அவளால் தான் ஒரு மிகப்பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்து விட்டோம் என்பதை அவள் இன்னும் கூட நம்ப முடியவில்லை.
காரில் வைத்து பிராவை கொக்கியை அவுத்து விட்டார்கள் கொஞ்சம் விட்டிருந்தால் மொத்த உடையும் காரிலே வைத்து உருவி போட்டிருப்பார்கள். அவ்வளவு செய்தவர்கள் தன்னை கற்பழிக்கவும் செய்திருப்பார்கள்.
நல்ல வேலை அந்த நெடுஞ்சாலையில் ஆபத்து பாந்தவன் போல இவன் வந்து காப்பாற்றி விட்டான் . அவள் அவனைப் பார்த்து கும்பிட்டாள். அவலது தலை தானாகவே கவிழ்ந்து மேசையை பார்க்க அவள் குனிந்து அழுதாள்.
' விடுங்க மேடம் இப்ப எந்த பிரச்சனையும் இல்ல. எல்லாம் சரியாயிடுச்சு. யூ ஆர் சேவ்டு . 100% சேஃப் நீங்க. இனிமே இப்படி தனியா கார்ல
வராதீங்க"
"என் டிரைவரை அடிச்சி
போட்டுட்டாங்க"
" ஒன்னும் பயப்படாதீங்க..கண்ணை துடைங்க" அவள் கண்களை துடைத்துக் கொண்டாள் .
"நீங்க மட்டும் வரலனா என் நிலைமை என்ன ஆயிருக்கும்? நான் உயிரோடவே இருந்திருக்க மாட்டேன் ?"
"அப்படியெல்லாம் சொல்லாதீங்க . ஒன்னும் தப்பா நடக்கதப்போ வேற எதையும் யோசிக்க
வேணாம். "
" நீங்க
நீங்க எப்படி?"
"அவங்க உங்கள கார்ல கைய புடிச்சிட்டு வரத பார்த்த அப்பறம் தான் ஏதோ ட்ரபிள் அப்படி நினைச்சுட்டு உங்க காரை நானு நிறுத்திட்டேன் . "
"அது சரி நீங்க யாரு? எப்படி கரெக்டா என்னை ஃபாலோ பண்ணீங்க "அவளை ஆச்சரியமாக கேட்க
" மேடம் என் பெயர் சுரேஷ் நான் பெங்களூரில் இருக்கிறேன்.இங்க கம்ப்யூட்டர் கோர்ஸ்
படிக்கறதுக்கா சென்னைக்கு வதேன். தி நகர்ல தங்கி இருக்கேன். எனக்கு சென்னையில எஸ் ஏ பி சென்டர் மலர்விழி அப்படின்னு ஒரு மேடத்தை ரொம்ப நல்லா தெரியும்.
" எஸ் ஏ பி சென்டர் மலர்
மேடமா ? ஓ எனக்கும் தெரியும். எம் .எல் ஏ சற்குணம் கூட பைட் பண்ண தைரியசாலி அவங்க"
"யெஸ். அவங்க இல்லாம, என்
பிரண்ட் ஒருத்தி இருக்கா. அவளுக்கு மேரேஜ்லருந்து பிரமை பிடிச்சவ மாதிரி இருக்கா.,
தினம் தினம் நைட் அவளுக்கு ஏதோ சைக்கலாஜிக்க்ல
பிராப்ளம்."
"என்னது?"
"யெஸ்.. கரெக்டா அவ மேரேஜ் ரிஷப்ஷன்லருந்து தான் பிராப்ளம்
ஸ்டார்ட். மேரேஜ் ரிஷப்ஷனுக்கு வந்தவன் பேர் தான் ஈஸ்வர் சந்திரன்."
" ஈஸ்வர் சந்திரனா? அவள்
விழிகள் விரிய பார்க்க.,
"ஆமா .அந்த பிரச்சனைக்கு சொல்யூஷன் உங்ககிட்ட தான் இருக்கும் அப்படின்னு உங்க அசிஸ்டன்ட் பாபு மூலமா உங்கள தேடி வந்தேன்"
" பாபுவா ? பாபுவை உங்களுக்கு தெரியுமா ? " அவள் அடுத்தடுத்து கேள்விகள் கேட்டார்.
"இருங்க மேடம்.. அந்த ஈஸ்வர்
சந்திரன் பத்தி மலர்விழி மேடத்துகிட்ட ஏதேச்சையா விசாரிச்சப்போ தான் அவங்க ஸ்டாப்
அகல்யா என்றவங்களோட ஹஸ்பேன்ட் பாபு கூட, இந்த மாதிரி ஈஸ்வர் சந்திரனால
பத்மாவுக்கும் செக்ஸ்சுவல் அராஸ்மெண்ட் பிராப்ளம் வந்ததை சொன்னாங்க. விர்ச்சுவல்
டிரபிள்"
"போச்சுடா?"
" உடம்பு இல்லாம எண்ணம் மூலமா ஒரு பொண்ண கட்டுப்படுத்த முடியிற டெக்னிக்கை கத்துக்கிட்டு, அந்த ஆளு அந்த பொண்ணை ஒவ்வொரு நைட்டும் படாதபாடு படுத்துறதா கேள்விப்பட்டோம்."
".." அவளுக்கு தான் பட்ட அவஸ்தை காட்சிகள் மனக்கண்ம் உன் வந்து போயின.
" நான் பாபுவை கூப்பிட்டு
கேட்டப்போ,. அவன் என்னை உங்க கிட்ட கூட்டி போறதா சொன்னான்.
இன்னிக்கு நாம மீட் பண்றதா பிளான். '
"யெஸ் ஐ ரிமம்பர் நவ்.. பாபு
சொல்லி இருந்தான். ஓ மை காட். அந்த சஞ்சனா, சுஜாதா.. பேபி அந்த மேட்டரா? பாபு
டோல்ட் மீ"
"ஆமா மேடம்..."
"பாபுவோட ஒய்ப் அகல்யா
அடிபட்டு ஆஸ்பத்திரியில இருக்கறதால இதெல்லாம் நான் மறந்துட்டேன். "
"அவன் இன்னிக்கு வரலைன்னு
சொல்லிட்டு, உங்க அட்ரஸை கொடுத்து உங்க வீட்டுக்கு போய் உங்களை டைரக்டா பாக்க
சொன்னான். நானும் காலைல எட்டு மணிக்கே வந்துட்டேன் உங்களை பாக்கறப்ப.. நீங்க கார்ல
ஏறி கிளம்பிட்டீங்க.. வழி பூரா..உங்க கிட்ட பேசனும்னு டிரை பண்ணி. பைக்கை கார்
முன்னாடி ஓடவிட்டு...."
"ஸாரி சாரி...."
"பரவாயில்ல மேடம்.. உங்க பின்னாலயே நான் வந்தேன். உங்கள ஃபாலோ பண்ணேன். அவுட்டர் ரிங்க் ரோடு டோல் கேட்டுல
அப்ப தான் அந்த ரென்டு பைக்கையும் பார்த்தேன் என்னமோ பிராப்ளம்னு தோனுச்சு.."
"ஓ மை காட்"
" ஆனா பெருங்களத்தூர்ல உங்களை
மிஸ் பண்ணீட்டேன். "
"..ஓ"
"வண்டலூர் வரைக்கும் உங்களை
காணல,. சரி ஒருவேளை ஒரகடம் ரோட்டுல கட் பண்ணி இருப்பீங்கன்ன்னு அதில
திருப்பினேன்... ஆனா நீங்க திடீர்னு லெப்ட்ல் மண் ரோட்டுல திரும்பிட்டிங்க போல, அவங்களும் காணோம். "
"ஓ.. "
"எங்க காணோம்னு தேடிட்டு இருந்தேன் . அந்த சமயம் தான் மண்
ரோட்டுக்கு உள்ள போன உங்க காரு. திரும்ப வெளிய வந்துச்சு. என்னை
தாண்டி போச்சு. ஆனா, இப்ப கார்ல நாலு பேர் உட்கார்ந்து இருக்காங்க. டிரைவரும் புதுசா இருந்தான். ஏதோ தப்பு நடந்து இருக்குன்னு நினைச்சேன். அதான் உங்க வண்டி பின்னாலே வந்தேன். நல்லவேளையா உங்க காரு மெதுவா போனதால நான் ஓவர் டேக் பண்ணி உங்க வண்டிய பிளாக் பண்ணி வெச்சேன், அப்புறம் பார்த்தா வண்டில அந்த ரவுடி பசங்க இருந்தாங்க . "
"அந்த ஆளுங்களை உங்களுக்கு நல்லா தெரியுமா?"
'தெரியுமாவா?
" ஏற்கனவே மங்களூரில் ஒரு ஹோட்டல்ல எங்க அண்ணிகிட்ட பிரச்சினை பண்ணி ,என்கிட்ட அடி வாங்கினவங்க ,ஆனால் அவங்க எதுக்கு உங்கள கிட்நாப் பண்ணிட்டு போறாங்கன்னு தான் தெரியல"
" எல்லாத்துக்கும் காரணம் அந்த ஷியாம் தான் " என்றாள்.
" கன்னடா ஆக்டர் ஷியாமா?" சுரேஷ் கேட்க .,அவள் விலாவாரியாக ஷாம் பற்றியும் மாதேஷைப் பற்றியும் சொன்னாள்.
" என்ன பண்றது சுரேஷ்? இவனுங்க பெரிய ஸ்டார் என்றதால தான் இவங்க மேல யார் புகார் சொன்னாலும் எடுக்க தெரியல. இப்ப கூட நான் எந்த புகாரும் சொல்ல முடியாது'ன்னு இந்த அக்கிரமம் பண்றாங்க. என
மேல கையை வெச்சி... வீடியோ எடுக்கறேன்னு மிரட்டி." அவள் அழ
"சரி இதை அப்படியே விடுங்க...இவனுங்களை நான்
பாத்துக்கறேன்."
"என் கோபம் இந்த தடியங்க மேல
இல்ல. இவங்க வெறும் கருவி, டூல். இவனுங்களை விடுங்க..ஷ்யாம் நாயை சுட்டு
தள்ளனும்.." அவள் கோபமாக பேச.,
"வீணா உங்க பேரு
அடிபடும்.."
"பரவாயில்ல. பொம்பளைங்க வெளிய
புகாருக்கு போக மாட்டாங்கற தைரியம் தானே. இவனுங்களுக்கு? . நான் தைரியமா புகார்
சொல்றேன்,. அப்படி எல்லாம் சும்மா விட முடியாது. இதிய பெரிய இஷ்யூ ஆக்க
போறேன். என் கேரியரே போனாலும் சரி"
"உங்களுக்கு ஓகேன்னா சரி. மேடம் நீங்க வாங்க .அவங்கள உள்ள உட்கார வைச்சிடலாம் ' என சொல்லி போனை
பார்த்தவன் சிரித்தான்.
"என்ன சிரிக்கிறீங்க?"
"இனிமே நீங்க சும்மா விட
நினைச்சாலும்.,. அவனுங்களை சும்மா விடமுடியாது.. பெரிய இஷ்யூ ஆகிடுச்சி.."
"எ..என ஆச்சு?"
அவன் போனை காட்ட , பத்மா
நடுரோட்டில் 'ஹெல்ப் ஹெல்ப்' என கத்துவதை
வீடியோ எடுத்து எவனோ போட அது வைரல் ஆகி விட்டிருந்தது.
"வாங்க இனிமே லேட் பண்ன
வேனாம்."
வண்டலூரு சினிமா யூனிட்டுக்கு
அவர்கள் கிளம்பி போனார்கள்.
டைரக்டர் " மேடம்..என்னாச்சு.. என்னாச்சு? போன் ஏன் நாட் ரீச்ச்சபிள்? கார் எங்கே" என கேட்க அவள் அவளும் சுரேஷும் சேர்ந்து நடந்த விஷயத்தை சொன்னார்கள் .
"ராஸ்கல் இது கண்டிப்பா ஷியாம் வேலைதான். நீங்க கம்ப்ளேயின்ட் குடுங்க மேடம்."
மதியத்திற்குள் விஷயம் தீயாய்
பரவியது. சென்னைக்கு தகவல்கள் மறந்தன. சென்னை காவல் நிலைய காவல்துறையின் உயர் அதிகாரி பத்மாவை வர சொல்லி புகாரை பதிவு செய்தார். புகாரின் இறுதி வடிவம் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பத்மாவை அந்த கோலத்தில் பார்த்த சூட்டிங் ஸ்பாட் யூனிட் ஆட்கள் ஓடி வந்து சூழ்ந்து கொண்டார்கள்.
தமிழின் முன்னணி நடிகை பட்டப் பகலில் கடத்தப்பட்டு இருக்கிறாள். என செய்தியை கேட்டு தமிழகமே அதிர்ந்து போனது. அன்று மாலையே எல்லா தொலைக்காட்சிகளிலும் அது விவாத பொருளானது. உலகின் பல இடத்திலிருந்தும் பத்மாவிற்கு தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருந்தன. பல டிவி சேனல்கள் அவரிடம் நடந்தது என்ன? என்பதை பற்றி கேட்க ஆரம்பித்து எச்சரித்தார்கள்.
இரவு முழுக்க பரபரப்பு ஓயவில்லை.
விடிந்தால் யார் தலை உருளும்? என தெரியவில்லை. பத்மாவையா? பத்மாவையா? யாரு? யாரு?
பரபரப்பு குரல்கள்...
சுஸ்மிதா, சந்தியா, ரேனுகா,.
எல்லாருக்கும் அதிர்ச்சி
Top class screenplay. Hats off.
ReplyDelete