சூரியனுக்கு மிக அருகில் பூமத்திய பூமத்திய ரேகை போய் நிற்கிறதோ என்னமோ தெரியவில்லை? ஊரே வெப்பத்தில் தகிக்க., மாமியார் வீட்டில் முன்னே போய் நின்றான் ரங்கசாமி.
அவன் அந்த வீட்டுக்கு அதிகம் தனியாக வந்ததில்லை. வர வேண்டிய அவசியம் இருப்பதில்லை . இப்போது கையில் காசு இல்லை. மாமனார் முருகேசன் ஒரு 4000 ரூபாய் தந்தால் அரை லோடு பழத்தை
சந்தையில்
இறக்கலாம். மாமனாரை தேடி வந்து கதவை தட்டினான்.
வீட்டில் முருகேசன் இல்லை. அத்தை
தனலட்சுமி தான் கதவை திறந்தாள். "என்ன?"வென்றாள் எடுத்த எடுப்பிலேயே .
உள்ளே கூட கூப்பிடவில்லை., அத்தை
சீவி சிங்காரித்திருப்பதாய் அவனுக்கு பட்டது. அந்த நேரத்தில் மல்லிப்பூ வைத்துக்
கொன்டு எஙே போக போகிறாள் என தோன்றியது.
"மாமா இல்லைங்களா? அத்தை"
" அந்த ஆளுக்கு என்ன வேலை? வேபாரம் பாக்குறேன்., வேபாரம் பார்க்கிறேன்னு என்று காலையிலிருந்து மத்தியானம் வரைக்கும் அந்த மண்டபத்தில் தான் சீட்டுக்கட்டு ஆட்டத்துல ஒக்காந்துகுனு இருக்கார். வேற என்ன பொழப்பு அவருக்கு?" அவள் சுள்ளேன சீற, அவன் பரிதாபமாக விழித்தபடி, சரி என தலை ஆட்டிவிட்டு, சீட்டுக் கட்டு மண்டபத்தை நோக்கி நடந்தான்.
சீட்டுக்கட்டு ஆட என தனியாக அங்கே ஒரு மண்டபம் இல்லை. அது ஊரைத் தள்ளி கோயிலின் மொட்டை கோபுரம் அருகே இருக்கிறது,.
ஒரு காலத்தில் கோபுரம் மிகவும் விசேஷமக இருந்தபோது, அந்த மண்டபத்தில் தான் சாமி வைத்து அலங்கரிப்பார்கள் . ஆனால் பெரிய வருமானம் இல்லாததால் கோயிலை கண்டுகொள்ளாமல் போக, கோயிலுக்கு பெரிதாக ஆட்கள் வருவதில்லை இந்த திறந்தவெளி மண்டபம் சோம்பேறிகளுக்கும் ஊதாரிகளுக்கும் புகலிடமாக மாறிவிட்டது.
ரங்கசாமியும் பால்ய வயதில் மாலை நேரம் அங்கு போய் இருக்கிறான். சேலையூருக்கு அருகே இருந்த அந்த மண்டபத்தை நோக்கி அவன் நடக்கையில் மாமாவை போலவே இன்னும் சில சோம்பேறிகள் மங்காத்தா ஆடிக் கொண்டிருந்தார்கள் .
ஆனால், அவர்களுடன் கலக்காமல் வெளி திண்ணையில் மாமா உட்கார்ந்து இருந்தார். வாரக்கணக்காக மழிக்கப்படாத அடர்ந்த தாடியும் மீசையும் மாமாவை வெகுவாக மாற்றியிருந்தது.
வெளியே சொல்ல முடியாத ஒரு பரிதவிப்பும் சோகமும் மாமாவிடம் இருந்ததாக உணர்ந்தான் ரங்கசாமி .
ஒரு காலத்தில் உழைத்து உரை மேறி போன விவசாயி மாமாவின் உடம்பு இப்போது உருக்குலைந்து தளர்ந்து போய் இருக்கிறது. தெருவோர காய்கறி வேபாரியாகிவிட்டார். மாமாவின் உடல் தான் தளர்ந்து போயிருக்கிறது தவிர அத்தையின் உடம்பு அப்படி இல்லை . இப்பொழுதும் பிடுங்கி வைத்த சக்கரவள்ளி கிழங்கு போல செமத்தியாக இருக்கிறாள்' என நினைத்துக் கொண்டான்.
ஆனால், அப்படி ஒரு நினைப்பு வந்து, கன்னத்தில் தப்' தப்' என போட்டுக் கொண்டான்.
மண்டபத்தை நெருங்க, உச்சி வெயில் மிகக் கொடுமையாக இருந்தது. இந்த கொடுமைக்கு வீட்டில் படுத்து ஹாயாக ஃபேனை போட்டு தூங்க வேண்டியது தானே., இந்தாளு? எதற்கு இந்த மொட்டை வெயிலில் இந்த மண்டபத்தில் வந்த உட்கார்ந்திருக்கிறான் இந்த மாமன்., என்பதாய்
அவர் அருகே போனார்.,
'மாமா என்னய்யா ஆளையே காணோம். துட்டு தரேன்னேயே" என்றான்
ரங்கசாமி. மாமா உக்காந்திருக்கும்
விதத்தை பார்த்தாலே அவர் நாலாயிரம் தரமாட்டார் என்பது அவனுக்கு புரிந்தது. அவனை ஏறிட்டு பார்த்த தனத்தின் புருஷன் ப்சூ' என வெறுமையை கொட்டினார். தலையில் கை வைத்துக் கொண்டார்.
" ம்ம் மாமா என்ன இங்க வந்து உட்கார்ந்து இருக்க?., துட்டு இருக்கா இல்லையா? இவ்ளோ தூரம் உன்னை தேடி வந்திருக்கேனே?
துட்டு இல்லையா ரங்கசாமி கேட்க, மாமா " சலிப்போடு சூள்' கொட்டினார்.
அவர் பிடித்துக் கொண்டிருந்த பீடியை தூக்கி போட்டார் .
"என்னப்பா நான் பாட்டுக்கு இருக்கேன்., சும்மா இருக்கியே.. ' அவன் மாமாவின் காலடியில் வந்து உட்கார்ந்தான்..
" நீ வேற ரங்கா ., மங்காத்தாக்கு ஒரு கை ஆடணும்னு கை பரபரக்குது., துட்டு இல்லன்னு என்னை வெளியே உட்கார்ந்து வச்சிருக்காங்க " முருகேசன் சோகமாய் சொன்னார்.
"ஏன்பா நல்லா இருக்குதா உனக்கு ? அந்த அம்மா கீரை காய்கறின்னு ஊர் ஊரா போய் வித்துட்டு வருது., நீ அந்த காசை, இங்க சீட்டு ஆடிய காலி பண்றியே "
'அட போடா ! நான் உழைக்காத உழைப்பா? நான் சம்பாதிக்காத பணமா? காலம் இப்படி ஆயிப்போச்சு"
'
இப்படியே
சொல்லிக்கிட்டு இருந்தா எப்படி? பொழைப்பை பாக்க வேணாமா? ஏற்கெனவே உனக்கு ஆஸ்பத்திரி
செலவுக்கு அந்த தங்கராஜ் சார் கிட்ட அத்தை வட்டிக்கு காசு வாங்கி கொடுத்திருக்கு..
" ரங்கசாமி சொல்ல.,
தங்கராஜ் பேரை கேட்டதும் ஓரிரு
ஆட்கள் திரும்பி பார்த்து ஆட்டத்தை தொடர,
"அத்தை அங்க ஒன்டிக்காரியா
உழைச்சி, பொலம்பிகிட்டு இருக்கே? நீ ஊதாரியா சீட்டாடிட்டு இருக்கே? அங்க உன்
பொண்னு கூட சதா உன்னை தான் கரிச்சி கொட்டி கிட்டு இக்க்கு"
"கரிச்சி கொட்டுனா கொட்டுது
போ.." அவர் விரக்தியாக வெறுமையாக சொன்னார்.
"அத்தை பாவமில்லையா? இப்படி
தலைசுமை தூக்கிட்டு போவனும்னு விதியா அவங்களுக்கு?" தனலட்சுமி பாவம் தான்.
"திரும்ப நீ மங்காத்தால போய் உட்கார்ந்தா, அத்தை என்னை தான் திட்ட போறாங்க" என்றான் ரங்கசாமி.
மாமாவுக்கு ஒரு கணம் தனலட்சுமி முகம் வந்துவிட்டு போனது . தனலட்சுமி அழகானவள் தான் .அன்பானவள் தான். வீட்டுக்கு அடக்கமானவள் தான். ஆனால் அவளுக்கு தான் அவளுக்கு நான் தான் ஈடில்லையோ. என்னமோ?
நியாயமாக அவருக்கு தனலட்சுமி
கிடைச்சது
எல்லாம் ரொம்ப ஓவரான அதிகப்படியான பொக்கிஷம் தான். அவள் சென்னையில் வளர்ந்து, படித்து கிராமத்திற்கு வந்த விசித்திரமான பெண். அவள் அழகை பார்த்து அந்த ஊரே
பிரமை பிடித்து போனது.
அவள் அவருக்கு கிடைத்ததற்கு காரணம் . அவரது சொத்து . அந்த குடும்பத்திற்கு பல சொத்துக்கள் பல இடங்கள் இருந்தன. அதில் பெரிய சொத்து சென்னை பெருங்குளத்தூர் அருகே இருந்த எட்டு ஏக்கர் சொத்து. அதை காட்டியே தனலட்சுமியை அவருக்கு கல்யாணம் செய்து வைத்தார்கள் .
பலராமனி வீடு ஆண்களின் வீடு. சேவல்
பண்ணை. அதற்கு முன்பு வரை அந்த வீட்டில் பெண் வாடையே இல்லாத, களையிழந்து சோகம் அப்பிய வீடு.
அந்த வீட்டில் தனலட்சுமி வந்த பிறகு பெரிய அளவில் சலசலப்பு ஏற்பட்டது. வளையல், சத்தம், புடவை சரசரப்பு, பவுற்ற
வாசம், மெட்டி ஒலி எல்லாமே புதிதாக படர்ந்து ஒலித்தது.
வீடு முழுக்க புதிய களை கட்டியிருந்தது. வேளா வேளைக்கு அவருக்கும் அவரது தந்தைக்கும் தம்பிகளுக்கும் சோறு போட வீட்டில் ஆள் இருந்தது .
அவளுக்கும் இந்த படிப்பறிவில்லாத
காட்டானிடம் பேச வேண்டும் என ரொம்ப ஆசைதான். ஆனால் படித்த தனலட்சுமிக்கு சமமாக பேச அவரிடம் வார்த்தையும், இல்லை ., வார்த்தை கோர்வையும் இல்லை . அவர் அதிகம் பேசாமல் விலக,
கணவனிடம் சரியாக பேசி கூடிக் குலவ சமயமும் வாய்ப்பு இல்லாத தனலட்சுமி அக்கம்பக்கம் பேசினாள். அதில பல பேர் இளவட்டங்களக
இருந்தர்கள். மதினி என காமம் ஒழுக தான்
அழைத்தார்கள். விவரமாகவும் விஷயமாகவும் தெரியும் பேசும் பலரிடம் அவள் வாயை கொடுத்தாள். அவளின் பேரழகும் நடை உடையும் அவளின் சேலைக்குள்ளே அங்க அசைவில் உண்டாகும் கவர்ச்சியிலும் கிண்னென நிமிர்ந்து நிற்கும் மார்புகளும் அந்த ஊரையே அவளுக்காக தாளம் போட வைத்தன.
அவள் அனைவரிடமும் சிரித்து பேசுவதே அந்த ஊரில் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது .
சொந்தக்காரர்களும் நண்பர்களும் அடிக்கடி அவரிடம் சொல்ல, ஒரு கட்டத்தில் அவரே தனலட்சுமியிடம் போய் " ஏய்ய்ய் என்னடி ? வீட்டில் வேலை இல்லைனா கவுந்து அடிச்சு தூங்கறது தாணே? எதுக்கு வெளியே சுத்துற? எல்லார்கிட்டயும் பேசுற?' என திட்ட,
" என்னய்யா இப்படி என்ன சந்தேகப்படுற என விசுவரூபமெடுத்து ஆடிவிட்டாள்.
"ஊர்ல கண்ட கழுதைங்க கண்டதை சொன்னா அதை கேட்டுகிட்டு என்ன வந்து கேட்பியா ? நம்ம மனசு சுத்தமா இருந்தா சரிதான்" என அவள் சொல்ல அதற்கு மேல் அவர் அவரிடம் பேசுவதற்கு எதுவும் இல்லாமல் போனது .
அவள் வாழ்க்கையில் எதை எதையோ
எதிர்பார்த்தாள். ஆனால் முருகேசனின் வாழ்க்கை வேறாக இருந்தது. அவரின் வாழ்க்கை காலை பள்ளி எழுதல், காலைக்கடன் கழித்த,ல் விவசாயம் செய்தல் கள்ளு குடித்தல், டுரிங்க் டாக்கிசில்
படம் பார்த்தல், உண்டு உறங்குதல் , இரவு திண்ணை வெட்டி ஆட்களை தேடி பிடித்து அரட்டை அடித்தல், மது குடித்து சாய்தல் இது தவிர வேறு எந்த வேலையும் அவருக்கு தெரியாது.
லௌகீக ஞானங்கள் அற்ற, சம்பிரதாய ரீதியான, எந்திரகதியான, மாமூலான கடமைகள் கொண்ட உப்பு சபில்லாத வாழ்க்கை மட்டும் தான் அவருக்கு தெரியும்.
கல்யாணம் ஆன கொஞ்ச நாள் தந்த்துக்கு
மேல அந்த பவுடர் வாசனைக்கும், அவளின் வேர்வை வாசனைக்கும் ஆட்ப்பட்டிருந்தார்.
கொஞ்ச நாள் தான். மகள் ஒன்று பிறந்த பிறகு அதே மாமூல் வாழ்க்கை. அவருக்கு திரும்பி விட்டது,
விவசாயம் தவிர வேறு எந்த வேலையும் தெரியாத அவருக்கு ஒரே ஒரு பிடிப்பு அந்த பெருங்குளத்தூர் நிலம் தான். ஊரில் விவசாயம் பொய்த்த பின் மனைவியும் மகளையும் அழைத்துக் கொண்டு சென்னை பெருங்களத்தூருக்கு வந்து சேர்ந்தார்.
அங்கே விவசாயம் என்பது வேறு விதமாக இருந்தது . அங்குள்ள
சந்தையும் அவருக்கு பிடிபடவில்லை. நிறைய ஐ டி
கட்டடங்கள் வர துவங்க அதன், மத்தியில் பட்டாணி, கீரை விவசாயம் செய்வட்ஹே வினோதமாக
இருந்தது.
வேறு வழி இல்லாமல் தனக்கு சொந்தமான நிலத்தை ஒரு பில்டருக்கு விற்க அந்த ஆள் பவர் ஆப் பட்டானி வாங்கி அவரை ஏமாற்றி நடுத்தெருவில் விட்டு விட்டான் .
அவறது வாழ்க்கையில் தானாய் கிடைத்ததில் தனலட்சுமி தவிர வேறு எதுவுமே அவருக்கு ஒத்துப் போகவில்லை. என்னதான் படிக்காத விவசாயியாக இருந்தாலும் அந்த ஊரில் மிகப்பெரிய மனிதராய் உலா வந்தவர்.
ஆனால் இங்கே சென்னையில் 300 ரூபாய் காசுக்கு மருமகனையும் மொத்த சோம்பேறிகளும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதாக இருக்கிறது.
சீட்டாட்ட மண்டபத்தில் கூட
அவர்க்கு கடன் கிடைக்கவில்லை.
"சரி எனக்கு காசு தராட்டி போவுது போ. வீட்டுக்கு கிளம்பி போ., நான் வேற எங்கயாச்சும் பார்த்துக்கறேன் " என்றான் ரங்கசாமி .
"கைல எவ்வளவு வச்சிருக்கே?" முருகேசன்
கேட்டார்.
" எதுக்கு? "
'ஒரு 300 ரூவா குடேன்"
"ஏன் மாமா "
" ஒரு கை உட்காரலாம் பார்க்கிறேன் "
'ஏம்பா நீ திருந்தவே மாட்டியா ?'
மருமகன் நமக்கு புத்தி செல்கிறானே என அவனை உற்றுப் பார்த்தான்.
எப்படியாவது பொழுது போக வேண்டும். சாயங்காலம் வரைக்கும் இங்கே படுத்து கிடந்தால் கூட பரவாயில்லை. அவருக்கு வீட்டுக்கு போகவே பிடிக்கவில்லை. மண்டபத்திலிருந்து யாராவது துரத்தினால் கூட சற்று தொலைவில் தெப்பக்குளம் இருந்தது. குளத்தைச் சுற்றியிருக்கும் வேப்ப மரங்களும் அரச மரங்களும் படர்ந்து வளர்ந்திருக்கின்றன . அங்கே போய் படுத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கு முன்பாக ஒரே ஒரு ஆட்டம் போடலாம்.
ஏனோ இன்று ஆட உக்காந்தால் கை உட்காரும் என தோன்றுகிறது , காசு தான் இல்லை.
"நீ காசு தரியா இல்லையா ?" என எதிர் கேள்வி கேட்டார் மாமா
" நல்லா இருக்குய்யா ., நான் உன்ன கேட்டா நீ என்ன கேக்குறியா?"
' சரி எவ்வளவு தேவைப்படுது?"
" ஒரு 300 ரூபாய் கொடு வர வாரம் வெள்ளிக்கிழமை காய் வித்து தரேன் "
அவனிடம் 300 ரூபாய் வாங்கிக் கொண்டான் முருகேசன்.
தனலட்சுமிகளுக்கு முருகேசன்கள்
கிடைக்கிறார்களோ இல்லையோ., முருகேசன்களுக்கு தனலட்சுமிகள் தான் கிடைக்கிறார்கள்.