மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Saturday, May 25, 2024

பாகம் 35 - எபிசோடு எண் : 85

 

"ஏய்ய் பிராந்து போனை எடுக்கவே மாட்டியா?" பத்மா சந்த்தோஷமாக கத்தினாள்.

" இல்ல ., ஷூட்டிங்க் நடக்கற இடம்  ஒரு காடு. சிக்னல்லே வரலே.. சரி நீ அவன் கிட்ட சொல்லிட்டியா?" 

"இன்னும் சொல்லலடி. இங்க தான் இருக்கான். "

"இசிட்?"

"ஆஅமா. வீட்டுக்கு வந்திருக்காண்"

"ஏய்ய்ய் வெயிட் வெயிட்.... உன் லவ்வை சொல்லிட்டியா?"

"ம்கூம்... இப்ப தான்ன்., அவன் கிட்ட சொல்ல போறப்ப தான்,. நீ போன் பண்ணிட்டே"

"சொல்லுடி..சீக்கிரம் சொல்லுடி.... ஏய்ய்ய்ய் பத்மா அவனை விட்டுடாதே.. பையன் பெரிய இடம்" ரேனுகாவால் பதட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

"போடி லூசு.. என்ன உளறுரே?"

"பத்மா  நான் சொல்றதை கவனமா கேளு., அவன் முழு பேரு என்ன சொன்னான்?"

" சுரேஷ்  ., சுரேஷ் கிராண்டனி..."

" மண்டு கிராண்டனி..பேமிலின்னா என்னன்னு உனக்கு தெரியுமா?'

"என்னாடி சொல்றே?"

"அய்யோ பத்மா. அரை வேக்காடே. இந்த சுரேஷ் பெரிய கோடிஸ்வரன்டி.. ஒரே சமயத்துல நூறு சினிமா எடுப்பான்.. கர் நாடகா ஸ்டேட்டுல நம்பர் ஒன் பணக்கார பேமிலி " அவளும் சந்தோஷத்தில் திணறினாள்.

"ஏய் உளறாதே"

"லூசு ., நீ இப்ப இருக்கியே உன் அப்பபார்டுமென்டு ..அது பேரு என்ன"

"கிராண்டனி என்கிளேவ்.." அவள் பாதியில் நிறுத்தினாள். அதிர்ச்சியில் உறைந்தாள்.

"அதாண்டி அவன் பேரை சொன்னப்ப, எங்கேயோ கேட்ட  பேரா இருக்கேண்னு.. நெட்டுல சர்ச் பண்ணேன்.  பில்டர்ஸ் அவங்க..  "

"....................................."

"...பெங்களூர்ல தெரிஞ்ச பேமில்கிட்ட விசாரிச்சேன்.. ஃபுல் டீட்டெய்ல் கிடைச்சது"

".............................."

"ஏய்ய் பத்மா..  இன்னிக்கு தேதிக்கு 75 ஆயிரம் கோடி சொத்துக்காரங்க.. "
வாட்?"

"....... யெஸ்.... ரெண்டே ரெண்டு ஷேர் தான். ஒன்னு இவணோட அண்ணன்.,.இவன் தம்பி சுரேஷ். அந்த கம்பெனி எம். டி இவன்..   இவங்க அண்ணன் ஹரீஷ் ., கிராண்டணி சேர்மன் புரிதா? "

அவளுக்குள் உள்ள்ளுகுள் ஏதோ ஒன்று நழுவியது.

" நோ.. ச்..ச்சீய்  இருக்காது ரேணு. நீ யாரையோ நினைச்சி சொல்றே? இவன் சென்னை பையன்,. கன்னட ஸ்லாங்கே இல்ல பாரு"

"ஏய். சாவடிச்சிடுவேன்..அஞ்சு லாங்க்வேஜ் புளுயன்டா பேசுவான்.. சரி..  நீ பேஸ்புக்ல இருக்கியா?'

"இருக்கேன் .அவ்ளோ ஆக்டிவா இல்ல. இன்ஸ்டா தான்"

"சரி இரு உனக்கு பேஸ்புக் லிங்க் அனுப்பறேன். பாத்துட்டு பேசு"

"..பயமா இருக்குடி ...ரேனு...  ரிச் பெர்சனா அவன்."

" லூசு கூரையை பிச்சுகிட்டு கொட்ட போவுது.. ஆளை விட்டுடாதே. பத்மா லைஃபுக்கும் கவலையில்ல.. சினிமா டயால்க்லாம் வுட்டு, ஆளை மடிச்சி போடு. மார்ல சாஞ்ச்சிக்க.."

அவள் போனை வைத்து விட்டு பேஸ்புக் லிங்கை அனுப்ப. அவள் அவசரமாக கிளிக் செய்து பார்த்தாள்.அய்யோ...  இவன் தான். அவள் சேரில் உட்கார்ந்து விட்டாள். அவளுக்கு அழுகையாக வந்தது.

அய்யோ.. தெரிந்திருந்தால் நேற்றே சொல்லி இருக்கலாமே? அவன் பணக்காரன் என தெரிந்து அவனிடம் லவ் சொல்வதா? என்னை பற்றி என்ன நினைப்பான்? அவனை விடு . நான் எப்படி என்னை பற்றி நினைப்பேன்.?

" நீ இவ்ளோ பெரிய பணக்காரானடா ? மை காட் 75 ஆயிரம் கோடி...   நீயாடா ரோட்டுல எனக்காக சண்டை போட்டே? என்னை பைக்குல வச்சி கூட்டிட்டு ரவுன்டு அடிச்சே? இனிமே எப்படி உன் கிட்ட என் லவ்வை சொல்ல., சொன்னாலும் அதில் லவ் இருக்குமா? கடவுளே? காதல் பூக்கும் போதே., சருகாகி விட்டதே?

ச்சே ஏன் என் வாழ்க்கை இப்படி பூத்து பூத்து அப்புறம் உலர்ந்து போகிறது?

"பத்மா மேடம்!  லேட் ஆகுமா?  நான் போகனும்?" சுரேஷ் எட்டி பார்த்து குரல் கொடுக்க, 

நான் எப்பவும் லேட்தான்' என  நினைத்தபடி, கண்களை துடைத்து கொண்டு, அவள் வெளியே பால் கனிக்கு வந்தாள். 

75 ஆயிரம் கோடிக்கு அதிபதியா இப்படி  பால்கனியின் நின்று கொண்டு  நகம் கடித்து துப்பி கொண்டிருக்கிறான்?.

அவள்  முகம் இருண்டிருந்ததை அவன் கவனித்தான்.

அவள் " டீ சாப்பிடறீங்களா? ' என கேட்டாள். அவன் கண்களை அவள் பார்க்காமல் பேச.," இல்ல  வேணாம்"

"வேணாமா?" அவனை நேருக்கு நேராய் பார்த்தாள்.

"என்ன பேசிட்டிருந்தோம்?'

"ஆங்க் எங்கே வேலை செய்யறீங்கன்னு கேட்டேன்" அவள் உலர்வாக பேசினாள்.

" ஹஹா. நாங்க கிராண்டனி பில்டர்ஸ்ங்க"

"அ..அப்படின்னா?"

"நீங்க  நிக்குற இந்த பில்டிங்கை யாரு கட்டுனா தெரிமா?'

"தெரியாது"

"அய்யா கம்பெனி தான்.. கிராண்டனி என்கிளேவ்'

"ஓ.."

"என்ன சிம்பிளா சொல்லிடீங்க.. வீ ஆர் லீடிங்க் பில்டர்ஸ். "

 அவன் மிக சுருக்கமாக தன்னுடைய நிறுவனத்தை பற்றியும் தனது குடும்பத்தை பற்றியும் சொன்னான். அவன் சொல்ல சொல்ல அவன் சொத்து மதிப்பு கேட்க கேட்க ,அவளுடைய முகத்தின் படபடப்பு அதிகமாகி  அவளது முகம் கொஞ்சம் கொஞ்சமாக வாடிப் போனது.

"பத்மா! இப்ப நான்  எதுவும் இல்லாத ஆளா இருக்கலாம். எஸ் ஏ பி கோர்ஸ் முடிச்சப்பறம் அய்யா தான் எம். டி..என் கீழ மூவாயிரம் பேரு.." அவன் வெகுளித் தனமாக சொல்ல., அவன் தன்னை விட்டு வெகு தூரம் போவது போல உணர்ந்தாள். அவளது தொண்டையும் நாக்கும் உலர்ந்தது. நக்கு புரளவே இல்லை.

ஓ மை காட்.  இவ்வளோ பெரிய பணக்காரனா, என்  வீட்டுக்கு வாடா?"  என்றதும் பைக் எடுத்துக்கொண்டு வந்துவிட்டாள்.

' நான் அவனை வைத்து சோறு போடலாம் என நினைத்தால் அவன் ஊருக்கே சோறு போடக்கூடிய அளவில் பணக்காரனாக இருக்கிறானே?  இத்தனை பெரிய பணக்காரனிடம் நாம் எந்த விதத்தில் போய் புரப்பஸ் பண்ணுவது?"

அய்யோ நேற்றே சொல்லி இருக்கலாமே.. இந்த ரேனு முன்டத்தால் சொல்லாமல் போய். இப்போது அவளும்  அவனை பற்றி விசாரித்து சொல்லி., எல்லாம் தெரிந்து.,

இவனும் தன்னை பற்றி சொல்லிய பிறகு,,கடைசியில்  பணத்துக்காகத்தானே புரப்போஸ் செய்தாய்?'  என அவன் நினைத்து விட்டால்?

 'அய்யோ என் தலை எழுத்து.  அவன்  வீட்டுக்கு வந்தவுடனாவது நான் ப்ரொபோஸ் செய்து இருக்கலாம். என் கொழுப்பு. என் நேரம்.. அவன் யார்? அவனது செல்வம் என்ன?  சொத்து மதிப்பு என்ன?  குடும்பம் பின்னணி என்ன?  என்பதெல்லாம் கேட்ட பிறகு நான் ' லவ் யூ சொன்னால் என்னைப் பற்றி என்ன நினைப்பான்?

 திரையில் நடிக்க தெரிந்த எனக்கு நிஜத்தில் நடிக்க தெரியவில்லை . அதுதன் உண்மை.

"என்னாச்சு உங்களுக்கு? நான் வரப்போ ரொம்ப உற்சாகமா  இருந்திங்க ?  இப்ப  டல் ஆயிட்டீங்க சொல்லுங்க"

" நோ  எனக்கு ஒன்னும் இல்ல"

" அட ஏதாச்சும் இருந்தா சொல்லுங்க "

"அ...அதெல்லாம் ஒன்னும் இல்ல "

"ஆர் யூ ஷ்ய்ய்ர் ஏதோ பேசனுமுன்னு கூப்ப்பிட்டீங்களே?"

"உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லனுமுன்னு தான். எங்க மம்மி கூட உங்கள பாக்கனுமின்னாங்க... ஜஸ்ட் பார் தட்"

"ஆர் யூ ஷூர்?'

"யெஸ்"

"ஷல் ஐ மேக் ஏ மூவ்?"

" ம்ம்"

 அவள் சொல்லும் போது  அவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது . அவன் இன்னும் கொஞ்ச நேரம் கலகலப்பாக பேசி அவளிடம் இருந்து விடைபெற்றான்.

அவள் அவனுக்காக பார்கிங் வரை வந்து வழி அனுப்பினாள்.

"ஆய் யூ சீரியஸ் பத்மா? . எதுவோ சொல்லனும்.. ரொம்ப பேசனுமுன்னுட்டு டக்குன்னு போக சொல்றீங்களே"

'................."

"இல்ல. நாளைக்கு சொல்றீங்களா?"

"இ.இல்ல., சொல்றதுக்கு எதுவுமில்ல சுரேஷ் பை.."

-------------

 

சுரேஷின் பைக் வடபழனி ஆற்காடு சாலையில் போய்க் கொண்டிருந்தது. பத்மா திரும்ப அழைப்பாள் என அவன் நம்பினான். போனையே பார்த்து கொண்டு பைக்கை .ஓட்டினான்., ஆனால் பத்மாவை  கூப்பிடவில்லை.

இந்த மூன்று நாளில் பழகிய பழக்கத்தில்  பத்மாவின் கண்களில் தெரிந்த காதல் அவனையும் அலைகழித்தது . சினிமாவில் நடித்தும் நெருப்பு போன்றவள் என தன எல்லாரும் சொன்னார்கள். அவனுக்கும் அவளை மிகவும் பிடித்திருந்தது.

போதும் இந்த காம ஆட்டமெல்லாம் . எல்லாவற்ரையும் முடித்து விட்டு கம்பெனியில் போய் உட்கார்ந்து கொண்டு இந்த அழகு மயிலைக் கட்டி  கொண்டு அவள் மடியில் தூங்கி காலம் தள்ளலாம் என்று கூட நினைத்தான்.

பத்மா தன்னை  வீட்டுக்கு கூப்பிட்டதும் கண்டிப்பாக லவ் ப்ரொபோஸ் செய்வாள்'  என தன அவன் எதிர்பார்த்திருந்தான் .

இந்த மூன்று நாட்களாக அவள் அவளிடம் மிகவும் நெருங்கி விட்டிருந்தாள். இரண்டாவது  நாளே அவள் கண்ணில் காதல் ரேகையை அவன் கண்டுபிடித்து விட்டாள்.

சிலுவை ஆட்கள் தன் கையில் கீறிய காயத்தை எத்தனை தடவை பத்மா விசாரித்திருப்பாள்.?

 ஒருவேளை  தன்னிடம் அவளது காதலைச் சொன்னால் தான், முற்றிலும் ஒரு புதிய அத்தியாயத்தை துவங்கலாம் என காத்திருந்தான்.  ஆனால் அப்படி தூங்குவதற்கு அவசியமே இல்லாமல் போய்விட்டது.

தாந் யார்? தன் சொத்து என்ன? குடும்பம் என எல்லாம் சொல்லியும் அவள் கொஞ்சம் கூட, பதறவில்லையே? அவளை நான் ஈர்க்க முடியவில்லை? அவள் என்னிடம் என்ன எதிர்பார்த்தாள்? எது என்னிடம் இல்லை? அவனுக்கு குழப்பமாக இருந்தது.

சுரேஷை கற்புடை நங்கை பேரழகி பத்மாவுக்கு தராமால் காலம் அவனை சேமித்து வைத்திருக்கிறது என்றால் அதன் பொருள் என்ன? 

எங்கேயோ.. ஆர்த்தி ஆர்த்தி ஆர்த்தி என ஒரு மெல்லிய குரல் தொலைவில் கேட்டுக் கொண்டிருக்க., 

அவனால் எந்த கேள்விக்குமே பதிலை கண்டுபிடிக்க முடியவில்லை.

அவனது பைக்  தட்டு தடுமாறி போய்க் கொண்டிருந்தது.

 

(" திரும்புடி பூவை வைக்கனும்" அனைத்து பாகங்களும் முற்றும் )


திரும்புடி பூவை வைக்கனும் அனைத்து பாகங்களும் ஆ·பர் விலையில் பெற  (35 பாகங்கள் 20 ஆயிரம் பக்கங்கள் - முழு தொகுப்பு )


கள்வெறி கொண்டேன் இலவச பதிவுகள்..  விரைவில் ஆரம்பமாகும்.