இந்த ஷில்பா வீட்டுக்காரர் போல வெளி யூர்ல இருக்காரு. பாம்பேல
இருக்காரு,அவர் இங்க வரதுக்கு இரண்டு வருஷம் ஆகும். அதுக்குள்ள காதும் காதும் வெச்சாப்போல இந்த புள்ளையை பெத்துட்டு
நான் கைல கொடுத்துடுவேன் சொல்லு. நீ சொல்லு”
“.........................”
“ நான் கர்ப்பம் ஆகறப்ப உன் கிட்ட சொல்றேன். நீயும்
கர்ப்பம்னு எல்லாருக்கும் சொல்லு. ஏழாம் மாசம் வரைக்கும் ஓட்டு. அப்புறம் நீ கூப்புடற
இடத்துக்கு நான் வரேந். எனக்கு ஏலகிரில ஒரு ஆஸ்பத்திரி தெரியும். நீயும் வா. புள்ளையை
தரேன்.. நீ வாங்கிட்டு வந்துடு..”
“..................”
“ அதுமட்டுமில்ல., உன் சொந்தக்காரப் பொண்ணு நான் என்றதால
., உன் கூடவே மூனு மாசம் தங்கறேன். குழந்தையை பாத்துக்கறேன். பால் குடுத்து வளக்கறேன்.
நீ போ’ ன்னா நான் போய்டுவேன். என்ன ஓகேவா?
அதுக்கப்பறம் என் நிழல் இந்த வீட்டுல விழாது“
அவள் அடுக்கடுக்காய் தன் திட்டததி விவரிக்க.,
‘ அய்யய்யோ என்னால எங்க வீட்டுக்காரருக்கு உன்னை விட்டு
கொடுக்க முடியாது “
“இங்க பாரு கண்டிப்பா உங்க அஞ்சு லட்சம் பணத்தை வாங்கிட்டு பிள்ளை பெத்துக்கணும் என்றதுக்காக
நான் இதை சொல்லல. எனக்கு ஒரு காலத்துல உங்க குடும்பம் உதவி செஞ்சது. இப்ப நான் செய்யறேன். ஆனா அதை நான் சும்மா செய்ய முடியாது. “
‘..............................”
“எனக்கு உங்க புருஷன் மூலமா பிள்ளையும் பிறக்கும்.
இது 100% ரிஸ்க் தான். ஆனா வேற வழி இல்லாம உனக்காகவும் நீ தர்ற பணத்துக்காக தான் இந்த முடிவு எடுக்கிறேன்.
அப்படி இல்லன்னா, இன்னொரு சாய்ஸ் இந்த ஷில்பாதான் “
“ஐயோ நானா?”
“எஸ். ஷில்பாவுக்கு ஆரோக்கியமான கருமுட்டை இருக்கு.
எந்த நோய். எந்த பிரச்சனை ,உடலுக்கு குறைபாடும் இல்லை . அவங்க நினைச்சா உங்க வீட்டுக்காரருக்கு ஒரு
குழந்தை பெத்து கொடுக்க முடியும் .”
‘...........................”
“அவங்க வீட்டுக்காரரும் வெளிநாட்டில் இருக்காரு.”
“.............................”
“ஓரே அப்பார்ட்மென்ட்ல் இருக்கீங்க. சோ., அடிக்கடி ஷில்பா இந்த வீட்டுக்கு வந்து பேபிக்கு
பால் கொடுக்க, போக வர இருந்தா கூட யாருக்கும் டவுட் வராது.. நான் இல்லன்னா ஷில்பா தான்
சரி. வேற வெளி ஆள் வேணாம்..என்ன சொல்றீங்க ஷில்பா? ”
“ அய்யோ என்ன இப்படி பேசுறீங்க?” ஏற்கனவே கருமுட்டை
கொடுத்ததுக்கே நான் ஒவ்வொரு நாளும் பயந்துட்டு இருக்கேன். "
"ம்ம்ம்ம்"
"கருமுட்டை கொடுத்தது கூட இவங்க வீட்டுக்காரருக்கு
எப்பவும் பெரிய சான்ஸ் இல்ல. எங்க வீட்டுக்கும் தெரியாது. ஆனா அவரு கூட போய் படுத்து
புள்ளை பெத்துக்கோன்னு சொல்றது எப்படி சரியா இருக்கும்?” அவள் முகம் சிவந்தது.
“ அதுக்கு தான் உங்களை சொல்றதுக்கு முன்னாடி நான் அந்த வேலை செய்யறேன்னு சொல்லி கேட்டேன்.
எனக்கு 100% ஓகே இது தப்பு இல்லன்னு எனக்கு தோணுது. மதுமிதாக்வுகு தெரியாம அவளுக்கு
துரோகம் பண்ணி, அவங்க வீட்டுக்காரர் கூட படுத்து, உடம்புல கொழுப்பு எடுத்து தினவெடுத்து நான் புல்ளை பெத்துக்கிட்டா அது தப்பு
தான்”
‘.........................”
“ ஆனா மதுமிதாவுக்கு நல்லது பண்ணனும். அவளுக்கு பணத்தை மிச்சம் படுத்தனும்
அப்படின்னு சொன்னா, இதுதான் கரெக்டான ஐடியா. இதை உடனே செய்யணும். யோசிச்சுக்க. நானா? இல்ல ஷில்பாவா?, நல்லா யோசிச்சு முடிவு பண்ணிக்கங்க..
இப்ப நாம கிளம்பலாம். ஒரு காரை புக் பண்ணுங்க”
காரில் மூனு பேரும் பின் சீட்டில் இருந்தாலும், மூன்று பேரின் மனங்களும் மூன்று திசையில் போய் நின்றன.
ஒன்றுக்கு ஒன்று எட்டிப் போய் நின்று கேள்வி கேட்டுக் கொண்டன. அவர்கள் வழியில், யாருமே
எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. மூன்று பேருமே தனித்தனியாக தான் இருந்தார்கள் .