மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Monday, October 26, 2026

வெல்ல முடியாத வேட்கைகள் : எபிசோடு : 36

 அடுத்த வினாடி என்ன அதிசயம் நடக்கும்? என்பது தெரியாத வாழ்க்கையில் தீதும் நன்றும் பெரும்பாலும் நம்மால் திட்டமிடப்படாததாகும்.  அப்படித்தான் லோகேஷின் அக்கா சுவாதி வாழ்க்கையில் நடந்தது.

லோகேஷுக்கும் சுவாதிக்கும்  ஏழெட்டு  ஆண்டுகள் வயசு வித்தியாசம் இருக்கும்.

"முதல் குழந்தை பொம்பளையா பொறந்து ஆறு வருஷமாவுது. இன்னொன்னு காணுமே " என ஜோசியக் கட்டை தூக்கிக்கொண்டு லோகேஷின் அம்மா போக "இந்த பொண்ணு ரொம்ப நாளு தனிச்சிருக்கணுமுன்னு வரம் வாங்கிட்டு வந்து இருக்கா.,  அதான் இரண்டாவது கூடல. ஆனா கரெக்ட்டா இவளுக்கு ஏழு வயசுல ஒரு தம்பி கிகடைச்சு ஆகணும்.,  நீங்க எதுக்கும் வீட்டுல செல்ல பிராணி ஏதாவது வளர்த்துட்டு வாங்க., வீட்டுல ஒரு பச்ச உயிர் இருந்தா இன்னொரு உயிர் தானா வரும்" என ஜோசியம் சொன்னார் .

அதற்கு பிறகு வெள்ளை பப்பி நாய்க்குட்டி வாங்கி அப்பா சுவாதிக்கு பரிசளிக்க ஜோசியம் சொன்னது உண்மையோ இல்லை அறிவியலோ தெரியவில்லை.

 அடுத்து லோகேஷ் அந்த வீட்டில் பிறந்தான் .

சுவாதிக்கு புத்தி தெரிந்த பின் பிறந்த குழந்தை என்பதால் கிட்டத்தட்ட சுவாதியே அவனை பார்த்துக் கொண்டாள். பள்ளி விட்டு வந்ததும் ஓடி தம்பியை எடுத்துக் கொள்வதில் அவளுக்கு அத்தனை ஆர்வம்.

 லோகேஷ்க்கு ஐந்து ஆனபோதே அப்பா திடீர் மாரடைப்பில் இறந்து போனார்.  அதற்கு பின் அம்மாவிற்கு உடம்பு முடியாமல் போனது . அவனுக்கு எல்லாமே தான் அக்காள் சுவாதியாக தான் இருந்தது.

 வயது வித்தியாசம் ஒரு பக்கம் இருந்தாலும் அவள் அவனை ஒரு தோழனை போலத்தான் பழகினாள். அவளுக்கு தெரிந்த எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தாள்.  பாடங்களை தாண்டி நிறைய விஷயங்களை அவன் தனது அக்கா மூலம் தான் தெரிந்து கொண்டான்.

சுவாதி பள்ளி முடித்த இளம்பிராயத்தில் குச்சி போல இருந்தாலும்,  மிகவும் அழகாய் இருந்தாள். அதன்பின் காலேஜ் முடித்து  சுவாதி கல்யாண வயதாகும்போது  சதை போட்டு இன்னமும் களைகட்டி இருந்தாள்.

 யாரையும் வசிரீக்கிற அளவிற்கு., கட்டுடல் தேகத்திற்கும் சொந்தக்காரரியான சுவாதிக்கு இருபத்து மூன்று வயதில் கல்யாணம் ஆனது.

 மேட்ரிமோனி இணையதளத்தில் பார்த்து,  அம்மா பிள்ளை வேறு எந்த சொந்தமும் ._ இல்லாத மாப்பிள்ளை என்பதால், பூபதியை உடனடியாக டிக் செய்தார்கள்.

மாப்பிள்ளை  நல்ல  வளர்த்தி . அறிவானவன், கை நிறைய சம்பளம் பார்ப்பதற்கும் அழகாக இருந்தார்.

அவர்களது வீடு சென்னைக்கு அடுத்து ஆவடியில் இருந்தது. ஆனால், மாப்பிள்ளைக்கு வேலை பெங்களூரில்.

அக்கா வாழ்க்கைப்பட்டு பெங்களூர்க்கு போனாள்.  அவர்களது திருமண வாழ்க்கை சந்தோஷமாகத்தான் தொடங்கியது.

 அதிர்ந்து பேசாத மென்மையான குணமடைய மாப்பிள்ளை பூபதி கூட அவளுக்கு கல்யாணம் ஆகி ஒரு வருடம் முடிவதற்குள்ளேயே சுவாதி வர்ஷாவை பெற்றெடுத்து விட்டாள். அவனது அன்பும் பாசம் நிறைந்த அக்காளின் வாழ்க்கையில் அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடந்து கொண்டிருக்க திடீரென தான் ஒரு குண்டை தூக்கி  போட்டார்கள்., அவளின் கணவனுக்கு சிறுநீரக கோளாறு என்று.

 வாராவாரம் டயாலீஸ் செய்ய வேண்டும் என்றதும் ஆடிப்போய் விட்டார்கள் .

"இந்த சின்ன வயசுல இப்படி ஒரு விபரீதமா?" என கேட்ட போது.,

" வீடு ஏசி. கார் ஏசி. வேலை செய்ற இடமும் ஏசி அப்படின்னா இந்த மாதிரியான பிராப்ளம் வரத்தான் செய்யும் ' என்றார்  டாக்டர்.

" புரியலை சார்'

'தம்பி நம்ம உடம்புல இருக்கக்கூடிய கழிவுநீர் வெளியே போவதற்கு மூணு வழி இருக்கு., ஒன்னு கண்ணீர். இன்னொன்னு வேர்வை, மூன்றாவது சிறுநீர்.  ஆண்களுக்கு பொதுவா கண்ணீர் வர வாய்ப்பு இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். மத்தபடி வேர்வை,  சிறுநீர் இந்த ரெண்டு ஆப்ஷன் தான் இருக்கு'

'.............'

" ஆனா வியர்வையே வராம ஒரு வாழ்க்கை வாழ்ந்தோம்னா எப்படி கழிவு நீர் வெளிய போவும்?"

"..........'

"உடற்பயிற்சியும் இல்லை ., நடைபயிற்சியும் இல்லை அப்படின்னா உடம்பில் இருக்கிற கழிவு எல்லாம் சிறுநீர் வழியா மட்டும் தான் போகும்., சோ கிட்னிக்கு தான் ஒர்க் லோடு ஜாஸ்தி.  அது மட்டும் இல்லாம உங்க மாமாவுக்கு சிகரெட் பழக்கமும் குடிப்பழக்கமும் வேற இருக்கு.,ஆபிஸ் டென்ஷன் வேர சோ பிபி எகிறி இருக்கு. அப்போ இந்த பிரச்சனை வரத்தானே செய்யும் " என்றார்.

மாமாவின் மூளைக்கு அங்கு அதே அதிக சம்பளம் கிடைத்தது. அதிக பணம் கிடைத்ததால் முடிந்த அளவுக்கு அவர்கள் மருத்துவ செலவு செய்து கொண்டார்கள்.

"அவர்க்கு ஆபீஸ் போகவே கஷ்டமா இருக்கும்மா.. இங்க சென்னை பிராஞ்ச்சுக்கு மாத்த சொல்லி இருக்கேன்மா.. சிறுசேரி வந்துட்டா., நாம கே.கே. நகர்ல நம்ம வீட்ல இருந்து ஆபிஸ் போவார். பாதி நாளு வொர்க் பிரம் ஹோம் செஞ்சா., அவர்க்கு வேலைபளு குறையும். வைத்தியமும் பாத்துக்கலாம்"

"கரெக்ட் அவங்க அம்மா வீடு ஆவடியில இருக்கு,. அங்கேயிருந்து சிறுசேரி கஷ்டம். நீ நம்ம வீட்டுலய இருந்துக்க"

 அக்காவும்  மாமாவும் பெங்களூரில் இருந்து சென்னை வர திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், அதற்குள்ளாகவே பூபதிக்கு என்ட் கார்ட் போடப்பட்டு விட்டது.

என்ன மருத்துவம் செய்தும் மாமாவால் ஒரு ஆண்டு கூட தாக்கு பிடிக்க முடியவில்லை.

 சுவாதிக்கு 27 வயதாகும் போது மாமா இறந்து போனதாக செய்தி வந்தது. சுவாதியை விட  19 வயது லோகேஷ் தான் மிகவும் அழுதான்.

' இனி சுவாதியை எப்படி கரை சேர்ப்பது?" என்பது யாருக்கும் தெரியவில்லை.  'கையில் குழந்தை இல்லன்னா கூட பரவாயில்லை சட்டுபுட்டுன்னு ஒரு கல்யாணம் பண்ணி வச்சிடலாம் . குழந்தை இருக்கே என்ன பண்றது?" என எல்லோருமே சொன்னார்கள்.

காரியம்  சடங்கு எல்லாம் முடிந்த பிறகு, ஆறு மாசம் கழித்து அம்மா மெதுவாக அவளது கல்யாண பேச்சை ஆரம்பித்தாள்.

"சுவாதி! சொல்றத கேளு ! குழந்தையை என்கிட்ட கொடுத்துட்டு நான் வளர்த்துக்கிறோம்.,  நீ வேணா இன்னொரு கல்யாணம் பண்ணிக்க "

அம்மா சொல்ல., அவளது மாமியாரும் அதையே சொன்னார்கள்.

ஆனால் அவள் கேட்கவே இல்லை.,

" என் குழந்தையை பிரிஞ்சிட்டுட்டு நான் இன்னொருத்தன் கூட இருக்க மாட்டேன்" என்றாள்.

" உங்களுக்கு இருக்க இஷ்டம் இல்லன்னா சொல்லுங்க,. நான் ஹாஸ்டல் பாத்துட்டு  போறேன்" என சொல்ல., யாரும் எதையும் சொல்லவில்லை.

அவள் அடுத்த ஆண்டு திவசம் முடியும் வரை மாமியார் வீட்டில் இருந்தாள். திவசம்  முடிந்த பிறகு அம்மாவின் வீட்டுக்கு வந்தாள். அதிலிருந்து அவள் அங்கேயும் இங்கேயும் மாறி மாறி இருந்தாள்.

"பாப்பா ஆவடி  ஸ்கூல்ல சேர்த்தப்புறமா நான் அப்படி இப்படி எல்லாம் வர முடியாது' அது வரைக்கும் தான் என்னால இப்படி வந்துட்டு போக முடியும்"  என்றாள்.

மாமா பூபதி இறந்தது இறந்தது பெரிய சோகம் தான் என்றாலும் அந்த கடும் இழப்பினை தாங்கி சுவாதி மீண்டு விட்டாள் என்றுதான் அவன் நினைத்தான் .

ஆனால் பெண்களின் ஏக்கம் வேறு விதமானது என்பதை அவன் கல்லூரியில் படிக்கும் போது ஒரு சீனியர் மாணவன் சதீஷ் சொல்லும்போது தான் தெரிந்தது.


வெல்ல முடியாத வேட்கைகளை 118 எபிசோகளையும் உடனே பெற:

1 comment:

  1. Excellent marvelous fuck nu ethuvum ila ana manasa eruki pudikira nijam every widow facing

    ReplyDelete