மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, September 17, 2026

வெல்ல முடியாத வேட்கைகள் : எபிசோடு : 8

மாமியாருக்கும் மருமகனுக்கும் இடையே நடக்கும் அந்தரங்க போட்டி பற்றி வெளியில் யார்க்கும் தெரியவில்லை.

இத்தனை அழகான இளமையான அத்தை காரி தன்னிடம் பேசாமல் லோகேஷுடம் சிரிக்க சிரிக்க  பேசுவது தான் அவனுக்கு பிரச்சினையாக இருக்கிறது,.

'லோகேஷிடம் தான் பழகுவது கண்டிப்பாக பெரிய மாப்பிள்ளைக்கு பிடிக்கவில்லை என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும் . அதற்காகவே அவன் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சின்ன மாப்பிள்ளையை நேரடியாகவோ மறைமுகமாகவோ மட்டம் தட்டிக் கொண்டே இருந்தான்.  ஆனால் உண்மையில் சொல்லப்போனால் லோகேஷிடம் குறை என்று எதுவுமே கிடையாது.

அவனது படிப்பு, நாகரிகம், ஒழுக்கம், அழகு, கம்பீரம், இளமை, பிறருடனான அணுகுமுறை , கண்ணியம் எல்லாவற்றிலுமே லோகேஷ் டாப் ரேங்கில் இருக்கக்கூடியவன் .அதிலும் அவன் படிப்பில் மிகச் சிறந்தவன். ஆனால், தங்கராஜ் ஒரு ரியல் எஸ்டேட் காரன் .அதில் கிடைத்த கருப்பு பணத்தை வைத்துக்கொண்டு தான் சூப்பர் மார்க்கெட்டை திறந்தான்.

 இது தவிர ஓரிரு கடைகள் குரோம்பேட்டையில் இருக்கின்றன.  தான் ஒரு பெரிய சொத்துக்காரன் என்ற நினைப்பு அவனுக்கு அதீத கர்வத்தை தந்தது. லோகேஷெலாம் ஒரு ஆளா? அவன்  நமக்கு நிகரா? என நினைப்பவன்.

லோகேஷ் - பவித்ரா கல்யாணத்துக்கு தனக்கு காஸ்ட்லி ரெமான்ட் ஷூட்டில் சஃபாரி வேணும் என அடம்பிடித்து தைத்தான்.

" என்னது சஃபரியா? அதெல்லாம் அவுட் டேட் ஆகிடுச்சீங்க..."

"ஓஓ அப்படியா அப்ப கோட் சூட்?"

"உங்களுக்கு செட் ஆகுமா? முகூர்த்ததுக்கு போயி,. கோட்டா? வேட்டி ,சட்டை போடுங்க"  சரண்யா கேட்க.,

"பல்லை பேத்துடுவேன்...எனக்கு கோட் சூட் தான் வேணும்"

"ரென்டட் கிடைக்குமான்னு பாக்கலாமே"

"போடி எனக்கு ரென்டடா? காசு கொடுத்து ஓன் கோட் சூட் தான் வாங்கனும்.'

பதினஞ்சாயிரம் ரூபா கோட் சூட்டில் கல்யாணத்தில் லோகேஷ் - பவித்ராவின் முகூர்த்தத்தில் அவன் வலம் வர.,  எல்லாருமே அவனை வியப்பாய் பார்த்தார்கள். அவன் பின்னால் நமுட்டு சிரிப்பு சிரித்தார்கள்.

கல்யாணம் முடிய, அந்த புகைப்படங்களை உடனே, மாலை மலர் ஆபீசில் கொடுத்து., " ஈவ்னிங்க் இஷ்ய்யூல போடுய்யா.. கோலட் ரார் சூப்பர் மார்கெட் ஓனர் இல்லத்திருமணம்னு. கலர்ல வரனும். சொல்லிட்டேன்"

"ஓகே சார்"

ரெகுலராக சூப்பர் மார்கெட் விளம்பரம் வாங்கும் அந்த ஆளிடம் கொடுக்க., அன்று மாலையே மலரில் அந்த புகைப்படம் அச்சாகி வந்தது.

லோகேஷ் பட்டு வேட்டி சட்டையில் அம்சமாக இருக்க., பக்கத்தில் காமிராவை முறைத்தபடி தங்கராஜ்.

"என்னடா இது கோட்டு? பாக்க செக்யூரிட்டி மாதிரி இருக்கே.?" அவனது அக்காவே சொல்லிவிட., அவன் மூட் ஆப் ஆகி விட்டான்.

'நமக்கு மட்டும் ஏண் இப்படி? காசு செலவானா கூட., பிரயோஜனம் இல்லாம இருக்கே? அவன்., லோகேஷிடம் சண்டை போடாமலேயே, பல விஷயங்களில் தோற்றுக் கொண்டே இருந்தான். இப்போது ஜெயந்தியும்  தன்னை விட்டு விலகி.,அவனுக்கு ஒத்து ஓதுகிறாள்.

தங்காவுக்கு அவனை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும்.

பெரிய மருமகனைப் பற்றி ஜெயந்திக்கு நன்றாகவே தெரியும்.

ஆங்க்... லோகேஷை குறை சொல்ல வேண்டும் என்றால், அவனுடைய திருமணம் வாழ்க்கையில் , கல்யாணம் ஆகி ஒன்றரை வருடம் ஆகியும் இன்னும்  குழந்தை இல்லை என்பதுதான் .

அதற்கு கூட காரணம் நம் மகள் பவித்ரா தானே.. அவனில்லையே.. பாவம்..

சரண்யாவுக்கு இந்த மூனு வருடத்தில் ஒன்றுக்கு இரண்டு குட்டி போட்டு விட்டாள்., பவிக்கு இந்த ஒன்னரை வருடத்தில் ஏதுமில்லையே ?

கண்டிப்பாக இந்த முறை பவி உண்டாகி இருப்பாள்.

இந்த காலைச்செய்தி மகிழ்ச்சியான செய்தியாக அமைய வேண்டுமே? மகளின் கர்ப்பம் கன்பார்மாக வேண்டுமே பூஜையறையில் வேண்டி விட்டு கிளம்பினாள்.

மணி 11 ஆக., ஜெயந்தி  ஆஸ்பிட்டல் செல்ல பரபரவென ரெடியானாள். வாசல் கதவு மூடி பூட்டு போட்டாள்

"கடவுளே?  லோகேஷின் அந்த   பிள்ளை இல்லாத குறை இத்தோடு போகட்டும்.. இன்றாவது நல்ல செய்தி வரட்டும். லோகேஷின் நல்ல மனதிற்கு நல்லதே நடக்க வேண்டும். தன் மகளுக்காக கூட இல்லை என்றாலும் பரவாயில்லை, தனது மருமகனுக்காகவது அவர்களின் வீட்டில் ஒரு வாரிசு உருவாக வேண்டும்.'

 ஜெயந்தி தனது மகளுக்காக காத்திருந்தாள்.  கொஞ்ச நேரத்தில் பவித்ரா ஆட்டோவில் வந்து  இறங்கினாள்.

"அய்ய் என்னுமா வாசலிலே நின்னுட்டு இருக்க?"

' காலையில தான் மாப்பிள போன் பண்ணாரு. நீ வரேன்னு சொல்லி இருந்தாரே"

"கிளினிக்கில போன் பண்னி டோக்கன் போட்டுட்டியா?"

" போட்டுட்டேன் ., எத்தினி   நாளு தள்ளி போயிருக்கு?..."

" அம்பதஞ்சு"

" கடவுளே,. "

"அம்மா போலாமா?"

"ம்ம்ம் இப்ப போன சரியா இருக்கும் வா"

 அவள் வந்து அதே ஆட்டோவில் ஏறி அவர்கள் கிளினிக்கில் போய் இறங்கினார்கள்.

 மதியவேளையில் சொற்பமான கூட்டம் இருந்தது .

அவளுடைய உடல்நிலை விவரம் பற்றி சொல்ல சொல்லி பரிசோதனை செய்ய போனார்கள்.

' கடவுளே நல்ல செய்தியாய் சொல்லிடு"

' கடவுளே நல்ல செய்தியாய் சொல்லிடு"

' கடவுளே நல்ல செய்தியாய் சொல்லிடு"

' கடவுளே நல்ல செய்தியாய் சொல்லிடு"

அவள் வேண்டிக் கொண்டே இருந்தாள். வாய் ஓயாமல் முனுமுனுத்தது.

இந்த முறையும் ஏமாத்திடாதே. லோகேஷ் ஒரு தெம்மாங்கு. அம்மாஞ்சி.. ரொம்ப  நல்ல பையன்... என் பொண்ணால அவனுக்கு அவப் பேரு வேணாம்.. கடவுளே..

' கடவுளே நல்ல செய்தியாய் சொல்லிடு"

' கடவுளே நல்ல செய்தியாய் சொல்லிடு"

ஜெயந்தியின் மனம் வேண்டிக் கொண்டே இருந்தது.

' அம்மா "

'கொஞ்ச நேரத்தில் 'அம்மா' என ஓடி வந்தாள்/

" என்னடி என்னடி?"

" மகளின் முகத்தில் மினுமினுப்பும் பூரிப்பும் கூடி இருந்தது.

" அம்மா நான் கன்சீவா இருக்கேன்மா :"

ஆஸ்பத்திரியே பூந்தோட்டமாய் ஆனது போன்ற உணர்வு ஜெயந்திக்கு.

"என்னடி சொல்ற ?"

சந்தோஷம் தாளாமல் கேட்க.,

"ஆமாம்மம்மா' கன்ஃபர்ம் பண்ணிட்டாங்கம்மா"

 அவளை இறுக்கமாக கட்டி அணைத்துக் கொண்டாள்.

'அய்யோ என்னால் சந்தோஷம் தாங்க முடியலியே..."

 "இருடி ஆட்டாத.. உடம்பை போட்டு குலுக்காத.... ஒரு இடமா உக்காரு"

"அய்ய்யோ அது கிட்ட சொல்லனுமே'
" சொல்லலாம்.. தண்ணி குடி. நானே சொல்றேன்.. காசு கேக்கறேன் உன் புருஷன் கிட்ட..."

" அய்... அம்மா" அவள் மீது சாய்ந்து கொண்டாள்.

"இன்னிக்கு இருக்கு ஈவ்னிங்க் பார்ட்டி" ஜெயந்தி சந்தோஷத்தில் மூச்சிரைத்தாள்.

சரண்யா கர்ப்பமானபோது கூட இப்படி அவள் கொண்டாடவில்லை,

 இந்த இரு பெண்களின் திடீர் சந்தோஷம் அந்த கிளினிக்கில் உள்ளவர்களுக்கும் தொற்றிக் கொண்டது.

' ரொம்ப நாள் கழிச்சு உண்டாகி இருக்காங்களா?"  என யாரோ வாஞ்சையுடன் கேட்க..

"ஆச்சு.. ஒன்னரை வருஷம் கழிச்சு"

' அட ஒன்னரை வருஷம் தானம்மா"

"அய்யோ., அது எங்களுக்கு ஒன்னரை யுகம் போல"

"வாஸ்தவம் தான்.. ஆனா இப்ப எல்லாம் இது நார்மல் தான்.  பொண்ண பத்திரமாக பார்த்துக்கங்க" அந்த ஆயம்மா செல்ல.,

" அம்மா அம்மா அதுக்கு  போன் செய்யேன்"

"ஏண் நீ சொல்லேன்..'
" நீயே
 லோகேஷ்க்கு போன் செய்மா. "

"நீ சொல்லுடி"

" போம்மா எனக்கு வெக்கமா இருக்கு" என சொல்ல., பவித்ராவை திரும்ப கிளினிக்கில் அழைக்க.,

 " சரி நீ போ"

 ஜெயந்தி, லோகேஷ்க்கு  போன் செய்தாள்.

" ஹலோ அத்தை சொலுங்க., எனி சீரியஸ்?"

"ம்ம் அதெல்லாம் இல்ல., எனக்கு நீங்க எதாச்சும் பண்ணனும்?"

" அய்யோ அத்தை.... புரியல"

 " மாப்பிள்ளை நான் ஒரு விஷயத்தை சொன்னா எனக்கு என்ன தருவீங்க?"

அவள் சந்தோஷம், அவனை கிறுகிருக்க வைக்க.,

" ஏன் அத்தை என்ன வேணும் உங்களுக்கு? எது வேணா தரேன். சொல்லுங்க  ப்ளீஸ்"

"என்ன  தருவீங்க?'

" அத்தை நல்ல விஷயமா சொல்லுங்க ., நாம நினைச்சது தானே?"

"எனக்கு எதாச்சும் தந்தா தாணே"

"அப்டின்னா?. ஈவ்னிங்க் பார்ட்டி நம்ம வீட்டுல"

''உங்களுக்கு எது வேணாலும் கொடுக்க  நான் ரெடி அத்தை"

" அய்யோ! இதல்லாம் அவ தான் சொல்லனும்.. மாப்பிள நானு..  நானு

"சொல்லுங்க "

' நான் சொல்லட்டுமா?"

" சொல்லுங்க "

 "  நான் கன்சீவா இருக்கேன்"

" என்னது?" அவன் சீட்டை வீட்டு எழுந்து விட்டான்.

'ஏய்ய்ய் அய்யோ... சாரி தப்பா சொல்லிட்டேண்" அவள் முகம் வெளிறி இருக்க., அடச்சே.!

'தான் சொன்னது எப்பேர்ப்பட்ட தவறான வார்த்தை!'  என்பதை புரிந்து அவள் நடுக்கமனாள். ஒரு சின்ன வயசு மாப்பிள்ளையிடம் போய் இப்படி சொன்னால், அவன் நம்மை பற்றி என்ன நினைப்பான்?

"அத்தை ஏன் உளறிட்டீங்க?... பவி பத்தி  சொல்லுங்க"

" அய்யோ சந்தோஷத்துல  வாய் குழறுது.. "

"அதான் தெரிதே.."

அய்யோ ஏன் இப்படி தவறாய் சொல்லிவிட்டேன். மகள் உண்டானதை நானே உண்டானது போல., கடவுளே

" மாப்ளை சரண்யா கர்ப்பமாக இருக்கா"

'கெட்டது போங்க,.,"

"அய்யோ சாரி சாரி.. உங்க பொண்டாட்டி பவித்ரா முழுகாம இருக்கா"

"ம்ம்ம்"

' கர்ப்பமா இருக்கா"

'ம்ம்.."
"
 என்ன மாப்பிள்ளை? "

'ஐயோ அத்தை ஏன் இவ்வளவு வெட்கப்படுறீங்க? அவ்ளோ சந்தோஷமா?" அவன் கேட்க, அவளுக்கு கண்ணீர் வந்தது

என் பொண்ணு உண்டாயிட்டா..  டேய்ய்  டங்கராஜு என் மாப்பிள்ளை அப்பா ஆக போறான்,.

" எ,,என்னனு தெரிய..ல பயங்கரமா வாய்  கு...ழறுது ., " அவள் வார்த்தைகள் பிசிறடித்தன.   

மகள் உண்டாகிற சந்தோஷம் காணாமல் போய் ., மாப்பிள்ளைக்கிட்ட போய்  நான் கர்ப்பம்' னு சொல்லிட்டேனே ;' என்கிற வெட்கம் தான் அவளை பிடுங்கி தின்றது.

":சாரி மாப்பிள்ளை"

 " நல்ல வேளை ., நான் கர்ப்பம்னு என்னை சொல்லாம விட்டீங்களே"

""சா...சாரி"
" எங்கிட்ட போயி ஏன் இத்தனை சாரி...?"

" சாரி..."

' இனிமே நீங்க சாரி தான் சொல்லிட்டு இருப்பீங்க., போனை அவ கிட்ட கொடுங்க..."

'அவ  உள்ள செக்கப் போயிருக்கா"

'ஓ....ம்ம் அத்தை ..அத்தை...."

" என்ன'

'ரொம்ப தேங்க்ஸ்"

"எதுக்கு?'

'கன்சீவ் ஆனதுக்கு"

" என்னது?"

"சாரி... பவித்ரா கன்சீவ் ஆனதுக்கு"

" எதுக்கு எனக்கேன் தேங்க்ஸ்?"

'அய்யோ இப்ப எனக்கு வாய் உளருது... பவித்ரா கன்சீவ் ஆன நியூசை சொன்னதுக்கு. உங்களுக்கு அவ்ளோ சந்தோஷமா?"

" இருக்காத,,, ஒன்னரை வருஷம் என் பொண்னு பட்ட கஷ்டம் எனக்கு தானே தெரியும்?"

"ஏண் எனக்கு இல்லையா?'

"உங்களுக்கும் இருக்கும் தானே? எவ்ளோ கிண்டல் பேச்சு..இருங்க முதல்ல அந்த சரண்யா கிட்ட சொல்றேண்'

"அய்யோ அத்தை அதெல்லாம் யார் கிட்டயும் சொல்ல வேணாம்.. ரெவஞ்ச் எடுக்க இங்க யாரும் புள்ளை பெத்துக்கல"

": சரி"

'  வீடு கட்டறது, கர்ப்பம்லாம் நெருக்கத்துல  தான் சொல்லனும்"

"கரெக்டா சொன்னீங்க,. வீண் திருஷ்டி வந்துடும். சரி நீங்க., ஆபிஸ்லருந்து நம்ம வீட்டுக்கு வந்துடுங்க. போற வழிதானே"

'சரி., என்ன வாங்கிட்டு வரட்டும்?'
"யாருக்கு உங்க பொண்டாட்டிக்கா?"

"அவ பாதுஷா சாப்பிடுவா.,  உங்களுக்கு? "

" எனக்கு எப்பவுமே., "

"தெரியும். குலாப் ஜாமூன். '

"ம்ம்ம்ம்"

"மாமாக்கு"

"அவருக்கெதுவும்  வேணாம்.. சுகர் இருக்கே.,?"

"சரி  நீங்க சாப்பிடறதை அவர் பாக்கட்டும்..." அவள் சிரித்தாள்..

 

மாலை அந்த வீடு குதூகலத்தின் உச்சிக்கு ;போனது..

அத்தை வாய் உளறியதை லோகேஷ் சொல்ல., பவித்ரா கூக்குரலாய் சிரித்தாள். மாமா வெக்கப்பட்டார்...

லோகேஷை ஜெயந்தி செல்லமாக அடித்தாள்.

"மண்டு' என திட்டினாள்.

அந்த வீட்டில் இன்னொரு வாரிசு வரும் சந்தோஷம் அலைஅலையாக பரவி பெருகியது. கடவுளே உனக்கு நன்றி@

அவர்கள் சந்தோஷமாக நெருக்கமாக அமர்ந்து  உரையாடினர்கள். இனிப்புடன் உண்டார்கள். ஒட்டி உரசி படர்ந்து செல்பி எடுத்துக் கொண்டார்கள்.

அவர்களுக்குள் ஒரு விகல்பமும் இல்லை..

அதுவரை அந்த உறவுகளில் எவ்வித கல்மிஷமும் இல்லை.

அடுத்த சில மாதங்கள் கழித்து.,

ஜெயந்தி, தன் தோழி தனலட்சுமியை பார்க்கும் வரை...கூட அந்த உறவுகளில் எவ்வித கல்மிஷமும் இல்லை.

 

வெல்ல முடியாத வேட்கைகளை 118 எபிசோகளையும் உடனே பெற: