சமீபத்தில் வெளியாகி பரவலான வரவேற்பினை பெற்ற தமிழ் திரைப்படம் நடிகர் சூர்யா, மமிதா, ராதிகா ஆகியோர் நடித்த விஸ்வநாத் & சன்ஸ் .
கலவவையான விமர்சனங்களைப் பெற்ற அந்த திரைப்படத்தின் ஆல்டர் நேட் வெர்ஷனாக ஒரு டைரக்டர் ரீ ரைட் செய்து அமெசானில் வெளியிட்டிருக்கிறார்.
இதன் படி அந்த திரைக்கதை மாற்றி படமாக்கப்பட்டிருந்தால் கண்டிப்பாக இந்திய அளவில் ஒரு கவனிக்கத்தக்க சினிமாவாக விஸ்வநாத் & சன்ஸ் இருந்திருக்கும் என தோன்றுகிறது.
துப்பாக்கி சுடுதல், ஏசியன் கேம்ஸ், ஒலிம்பிக், சர்வதேச விளையாட்டு அரசியல், அமெரிக்காவின் அழுகுனி விளையாட்டு எல்லாம் வந்து சுவாரசியப்படுத்துகிறது. கேரக்டர்கள் வலிமையாக்கப்பட்டு வடிவமைப்பட்டிருகின்றன்.
இது நானே அசந்து போன ஒரு திரைக்கதை.
இது போல ஆல்டர் நேட் ஸ்கீர்ன்பிளே எழுதும் உதவி இயக்குனர்கள் தாராளமாக என்னை மெயிலில் தொடர்பு கொள்ளவும். உங்கள் திறமையை என்னால் முடிந்த அளவுக்கு பிரபலப்படுத்துகிறேன்.
சரி அதன் ஆசிரியர் டைரக்டர் சுபானு என்ன சொல்கிறார்?
//வணக்கம்!
நான் டைரக்டர் சுபானு ,20 ஆண்டுகளாக திரைத்துறையில் பல்வேறு அங்கம் வகித்து வருகிறேன்.
திரைக்கதை எழுதும் ஆற்றல் மற்றும் ஃபிலிம் மேகிங்க் திறன் இருந்தாலும் தகுந்த வாய்ப்பு இல்லாமல் சினிமா துறையில் அல்லாடும் பல நபர்களுள் நானும் ஒருவனாக இருக்கிறேன்.
என்னதான் நாம் புதிய திரை கதையை கொண்டு சென்றாலும் முதலில் அதை எல்லாம் கேட்பதற்கு பரிசீலிப்பதற்கு இங்கே வாய்ப்புகள் கிடைப்பது மிகவும் கடினம். அதையும் தவிர யாரையும் நம்பி நமது புது கதைகளை சொல்ல முடியாது,
எனவே தான் புதிய திரைக் கதையை சொல்வதற்கு பதிலாக ஏற்கனவே வெளி வந்திருக்கக்கூடிய, தோல்விடைந்த திரைப்படங்கள் அல்லது ஓரளவு வெற்றியடைந்த திரை படங்களின் திரைக்கதையை எடுத்து அலசி ஆராய்ந்து அதை மேம்படுத்துகிற வேலையை செய்து வருகிறேன்
திரைப்படம் தான் வெளியாகிவிட்டதே? அதை மேம்படுத்தி என்ன பலன்? என்றால்,
இப்படி இருந்த படம், இப்படி மேம்படுத்தி இருந்தால் வேறு நல்ல விதமாக வந்திருக்கும் என்பதை அதன் படைப்பாளிகளுக்கும் அது தயாரித்த சினிமா நிறுவனங்களுக்கும் எடுத்துக் கூறுவதன் மூலம் நான் எனக்கான அங்கீகாரத்தை பெறுவதற்கான முயற்சிதான் இது.
இந்த விஸ்வா நாதன் அன்ட் சன்ஸ் திரைப்படத்தின் எனது மாறுபட்ட திரைக்கதையை பார்க்கும் போது, இது தொடர்புடைய இயக்குனர்கள், டெக்னிக்கல் டீம், நடிகர்கள் நடிகைகளின் அல்லது இதனை தயாரித்த நிறுவனம் யாரேனும் இதை பார்த்தால்,
அவர்கள் மூலம் எனது திறமை அங்கீகரிக்கப்படுவதற்கு வாய்ப்பாக இருக்குமே என்பதற்காகத்தான் இப்படி பொதுவெளியில் இந்த புதிய திரைக்கதையை வெளியிடுகிறேன்.
இது தான் காரணமே தவிர, குறிப்பிட்ட அந்த இயக்குனரை தாழ்த்துகிற செயலாக இதை யாரும் கருத வேண்டாம்.
ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒவ்வொரு விதமான கற்பனை, ஐடியாக்கள் இருக்கும் அவரது கற்பனைக்கு ஏற்றார் போல இதை எடுத்திருக்கிறார்
எனது கற்பனைக்கு ஏற்ப இதை வேறு விதமாக சொல்லி இருக்கிறேன் அவ்வளவுதான்.
ஏனெனில், இந்த படத்த்தின் கதைக்கரு நல்ல புதுமையான கான்செப்ட். ஆனால், திரைக்கதையில் உண்டான தொய்வானது மக்களுடன் 100% கனெக்ட் ஆக முடியாமல் நல்ல கதை வீணாகி விட்டது என்கிற ஆதங்கமே.
எனவே, விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் மையக் கருத்து மற்றும் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு, அதனை வேறொரு கோணத்தில் விரிவுபடுத்திய ஒரு alternate screenplay approach ஒன்றை, நான் உருவாக்கியுள்ளேன். இது அப்படத்தை விமர்சிப்பதற்காக அல்ல.
அதே அடிப்படை premise-ல் இன்னொரு பெரிய emotional மற்றும் commercial screenplay possibility-ஐ உருவாக்கும் முயற்சி என்பதை தயவுகூர்ந்து உணர்ந்து என் ஆர்வத்தை பொறுத்து அருளவும்.
இந்த கதையின் முக்கியமான அம்சங்களான
2. பணக்கார தொழிலதிபர் கதாநாயகன்,
3. surrogate mother கான்செப்ட்
4. அக்குழந்தைக்கு செய்யப்படும் ' bone marrow' அறுவை சிகிச்சை,
5. ஹீரோ அப்பாவின் இரண்டாவது குடும்பம்
அனைத்து மொழிகளுக்கும் ஏற்ற., அனைவரும் ரசிக்கக் கூடிய அளவில் தேசிய அளவிலான தரத்தில் இந்த திரைக்கதை இருக்கும்.
அது மட்டுமல்ல, இந்த மின்னூல் புதிதாக சினிமாத் துறைக்கு வந்தவர்களுக்கும், இளம் படைப்பாளிகளுக்கும், திரைக்கதை எழுதப் பயிற்சி செய்பவர்களுக்கும் உதவி இயக்குனர்களுக்கும் பெரிதும் உதவியாக பயனுள்ளதாக இருக்கும்.
விஸ்வநாத் அன்ட் சன்ஸ் படத்திலிருந்து எனது மாற்றியமைக்கப்பட்ட திரைக்கதைக்கு செல்வோமா?//

No comments:
Post a Comment