சில மாதங்களாகவே,
பல திரைக்கதை ஆசிரியர்கள், இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் பலர் தொடர்ச்சியாக என் மெயிலுக்கு
அவர்கள் எழுதியுள்ள கதைகள், நாவல்கள், கவிதைகள், திரைக்கதை பயிற்சி நூல்கள் என பல படைப்புகளை எனது இணைய தளத்தில் வெளியிடுவதற்காக அனுப்பி வைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
அதில் பலர் அப்புத்தகங்களின் 'அமேசான் ' லிங்குகளை அனுப்பி புரோமோட் செய்ய வற்புறுத்துகிறார்கள்.
இன்னும் சொல்லப்போனால் அதில் அந்த சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களை விட அதனை படித்த வாசகர்களே என் பிளாக்கில் எழுத நிர்ப்பந்திக்கிறார்கள்.
தாமதமாகும் போது கோபப்டுகிறார்கள்.
நான் யாரையும், யாரின் திறமையும் புறக்கணிப்பவன் இல்லை.
ஆனால், அந்த படைப்புகளை பற்றி நான் ஒரு வரி எழுத வேண்டுமெனில் நான் குறைந்த பட்சம் அதனை முழுமையாக படிக்க வேண்டும். அது தான் நியாயம்.
அதற்கு எனக்கு நேரம் இருக்க வேண்டும்.
நானே பிளாக்கரில் வாரம் ஒரு முறை வந்து அந்த வாரத்துக்குரிய எல்லா இலவச பதிவுகளையும் ஷெட்யூல் போட்டு விட்டு கிளம்பி விடுகிறேன்,.
என்னால் எப்படி அந்த 20,30 புத்தகங்களையும் படித்து விட்டு ரிவியூ எழுதி அமேசான் லிங்க் கொடுக்க முடியும்?.
இது போக 200 க்கும் மேற்பட்ட மின்னூல்கள் எனது இனையதள வெளியீட்டிற்காக அனிவகுத்து நிற்கின்றன.
நான் எனது அடுத்த நாவல் வெளியீட்டை செபடம்பரில் கொடுக்க நினைத்து அது முடியாமல் போகிறது. இது எனக்கு உபரியான வேலை பளு,
இருப்பினும் , கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் எல்லார் படைப்புகளையும் என் பிளாக்கரில், இனையதளத்தில் பதிவேற்றுகிறேன்.
வெறும் எனது நாவல்களுக்கு மட்டும் 'ஆதர் என்.வி' இனையம் இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன். பட் ப்ளீஸ் வெயிட்
- நவீன வாத்சாயனா.
No comments:
Post a Comment