தளபதி பிரபு அவர்கள் (Thalapathy prabu) எழுதிய பொதுவாக எம்மனசு தங்கம் திரைக்கதை இப்போது அமேசானில் மின்னூலாக வெளியாகி இருக்கிறது.
திரைக்கதை எழுதி பழகுவோற்க்கு இது கண்டிப்பாக உதவியாக இருக்கும்.
தமிழில் திரைக்கதை எழுத நிறைய டெம்ப்ளேட்டுகள் உண்டு.
சீன் பை சீன்.
பிரேம் பை பிரேம்
ஆனால் இது கொஞ்சம் நாவல் டைப்பில் டிராமா டைப்பில் எளிமையாக இருக்கிறது.
படிக்க படிக்க அது சினிமா போல விரிகிறது.
ஆசிரியர் சொல்வது:
//பொதுவாக எம்மனசு தங்கம் - திரைக்கதை புத்தகம் பற்றி சில வார்த்தைகள்,
மரியாதைக்குரிய இயக்குனர் திரு விக்ரமன் அவர்களிடத்திலும், அன்பிற்குரிய திரு பொன்ராம் அவர்களிடம் பணியாற்றும் போதே என்னிடம் இருந்த சில கதைகளுக்கு திரைக்கதை எழுதி முடித்திருந்தேன்,
அந்த கதைகள் ஒன்றில் மரியாதைக்குரிய திரு. உதயநிதி அவர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து, பல வழிகளில் முயன்று அவரை சந்திக்க முடியாமல் போகவே, எனக்கு நெருக்கமான, அப்போது நான் பணிபுரிந்துக் கொண்டிருந்த அன்பிற்குரிய திரு. பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவாளர் அவர்களுக்கு சொன்னேன்,
அவர் மூலமாக மரியாதைக்குரிய திரு. உதயநிதி அவர்களுக்கும், ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனத்துக்கும் கதையை சொல்ல அவர்களுக்கும் பிடித்துப் போனதால் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ என்ற திரைப்படம் உருவானது,
அப்போது என் கையில் இருந்த திரைக்கதை எந்த மாற்றமும் இல்லாமல் புத்தகமாக இப்போது உருமாற்றம் அடைந்து இருக்கிறது, ஆனால் என் கையில் இருந்த திரைக்கதை திரைப்படமாகும் போது பல மாற்றங்களை சந்தித்தது,
எழுதிய திரைக்கதைக்கும் படமான திரைக்கதைக்கு இடையில் இருக்கும் இந்த ஒப்பீடு பார்வையார்களுக்கும், புதிதாக கதை, திரைக்கதை எழுத நினைப்பவர்களுக்கும் எதோ ஒரு வகையில் பயன்படும் என்று தோன்றியதால் இந்த முயற்சி.//
தளபதி பிரபு

No comments:
Post a Comment