மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Saturday, September 12, 2026

வெல்ல முடியாத வேட்கைகள் : எபிசோடு : 2

  

பத்து  நாள் டூருக்கு, குடும்பம் மொத்தம் உற்ஸாகமாய் கிளம்பியது. அப்போதைக்கு பெரிய மகளுக்கு  ஒரு குழந்தை தான்.

பேமிலி முழுக்க கேரளா போய். பின் அங்கிருந்து கோவாவுக்கு பெரிய காரில் டூர் போன போது, கேரளா செக்போஸ்டுக்கு முன்னாடியே  கேரளா போலீஸ் டீம் ஒன்று காரை நிறுத்தியது. டிக்கியை திறக்க உத்தரவிட., பெரிய மாப்பிள்ளை வேர்த்து விதிர்த்து டிக்கியை திறப்பதற்கு, , காரில் டிரைவர் சீட்டில் இருந்தபடியே பட்டனை அமுக்க .,

"அண்ணே, செக் பண்றப்ப நீங்க கூட போய் டிக்கி பக்கத்துல இருங்க., அதான் நல்லது" என்றான் லோகேஷ்.

'இவன் என்ன சொல்வது? நாம் என்ன செய்வது? என பெரிய மாப்பிள்ளை தங்கராஜ் அப்படியே காரில் உட்கார்ந்திருக்க.,

லோகேஷ் மொபைல் போனை எடுத்து காமிரா ஆன் செய்து கொண்டு காரிலிருந்து இறங்கி டிக்கிக்கு போனான்.

"ஹலோ.. காமிரா ஆஃப் பண்னுங்க" கேரள போலீஸ் மலையாளத்தில் கர்ஜிக்க.,

"ஏன்.சார்  காமிரா, ஆப் பண்ணனும் இது என் பிராப்பர்டி,,.நீங்க செக் பண்றதை நான் ஷூட் பண்ணுவேன்..என் சேப்டிக்கு இது வேணும்.. " லோகேஷ் பதிலுகு மலையாளத்தில் சம்சாரிக்க., அவர்கள் டிக்கியை பரிசோதனை செய்துவிட்டு போகச் சொன்னார்கள்.

"இவரெதுக்கு சீன் போடுறார்?., நம்ம டிக்கியில.,என்ன கடத்தல் பொருளா இருக்கு.? . காமிராலாம் வெச்சி ஷூட் பண்ணி ...எதுக்கு இவ்ளோ பெரிய சீன் ?" என தங்கராஜ் சொன்னான். எல்லோர்க்குமே அதான் தோன்றியது. ஜெயந்தியும் அது ரொட்டின் செக்கப் தானே ? என நினைத்தாள்.

ஆனால், அதற்கு விடை.. கோவா செக் போஸ்ட் தாண்டிய பிறகு    கிடைத்தது.

அங்கே இன்னொரு போலிஸ் டீம் வழி மறித்தது. மீண்டும் லோகேஷ் காமிரா எடுத்து கொண்டு போக., தங்கராஜ் தலையில் அடித்து கொள்ள.,அந்த சோதனை முடிந்து கார் விடுவிக்கப்பட்டது. அப்போதும் கூட  ஏதும் யாருக்கும் புலப்படவில்லை.

அதைத் தாண்டி ஒரு ரெஸ்டாரண்டில் அவர்கள் சாப்பிட போக., ஒரு ஹிந்திக் குடும்பம் அழுது கொண்டிருந்தது. விசாரித்தால், கேரளா  போலீஸில் சிலரும், கோவா போலீசில்  சிலரும் சேர்ந்து இந்த போலி செக்கப்  நாடகம் செய்கிறார்களாம். கேரளாவில் டிக்கியை செக் செய்வது போல., கஞ்சா போதைப் பொட்டலத்தை அவர்களே போட்டு விட்டு, கோவா போலீசுக்கு கார் நம்பரை நோட் செய்து மெஸேஜ் பாஸ் செய்து, கோவாவில் டிக்கியை  செக் செய்து விட்டு, பொருளை சீஸ் செய்து ஃபைன் போட்டு விட்டார்களாம்.

'அஞ்சு லட்சம் கட்றியா? இல்லை ஆறு மாசம் ஜெயில்ல இருக்கீங்களா?' என பயமுறுத்தி., ஒன்னரை லட்சம் கறந்து விட்டார்களாம்.

'அப்பவே, கேரளா போலீஸ் டிக்கியை செக் செய்தப்ப., கூடவே நம்ம ஆளுங்க யாரச்சும் காமிரா கொண்டு போயிருந்தா, இப்படி அநியாயமா ஏமாந்து இருக்க மாட்டோமுன்னு' அவர்கள் அழ ஜெயந்தியின் குடும்பம் ஆடிப் போனது.

"அட இதுக்குதான் டிக்கிக்கு காமிராவை ஆன் பண்ணி கேரள போலீஸ்கிட்ட போய் நின்னீங்களா?" மாமனார் துரைராஜ் கேட்ட போது கூட லோகேஷ் பெரிதாக அலட்டி கொள்ளவில்லை, காலரை தூக்கிக் கொள்ளவில்லை.,

பெரிய மாப்பிள்ளையும் உள்ளூர அதிர்ந்து போயிருந்தாலும். பூ இதென்ன பெரிய விஷயம்? 'என்பதாய் தனது ஆச்சரியத்தை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை அது தான் தங்கராஜின் சுபாவம்.

பாராட்டுக்கு ஏங்குவது எப்படி ஒரு மன நோயோ? அது போலத்தான் பாராட்ட மறுப்பதும் ஒரு பெரிய மனநோய். இது பல பேருக்கு இருக்கிறது. தங்கராஜுக்கும் இருந்தது. வார்த்தைகள், செயல்பாடுகள் மூலமாக தன்னை பெரிய ஆளாக காட்டிக் கொள்ள நினைப்பவர்கள் பலரும், இப்படித்தான் சிறுமைப் பட்டு போகிறார்கள். அல்லது சிறுமைப் படுவது தெரியாமல் இருக்கிறார்கள். எல்லாரையும் மட்டம் தட்ட நினைத்தான். தானே உயர்வு என நினைக்கும் எவர்க்கும் பிறரை கீழிறக்க நினைக்கும் எண்ணமே மேலோங்கி நிற்கும்.

அவன் எல்லாரையுமே சிறுமைப்படுத்த தான் தொடர்ந்து முயற்சி செய்தான்

அப்போது லோகேஷ் பவித்ராவுக்கு., கல்யாணம் ஆகி 6 மாதங்களுக்கு பிறகு போன டூர். அப்போது தான் பவித்ராவுக்கு வயிற்றில் குழந்தை நின்று போய்,  பின் ' குழந்தை ஏதும் இல்லை'  என அறிவிக்கப்பட்ட சமயம்.

அங்கே, கோவா டூர் போகும் வழியில் ஒரு பிரசித்தி பெற்ற கோயிலுக்கு சென்று வழிபட, கோயிலின் அரசமரத்தில் பிள்ளை வேண்டி, பவித்ராவை தொட்டில் கட்ட சொல்ல., அவர்கள் வேண்டி நிற்க.,

தங்கராஜ் கோயில் வாசலில் மனவியுடன் நின்று கொண்டான்.

மனைவி சரண்யாவை பார்த்து "என்னடி தொட்டில் கட்ட ஆரம்பிச்சிடீங்களா? என்னை மாதிரியாடி.?. வரிசையா புள்ளை பெத்துக்க?.., வரிசையா புள்ளை கொடுக்க அவன் என்ன தங்கராஜா?" என முக சுளிப்பு ஏற்படும்படி,  தன் ஆண்மை பலத்தின் பெருமையை  தன் மனைவி சரண்யாவிடம் பேசிய வார்த்தைகளை, தற்செயலாக கேட்டு வெறுப்பானாள். ஜெயந்தி. அதிர்ந்து போனாள்.

காரில் துணிப்பயை எடுக்க வந்த அங்கே,  பின்புறம்  தங்கராஜ், சரண்யாவிடம் பேசிய வார்த்தைகளை , ஜெயந்தி கேட்டு விட்டு, வெளியில் யாரிடமும் சொல்லாமல், கடந்து விட்டாள்.

மகிழ்ச்சியான அந்த சுற்றுலா சூழ்நிலையை சங்கடமாக்க அவள்  விரும்பவில்லை. லோகேஷ் இதெல்லாம் பெரிதாக எடுத்து கொள்ள மாட்டான். ஆனால், பவித்ராவுக்கு தெரிந்தால் இரண்டாக்கி விடுவாள். ஆனாலும் பெரிய மாப்பிள்ளை தங்கராஜ்க்கு அதிகம் வாய் தான். அதை திறந்தாலே விஷம் கக்கும் வார்த்தைகள் தான். மாமியார் என்ற மரியாதை இல்லாமல் அடிக்கடி தன் அருகே நெருங்கி வந்து பேசும் தங்கராஜை மாப்பிள்ளை என்பதற்காக அவள் மரியாதை கொடுத்து பேசினாலும், இந்த சம்பத்துக்குப் பின் அவனை அறவே வெறுத்தாள்.

எப்படிப்பட்ட வார்த்தைகள்?

" வரிசையா புள்ளை கொடுக்க அவன் என்ன தங்கராஜா?" ச்சீ..

லோகேஷிடம் கண்டிப்பாக  உடல் குறை இருக்க வாய்ப்பில்லை. கம்பீரமானவன், களையானவன், சோர்வில்லாதவன், கெட்ட பழக்கங்கள் ஏதும் இல்லாதவன். அன்றாடம் தேகப்பயிற்சி செய்பவன், பிறர் மனது புண்படக் கூடாது என நினைப்பவன்.  ஆண்மை மிகுந்தவன். ஆண்மையும் இளமையும் ததும்பும் லோகேஷிடம் கண்டிப்பாக  உடல் குறை இருக்க வாய்ப்பில்லை.

தன் மகள் பவி பற்றி தான் அவளுக்கு தெரியுமே. பருவம் வந்த நாளிலிருந்தே, அவளுக்கு இர்ரெகுலர் பீரியட்தான்.

அவளுக்கு மாப்பிள்ளை தேடும்போதே.,

இளைய மகளுக்கு லோகேஷை மணமுடிக்க எளிதில் ஜெயந்திவே சம்மதிக்கவில்லை.

"பவிக்கு தான்  பிரச்சனை இருக்கே? ஏண்டி பையனை பாத்தா நல்லவனா இருக்கான். அவனை போயி ஏமாத்தனுமா? முதல்ல, இவளுக்கு ரெகுலரா பீரியட் வரட்டும்..அப்புறம் கல்யாணம் பேசலாம்.." பெரிய மகளிடம் ரக்சியமாக சொல்ல.,

" அட ஏன்மா நீ வேற.,? பையன் டக்கரா இருக்கான்.  எட்டு வருசமா வராத  ரெகுலர் பீரியட் இப்பதான் சரியாகி வரபோவுதா? விடும்மா மேரேஜ் ஆன  பவிக்கு சரியா போயிடும்" சரண்யா பிடிவாதமாக இருந்தாள்.

"ஆளு நல்லா கலரா இருக்கார். மறைமலை நகர்  ஐடி ஆபீஸ்ல வேலை. . ஒரு லட்ச ரூபா சம்பளம். பிக்கல், பிடுங்கல் இல்லாத பேமிலி, ஒரே பையன் ஒரே பொண்ணு. அக்கா., தம்பி.,"

"அதான் அவ அறுத்துட்டு வந்திருக்காளே"

"அது அவ பிரச்சனை. அவன் என்ன இவங்க கூடவா இருக்கா? அவ மாமியார் வீட்டுல , ஆவடியில ஒத்தை புள்ளையோட இருக்கா. அவ ஒன்னும் இங்க வந்து  சேந்துக்க மாட்டா..நம்ம பொண்னுக்கு எந்த பிரச்சனையுமில்லை..சொன்னா கேளு. மாப்பிள்ளை ஸ்மார்ட்டா இருக்கார். பவிக்கு முடிச்சி விடு,," சரண்யா தான் வற்புறுத்தினாள்.

"ஆனா சரண்யா,, நம்ம பவிக்கு இந்த பிராப்ளம் இருக்கே?..........." ஜெயந்தி இழுக்க.,

"மேரேஜ் ஆனா சரியாகிடும்மா..."

சரண்யாவுக்கு பவி பற்றி எல்லாம் தெரியும் தாணே?

 அப்ப, தங்கராஜ்  சொன்னானே., 'வரிசையா புள்ளை கொடுக்க அவன் என்ன தங்கராஜா?" ந்னு.,  அவ புருஷன் பவி பத்தி ஒன்றும் தெரியாமல் சொலும் போது,

" இல்லங்க என் தங்கச்சிக்கு தான்  பீரியட் பிராப்ளம்'னு இவ சொல்லி இருக்க வேணாமா?" ஜெயந்தி கொதித்தாள்.

சொந்த தங்கச்சி பத்தி எல்லாம் தெரிஞ்ச சரண்யாவே அவனுக்கு துணை போகிறாளே? ஜெயந்தியின் ஆதங்கம் பன்மடங்கு பெரிதானது. அதற்காகவே டூர் முழுக்க., அவள் லோகேஷ், பவித்ரா கூடவே இருந்தாள். சரண்யா பக்கம் திரும்பி பார்க்க கூட இல்லை.

" பவி பிள்ளை பெற்றுக் கொடுக்க., இன்னும்  அஞ்சு வருஷம் ஆனா கூட எங்க சின்ன மாப்பிளை வெயிட் பண்ணுவார்.." என ஜெயந்தி நினைத்து கொண்டாள்.

பெரிய மாப்பிள்ளை  அப்படி கிடையாது, கல்யாணம் ஆகி முதல் மாதம் சரண்யா மாதவிலக்கு ஆனதற்கே, அந்த முட்டாள் வானத்துக்கும் பூமிக்கும் எக்கி குதித்தான்.

லேடி டாக்டர் கிட்ட, சரண்யாவை செக்கிங்  பண்ணனும் "என சொல்ல ஆரம்பித்து விட்டான்.

" டேய் என்னடா சொல்ற? கல்யாணம் ஆகி ஒரு மாசம் கூட முடியல, அதுக்குள்ள உனக்கு வயித்துல  நிக்கணுமா?  இதென்ன  ரிஷி கர்ப்பமா? இல்லை நீ என்ன ரிஷியா? போடா அவசரகுடுக்கை.' என அவனது அம்மாவே, அவனை திட்டும்படி ஆகிவிட்டது.

தங்கராஜ் ஒரு அவசரக்காரன் .அவனுக்கு எல்லாமே சீக்கிரமாக நடந்து விட வேண்டும். கொஞ்சம் கூட பொறுமையை கிடையாது.

அவனுக்கு புதிதாக கல்யாணம் ஆகி பிள்ளையோடு, மாங்காடு  கோயிலுக்கு  விசேஷ நாளில், சாமி தரிசனம் போக 'கூட்டம் அதிகமாக இருக்கிறது' என 100 ரூபாய் டிக்கெட் கொடுத்துப் போனார்கள்.

 அங்கும் கூட்டம் நகராமல் போக பயங்கரமாக கத்தி விட்டான் . என்னடா உங்க  சிஸ்டம் வைத்திருக்கிங்க?' என அவன் கத்த

"ஆயிரம் ரூவா கொடுத்து போயா .,சீக்கிரம் போலாம் " என கோயில் அலுவலர்கள் சொல்ல உடனே,  தலா ஆயிரம் என கூட வந்த எட்டு பேருக்கு  8000 எடுத்துக் கொடுத்து விட்டான் . எல்லாரும் அசந்து விட்டார்கள். ஆனாலும், அவனை யாரும் பாராட்டவில்லை. பணத்திமிர் என்றார்கள்.

 

'என்னதான் காசு உள்ள ஆளா இருந்தாலும் இப்படியா பண்ணுவான். ஒரு அரைமணி நேரம் எக்ஸ்ட்ரா ஆனா என்ன? அதுவும் கோயில்ல இருக்க கொடுத்து வெச்சிருக்கனுமே? ' என கரித்துக் கொட்ட ஆரம்பித்து விட்டார்கள். கூட வந்த  ஒருவருமே அவன் செயலை பார்த்து ரசிக்கவில்லை.

'பணத்திமிர் தங்கராஜ்' என்று கூட அவனுக்கு பெயர் வந்து விட்டது . பணம் மட்டுமல்ல அவனுக்கு எல்லாமே திமிர்தான்.  தங்கராஜுக்கு சூப்பர் மார்க்கெட் பிசினஸ்.  ஒரு சிறு மளிகை கடை வைத்து அதில் டெவலப் ஆகி இப்பொழுது பெரிய சூப்பர் மார்க்கெட் வைத்து விட்டான் . 'கோல்டன் ராஜ்" சூப்பர் மார்க்கெட் என்றால் அடையாறில், அவ்வளவு பிரசித்தம். அது முதல் கிளை. அதன் பின் குரோம்பேட்டையில் ஒன்றை திறந்து விட்டான்.. அவன்  கடும் உழைப்பாளி தான்.  ஆனால் வேகமாக, எளிதாக முன்னேறி வந்து விட்டதால், எப்போதுமே ஒரு அலட்சியம் பதட்டம், ஒரு மிதப்பு .

கார் பார்க்கிங்க் விட போனால், கொஞ்சம் தள்ளிவிட சொன்னால் செக்யூரிட்டியிடம் சண்டை போடும்  சுபாவம், கார் முன்னால் யாராவது நின்றால், செல்பி எடுத்தால் 'பாங்க்ங்க்ங்க் என் ஹாரன் அடித்து, அவர்களை அலற விட நினைக்கும் குரூர புத்தி., எப்போது யாரிடம் சண்டை போடுவானோ என பயந்து  கொண்டே தான்., சரண்யா அவனிடம் குடித்தனம் செய்தாள்.

சரண்யாவுக்கு கல்யாணம் முடிந்து, மூன்று ஆண்டுகள் கழித்து இளையவள் பவித்ராவுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்த போது ,

"அத்தை நம்ம குடும்பத்துக்கு ஏத்த மாப்பிள்ளையா பாருங்க"  என சொன்னான் தங்கராஜ்.

அப்படின்னா உங்கள மாதிரி கருப்பாவா ?" என கேட்டுவிட்டாள் சரண்யா அவளை கண்ணாலேயே எரித்து விடுதல் போல் பார்த்தான் .

அன்று இரவு, அவளை என்னென்ன செய்தான்?' என்பது யாருக்கும் தெரியாது தங்கராஜ் காட்டுமிராண்டித்தனமான வில்லனும் கிடையாது, நல்லவனும்  கிடையாது.

முதல் குழந்தை பெற்றூ கையில் கொடுத்த போது சரண்யாவுக்கு வைர மோதிரம் பரிசாக கொடுத்தவன்  தான் அவன்,

ஒரு சமயம் தெரு நாய்களுக்கு சோறு வைப்பான். ஒரு சமயம் கல்லால் அடித்து விரட்டுவான். அவன் மனிதர்களில் சராசரி.

ஆனால், சின்ன மாப்பிள்ளை லோகேஷ் அப்படி கிடையாது.  நல்லவேளை அவன் அப்படி கிடையாது என ஜெயந்திக்கு தெரிய வந்தது ஒரு சம்பவம். அது தான் லோகேஷ் எல்லாரையும் கவர்ந்துவிட்டான் என சொல்லலாம்.

சரண்யா, ஜெயந்தியையும்  சேர்த்து.., அந்த சம்பவம் திகைக்கச் செய்துவிட்டது. அது கோவா டூருக்கு முன்னாடியே நடந்த சம்பவம்.


வெல்ல முடியாத வேட்கைகளை 118 எபிசோகளையும் உடனே பெற:

No comments: