மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Sunday, September 13, 2026

வெல்ல முடியாத வேட்கைகள் : எபிசோடு : 5

 ஆஸ்பத்திரி வராந்தாவில் அவள் திரும்பி திரும்பி பார்த்தாள். கணவன் தலை தெரிகிறதா என்று? அவன் வரக் காணோம். அவளுக்கு  அங்கே இருக்கவே சங்கோஜமாக இருந்தது'. தங்கராஜ் ஏதேணும் காரணம் சொல்லி அவளை நெருக்கி கொண்டே இருந்தான்.

கணவன் இல்லாமலேயே  சரண்யாவை பார்க்க ரூமுக்குள் போனாள்.

இரண்டவாது பிறந்தது பெண் குழந்தை என்பதால் " அத்தை மூக்கு முழி எல்லாம் உங்களை மாதிரியே இருக்குல்லே?"  என்றான்.,

" கை விரல் கூட அப்படி தான் கூசா இருக்கு.,: அந்த காதை பாரேன். அப்படியே உங்கம்மா " அவன்  உள்ளர்த்ததில் பேசுவது அவளுக்கு புரியாமல் இல்லை.

"அம்மா., நாளைக்கு., வாம்மா டிஸ்சார்ஜ பண்றாங்க" மகள் சொல்ல.,

'ஆமா அத்தை., வாங்க ஒன்னா கிளம்பலாம்.. நீங்க தான் குழந்தையை வீட்டுக்கு கொண்டு வரனும்"

"ஆமாம்மா " அவன் எதற்கு சொல்கிறான்? என்பது அவளுக்கு புரியாமல் இல்லை.

'சரி நாளைக்கு தாணே  பாத்துக்கலாம்.."

"சொன்னீங்கன்னா நானே உங்களை வீடுல இருந்து ஆஸ்பத்திரிக்கு கூட்டி வந்துடறேன்" அவன் பார்வை அவள் மீது மேய., ஜெயந்தி அவன் சொல்வதை கவனிக்காது போல இருந்தாள்.

பெட்டில் கிடந்த குழந்தையை  கையில் எடுத்து கொஞ்சிக்கொண்டு இருக்கும் போது கணவர் வந்து விட்டார்.

"என்னங்க இவ்ளோ நேரம்?'

" நீ பாட்டுக்கு மருமகன் கூட ஜாலியா பைக்ல வந்துட்டே? நான் பஸ் புடிச்சி வர வேணாமா?' அவர் சுள்ளென்று எரிந்து விழ.,

'அட விடுங்க  மாமா., மருமகன் கூட தாணே ஜாலியா இருந்தாங்க?,. ஐ மீன் ஜாலியா வந்தாங்க." அவன் ஜெயந்தியை  பார்த்து கண் சிமிட்டி பேச., ஜெயந்திக்கு எப்படா இங்க இருந்து போவோம்/"  என இருக்க.

பாத்ரூமில் சென்று குழந்தையின் தலைமுடியில் இருந்த கறைகளை வென்னீரில் கழுவி சுத்தம் செய்து கொண்டு வந்த ஜெயந்தி,  திரும்ப வந்த போது ரூமில் கணவன் இல்லாமல் போனதை பார்த்து திகைத்தாள்.

"எங்கடி ., அப்பாவைக் காணோம்'  ஜெயந்தி குழந்தையை கொடுத்துவிட்டு அவரைத் தேட,

"நான் அவர் அப்பவே ஆட்டோ ஏத்தி அனுப்பிச்சு வச்சுட்டேன் அத்தை" தங்கராஜ் பொறுப்பாய் சொல்ல.,

'ஏன் ?" அவள் முகம் சிவக்க கேட்க.,

"நீங்க கொஞ்ச நேரம் இருந்துட்டு போவீங்க இல்லே?'

'.............."

" அவர் அவசரம் அவசரம் அப்படின்னார் ., அதான் அவரை ஏத்தி அனுப்பிட்டேன்., அவர் போகட்டுமே"

 கண்டிப்பாக அவர் போயிருக்க மாட்டார். இந்த பிராடு தான் ஏதோ குட்ட கலக்கி வேலை செய்து அவரை தனியாக ஏற்றி அனுப்பி விட்டான் . அவரை அப்படி அனுப்ப வேண்டிய அவசியம் என்ன?  வேற எதற்கு?  என்னை பைக்கில் கொண்டு போகிறதுக்கு தான் .

மணி நான்காக.,  அவள் ஒரு பெரிய கட்டைப்பையில் மகளின்  துணிகளை எடுத்துக் கொண்டு, ' சரி நான் கிளம்புறேன் " என சொல்லிவிட்டு விரைவாக  ஆஸ்பத்திரி விட்டு வெளியேற.,

போகாதீங்க இருங்க அத்தை., நானும் வரேன் " என பின்னாலே ஓடி வந்தான் தங்கராஜ். அவனை பார்க்கவே அவளுக்கு படு எரிச்சலாக இருந்தது அவளுக்கு. அவன் அவளிடமிருந்து பையை பிடுங்க பார்த்தான்.

" இல்ல ., இல்ல விட்டுடுங்க நான் போய்க்கிறேன்., நீங்க சரண்யா கூட இருங்க.."

" எங்கம்மா வராங்க. அவங்க பாத்துப்பாங்க.,  உங்களுக்கு ஏன் சிரமம்.,? இருங்க"

" ஒரு சிரமமும் இல்லை., விடுங்க"  அவள் மருத்துவமனை கீழே வந்து அந்த இடத்தை விட்டு போக பார்க்க.,  ஆட்டோவை தேட.,

" ஆட்டோ எல்லாம் வேண்டாம் என் பைக்ல உட்காருங்க" என்றான். உன் கூடவா? கடவுளே., இதுக்கு தான் அவரை அவ்ளீ சீக்கிரம் அனுப்பி வெச்சியோ ., என நினைத்தபடி

"உங்களுக்கு ஒரு தடவை சொன்னா புரியாதாநான் ஆட்டோல தான் போகணும் வழி விடுங்க "  முகம் சிவக்க கோபத்தில் பேச. அவள் பேசியது அவனுக்கு திகைப்பை ஏற்படுத்தியது என்றாலும்., அவன் அதை பெரிது படுத்தாமல் பார்க்கிங் ஓடிப்போய் பைக்கை எடுத்துக் கொண்டு வந்தான்.

அதற்குள் அவள் ஒரு ஆட்டோவில் ஏறி விட.,

"அத்தை... என்ன ஆச்சு? ., இறங்குங்க... பைக்ல போலாம் "

ப்ச் வேணாம்ம்., நீங்க போங்க சரண்யா தனியா இருப்பா"

"அட வாங்க சொன்னா கேளுங்க " அவன் மன்றாட ஆட்டோக்காரன் இருவரையும் மாறி மாறி பார்த்தான். "அக்கவாப்பா இது?" கேட்டான்.

"அடிங்க்.. நீ போடா"

"ப்ச்... பிரச்சனை பண்ணாதீங்க மாப்பிள்ளை. நீங்க போங்க,.  நான் ஆட்டோல போய்க்கிறேன்'"

ஒன்னும் தேவை இல்ல., சொன்னா கேளுங்க .  ஆட்டோ நீ போடா"

"ஏன் சார்?"

"ஆட்டோல  இருந்து அவங்களை இறக்கி விடுடா " என்றான் .

ஆட்டோக்காரன் பயத்துடன் இருவரையும் பார்க்க.,"  மாப்பிள்ளை தேவை இல்லாம வழியில பிரச்சினை பண்ணாதீங்க வழிவிடுங்க " அவளுக்கு கோபத்தில் உடல் நடுங்கியது. குரலும் உதறியது.

மரியாதையா பைக்ல ஏறுங்க,., வீட்டுல விட்டுடறேன்.."  என்றான் .,

" பேச்சு வரம்பு மீறுது. மாப்பிள்ள.. ஆட்டோ நீ போப்பா.,  குலைக்கற நாய்  கடிக்காது" என்றாள் கோபத்துடன்,.

 ஆட்டோ புகை கக்கி கிளம்ப, தங்கராஜை ., ஜெயந்தி பின் வழியே ஆட்டோ கண்ணாடியில் பார்த்தாள். அவன்  பைக்கில் இருந்த இடத்திலேயே ஆக்சிடெண்ட் முறுக்கிக்கொண்டு புகையையும் கோபத்தின் கக்கிக் கொண்டிருப்பதை பார்த்தாள். முகத்தில் காமம் அப்பிய ரௌத்திரம். இது கண்டிப்பாக நமது முதல் மகள் மீது தான் விடியும்.

இரண்டவது  மாப்பிள்ளை இப்படி இல்ல., பைக்கில் உட்கார்ந்தால் உடலை குறுக்கி கொண்டு முன்னே உட்கார்வான். அவன் தங்கம். இவன் பித்தளை.,

இருந்திருந்து இப்படி ஒரு மாப்பிள்ளையா நமக்கு?  இந்த கூத்தை எங்கே போய் சொல்வது?  யாரிடம் போய் ஒப்பிப்பது?  மகளிடம் போய் உனது புருஷன் இந்த வேலையெல்லாம் செய்கிறான்.,  நான்  அவனுக்கு மாமியாரா? இல்லை  யார்?'  எனக் கேட்க முடியுமா?

உன் புருஷன் இவ்வளவு மோசமான ஆளாக இருக்கிறானே? என சொன்னால் சரண்யா என்ன நினைப்பாள்?.

" மருமகனாம்மா? ஏன் அவர் கூட போக மாட்டறீங்க? சண்டையா?"

"அவரு...காசு கேக்கறாரு.."

"எவ்ளோ காசுமா?'

எவ்ளோ காசு? எவ்ளோ மதிப்பு நமக்கு ? என்னத்தை  சொல்ல., எவ்ளோ திமிரா ஆட்டோவை விட்டு இறங்குங்கிறன் மென்டல் கம்னாட்டி..

எல்லாம் இவரை சொல்ல வேண்டும் . அவன்  'போ' என சொன்னதும் பொண்டாட்டியை  விட்டு யாராவது தனியாக போவார்களா? என் புருஷனுக்கு அறிவே இல்லை.

வீட்டுக்கு வந்ததும் சண்டை பிடித்தாள்.

" நான் என்னம்மா பண்றது? தங்கராஜ் என்னை போ போ' என்று துரத்திக்கிட்டே இருக்கான்"

"அட போங்க., அவ்ளோ பெரிய ஹாஸ்டல்ல, எனக்கு தனியா விட்டு வந்துட்டீங்களே" எனக்கு கத்தி தீர்த்தாள்.

மகளுக்கு குழந்தை பிறந்த சந்தோஷம் கண நேரத்தில் காணாமல் போனது. இந்த காமாந்தக மருமகனை நினைத்தாலே பகீரென இருக்கிறது.

ஆனால்,  லோகேஷ் சொக்க தங்கம். இந்த தங்கராஜ் ஒரு மனிதமிருகம்.

 

அவள் தூங்கி காலையில் கண் விழிக்க.,  போன்

அவள் மகள் தான்., "அம்மா

 என் டிரஸ்ஸை எல்லாம் துவைச்சி., இன்னிக்கு எடுத்து வரியா?"

"அ..அப்பாகிட்ட கொடுத்தனுப்பறேன்"

"நீ வாம்மா லஞ்ச் கூட வேணும்.. .இங்க சாப்பாடு சரியில்ல'

" உன் வீட்டுகாரரை அனுப்பு. கொடுத்தணுப்பறேன்"

"அம்மா.. நீ வாம்மா., இன்னிக்கு எனக்கு இன்னிக்கு டிஸ்சார்ஜ். எனை வீட்டுல விட்டுட்டு போ..'

மகள் பேச்சை தட்டமுடியவில்லை. அவளுக்காக இல்லயென்றாலும் அழகான பெண்குழந்தையை பார்க்க போகலாம் தான். ஆனால் அந்த சுருட்டை முடி சுமார் மூஞ்சி தங்கராஜ் இருப்பான். அவனது பேச்சும் பார்வையும் பொறுக்க முடியாது.

என்ன செய்வது?   நேற்று வேற  கோவத்தில திட்டி விட்ட்டோம். இன்று என்னென்ன தொல்லை குடுப்பானோ?

மனசே இல்லாமல் அவள் உச்சி வேளையில் ஆஸ்பத்திரிக்கு கிளம்ப  மெயின் ரோடில்., " ஹாய் அத்தை"

திடுக்கிட்டு திரும்பினாள். ஜெயந்தி.

யெஸ்டி பைக்கில் லோகேஷ்..


  

வெல்ல முடியாத வேட்கைகளை 118 எபிசோகளையும் உடனே பெற: