VELLA MUDIYAADHA VETKAIGAL – Part 1 Novel from Naveena Vathsasayana
வயது முதிர்ந்தோர்கள் , மணமானவர்கள் மட்டும் படிக்கவும்.
மென் காமகதைகள் படிக்க விருப்பமில்லாதவர்கள்
படிக்க வேண்டாம்.
RECPECT WOMEN - PROTECT WOMEN
நண்பர்களே வணக்கம்!
'வெல்ல முடியாத வேட்கைகள்" நாவலில் சந்திக்கிறேன்.
1. 'திரும்புடி பூவை வைக்கணும் '
2. 'கள்ளம் கபடம் காமம்'
3. ' கள்வெறி கொண்டேன்'
4. "காமப் பெரு நதி "ஆகிய நாவல்களுக்குப் பிறகு,
நான் எழுதும் ஐந்தாவது நாவல் இது.
நீண்ட நாள்களுக்குப் பின் எனது அடுத்த நாவல்.
வெறும் கிளர்ச்சி யூட்டும் காம வர்ணனைகள் மட்டுமன்றி வித்தியாசமான திரைக் கதைகள் சம்பவங்களை தான் இந்த நாவலிலும் சொல்ல முயற்சித்து இருக்கிறேன்.
சிறு சிறு குறு நாவல்களாக உருவாக வேண்டிய இந்த கதைக் கருக்களை நான் ஒன்றிணைக்கும் போது அது தானாகவே பெரிய நாவலாகி விடுகிறது .
இங்கே நான் கையாண்டிருப்பது மிக வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு ஆண்களால் படுக்கையில் கைவிடப்பட்ட முக்கியமான இரு பெண் கதாபாத்திரங்கள் .
அவர்களது கடந்த கால மற்றும் நிகழ் கால சம்பவங்களின் கோர்வைகள் ஒரு நாயகனை சுற்றி வருகிற இந்த வித்தியாசமான முயற்சி. எனது எழுத்தை தொடர்ந்து படித்து வரும் வாசகர்களுக்கு இது மிகவும் பிடிக்கும்.
ஒரு கணமும் அவர்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் ஏமாறக் கூடாது என்பதில் நான் மிகவும் தீவிரமாக இருக்கிறேன். இதிலும் அந்த நியாயத்தை செய்திருப்பதாக உணர்கிறேன். எனது " திரும்புடி பூவை வைக்கனும்" நெடு நாவலின் நான்காம் நாயகன் அஜய் இதில் ஒரு துணை கதாபாத்திரத்தில் "ரீ என்ட்ரி" செய்திருப்பான். படிக்க புதுமையாக சுவாரசியமாக இருக்கும்.
இரு பெரிய பாகங்களாக வெளியிடலாம் என நினைக்கிறேன். முதல் பாகம் மட்டும் இப்போது.
இந்த நாவல் இரண்டு, மூன்று குடும்பங்களுக்கு இடையே மாறுபட்ட சுவாரசிய மற்றும் நெருக்கடியான சம்பவங்களின் அடிப்படையில் உருவாகி இருக்கிறது. நாவலில் வரும் தங்கராஜ் , லோகேஷ், பத்ரி, முருகேசன், ரங்கசாமி கதாபாத்திரங்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டது. நியாய , அநியாய மற்றும் பரிதாபங்களை உள்ளடக்கியது,
அதுபோலவே பெண்களின் கதாபாத்திரத்தில் ஜெயந்தி, சரண்யா, பவித்ரா, ஸ்வாதி, புனிதா, தனலட்சுமி ஆகியோரின் இறுதியான தேவை ஒன்றாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் தங்களது வாழ்வியல் குணாதிசயத்தில் மாறுபட்டவர்கள். அவர்களின் கடந்த கால பின்னணியும், நிகழ்கால நெருக்கடியும் ஒப்பிட முடியாத வகையில் வெவ்வேறானது.
இவர்கள் நடுவே காமம் பிரதானமாக இல்லாமல் போக வாய்ப்பே இல்லை தான். ஆனால், அதை எப்படி? யார்? எப்போது? தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்? நிராகரிக்கிறார்கள் என்பது தான் விஷயமே..
காமம் போல பெண்களுக்கு மறுக்கப்படுபவைகள், எப்போதும் ஆண்களால் மறைக்கப்படும். அவை அலுமாரிகளில் ஒளிக்கப்பட்டிருக்கும் எலும்புக்கூடுகள் போல ., துணிந்து அவற்றை வெளியில் தூக்கிப் போட்டால் இதைப்போல் பல நாவல்கள் வெளிவரும்.
நாவலில் உலவும் ஜெயந்தி, சுவாதி, சரண்யா, தனலட்சுமி, சுந்தரி என யாருமே தவறானவர்கள் அல்ல., அவர்களுக்கான நியாயங்கள் வெளியில் சொல்லப்படவில்லை என்பதை இந்த நாவல் சித்தரிக்கிறது.
கலவி, கூடலை யார் வேண்டுமானாலும் எழுதலாம், ஆனால் அதன் பின்னால் நிறைந்து இருக்கக் கூடிய உயிர்ப்பு, நாவலின் உயிரோட்டமான ஜீவன் , லாஜிக்காக நிகழக் கூடிய சந்தர்ப்பங்கள் , கதாபாத்திரங்களின் மாறும் மனநிலை, அவர்களுக்குள் நிகழும் கிறங்கடிக்கும் வசனங்கள், படிக்கும் வாசகர்களே அந்தந்த இடத்தில் பாத்திரங்களாய் உருமாறி படிக்கக் கூடிய கிறக்கம் இதெல்லாம் இருந்தால் தான் சாதாரண காம நாவல் என்பது, என்றென்றும் நெஞ்சில் குடியிருக்க கூடிய முத்திரை நாவலாக அமையப் பெறுகிறது. அதற்காகத் தான் இத்தனை மெனக்கெட வேண்டியதாக இருக்கிறது.
இந்த நாவலில் வரும் ரயில் சம்பவமும், ஜன்னல் சாளரத்தில் அவ்வப்போது எட்டிப் பார்த்து கதறும் ஆணின் வெறித்தனமான ஆதங்கமும், முதிர்ந்த இரு பெண்களின் தீரா காமமும், சுந்தரி, சரண்யா போன்ற இளம்பெண்களின் சந்தர்ப்ப சூழ்னிலையும்., சேர்ந்து அடங்கிய மெகா தொகுப்பு இது.
அசரடிக்கும் மூன்று தனித்தனி திரைக்கதைகளை இணைத்து, ஒரே நாவலாக கொடுத்திருக்கிறேன். மற்றதெல்லாம் நாவலுக்கு சுவாரசியம் கூட்டும், இணைப்பு கிளை கதைகள்.
எந்த ஒரு சூழ்நிலையிலும் எனது வாசகர்களின் எதிர்பார்ப்புகளை பொய்யாக்கி விடக் கூடாது என்ற எனது நிலைப்பாடு காரணமாகவே நாவலை கொஞ்சம் தாமதமாக்கி விடுகிறது.
இந்த நாவலில் வரும் வாழ்வில் விளிம்பு நிலையில் தவிக்கும் பெண் கதாபாத்திரமான தனலட்சுமி எந்த சூழ்நிலையிலும் தன் ஒழுக்க நிலையில் இருந்து தவறாமல் வாழ போராடி, ஒரு கட்டத்தில் அதை சமாளிக்க முடியாமல் தோற்பது ஆகட்டும்.,
அவள் தனக்கு நேர்ந்ததை சொல்லும் கதையில் சம்பவங்களை மட்டும் சரியாக சொல்லி பின் ஆண் பாத்திரத்தின் பேரை மட்டும் மாற்றி சொல்லி மனசை ஆற்றிக் கொள்வாதகட்டும்..,
அந்த நிஜ பின்னணி அவளின் மருமகன ரங்கசாமியின் கண்ணொட்டத்தில் விரிவதாக இருக்கட்டும். மாமியாரையே விட்டுக் கொடுக்காதவன் மனைவியை விட்டுக் கொடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவதாகட்டும்.,
இந்த மாறுபட்ட புதுமையான கதையமைப்பினை எந்த சினிமாவிலும், நாவலிலும் வாசகர்கள் படித்திருக்க மாட்டார்கள். அதிலும் இந்த 16,17,18 எபிசோடுகளை படிப்பவர்கள் குழம்பி போய் ஒரு நிதானத்திற்கு வரவே நேரம் பிடிக்கும்.,
நீங்கள் நீண்ட நாள் காத்திருந்ததற்கு இந்த நாவல் மூலம் நியாயம் செய்ய முயன்றிருக்கிறேன்.
மொத்தத்தில் இந்த நாவல் உங்களுக்கு மாறுபட்ட புதுமையான ஒரு அனுபவத்தை நிச்சயம் தரும் என்பது உத்தரவாதம்.
இந்த நாவலில் வரும் கதையும் சம்பவங்களையும் உணர்ந்து படியுங்கள். இதில் காமம் இருப்பது போல தக்க படிப்பினையும் இருக்கும். நம்மைச் சுற்றி என்னென்ன மாதிரியான துரோக வலைகள் பின்னப்படும்? எப்படியெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்? என்பதை புரிந்து கொண்டு நடப்பதற்கு இந்த நாவல் உதவியாகவே இருக்கும்.
நமது பிளாக்கரில் தினம் ஒரு பதிவென இலவசமாகவே படியுங்கள். முழு நாவலும் 118 சொச்ச எபிசோடுகளையும் உடனே படிக்க வேண்டுமெனில் நமது https://authornv.com/ இணையதளத்தில் பெறவும்.
நாவலைப் படித்து விட்டு கருத்தை சொல்லுங்கள்.
வணக்கம்! சந்திப்போம்..
- நவீன வாத்சாயனா
பின்குறிப்பு : பலமுறை சொன்னது தான். உங்களுக்கு நன்கு தெரிந்தது தான்.
வயது முதிர்ந்தோர்கள் , மணமானவர்கள் மட்டும் படிக்கவும்.
மென் காமகதைகள் படிக்க விருப்பமில்லாதவர்கள் படிக்க வேண்டாம் .
வெல்ல முடியாத வேட்கைகளை 118 எபிசோகளையும் உடனே பெற: